Total Pageviews

Wednesday, November 21, 2012

மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறது சம்சுங்

பாவனையாளர்களின் தேவைகள் கருதி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வெளிரும் ஸ்மார்ட்போன்களில் முதன் முறையாக மடிக்கக்கூடியதும் நெகிழக்கூடியதுமான ஸ்மார்ட் போன்களை (Flexible Smart Phones) அறிமுகப்படுத்தவுள்ளது Samsung நிறுவனம்.

அடுத்த வருடம் வெளிவரவுள்ள இத்தொழில்நுட்பமானது ஸ்மார்ட் போனின் மற்றுமொரு பரிமாணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளையும் தன்மையும், உடைபடக்கடினமான தன்மையுமுடையதாக வடிவமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் போன்களை எமது பணப்பையில் மடித்துவைத்துக்கொள்ளும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

organic light emitting diodes (OLEDs) பயன்படுத்தி தயாரிக்கப்படவுள்ள நெகிழ்தன்மையுள்ள ஸ்மார்ட் போன்கள் மெலிதாகவும் அதேவேளை பிளாஸ்டிக் அல்லது உலகத்தகடு போன்ற நெகிழ்தன்மையுள்ள பொருட்களால் ஆக்கப்படும்.

மேலும் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள சம்சுங் எஸ் 4 ஆனது அனேகமாக நெகிழ்தன்மை கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனாக அமையலாம் என சம்சும் தெரிவித்துள்ளது.

இதேவேளை Samsung நிறுவனம் மட்டுமன்றி Sony மற்றும் LG நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை தாயாரிக்க முயற்சிகள் எடுத்துள்ளது.