கல்யாணத்திற்கு பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்பும் தமிழ் கலாச்சார பையனுக்கும் தான் விரும்பிய மாதிரித்தான் இருப்பேன் என்கிற மேலயத்தேய பொண்ணுக்குமிடையிலா வாழ்க்கையில் மோதலால் போடா போடி என்று கூறிக்கொண்டு பிரிந்தவர்கள் வாடா வாடி என்று எவ்வாறு இணைகிறார் என்பதே படத்தின் கதை.
இவர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் 4 காலங்களை ஆரம்பத்திலிருந்து இறுவரையிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் திரைக்கதை நகரச்செய்து வெற்றி பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் விக்னேஷ். வரவேற்கத்தக்க புதுவரவு.
வெளிநாடுகளில் வாழும் எம்மவரினை நிறைய இடங்களில் பிரதிபலிக்கிறது படம். லண்டன்ல வாழ்ந்தாலும் நாம தமிழர்கள்கள் என்கிற இடம் அருமை. வசனங்கள் அத்தனையும் இயல்பாக இருக்கிறது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படமா இது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அவரது நடிப்பு, நடனம். முதல் படத்திலேயே குழந்தை குட்டி என்று காட்டினாலும் ஏமாற்றமில்லாத பாத்திரத் தேர்வு. போஸ்டர்களில் சிம்புவுக்கு இவர் ஜோடியா எனக் கேட்க வைத்தாலும் படம் முழுக்க இந்த ஜோடி சலிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ்சினிமாவில் இவருக்கான இடம் நிச்சயம் உண்டு.
முதல் பாதி முழுக்க நகைச்சுவையாகச் பயணிக்கிறது படம் பிற்பாதியில் நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் என எல்லா உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது.
சிம்புவுக்கு பொருத்தமான கதையாகவே இருக்கிறது. எவ்வளவு எளிதாக சிரிக்வைக்கிறாரோ அதே அளவு எளிதாக சில இடங்களில் அழவைத்துவிடுகிறார். உள்ளுக்குள்ள பெரிய நடிகனேயே வைத்திருக்கிறார் சிம்பு. ஆனாலும் விரல் வித்தைகளில் காலந்தள்ளுவது ஏனோ?
எனக்கே விரலா என்று ஒரு இடத்தில் சிம்பு கேட்பார். அது சிம்பு விமர்சனங்களை கவனத்;திற்கொண்டு இலகுவாக செயற்படுத்துவதாக வெளிப்படுத்துவதாக அமைகிறது.
பின்னணி இசை மற்றும் பாடல்களில் சிறப்பாகவே செயற்பட்டிருக்கிறார் தமன். ஆனால் 2 பாடல்கள் இடம்பெற்ற இடம் கொஞ்சம் நெருடல். பாடலுடன் ஆரம்பித்து படம் பாடலுடன் முடிகிறது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் தமன்.
ஒளிப்பதிவு லண்டனை அழகாக சுற்றிக்காட்டுகிறது. இவர்களை தவிர்த்து வீடிவீ கணேஷ் மட்டுமே சிறப்பாக செயற்பட்டிருக்கிறார். அவர் வரும் பெரும்பாலான இடங்கள் கலகலப்பூட்டுகிறது.
ஏனையர்களில் மோஜோ என்ற கதாபாத்திரமும் ஷோபனாவும் அடிக்கடி எரிச்சலூட்டுகிறார்கள். ஆனாலும் சிம்புவும் வரலட்சுமியும் மொத்தப்படத்தை சிறப்பாக இறுதிவரை தாங்கிச்சென்று வெற்றிபெறுகிறார்கள்.
போடா போடி திருமணமாகதவர்களை வாடா வாடி என்றணைக்கச்செய்கிறது.
ஏற்கனவே ஏராளமான விமர்சனங்கள் வெளியாகிவிட்டதனால் சற்று சுருக்கமாக அமைகிறது இந்த விமர்சனம்.