நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லுவதற்காக நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் சாதாரணமாக எல்லோரும் பயணிக்க முடியாது காரணம் இந்த பயணத்திற்கான கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும். இரண்டு பேருக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அறவிடப்படும் என அறிவித்துள்ளது குறித்த நிறுவனம்.
ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காகவும் அங்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களை வேறு நிறுவனங்களிடம் தயாரிக்க ஒப்படைத்துள்ளதுடன் சிலவற்றை ஏற்கனவே இயங்கிவரும் விண்வெளி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்காக தற்போது உபயோகத்தில் உள்ள விண்வெளி ஓடங்கள் மற்றும் தொழிநுட்பங்களை 'கோல்டன் ஸ்பைக்' நிறுவனம் பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செலவினங்களை கருத்திற்கொண்டு நிலவிற்கு பயணிப்பபதை நிறுவைத்துள்ளது. நாசா இறுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவிற்கு பயணித்திருந்தது.