சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, October 14, 2012

மாற்றான் - விமர்சனம்


ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் மற்றும் ஜெனட்டிக் பற்றிய தமிழ்சினிமாவிற்கு பெரியளவில் அறிமுகமற்ற புதிய கதையில் சினிமா மசாலாக்களை கலந்து கே.வி. ஆனந்த் சொதப்ப சூர்யா அசத்தியிருக்கும் படமே மாற்றான்.

பால்மா உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சூர்யாக்களின் தந்தையான சச்சின் கடேகர் தவறான பதையில் பணம் சம்பாதிப்பது பிள்ளைகளுக்கு தெரியவர தந்தையின் தவறுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே கதை. இதற்காக ஜெனட்டிக், ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், உக்வேனியா, காதல், உறவுகள் என சினிமா சாயம் பூசியிருக்கிறார் இயக்குனர்.

ஓர் இயதம் ஈருடலாக பிறக்கும் குழந்தைகளில் ஒருவர் உயிர்பிழைக்க ஒருவரை கொல்ல வேண்டி ஏற்படுட தாயின் விருப்பத்தினால் பிரிக்கப்படாமல் ஓருயிர் ஈருடலாக அகிலன் மிளகு ரசம் குடிக்கும் பிள்ளையாக வளர விமலன் சரக்கடிக்கும் பிள்ளையாக வளர்கிறார்.

படத்தில் கொமடியன் இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் சூர்யா. நகைச்சுவை காட்சிகளில் சூர்யாவின் டைமிங் கொமடிகள் அத்தனையும் அரங்கத்தை சிரிப்பொலியில் அதிரச் செய்கிறது. இதனால் முதல் பாதி நீளமானபோதும் ரசிக்கும்படி வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது திரைக்கதை.

ஒரு கட்டத்தில் சீரியஸான சூர்யாவிற்கு அப்பாவின் தவறுகள் தெரியவரும் போது அவரை வில்லன்கள் கொன்றுவிட இதயமாற்று சிகிச்சை மூலம் விமலன் பிழைக்க அதிலிருந்து திரைக்கதை ரசிகர்களை ரசிகர்களை கொல்ல ஆரம்பிக்கின்றது. மேலும் விமலன் இறந்தபோதும் அது பெரிதாக இதயங்களை கனக்கச்செய்யவில்லை இத்தனைக்கு அந்த இடங்களில் சூர்யாவின் நடிப்பு அபாராம் என்றாலும் இயக்குனர் கோட்டை விடுவது ரசிகர்களுக்கு சோகம்.

பின்னர் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஒரு சூர்யாவுடன் பயணிக்கிறது கதை. விமலன் இன்றிய அகிலனின் தவிப்பு மட்டுமே இரண்டாம் பாதியில் ரசிக்கக்கூடியதாக உள்ளது. இன்னொரு நாட்டின் மனச்சாட்சியே இல்லாத தீர்மானங்கள், ஜெனட்டிக் என புதுக்களத்தில் கதை சென்றாலும் படம் எப்போது முடியும் என நீண்ட நேரமாக எம்மை சோதிக்கும் திரைக்கதையில் கே.வி. ஆனந்த் இயக்குனராக தோற்றுப்போகிறார். அது எப்படி என்பதை நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் இது எம்.ஜி.ஆர் படங்களை போன்ற படம் என சூர்யா தெரிவித்திருந்தார் அது உண்மை என நிரூபிப்பது போல இரண்டாம் பாதியில் காட்சிகள் அமைந்துள்ளமை ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை.

உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் எங்கே போனாலும் அங்கே வில்லனில் அடியாட்கள் அசோகனிடம் பாஸ் அவங்க  வந்துட்டாங்க, பாஸ் அவங்க போய்ட்டாங்க என வில்லனிடம் தகவல்கொடுப்பது போன்ற அடியாட்கள் சிலரையாவது தவிர்த்திருக்கலாம். மேலும் அதில் இடம்பெறும் வசனங்களையாவது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். எனக்கு இதயம் இல்லைன்னாலும் ஈரம் இருக்கும்மா என ஓரிரு வசனங்களே மனதை வருடுகிறது.

முழுப்படத்தையும் கடைசிவரை இழுத்துச்செல்வது படத்தின் நாயகன் சூர்யா மட்டுமே. ஒவ்வொரு சீனிலும் மனிதன் அசத்துகிறார். நகைச்சுவை உட்பட அனைத்து விதமான நடிப்பிலும் பட்டையை கிளப்புகிறார். சின்ன சின்ன அசைவுகளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. சில காட்சிகளில் எத்தனை இலகுவாக எம்மை அழச்செய்கிறாரோ அத்தனை இலவுவாக சிரிக்கவும் செய்வதுடன் இரட்டையர்களாகவே வாழ்ந்திருப்பது சூர்யாவின் அபார உழைப்பு ஆனாலும் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிறது திரைக்கதை என்பதே வருத்தம்.

நாயகி காஜலுக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவ்வப்போது தமிழ் படங்களில் தலைகாட்டினாலும் பழகிய முகமாக கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளும் ரசிக்கலாம். படம் முடியும் வரை மொழிமாற்றம் செய்துகொண்டே இருப்பதுவே உறுத்தல்.

நாயகன் சூர்யாக்களுடன் சேர்த்து முதல் பாதி முழுக்க மூன்றாவது நாயகனாக கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணை உறுத்தாது பயணிப்பது பாராட்டும் விதமாக உள்ளது. இதுவே ஒட்டிப்பிறந்த சகோரர்களை சூர்யாவுடன் சேர்த்து எம்மை நம்ப வைக்கிறது.

இந்த மூவரையும் தாண்டி ஒளிப்பதிவாளர் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். நோர்வேயின் அழகை மேலும் அழகுபடுத்துகிறது சௌந்தரின் கைவண்ணம். அயனில் பார்த்த பல கோணங்கள் இயக்குனரின் கெடுபிடியாக இருக்கலாம். உச்சிகளில் பாடல்களை படமாக்குவதை தவிர்த்திருக்கலாம் காரணம் கே.வி. ஆனந்தின் படங்களில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது.

நாயகன் நாயகி தவிர சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் மட்டுமே மனதில் நிற்கிறார் ஏனையவர்கள் எவரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

அடுத்தது சண்டைக்காட்சிகள் சூர்யாவின் முயற்சிகளை சிதறடிக்கிறது அவற்றின் நீளம். இரண்டாம் பாதி கிட்டத்தட்ட சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளது போல் தோன்றச்செய்கிறது. 3 படங்களின் சண்டைக்காட்சிகளை ஒரே படத்தில் பார்த்த உணர்வு.

இசை ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்தான் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றால் பின்னணி இசையும் எரைச்சலால் எரிச்சலூட்டுகிறது. சுட்டாச்சும் நல்லாத்தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் அண்மைக்காலமாக என்னாச்சு என்றே புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் பின்னணியில் நிஜமான நாயகனாக இருக்க வேண்டிய இயக்குனரே படத்திற்கு வில்லனாகிவிட்டார். படத்தின் கதை சிறப்பாக அமைந்தபோதிலும் திரைக்கதையில் கோட்டை விட்டதில் சினிமா ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் கே.வி. ஆனந்த். மேலும் முந்தைய படங்களின் பாதிப்பிலிருந்தும் மீளவில்லை என பல இடங்களில் நிரூபிக்கிறார்.

4 வருடங்கள் உட்கார்ந்து எழுதிய கதை என்றார்கள் ஆனால் 4 வருடங்களில் ஏகப்பட்ட படங்களை பார்த்து எழுதிய கதை என்பது இப்போது புரிகின்றது. போதாதற்கு சூர்யாவின் கடைசித் தோல்வி 7ஆம் அறிவு போலவும் சில காட்சிகள். சூர்யாவுக்கு படம் முடிந்து எழுத்தோட்டத்துடன் விருது வழங்கும் இரண்டாவது படம் இது. சூர்யாவின் வெற்றியே வித்தியாசமான கதைத்தேர்வுகளே எனவே அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் சூதானமாக அமையட்டும் சூர்யா!

மாற்றான் வழக்கத்துக்கு மாற்றமான கதையானாலும் ரசிகர்களின் ரசனையை மாற்றான்!

- அமானுல்லா எம். றிஷாத்


Wednesday, October 10, 2012

மோதிக்கொள்ளும் துப்பாக்கி மற்றும் போடா போடி ட்ரெய்லர் : இன்றைய சூடான வாதம்



ஏகப்பட்ட பிரச்சினை மற்றும் பில்ட் அப்புக்களை தாண்டி முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

முதலில் ஹரீஸ் ஜெயராஜின் பில்டப் வார்த்தைகளை தவிடுபொடியாக்கியது துப்பாக்கி பாடல்கள். கூகுள் கூகுள் பாடல் மட்டுமே ரசிகர்களை இப்போதைக்கு கூகுளில் தேடச்செய்துள்ளது. ஏனையவை துப்பாக்கியிலிருந்து வெளியான வெடிக்காத தோட்டாக்களாவே தெரிகிறது.

வழக்கமாக சுட்டாச்சும் நல்லவே பாட்டுப் போட்டுக்கொண்டிருந்த ஹரீஸ் ஜெயராஜுக்கு அண்மைக்காலமாக சரியாவே சுடத்தெரியாம போனது அனைவருக்கும் வேதனைதான் அதிலும் துப்பாக்கி படத்துக்காச்சும் கொஞ்சம் சத்தமா சுட்டிருக்கலாம் என்பது விஜய் ரசிகர்களின் உளக் குமுறல்.

இந்த படம் என்னோட படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமா இருக்கும் என்று விஜய் சொன்னார் ட்ரெய்லரில் அப்படியெதுவும் வித்தியாசமா தெரியல ஆனாலும் ட்ரெய்லர் ரசிக்கும் படி உள்ளது. சமூகவலைத்தளங்களிலும் தற்போதைய ஹொட் டோக் இதுதான். குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள I'm waiting வசனம் விஜய் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

ஆனாலும் வழக்கமான விஜய் தாவுறது, பறக்கிறது என ட்ரெய்லரில் வருவது சற்றே நெருடல். முருகதாஸ் சார் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஏனெனில் பாப்பா தள்ளிப்போய் விளையாடு என்ற பஞ்ச் வசனத்தை பஞ்சராக்குவது போல தெரியுது. ஆனாலும் விஜயின் Hair Style வித்தியாசமாக அதேசமயம் அழகாகவும் இருப்பது அறுதல்.

அடுத்தது சிம்புவின் போடா போடி : பாடல்கள் அனைத்தும் தமனின் இசையில் கேட்கும் படியாகவே உள்ளது. நடனம் சம்மந்தமான படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பாடல்கள் தெளிவுபடுத்துகின்றது. ஆனாலும் முதலில் வெளியிடப்பட்ட லவ் பண்ணலாமா வேணாமா பாடலே இன்னும் முணுமுணுக்கச் செய்கிறது.

மேலும் இப்போதைக்கு ஐ எம் எ  குத்து டான்சர், அப்பன் மவனே வாடா பாடல் ரசிகர்களை சூடேற்ற ஆரம்பித்திருப்பது பேஸ்புக்கிலுள்ள சிம்பு பேன் பேஜ்கள் கொமன்டாக பதிவு செய்கின்றது.

போடா போடி ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் சிம்புவின் ரசிகர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு துப்பாக்கி ட்ரெய்லர் வெளியீடு அமைந்துவிட்டது இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் சளைக்காமல் ப்ரொமோட் செய்கின்றனர்.

போடா போடி ட்ரெய்லர் சற்றே வித்தியாசமாகவும் ஈர்க்கும் வகையிலமைந்துள்ள அதேவேளை சிம்புவையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது மகிழ்ச்சி.

இந்த இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக அமையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதனால் ட்ரெய்லிருந்தே விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மோதலை ஆரம்பித்துவிட்டனர்.

எதுக்கு வம்பு யாரு விரலை உடைப்பார்? யாரு விரலை ஆட்டுவார்? என்று தீபாவளி ரேஸ் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!

மோதலை தூண்டிவிட்ட அந்த ட்ரெய்லர்கள் இதோ உங்களுக்காக...



Monday, October 8, 2012

அதிகரித்த மாற்றானின் உத்தரவாதத்தொகை


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள மாற்றான் திரைப்படத்தின் அதிகுறைந்த உத்தரவாதத் தொகையாக 50 லட்சம் வரை கொடுக்க திரையரங்க உரிமையாளர் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கே.வி. ஆனந்த் - சூர்யா கூட்டணியின் உருவாகியுள்ள மாற்றான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதனால் திரையரங்க உரிமையாளர்கள் படத்திற்கான அதிகுறைந்த உத்தரவாதத் தொகையினை வழங்க சம்மதித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

அண்மையில் பல பெரிய பட்ஜெட் படங்களில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமையினால் இனி எந்த படத்திற்கு மினிமம் கெரண்டி எனப்படும் உதிகுறைந்த உத்தரவாதத்தொகை கொடுக்கமுடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த போதிலும் தற்போது மாற்றான் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பினால் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் 50லட்சம் வரை வழங்க சம்மதித்துள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் 10லட்சம் வரை கொடுத்து படத்தினை வாங்க முன்வந்துள்ளனராம். இதற்கு முதல் இந்தளவு பெரிய தொகையில் உத்தரவாதப்பணம் கொடுத்து ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது தற்போது சூர்யாவின் படத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ளும் விஜய்!


தமிழ்த்திரைப்படங்களை உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களாக மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டு ஆங்கிலப்படங்களை இன்ஸ்பிரேஸன் என்ற பெயரில் அப்படியே பிரதி எடுத்து அதாங்க ஈயடிச்சான் கொப்பி பண்ணி மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் தற்போது சாதாரணமாகிவிட்டது.

அந்த வகையில் புதிதாக மாட்டிக்கொண்டது விஜயின் துப்பாக்கி திரைப்படம். இதிலென்ன அதிசயம் விஜய்க்கும் முருகதாஸுக்கும் இது ஒன்னும் புதிசில்லையே என்ற உங்களுடைய எரிச்சல் புரியுது. என்றாலும் இம்முறை விஜய்க்கு புதிதுதான் காரணம் வழக்கமாக தெலுங்கிலிருந்தே அதிகமாக ஆட்டையைப் போடுவார் இம்முறை ஹொலிவூட்டு பக்கம் ஓட்டையை போட்டிருக்கார் அவ்வளதுதான். என்ன கொடுமை சார் இது!

இயக்குனர் முருகதாஸு தீனாவுக்கு பிறகு சொந்த கதை, திரைக்கதை என்றால் என்னவென்றே மறந்து போயிருக்கும் போல தெரியுதே. கஜினி படத்தை தமிழ், ஹிந்தி என்று வெற்றிபெறச் செய்தாலும் அது ஏற்கெனவே ஹொலிவூட்டில் வெற்றி பெற்ற மெமொண்டோ என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு தங்களது பழைய சாதனைகளை கொப்பி பண்ணியிருக்கும் ச்சீ... வைத்திருக்கும் இவர்கள் இணைந்த புதிய படமே துப்பாக்கி. இப்படத்தின் முதலாவது போஸ்டர் வெளியானபோதே போஸ்டருமாடா கொப்பியடிப்பாய்ங்க... என அலுத்துக்கொள்ளச் செய்தது கள்ளத்துப்பாக்கி குழுவினர் போட்ட வழக்கு.

அந்த வழக்கு முடிந்து 3 நாள் கூட முற்றுப்பெறவில்லை அதற்கிடையில் அடுத்த போஸ்டரை வெளியிட்டு An Officer and a Gentleman படக்குழுவினரை வழக்கு தாக்கல் செய்ய வைப்பாங்க போல இருக்கு துப்பாக்கி படக்குழுவினர்.

ஏனெனில் 1982ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற An Officer and a Gentleman படத்தின் போஸ்டரை அப்படியே ஈயடித்திருக்கிறார்கள் விஜய் அன்ட் கோ. ஆனாலும் அதிகாரபூர்வ துப்பாக்கி போஸ்டர் என்றே வெளியிடப்பட்டது. உண்மையில் இப்போது இந்த டிசைன் யாருக்கு அதிகாரம் பெற்றது என்று அவங்களே கன்பீஸ் ஆகியிருப்பாங்ளோ?

ஒரு உண்மை தெரிஞ்சாகணும் எங்களுக்கு அது என்னாண்ணா... விஜய் இருக்கிற இடங்களில் கொப்பி வேலை நடக்குதா இல்லை கொப்பி வேலை நடக்குற இடத்திலே விஜய் இருக்கிறாரா?

ஏற்கனவே ஏ.எல். விஜய்யின் (இங்கேயும் விஜய்யா? போகிற போக்கை பார்த்தால் விஜய் என்றால் வெற்றி இல்லை கொப்பி என்று அர்த்தமாக்கிவிடுமோ! ) ஐ எம் சாம் படத்தின் தமிழ் பதிப்பாக வெளிவந்த தெய்வத்திருமகள் படம் தெய்வத்திருட்டுமகள் என்ற கதை மறைவதற்குள் முருகதாஸ் துப்பாக்கி என்ற லைசன்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கியை வெளியிட்டுட்டாரே!

இது போதாத விஜய்யை கலாய்ப்போருக்கு சும்மா கழுவி கழுவி ஊத்த. அதன் விளைவே இன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாவே கேலிக்கூத்தாகியது இந்த துப்பாக்கி போஸ்டர்தான் அதனை நீங்களே பார்த்து சிரித்திருப்பீர்கள்.

முடிஞ்சா 6 வித்தியாசம் கண்டுபியுங்க என்ற வகையிலமைந்த அந்த போஸ்டர் இதோ உங்களுக்கா...


முருகதாஸ் சார் போஸ்டர்தான் மாட்டிக்கிச்சு படத்தையாச்சும் மாட்டாம பார்த்துக்கோங்க சார்...!  ஏன்னா விஜய் சார் கொப்பி பண்ணும் போது ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும் மாட்டிக்கிறாப்போல அதனால சொல்லுறன்!!! வரட்டா ஐயாச்சாமி!!!

Saturday, October 6, 2012

மாற்றான் - புதிய ட்ரெய்லர் : அஜித், விஜய் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை

சூர்யாவின் மாற்றான் படத்தின் 3ஆவது ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரில் புதிய காட்சிகள் பல இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அஜித், விஜய் ரசிகர்களாக அகிலனும் விமலனும் வருவது அனைத்து ரசிகர்களிடையேயும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒக்டோபர் 12இல் வெளிவர இருக்கும் மாற்றான் திரையரங்குகள் அனைத்தும் அஜித், விஜய் மற்றும் சூர்யாக ரசிகர்களால் அதிரும் போல தெரியுதே.

மாற்றான் காய்ச்சலை அஜித், விஜய் ரசிகர்ளையும் விட்டுவைக்காது துரத்த ஆரம்பித்திருக்கும் அந்த ட்ரெய்லர் இதோ உங்களுக்காக...

Friday, October 5, 2012

முடிவுக்கு வந்தது துப்பாக்கி வழக்கு


விஜயின் துப்பாக்கி தலைப்பு மீதான தடையை நீக்கியது நீதிமன்றம். துப்பாக்கி படத்தின் தலைப்பு மீது வழக்குத் தொடர்ந்த கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் இன்று அவ்வழக்கினை மீளப்பெற்றுள்ளமையே இவ்வழக்கு முடிவுக்கு வரக் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி படக்குழுவினருக்கு மிக நீண்ட நாட்களாக தலையிடி கொடுத்துவந்த இவ்வழக்கு முடிவுக்கு வந்தது விஜயின் ரசிகர்கள் மற்றும் துப்பாக்கி படக்குழுவினருக்கு பெரும் ஆறுதலளித்துள்ளதை சமூகவலைத்தளங்களினூடாக காணக்கூடியதாக உள்ளது.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டது போல் தீபாவளிக்கு துப்பாக்கியினை வெடிக்கவைக்க படக்குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒக்டோபர் 10ஆம் திகதி படத்தின் ட்ரெய்லர், பாடல் மற்றும் படம் வெளியீடு குறித்து தகவல்களை வெளியிட பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

இனி என்ன நீதிமன்றமே சொல்லிடிச்சே... கள்ளத்துப்பாக்கி இல்லை இது நல்ல துப்பாக்கிதான்னு... தீபாவளிக்கு சத்தமா வெடிச்சா சரிதான!

Thursday, October 4, 2012

அலெக்ஸ் பாண்டியன் ட்ரெய்லர் வெளியீடு : ரஜினியுடன் மோதப்போகும் கார்த்தி

படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. படத்தின் டீசர் ட்ரெய்லர் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் பூரண மசாலா திரைப்படம் என்பதை நிச்சயப்படுத்துகின்றது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு பேட் போய் எனப் பெயரிட்டுள்ளதோடு படத்தினை டிசம்பர் மாதம் 14ஆம் திகதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டு மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.

ஆரம்பத்திலிருந்து தீபாவளி வெளியீடாக விஜயின் துப்பாக்கியுடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் தற்போது டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. இதனால் கார்த்தி இம்முறை நேரடியாக ரஜியின் கோச்சடையானுடன் மோதுவதற்கு தயாராகிவிட்டார் காரணம் கோச்சடையான் ரஜினியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லுப்போன பிறகு பக்கோடா சாப்பிட முடியாது எதுக்கும் பார்த்துக்கங்க கார்த்தி!


Tuesday, October 2, 2012

அம்மாவின் கைப்பேசி : ட்ரெய்லர்

தங்கர் பச்சான் இயக்கி நடிக்கும் அம்மாவின் கைப்பேசி திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமான தங்கர் பச்சானின் படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக தெரிகிறது இந்த அம்மாவின் கைப்பேசி. ஆனாலும் தங்கர் பச்சானின் டச் விட்டுப்போகாததை பல காட்சிகள் சாட்சியாகின்றது.

மேலும் படத்தில் சாந்தனு மற்றும் இனியா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் இதோ உங்களுக்காக...


Saturday, September 29, 2012

அஜித்தின் 52வது படத்தின் பெயர் 'கர்வம்'!


பில்லா 2 படததிற்கு பின்னர் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கர்வம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பில்லா வெற்றிக்கு பிறகு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது அப்போது மேலும் எதிர்பார்ப்பினை தூண்டும் வகையில் கட்டுடலுடன் அஜித் மிரட்டும் சில புகைப்படங்களை விஷ்னுவர்த்தன் வெளியிட்டார்.

தற்போது படத்தின் படப்பிடிப்புக்களில் மும்முரமாக இருக்கும் படக்குழுவினர் இதுவரையில் படத்தின் பெயரை வெளியிடவில்லை காரணம் படத்தினை வெளியிடும் தருவாயில் தலைப்பு மீது வழக்கு தொடருவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என விஷ்னுவர்த்தன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் சில படத்தின் பெயர் கர்வம் என கசியவிட்டிருக்கிறார். ஆனால் இதுதொடர்பில் படக்குழுவினர் எவரும் வாய் திறக்கவில்லை. எனவே உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் ரசிகர்கள் காத்திருப்பதைத் இப்போதைக்கு வழியேதுமில்லை.

Tuesday, September 25, 2012

ரெண்டாவது படம் : ட்ரெய்லர்


'தமிழ்ப்படம்' படத்தின் இயக்குனர் சீ.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ரெண்டாவது படம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவா நடிப்பில் அமுதனின் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட படம் தமிழ்ப்படம். இப்படத்தின் வெற்றியினால் அமுதனின் ரெண்டாவது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

விமல், அரவிந்த், ரிச்சர்ட் மற்றும் விஜயலட்சுமி  நடித்துள்ள இப்படத்தினையும்  தமிழ்ப்படத்தினை போல நகைச்சுவை படமாகவே உருவாக்கியுள்ளார் அமுதன். மேலும் இப்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் காட்சிகளைப் பார்க்கும்போது படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம்.

வெளியான சில மணித்தியாலங்களிலேயே சமூகவலைத்தளங்களில் ரெண்டாவது படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அந்த ட்ரெய்லர் இதோ...

Rendavathu Padam - First Look Trailer HD

Monday, September 24, 2012

தாண்டவம் - புதிய ட்ரெய்லர்


வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ள தாண்டவம் திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் ஒன்றினை யுடீவி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் ஏற்கனவே வெளியானதை விட சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகிவருகிறது. மேலும் இந்த புதிய ட்ரெய்லரில் பல புதிய காட்சிளும் இணைக்கப்பட்டள்ளது.

அக்காட்சிகள் அடங்கிய புதிய ட்ரெய்லர் இங்கே...

THAANDAVAM Official Trailer 2

Thursday, September 20, 2012

சூர்யாவின் சிங்கம் 2 படத்தின் பூஜை

கடந்த புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று சிங்கம் 2 படத்தின் பூஜை இடம்பெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சூர்யா, படத்தின் இய்குனர் ஹரி, சிவக்குமார், கார்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

SURIYA IN SINGAM 2 MOVIE LAUNCH


















Monday, September 17, 2012

'ஐ' படப்பிடிப்பின் போது...

ஷங்கரின் 'ஐ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Shankar's 'I' on location Image








Friday, September 14, 2012

பவர் ஸ்டார் கைது! : ஆதரவாளர்கள் திண்டாட்டம்


தமிழகத்தின் பவர் ஸ்டார் Dr. ஸ்ரீனிவாசன் 10 கோடி ரூபா பண மோசடி விவகாரம் தொடர்பாக சென்னை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Dr. ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர்கள் பலரும் இந்த விடயம் குறித்த உண்மை நிலை தெரியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும்  10 கோடி ரூபா பண மோசடி குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தான் தயாரிக்காத சங்கரின் ஐ, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட ஏராளமான படங்களிலும் சொந்தத் தயாரிப்பில் சுமார் 7 படங்களிலும் நடித்துவருகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.

இந்நிலையில், இன்று சென்னை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த அழைப்பின் பெயரில் அங்கு சென்ற போது 10 கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீனிவாசன் மீது விசாரணை நடத்தியாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் பவர் ஸ்டாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்தே மேற்படி விசாரணை இடம்பெற்றாதாக அதிகாரபூர்வமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் பணம் சம்பாதி;ப்பதற்காக திரைப்படத்துறையில் நுழையவில்லை என ஒவ்வொரு பேட்டியிலும் கூறிவருகிறார் ஸ்ரீனிவாசன். அது உண்மையாகவே இருக்கும் என நம்பலாம் ஏனெனில் அவரின் படங்களை பார்க்கும் போதே அது தெரிகிறது.

ஒரு படத்தினை தயாரிக்கும் போது அதில் சுமார் 200 குடும்பங்களை வாழ வைக்க முடியும் என நம்புகிறார் அவர் மேலும் அதனை செய்தும் வருகிறார்.

எனவே நல்லெண்ணத்தில் சினிமாவிற்கு வந்த அடிப்படையில் செல்வந்தரான இவர் வெறும் 10 கோடியினை மோசடி செய்திருப்பாரா? என்ற கேள்வியே தற்போது அனைவரது மனதிலும் உள்ளது.

நீயா? நானா? நிகழ்ச்சியில் கோபிநாத்தின் ஏளனப்பார்வையில் சிக்கிய ஸ்ரீனிவாசன் சற்றும் அசராமல் அவருக்கு பதிலளித்த அந்த நிகழ்வின் பின்னர் பலரது ஆதரவினை பெறத்தொடங்கினார் ஸ்ரீனிவாசன். தற்போது பவர் ஸ்டார் என்ற நாயகனுக்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம் ஸ்ரீனிவாசன் என்ற மனிதனுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இன்று தமிழகத்தில் உள்ளனர்.

இதனால் ஸ்ரீனிவாசன் தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவான கருத்துக்கள் வெளிவருவதுடன் அவற்றில் பலவும் அவருக்கு ஆதராவாக இருப்பதனையும் அவதானிக்கலாம்.

இது மட்டுமல்லாமல் இந்த மோசடி குற்றாச்சாட்டு தொடர்பிலான அதிகாரபூர்வ தகவல்களை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர் என்பதும் நன்கு புலப்படுகிறது. எனவே நாமும் காத்திருப்போம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை...

சமூக வலைத்தளத்திலிருந்து பெற்ற பவர் ஸ்டாருக்கு ஆதரவான கருத்தில் ஒன்று இது : ஆரம்பத்தில் ஸ்ரீனிவாசனை விளையாட்டாக எடுத்துக்கொண்ட பலர் தற்போது அவரின் வளர்ச்சியை கண்டு ஆச்சரிப்படுகின்றனர் என்பது மட்டும் திடமான உண்மை.

எது பவர் ஸ்டார் கைதா? இனி தமிழ் நாடே பத்திக்குமே!



Power Star has been arrested!

Power Star Dr. Sreenivasan has been taken into police custody for interrogation in the 10-crore scam. The actor is currently playing an important role in the Shankar-directed I and has several other films in his pipeline.

While sources say that Power Star has been called in for interrogation by the Chennai police, other unconfirmed sources point out that he has been arrested and taken into custody. Power Star’s fans are deeply agonized over this news and are waiting for official confirmation on this.