Total Pageviews

Wednesday, November 7, 2012

நெஞ்சுக்குள்ள உம்மை... கடல் படத்தின் சிங்கிள் ட்ரெக்கினை வெளியிட்டார் ரஹ்மான் (வீடியோ இணைப்பு)


எந்திரன் படத்திற்கு பின்னர் ஒஸ்கார் நாயகன் தமிழில் இசையமைக்கும் திரைப்படமான கடலிலிருந்து ஒற்றை பாடலினை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் வலுவாகவே ஈர்த்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

இசை வெளியீட்டுக்கு முதல் சிங்கிள் ட்ரெக் ஒன்றினை யூடியூப்பில் தரவேற்றம் செய்து பாடலுக்கு எதிர்பார்ப்பினைத் தூண்டும் ப்ரொமோசன் வேலைகள் இன்று தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். இந்த கலாச்சாரத்திற்கு முதன் முறையாக ஏ.ஆர். ரஹ்மானும் நெஞ்சுக்குள்ள உம்மை... என்ற பாடலின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.

எம்.டீ.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்பாடலினை வெளியிட்டு வைத்தார் இசைப்புயல். தற்போது இப்பாடலுக்கான வரவேற்பினை சமூகவலைத்தளங்களினூடாக நன்றாக உணரமுடிகின்றது. ரஹ்மான் என்றால் ரஹ்மான் தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மனிதர். இனி கொஞ்ச இசையமைப்பாளர்களுக்கு புளியை கரைப்பது நிச்சயம்.

ஏனெனில் சுமார் 2 வருடங்களாக தமிழில் கொஞ்சம் ஒதுங்கியிருந்த ரஹ்மான் கடல் படத்தினை தொடர்ந்து கோச்சடையான், மரியான் என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது இசை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பினை பெற்று அனைவரையும் கட்டிப்போட்டு ரஹ்மானின் வருகையின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வகையிலமைந்துள்ள அந்த பாடல் இதோ...