சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, October 31, 2012

சாதா கதைகளை மெகா கதைகளாக்கும் ஊடகங்கள் : பீதியை கௌப்புறாய்ங்களே...


பிந்திய செய்திகளை முந்திங்கொண்டு தரும் ஊடகங்கள் பல இன்றைய நாட்களில் தேவையான செய்திகளை எமக்கு தெரியப்படுத்துவதை விட சாதா செய்திகளை மெகா செய்திகளாக்கி பீதியை வரவழைக்கும் ஊடகங்கள் எதிர்பார்ப்புக்கள்தான் என்ன? எதற்காக இந்த ஷங்கர் பட ஸ்டைல்?

ஊடகங்கள் உண்மையில், உண்மைகளை மக்களிடத்தில் சேர்ப்பதை விட மக்களை ஊடகங்களை நோக்கி சேர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது என்பது அண்மைய கால பல செய்திகள் உறுதி செய்கின்றது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையச்செய்திகள் என எவ்வகை செய்தி ஊடகங்களை எடுத்துக்கொண்டாலும் கடந்த ஒரு வாரமாக தங்களது ஊடகங்களின் பக்கம் எம்மை ஈர்க்க பெரும்பாலான ஊடகங்கள் பயன்படுத்தி வருகின்ற விடயம் 'காலநிலை மாற்றம்' என்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.

வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் இதனால் மக்கள் பீதி, நாடுபூராகவும் அடை மழை அடுத்த 3 நாட்களும் காற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை என்ற பாணியிலமைந்த செய்திகள் இடம் பெறாத ஊடகங்களே இல்லை எனலாம் அதுவும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்து... என்பது போல ஹை பிட்ச்சில் உச்சரித்து நல்லாத்தான் கௌப்புறாய்ங்கடா பீதிய... (ஆனா எங்களுக்கிட்ட நடக்குமா? நாங்கெல்லாம் சுனாமியில ஸவிம்மிங் போடுறவங்க ஆச்சே)

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் இருப்பினும் இவை சீரற்ற காலநிலை மாற்றமோ அச்சத்தை ஏற்படுத்தும் மாற்றங்களோ என்றால் இல்லை என்பதே நிதர்சனம். சாதரணமாக பருவப்பெயர்ச்சிக் காலத்தில் ஏற்படுகின்ற சீரான மாற்றங்களும் மழையுமே.

ஆனாலும் குறிப்பாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் இக்காலநிலை மாற்றத்திற்கு அளவுகடந்த முக்கியத்துவம் கொடுத்து அலாட்டாகிக்கடா ஆறுமுகம் என்று அலார்ட் பண்ணுறதுதான் கொஞ்சம் ஓவரா தெரியுது.

இதனால் மக்கள் அநாவசியமாக அச்சத்திற்குள்ளாகி இருப்பதே வருத்தமாக உள்ளது. இதற்கா காலநிலை மாற்றம் பற்றிய செய்திகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடைபெறும் மாற்றங்களை மட்டும் தெரியப்படுத்தினால் போதும் ஏனெனில் ஒன்றை ஒன்பதாய்ச் சொல்ல ஏற்கனவே பலர் இங்கே இருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் எம்மவர்கள் கடலினை அதிகமாகவே அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் கடலிலிருந்து சிறிய சிப்பி கரையொதுங்கினால் போதும் அதிசயம், ஆச்சரியம் என்று சொல்லிக்கொண்டு அதனை பார்க்க சும்மா கூட்டம் பிச்சுக்குது.

2004 இற்கு முன்னரும் பலமுறை வெள்ளமும், பாரிய மழை, பாரிய வெயில், பெரிய காற்று, வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியாகிவிட்டது. ஆனால் அப்போது இப்போதுள்ள அளவிற்கு மக்கள் அச்சம் கொள்ளவில்லை. காரணம் அப்போது நிறைய ஊடகங்களும் இல்லை போட்டியும் இல்லை.

ஆனால் இன்று ஊடகங்களிடமிருந்து அறிவுறுத்தல்களுக்கு பதில் அச்சுறுத்தல்கள் வெளிவருவது ஊடகங்களின் வளர்ச்சி அல்ல செய்திகளுக்கான வரட்சி என்பது தெளிவாகின்றது.

மேலும் காமச் செய்திகளில் சிக்கியிருந்த ஊடகங்கள் காலநிலைச் செய்திகளிற்கு தாவி ஆறுதலளிப்பார்கள் என்ற நினைப்பில் மழையை அள்ளிப்போட்டு மக்களிடையே பீதிய கௌப்புறாய்ங்களே...

கோடை என்டா வெயிலடிக்கிறதும் மாரி என்டா மழையடிக்கிறதும் சகஜம்தானே... இதுக்கெதுக்கு புதுப் புரளிய கௌப்புறீங்க...

Friday, October 19, 2012

விலங்குகள் அனர்த்தங்களை எதிர்வுகூறுமா... கடல்வாழ் உயிரினங்கள் சுனாமியை உணர்த்துமா?


ஆறறிவு என்று கூறப்படும் விலங்குகளான மனிதர்கள் தவிர ஏனைய விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறும் திறன் படைத்தது என்ற நம்பிக்கை எம்மில் பரவிக்கிடக்கின்றது. இது உண்மையா பொய்யா என்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது மீன்கள் அதிகளவில் பிடிபடுவதுடன் ஒரு சில பிரதேசங்களில் கடவாழ் (கடல் பாம்பு, காடலாமை, மீன்கள்) உயிரினங்கள் கரையொதுங்கின்றது.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஒரு வகையான அச்சம் காணப்படுகின்றது. 2004இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னரும் இவ்வாறே அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதுடன் ஏராளமான மீன்களும் பிடிக்கப்பட்டது. இதனால் மீண்டுமொரு சுனாமி எம்மை நோக்கி வருகிறதா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகின்றது. அதுவொரு வகையில் நியாமும் கூட.

ஏனெனில் அப்பகுதி மக்களே ஏற்கனவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகளவு உயிர்கள் மற்றும் உடைமைளை இழந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். (ஆனாலும் அவர்களின் நிலைமைகளை படம் பிடித்து வேறு பிரதேசத்தினை போல் சித்திரித்து உலக நாடுகளுக்கு காட்டினார் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்னல் நாயகனும் என்பது வேறு கதை. அப்பகுதி மக்களுக்காவது உதவினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஐயய்யோ நமக்கெதுக்கு அரசியல்... ஒரு ஆதங்கத்தில் பேசித் தொலைச்சிட்டன்)

சரி அப்படியானால் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயச் சங்குகளா என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

அவ்வாறெனில் பல சந்தர்ப்பங்களில் விலங்குகளின் செயற்பாடுகள் அனர்த்தங்களை எச்சரிப்பதாக அமைந்துவிடுகிறதே அது ஏன்? 2004ஆம் ஏற்பட்ட சுனாமியின் போது கடலோரத்தில் இருந்த பல விலங்குகள் உயிர்பிழைத்திருந்தது ஏன்? இவற்றையெல்லாம் விட சுனாமியை எச்சரிப்பது போல சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலை விலத்திய விலங்குகளின் நகர்வுகள், ஏராளமான மீன்கள் கரையை வந்தடைந்தது போன்றவை ஏற்படக்காரணம் என்ன? என்ற ஏராளமான கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவுகள் இவ்வாறு அமைகிறது.
கரையொதுங்கிய மீன்கள்

விலங்குகளால் காலநிலை மாற்றங்களை உணர்ந்துகொள்ள முடியும். இதனால் சூடு, குளிர், அமுக்கம், மனிதர்களுக்கு கேட்கமுடியாத சத்தங்கள், வாயுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பலவற்றை உணரக்கூடிய ஆற்றல் உண்டு. இவை ஒவ்வொரு வகையான இனங்களுக்கும் வித்தியாசப்படும்.

இவ்வாறான மாற்றங்களை உணரும் சந்தர்ப்பங்களில் குறித்த விலங்குகள் தங்களுக்கு ஏதுவான வாழும் சூழல் இல்லை என்பதை புரிந்துகொண்டு இடம்பெயர ஆரம்பிக்கும். தவிர விலங்குகளுக்கு அனர்த்தங்களை உணரக்கூடிய எந்தவித விஷேட சக்திகளும் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களின் விளக்கங்களும் நியாயமாகவே உள்ளன. ஏனெனில் எமது வீடுகளில் மேல் நோக்கி எறும்புகள் பயணிக்கும் போது மழை வரப்போகிறது என்று எதிர்வுகூறுவார்கள் சில வேளைகளில் மழை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் எறும்புகள் எறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தினை உணர்ந்துகொண்ட எறும்புகள், தமது பாதுகாப்பை உறுதி செய்கிறதே தவிர மழை வருவதை அவை உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இதே போலவே கடலிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவே கரையை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்திருக்கிறதே அன்றி சுனாமி அல்லது வேறு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை அல்ல என்பது உறுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உயிருடன் மீன்கள் கரையை நோக்கி...

மேலும் கடலில் ஏற்படுகின்ற எண்ணெய்க்கசிவு, சிறியளவிலான நில அதிர்வுகள் போன்ற காரணிகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால் இறந்தும் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்க வாய்ப்புக்கள் உள்ளது. அத்துடன் உயிருடன் உள்ளவை கரையை நோக்கி நகரும் இந்நிலையே மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் சிக்கக் காரணமாகின்றது.

எனவே மீன்கள் அதிகளவில் கிடைப்பது மற்றும் கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் வதந்திகள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்போம் நாம்.

மொட்டு வெடிச்சாலும் சரி கள்ளன் குதிச்சாலும் சரி நாய் குரைக்கத்தான் செய்யும். ஆனால் அது பேய், பிசாசுக்களை பார்த்துத்தான் குரைக்கின்றது என்ற மூடநம்பிக்கைளில் எம்மவர்கள் மூழ்கியது போன்று மீன்கள் கரையொதுங்கினால் சுனாமி வரும் என்ற மூடநம்பிக்கை ஏற்படாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் சுனாமி ஏற்படுதவதற்கு முன்னர் மீன்கள் கரையொதுங்கலாம் ஆனால் மீன்கள் கரையொதுங்கும் போதெல்லாம் சுனாமி ஏற்படாது.

குறிப்பு : படங்கள் யாவும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் (காத்தான்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு) இடம்பெற்றவை.

காரைதீவு பிரதேசத்தில் பிடிபட்ட மீன்கள்


காத்தான்குடியில் கரையொதுங்கிய ஆமை




Can animals predict the natural disaster?


Most of us believing that animals can predict the natural disaster excluding 6 sense animal of human. Researchers have been trying to clarify that is it true or not for a long time.  This is the right time to concentrate on it as dead sea life such as tortoise, new kind of strange fishes, sea snakes washing up on shore in eastern part of Sri Lanka.

After the tsunami when fisherman catch unusual amount of fish that makes people afraid of natural disaster in this region.





Friday, September 28, 2012

சுமாத்ரா தீவு பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞை

சுமாத்ரா கடற்கரைக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய தொடர் பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளமைக்கான சமிக்ஞை களாக உள்ளதாக ஆய்வாளர்கள் ௭ச்சரித்துள் ளனர்.

மேற்படி பூமியதிர்ச்சிகளின் போதான அதிர் வுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் 8.7 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சிகளின் போது சமுத்திர அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.

இது இந்து சமுத்திர மற்றும் அவுஸ்திரேலிய கடல் அடித்தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞையாகவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ௭னினும் மேற்படி சமுத்திர அடித்தட்டு பிளவடைவது உடனடியாக இடம்பெறாது ௭னவும் அது இடம்பெற மில்லியன் கணக்கான வருடங்கள் செல்லலாம் ௭னவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்து சமுத்திர அடித்தட்டுகளிலான மாற்றம் சுமார் 8 இலிருந்து 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர ம்பமானதாக மேற்படி ஆய்வில் பங்கேற்ற பாரிஸ் நகரின் ஈகோலி நொர்மலி சுப்பீரியரரைச் சேர்ந்த கலாநிதி மட்த்லஸ் டெலெஸ் குளுஸ் தெரிவித்தார்.

மேற்படி ஆய்வின் முடிவுகள் நேச்சர் விஞ்ஞான ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள் ளன. இந்தோனேசிய சுமாத்ரா தீவானது இந்தோ– அவுஸ்திரேலியா நிலக்கீழ் தட்டுக்கும் சுமாத்ரா நிலக்கீழ் தட்டுக்கும் இடையில் அமை ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.