நேற்று (14.11.2012) சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டிற்கு வந்தன. இதனால் ஏற்பட்ட சூரிய கிரகணம் அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாக காணக்கூடியதாக இருந்துள்ளது.
இது இவ்வாண்டி கடைசி சூரியக் கிரகணம் என்பதுடன் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரே அடுத்த சூரியக் கிரகணம் தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தை காண அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில்இ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்இ சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர்.
கிரகணம் ஆரம்பித்தவுடன் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து பார்வையாளர்களை சற்று நேரம் திகைக்க வைத்துள்ளது. பின்னர் கிரகணம் மறைந்த பின்னர் மேகங்கள் அப்பகுதியை சூழ்ந்து கொண்டமையினால் தொடர்ந்து இருள் நீடித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் 150 கி.மீட்டர் வரை இருள் பரவிக்காணபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்இ கிழக்கு இந்தோனேஷியாஇ அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும்இ நியூசிலாந்துஇ பப்புவா நியூகினியா மற்றும் சிலிஇ அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும் தென்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.