Total Pageviews

Thursday, December 27, 2012

Oppan Gangnam Style : இணைய வரலாற்றில் புதியதோர் சாதனை


உலக அழிவு அச்சத்தில் உலகமே அதிர்ச்சியில் உறைந்தாலும் யூடியூப்பில் 1 பில்லியன் தடவைக்கு அதிகமாக அதிர்ந்தே தீருவேன் என கங்கணம் கட்டி சாதனைமிகு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது Oppan Gangnam Styleபாடல்.

பப்பா பப்பா
பப்பா பப்பா
பாப்பாப பா பபப... என கொலைவெறியாக்கிக்கொண்டிருந்த Y this Kolawery பாடலை எம்மவர்களிடம் மறையச்செய்ததோடு உலக நாடுகளில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரபல்யமாக இருந்த பாடல்களை பின் தள்ளிய இந்த கங்ணம் பாடல் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வந்த நாளான்று யூடியூப் வரலாற்றில் மட்டுமன்றி இணைய வரலாற்றிலேயே புதியதோர் சாதனையை ஆரம்பித்தது இந்த கங்ணம் பாடல்.

அதாவது கடந்த 21.12.2012 அன்று இலங்கை நேரப்படி இரவு 9.20 மணியளவில் உலகமே உலக அழிவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க யூடியூப்பில் பாடல் 1 பில்லியனாவது தடவை பார்க்கப்பட்ட முதலாவது வீடியோவாக பாதிவாகி புதியதோர் சாதனைபடைத்தது. மேலும் யூடியூப்பில் அதிக 'டுமைநள' பெற்ற வீடியோவாகவும் கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது எங்கும் எதிலும் கங்ணம் என்றாகிவிட்ட சமாதானத்திற்குரிய பாடலான Oppan Gangnam Style பாடல் PSY 6 என்ற தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடலே. இப்பாடலை (பார்க் ஜெய்-சேங்) Park Jai-Sang, (யூ கன்-ஹையுங்) Yoo Gun-Hyung எனும் இருவரே எழுதி தயாரித்தனர். இதில் பார்க் ஜெய்-சேங் என்பரே வீடியோவில் தோன்றி நடனமாடியுள்ளார்.

கங்ணம் என்பது கொரியாவிலுள்ள Seoul எனும் பிரதேசத்திலுள்ள ஒரு இடத்தின் பெயர். Oppan Gangnam Style என்பதனை ஆங்கிலத்தில் 'Big Brother is Gangnam Style' எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் வரும் ழுppய என்ற சொல் கொரிய நாட்டில் பெண்களால் வயதான சகோதரன் அல்லது வயதான ஆண் தோழர்களை அழைக்கும் வார்த்தை.

மேலும் இப்பாடலானது கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல். (அதான் நம்ம ஏரியாவிலும் இந்த பாட்டு ரொம்ப பேமஸோ...)

கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதி வெளியான இப்பாடல் ஆரம்பத்தில் கொரியாவிலும் மேலும் ஒரு சில நாடுகளிலே பிரபல்யமாகி இருந்தது. இருப்பினும் சில வாரங்கள் கழித்தே உலக நாடுகளில் உச்சக்கட்ட வரவேற்பினை பெறத் தொடங்கியது. குறிப்பாக 09.15.2012 பின்னரே ஏனெனில் அதுவரையில் சுமார் 250 மில்லியன் தடவைகள் மட்டுமே யூடியூப்பில் பார்வையிடப்பட்டிருந்த கங்ணம் அடுத்த 3 மாதங்களில் மட்டும் 750 மில்லினுக்கும் அதிக தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென இந்த பாடல் உலக நாடுகளில் பிரபல்யமாவதற்கு இப்பாடலிலுள்ள ஈர்ப்பு ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் குறிப்பாக இந்தியா, இலங்கை, பங்களதேஷ் மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலுள்ளவர்களை முணுமுணுக்கச் செய்த பெருமை நடந்து முடிந்த ரீ20 உலக்கிண்ண போட்டிகளும் கிறிஸ் கைலும் என்பது உறுதி.

கிறிஸ் கைலின் கங்ணம் நடனத் தொடர்ந்து கங்ணம் என்ற வார்த்தை பயன்படுத்ததா ஊடகங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு கைலையும் கங்ணத்தையும் இணைத்து செய்திகள் அப்போது வெளியானதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கி மூன் இப்படலை உலக சமாதானத்திற்காக பாடலாக இனம் கண்டு உத்தியோகபூர்வ அறிவித்து அந்ந நிகழ்வில் கங்ணம் நடத்தையும் ஆடினார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானி பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கிரிக்கெட், உதைபாந்தாட்ட வீரர்களும் சில முக்கிய நிகழ்வுகளில் கங்ணம் நடத்தை ஆட கங்ணம் அனைவரது மனதிலும் ஆளப்பதிய காரணமாயிற்று. இதனால் உலகின் பல பாகங்களிலும் கங்ணம் பாடல் கவனத்திற்குரிதாக மாறியது.

இப்பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து மோர்பிங் மூலம் ஏராளமான பதிப்புக்கள் வெளியானது. இதில் உலக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல் என அனைத்து துறையிலும் மக்களை ஆட்கொண்டவர்களை பயன்படுத்தியதில் இந்த கங்ணம் மக்களை இலகுவாக ஆட்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்தது.

மேலும் கங்ணம் பாடலை வைத்து அரசியல் குறும்படம், உலக அழிவை விளக்கும் படம் என பல்வேறு இடங்களில் தாக்கம் செலுத்தி வெற்றி கொடி நட்டு உலகறிந்த நபராக மாறியுள்ள PSY என்றழைக்கப்படும் பார்க் ஜெய்-சேங் இது தொடர்பில் கூறுகையில்,

கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல்.

ஆரம்பத்தில் இதற்காக பல்வேறு மிருகங்களின் அசைவுகளை நடமாக்க முயற்சித்து இறுதியில் குதிரையின் அசைவுகளை நடனமாக்கினோம். அந்த குதிரை மிகப் பெரும் வெற்றியீட்டிக்கிறது என்றார்.

இந்த வெற்றியை அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா, ஜப்பான், இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உட்பட 30 மேற்பட்ட நாடுகளின் பாடல் தரவரிசைப்படுத்தலில் தொடர்ச்சியாக பல வாரங்கள் நீடித்து அத்தாட்சிப்படுத்தியது கங்ணம்.

உண்மையில் இப்பாடலை பார்த்த, கேட்ட அனைவரினதும் ஏகோபித்த முடிவு இந்த பாட்டுல ஏதோ இருக்கத்தான் செய்யுது நீங்களே கொஞ்சம் கேட்டுப்பாருங்க... என்பதுதான்.

இவ்வாறு குதிரையில் உலகைச் சுற்றி வெற்றி கண்டிருக்கும் கங்ணம் நடனத்தை புது வருடப்பிறப்பன்று ஜேர்மன் நாட்டு தலைநகரான பேர்லினிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரண்டர்பேர்க் வாசலில் 1 மில்லின் பேர் ஒன்றாக கங்ணம் நடனமாடி புதுவருடத்தினை வரவேற்க தயாராகியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் வருடப்பிறப்பை ஆரம்பிப்போம் Oppan Gangnam Style...

-அமானுல்லா எம். றிஷாத்