சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, December 9, 2012

உறுதியானது அஜித் - முருகதாஸ் கூட்டணி : 'தல'யைச் சுற்றும் இயக்குனர்கள்


அண்மைக்காலமாகவே அஜித்துடன் இணைந்து பணியாற்ற நான், நீ என பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அஜித் அறிமுகம் செய்து வைத்த முருகதாஸ் கொஞ்சம் அதிகமாவே முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தற்போதை முன்னணி இயக்குனர்களான அஜித்தினால் அறிமுகமாகாத ஷங்கர், பாலா, கௌதம் மேனன், ஹரி என பலரும் அஜித்தினை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தவர்களே ஆனாலும் ஒவ்வொன்றும் பல்வேறு காரணங்களால் நடக்காமலேயே போய்விட்டது.

இதற்கு முழுக் காரணமும் அஜித்தின் மோசமான செயல்களே என்பது போல சித்தரித்து அன்று ஏராளமான ஊடகங்கள் அண்ணன் நடிகரை உயர்த்தி அஜித்தின் மேல் சேறு பூசி வேடிக்கை பார்த்ததெல்லாம் இன்றும் தல ரசிகளுக்கு ஆறாத வடுவாய் இருக்கிறது. இருப்பினும் இன்று அதே ஊடகங்கள் 'தல' அசைந்தாலும் ஆடினாலும் செய்திகளாக்கிக்கொண்டிருப்பது வேறு கதை.

ஆனாலும் உண்மையான அஜித்தின் முகம் இன்று சினிமா உலகை தாண்டி தெரியவந்துவிட்டது என்பதே உண்மை. இதனாலேயே அண்மைக்காலமாக பல இயக்குனர்கள் அஜித்தை சுற்றி வருகிறார்கள்.

அஜித் இயக்குனர்களின் நடிகர் என்பதை அவர் பணியாற்றிய புதுமுக இயக்குனர்களின் எண்ணிகையே உணர்த்திவிடுகிறது. சரண், சரண், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், துரை, சரவண சுப்பையா, செல்லா, ரமேஸ் கண்ணா, சிங்கம் புலி, ராஜு சுந்தரம் என இன்னும் பலர் இந்த வரிசையில் உள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அஜித்துடன் பணியாற்றிய புது முக இயக்குனர்கள் அத்தனை பேரும் தலயுடன் நெருக்கமாகவே இருக்கிறார்கள்.

இவர்களில் தற்போது உச்சத்தில் இருக்கும் இயக்குனர் முருகதாஸ் அஜித்துக்காகவே கதை தயார் செய்து காத்துக்கொண்டிருக்கிறார். இவரின் காத்திருப்புக்கு  தற்போது தல விடைகொடுத்துள்ளாதாக கொலிவூட் வட்டாரம் உறுதிப்படுத்துகின்றது.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிபெற்று தல என்று தமிழ் சினிமாவில் கொண்டாட வைத்த தீனா படத்தி;ன் வெற்றிக்கு பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் முருகதாஸ், தீனா வெற்றிக் பின்னர் மிரட்டல் மற்றும் பெயரிடப்படாத படமொன்றில் தன்னை அறிமுகம் செய்த அஜித்துடன் மீண்டும் பணியாற்ற முயற்சித்த போதும் அது கைகூடாமலே போனது.

அஜித்திற்காக கதை தயாராக உள்ளது. அவர் அழைக்கும் பட்சத்தில் கையிலிருக்கும் படத்தை விட்டுவிட்டு அவருடன் பணியாற்றுவேன் என அண்மைக்கால பேட்டிகளில் அஜித்திற்கு தகவல்கள் அனுபியவாறே இருந்தார் முருகதாஸ் ஆனாலும் தல அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் திடிரென இக்கதையில் திருப்பத்தை ஏற்படுவது போன்று ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினையடுத்து இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் 2013இல் அஜித் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளமை தல ரசிகர்ளுக்கு நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது நிச்சயம்.

அஜித்தினால் அறிமுகமான என பல இயக்குனர்கள் இன்றும் அஜித்துடன் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்க சற்றே முந்திக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இவர் தவிர இன்னும் சிலரும் அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட வேண்டும் என சில இயக்குனர்கள் கதையுடன் காத்திருக்கிறார்கள். இதில் கௌதம் மேனன், ஹரி போன்றவர்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கதைகள் எதுவும் சோதனை முயற்சியாக இல்லாவிட்டால் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

https://www.facebook.com/Wondersblog உடக்குடன் தகவல்களை அறிந்துகொள்ள எமது பேஸ் புக் பக்கதுடன் இணைந்திருங்கள்.

இந்த போஸ்டிலுள்ள செய்தியினை முந்திக்கொண்டு பலமணி நேரங்களுக்கு முன்னரே பேஸ்புக் பக்கத்தில் நாம் வெயிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - விமர்சனம்

நட்சத்திரங்கள் - விஜய், காஜல் ஆகர்வால், ஜெயராம், சத்யன்
கதை, திரைக்கதை, இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ்
இசை - ஹரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத்

ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தீபாவளிக்கு வெளியாகி விஜய் ரசிகர்களுடன் சேர்த்து பொதுவான ரசிகர்களிடையேயும் கொஞ்சம் சத்தமாகவே வெடித்திருக்கும் திரைப்படமே இந்த துப்பாக்கி.

இந்தியன் ஆமியில் வேலை செய்யும் விஜய் விடுமுறையில் மும்பை வருகிறார். இந்நிலையில் விஜயின் கண்முன்னே குண்டு வெடித்து பலர் பலியாகின்றனர். இதற்கு பின்புலத்தில் யார் யார் இருக்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டு துப்பாக்கி கொண்டு அழிப்பதே படத்தின் கதை.

சாதாக் கதையாக இருந்தாலும் மெகா கதையாக திரையில் காட்டி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இதற்கு பக்கபலமாக உழைத்திருக்கிறார்கள் நாயகன் விஜய், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ஹரீஸ் ஜெயராஜ் ஆகியோர்.

படம் ஆரம்பித்து, முதல் அரை மணித்தியாலங்கள் வரை விஜயின் வழக்கமான கொமர்ஷல் திரைப்படங்களின் வரிசையில் அடுத்தவொரு படம் என்று தோன்றினாலும் பின்னர் படத்தின் கதை நகரும் விதம் அசத்தல்.

முதல் பாதியில் விஜயின் முன்னைய படங்களில் இடம்பெற்றது போல அறிமுகக் காட்சி மற்றும் பாடல், எரிச்சலூட்டும் நகைச்சுவைகளுடன் படம் மெதுவாக நகருவதை இடைவேளைக்கு சற்று முன்னர் உணரமுடிகிறது. 

ஆனால் இரண்டாம் பாதியில் இவற்றையெல்லாம் தூக்கியெறியும் வகையில் திரைக்கதை நகர்த்தி இயக்குனராக ஏ.ஆர். முருகதாஸ் வெற்றிபெற நடிகராக விஜயும் வெற்றி பெற்று நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்லதொரு கொமர்ஷல் படத்தினை பார்த்த திருப்தியை ஏற்படுத்துகின்றார்கள்.

எந்தப்படத்திலும் இல்லாதவாறு இதில் விஜய்யை ஸ்டைலிஸாக காட்டியிருக்கிருக்கிறார்கள். கொஸ்டியூம் டிசைனர் தன்பங்கிற்கு சிறப்பான உடைகளை கொடுத்திருக்கிறார். கோட் சூட் போட்டு விஜய் வரும் காட்சியில் திரையரங்கே கைதட்டல்களால் அதிருவது வித்தியாசமான விஜயை திரையில் காண துடித்த ரசிகளிகளின் ஏக்கத்தை காட்டுகிறது. 

விஜய் சண்டைக்காட்சிகளில் வித்தியாசமான உடலசைவுகளால் கொள்ளைகொள்கிறார். ஏனைய காட்சிகளிலும் இயக்குனருக்கு தேவையானதை செய்து தரமான படத்திற்காய் உழைத்து தன்னை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அடித்தளமிட்டுள்ளார். மிலிட்டரி மேனாகவும் தன்னைப் பொருந்தச்செய்திருக்கிறார் விஜய்.  ஆனாலும் அவரால் அழவைக்க வேண்டிய இடத்தில் ரசிகர்களின் கூச்சலினை குறைக்கச் செய்யவே முடிகிறது.

இயக்குனராக முருகதாஸ் படத்தினை இறுதிவரை தாங்கிச்செல்லுகிறார். இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் அத்தனை நேர்த்தி. ஆனாலும் இறுதிக் காட்சியும், முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு உதவும் பாதுகாப்புத் துறை செயலாளரும் அரதப் பழசு கொஞ்சம் கவனித்திருக்கலாம். இயல்பான வசனங்கள் படத்துடன் ஒன்றிப்போகிறது. ஆனால் அடிக்கடி ஹிந்தியில் பேசுவது கொஞ்சம் அந்நியமாக தெரிகிறது.

தேசிய விருது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பு. புதிதாக எதுவும் இல்லை என்றாலும் கொமர்ஷல் படத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டிருப்பது படத்திற்கு வலுச்சேர்க்கிறது.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் முதல் பாதியில் சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் விட்ட வேகத்தை துரத்திச் சென்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 

ஹரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை படத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. பல காட்சிகள் இசையால் ஈர்க்கப்படுகிறது. பாடல்களைப் போல அவை படமாக்கப்பட்ட விதமும் ஈர்க்கும் படி இல்லை. மேலும் பாடல்கள் படத்துடன் ஒன்றிப்போகாதது வருத்தமே. கூகுள் கூகுள் விஜய்காக மட்டுமே.

இவர்கள் தவிர்த்து வித்யூத் ஜம்வால், நாயகி காஜல் ஆகர்வால், ஜெயராம், சத்யன் ஆகியோர் எம்மை கவனிக்கவைக்கிறார்கள். குறிப்பாக வில்லனாக ஆஜானபாகுவான உடலுடன் அதிகம் பேசாமல் அலட்டாமல் அசத்துகிறார் வித்யூத். ஆனாலும் அவரை இறுதியில் டம்மியாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.

சத்யன் நகைச்சுவை நடிகராக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் போல் தெரிகிறது. அதேவேளை ஜெயராம் வந்துபோகும் ஒரு சில காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். நாயகி காஜலுக்கு பெரிதாக வேலையில்லை. கவர்ச்சிக் கன்னியாக இளைஞர்களை சூடேற்றுகிறார்.

சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே பார்த்தது. கத்திக்குத்து, போத்தல் சண்டை பில்லா 2வை நினைவு படுத்துகிறது. க்ளைமெக்ஸ் சண்டைக்காட்சியில் கில்லியை மீள்பதிவு செய்திருக்கிறார்கள்.

இத்தனை நிறை குறைகளை தாண்டி இறுதியில் வரும் பாடல் முழுவதையும் பார்த்து விட்டே திரையரங்கை விட்டு எழச் செய்திருப்பது ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய்க்கும் கிடைத்த வெற்றி. ஆக மொத்தத்தில் படம் விஜய் ரசிகர்களுக்கு மற்றுமொரு கில்லி பொதுவான ரசிகர்களுக்கு விஜய் பற்றிய எண்ணங்களை தப்பாக்கி அசத்தியிருக்கிறது இந்த துப்பாக்கி.

துப்பாக்கி - தீபாவளி சரவெடி

- அமானுல்லா எம். றிஷாத்

Wednesday, October 10, 2012

மோதிக்கொள்ளும் துப்பாக்கி மற்றும் போடா போடி ட்ரெய்லர் : இன்றைய சூடான வாதம்



ஏகப்பட்ட பிரச்சினை மற்றும் பில்ட் அப்புக்களை தாண்டி முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

முதலில் ஹரீஸ் ஜெயராஜின் பில்டப் வார்த்தைகளை தவிடுபொடியாக்கியது துப்பாக்கி பாடல்கள். கூகுள் கூகுள் பாடல் மட்டுமே ரசிகர்களை இப்போதைக்கு கூகுளில் தேடச்செய்துள்ளது. ஏனையவை துப்பாக்கியிலிருந்து வெளியான வெடிக்காத தோட்டாக்களாவே தெரிகிறது.

வழக்கமாக சுட்டாச்சும் நல்லவே பாட்டுப் போட்டுக்கொண்டிருந்த ஹரீஸ் ஜெயராஜுக்கு அண்மைக்காலமாக சரியாவே சுடத்தெரியாம போனது அனைவருக்கும் வேதனைதான் அதிலும் துப்பாக்கி படத்துக்காச்சும் கொஞ்சம் சத்தமா சுட்டிருக்கலாம் என்பது விஜய் ரசிகர்களின் உளக் குமுறல்.

இந்த படம் என்னோட படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமா இருக்கும் என்று விஜய் சொன்னார் ட்ரெய்லரில் அப்படியெதுவும் வித்தியாசமா தெரியல ஆனாலும் ட்ரெய்லர் ரசிக்கும் படி உள்ளது. சமூகவலைத்தளங்களிலும் தற்போதைய ஹொட் டோக் இதுதான். குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள I'm waiting வசனம் விஜய் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

ஆனாலும் வழக்கமான விஜய் தாவுறது, பறக்கிறது என ட்ரெய்லரில் வருவது சற்றே நெருடல். முருகதாஸ் சார் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஏனெனில் பாப்பா தள்ளிப்போய் விளையாடு என்ற பஞ்ச் வசனத்தை பஞ்சராக்குவது போல தெரியுது. ஆனாலும் விஜயின் Hair Style வித்தியாசமாக அதேசமயம் அழகாகவும் இருப்பது அறுதல்.

அடுத்தது சிம்புவின் போடா போடி : பாடல்கள் அனைத்தும் தமனின் இசையில் கேட்கும் படியாகவே உள்ளது. நடனம் சம்மந்தமான படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பாடல்கள் தெளிவுபடுத்துகின்றது. ஆனாலும் முதலில் வெளியிடப்பட்ட லவ் பண்ணலாமா வேணாமா பாடலே இன்னும் முணுமுணுக்கச் செய்கிறது.

மேலும் இப்போதைக்கு ஐ எம் எ  குத்து டான்சர், அப்பன் மவனே வாடா பாடல் ரசிகர்களை சூடேற்ற ஆரம்பித்திருப்பது பேஸ்புக்கிலுள்ள சிம்பு பேன் பேஜ்கள் கொமன்டாக பதிவு செய்கின்றது.

போடா போடி ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் சிம்புவின் ரசிகர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு துப்பாக்கி ட்ரெய்லர் வெளியீடு அமைந்துவிட்டது இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் சளைக்காமல் ப்ரொமோட் செய்கின்றனர்.

போடா போடி ட்ரெய்லர் சற்றே வித்தியாசமாகவும் ஈர்க்கும் வகையிலமைந்துள்ள அதேவேளை சிம்புவையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது மகிழ்ச்சி.

இந்த இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக அமையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதனால் ட்ரெய்லிருந்தே விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மோதலை ஆரம்பித்துவிட்டனர்.

எதுக்கு வம்பு யாரு விரலை உடைப்பார்? யாரு விரலை ஆட்டுவார்? என்று தீபாவளி ரேஸ் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!

மோதலை தூண்டிவிட்ட அந்த ட்ரெய்லர்கள் இதோ உங்களுக்காக...