சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, March 21, 2013

விண்ணைத் தாண்டி சாதிக்கும் பெண்கள்


முன்­னொரு காலத்தில் கண­வ­னுடன் உடன் கட்டை ஏறிக்­கொண்­டி­ருந்த பெண்கள், விஞ்­ஞா­னத்தின் கனவு உல­கங்­க­ளுக்கு விண்­க­லங்­க­ளுடன் விண்­ணிற்கு ஏற ஆரம்­பித்து முன்­னு­தா­ர­ணமாய் இம்­மண்ணில் பெண்­களின் கண்­களை விண்ணை நோக்கி பார்க்க வைத்த பெருமை ரஷ்­யா­வுக்கே உண்டு.

1963 ஜுலை 16ஆம் திகதி வொஸ்டக் 6   என்ற மனித விண்­க­லத்தில் வலென்டினா டெரஸ்­கொவா என்ற பெண்­ணையும் ரஷ்யா விண்­ணிற்கு ஏவி­யது. அதுவே முதன் முறை­யாக பெண்­மணி ஒருவர் விண்­க­லத்தில் விண்­வெ­ளிக்கு பய­ண­மான முதல் சந்­தர்ப்­ப­மாகும். அன்று பெண்­க­ளுக்­கான சுதந்­தி­ரத்தின் எல்­லைக்­கான கதவு தகர்க்­கப்­பட்டு விண்­ணிற்கு பறந்­தது டெரஸ்­கொவா என்ற பெண் மட்­டு­மல்ல பெண்­க­ளுக்­கான பல தடை­க­ளுமே.

குனிந்த தலை நிமி­ர­வி­டாமல் பெண்­களை நடக்­க­விட்டு வானை மறைத்த சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் வானையும் தாண்டிச் செல்ல ஒரு பெண்ணை அனு­ம­தித்த ரஷ்­யாவின் செயற்­பாட்­டுக்கு பின்னர் இன்­று­வரை விண்­வெ­ளிக்குச் பய­ணித்­துள்ள 525 பேரில் 56 பெண்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கண்­ணுக்குத் தெரியும் சக்­தி­களை விட காற்று மற்றும் உயிர் போன்ற உணரக் கூடி­ய­வற்­றுக்­கான சக்­திகள் என்­றுமே அதிகம் என்­பதை ஒரு வகையில் பெண்­களும் உணர்த்தி இருக்­கி­றார்கள் என்­றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வொஸ்டக் 6 விண்­க­லத்தின் பயணம் வரையில் விண்­வெளி தொடர்­பான ஆராய்ச்­சி­களில் பெண்­களின் திற­மை­களை யாரும் பெரி­ய­ளவில் அறிந்­தி­ருக்­க­வில்லை அல்­லது வெளிக்­கொ­ணர விரும்­ப­வில்லை என்­ப­து­வாகத் தான் இருக்க வேண்டும். காரணம் அன்று ஆண்­களின் சட்­டங்கள் பல பெண்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

ஆனால், தற்­போது நிலை­மைகள் அவ்­வா­றில்லை. உல­கி­லுள்ள அத்­தனை துறை­க­ளிலும் இன்று பெண்­க­ளுக்­கான உரிமை என்­பது நிச்­ச­யிக்­கப்­பட்­ட­தொன்­றா­கவே இருக்­கி­றது. பெண்­களும் அவற்­றிற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இருப்­பினும் இத­னையும் மீறி பெண்­ணியம் என்ற பெயரில் ஆண்­களை அடக்கி ஆள்­வ­தற்கு முயற்­சிக்கும் பெண்கள் கூட்­ட­மொன்றும் இருக்­கத்தான் செய்­கி­றது.

சரி இப்­போது விடயம் அது­வல்ல. விண்­வெ­ளிக்கு முதல் பெண்­ம­ணியை சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது ரஷ்யா அனுப்பி வைத்து எதிர்­வரும் ஜுலை மாதம் 6ஆம் திக­தி­யுடன் 50 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றது. இதனை முன்­னிட்டு 50ஆவது ஆண்டைக் கொண்­டாடும் முக­மாக பெண்­ணொ­ரு­வரை மீண்டும் விண்­வெ­ளிக்கு அனுப்­பு­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ளது.


கடந்த 1997ஆம் ஆண்­டுக்கு பின்னர் ரஷ்யா இது­வரை பெண்­களை விண்­வெ­ளிக்கு அனுப்-­ப­வில்லை. தற்­போது எதிர்­வரும் ஆண்டு எலினா செரோவா என்ற 36 வய­தான பெண்­ணொ­ரு­வரை விண்­வெ­ளிக்கு அனுப்பத் திட்­ட­மிட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு விண்ணில் பறக்க உள்ள எலினா செரோவா, சர்­வ­தேச விண்­வெளி ஆய்­வு­நி­லை­யத்தில் ஆறு மாதம் தங்க வைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மொத்­த­மாக 50 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­க­வுள்ள பெண்­களின் விண்­வெளி வாழ்க்­கையில் பல்­வேறு தரு­ணங்­களில் தங்­க­ளது நாடு­க­ளையும் பெண்­க­ளையும் பெரு­மைப்­ப­டுத்­திய பெண்கள் தொடர்பில் சற்­றேனும் அறிந்­தி­ருக்­கிறோம் எனும் பெரு­மை­யா­னது எம்மைச் சார்ந்­தி­ருப்­பது சிறப்­பாக இருக்கும்.

முதன் முதலில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த பெண் என்ற பெருமை வலன்டைன் டெரஸ்­கொ­வா­வுக்கு இருப்­பது போல ரஷ்­யாவைச் சேர்ந்த ஸ்வெட்­லனா ஸவிட்ஸ்­கியா என்ற பெண்ணே முதன் முதலில் விண்­வெ­ளியின் தரை­யி­றங்கி நடந்­தவர் என்ற பெரு­மை­யுண்டு.

இதன் தொடர்ச்­சி­யாக ரஷ்­யாவின் விண்­வெளி ஆராய்ச்­சி­களில் போட்­டிக்கு நின்ற அமெ­ரிக்கா சல்லி ரைட் என்ற பெண்ணை அவ­ரது 32ஆவது வயதில் 1983ஆம் ஆண்டில் விண்­ணிற்கு அனுப்­பி­ய­போதும் 1984ஆம் ஆண்டில் கத்ரின் என்ற பெண்­ணையே முதன் முதலில் விண்­வெ­ளியில் தரை­யி­றங்கச் செய்­தது. சல்லி ரைட் கடந்த ஆண்டில் ஜுலை 23ஆம் திகதி தனது 61ஆவது வயதில் புற்­று­நோ­யினால் உயி­ரி­ழந்தார்.

இது­வ­ரையில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த 56 பெண்­களில் 45 பெண்­களை அமெ­ரிக்­காவே அனுப்பி வைத்­துள்­ளது. அதே­வேளை ரஷ்யா சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது 2 பெண்­க­ளையும் சோவியத் யூனியன் பிரிந்­ததன் பின்னர் ஒரு­வரை மாத்­தி­ரமே அனுப்­பி­யுள்­ளது.

மேலும் சீனா, ஜப்பான், வட­கொ­ரியா, ஈரான் மற்றும் இந்­தியா உள்­ளிட்ட ஆசியா கண்­டத்தைச் சேர்ந்த 5 பெண்­களும் விண்­வெ­ளிக்கு சென்­றுள்­ளனர் என்­பதில் எமக்கும் பெரு­மைதான். ஆனால் இவற்றில் இந்­தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பெண்கள் அமெ­ரிக்கா சார்­பா­கவே சென்­றுள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யாவைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சுனிதா வில்­லியம்ஸ் என்­பவரே அதி­க­ள­வான நாட் கள் (195 நாட்கள்) விண்­வெ­ளியில் இருந்த பெண்.

மிகச் சிறிய வயதில் பய­ணித்­தவர் என்ற பெருமை இங்­கி­லாந்­தினால் முதன் முதலில் அனுப்­பப்­பட்ட பெண் ஹெலன் ஷர்மன் என்­ப­வ­ரையே சாரும். இவர் தனது 29ஆவது வயதில் விண்­வெ­ளிக்கு பய­ண­மானார்.


இவை­த­விர விண்­வெளிப் பய­ணங்­களில் சாதனை நிலை­நாட்ட பரிந்­து­ரைக்­கப்­பட்டு இறு­தியில் வாய்ப்பை இழந்த பெண்கள் 15 பேர் உள்­ளனர்.

வாய்ப்புக் கிடைத்து விண்­வெ­ளிக்குச் சென்று உயி­ரி­ழந்­த­வர்­களும் மூவர் உள்­ளனர். இதில் எம்­ம­வர்­க­ளுக்கு அதிகம் பரீட்­ச­ய­மான கல்­பனா சாவ்­லாவும் அடங்­கு­கிறார். இவரே விண்­ணிற்கு சென்ற இந்­தியப் பெண்­மணி. இவ­ருக்கு முதல் சுனிதா வில்­லியம்ஸ் பய­ணித்­தி­ருந்த போதிலும் அவர் இந்தியாவில் பிறந்தவரல்ல.

2003ஆம் ஆண்டில் எஸ்.ரீ.எஸ்-107 விண்வெளி விபத் துக்குள்ளானதில் கல்பனாவும் அமெரிக்காவைச் சேர்ந்த லூறல் பீ. க்ளார்க் என்ற இன்னொரு பெண்மணியும் உயிரிழந்தார். இதேபோல 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜலென்ஜர் விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரெஸ்னிக் என்ற பெண்ணும் உயிரிழந்தார்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதிக்கத் துடித்து உயிரிழந்த இப்பெண்கள் விதைகளாகவே வீழ்ந்திருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக மரமாகவே எழு வார்கள் என்பதில் சந்தேக மில்லை.


 -அமானுல்லா எம்.றிஷாத்

இக்கட்டுரையானது 08.03.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Friday, December 21, 2012

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி


ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை விஞ்ஞானம்.

மனிதன் வாழ பூமியை தவிர ஏதுவான கிரகங்கள் உள்ளனவா என பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தின் மீது எப்போதுமே ஆராய்ச்சியாளர்களுக்கு தனி மோகம் உண்டு. காரணம் செவ்வாய் கிரகத்தில் பல வருடங்களுக்கு முன்பு நீர் இருந்ததாக நம்பப்படுவதே.

இதற்காக ஏற்கனவே பல செயற்கைக் கோள்களையும், ரொபோட்களையும் விண்ணிக்கு அனுப்பியுள்ள நாசா விஞ்ஞானிகள், கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி கியூரியோசிட்டி என்ற ரொபட்டிக் விண்கலத்தினை பல்வேறு கனவுகளுடன் வெற்றிகரமாக அனுப்பியது.

யானை போய் அதன் வால் பொறுத்த கதையாக பல தடவைகள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது பல விண்கலங்கள் வெடித்துச் சுக்குநூறாகியுள்ளது.

ஆனால் இந்த கியூரியோசிட்டி விண்கலமானது விஞ்ஞானிகளின் கனவுகளை வழக்கம் போல சுக்குநூறாக்காமல் 563,000,000 கீ.மீ தூரம் பாதுகாப்பாக பயணித்து செவ்வாயில் இவ்வாண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி தரையிறங்கி ஆய்வாளர்களுக்கான ஆராய்ச்சிக் கதவை திறந்து விட்டது.

செவ்வாயில் மனிதன் வாழ ஏதுவான காரணிகளை கண்டுபிடிப்பதனை பிரதான நோக்காகக் கொண்டே இந்த கியூரியோசிட்டி செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் செற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே செவ்வாயில் நீர் இருந்துள்ளதாக நம்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதனை உறுதிப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி விண்கலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.

இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.

எனினும் கியூரியோசிட்டியினை செவ்வாய் கிரகத்தின் மத்தில் தரையிறக்க எண்ணியிருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.

ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும். இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.

தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செவ்வாய் கிரகத்திலுள்ள கல், மண், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றின் மேலதிக தகவல்களை துல்லியமாக படங்களாகவும் கியூரியோசிற்றி தற்போது வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கியூரியோசிட்டியில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள கெமரா மற்றும் ரொபட்டிக் அமைப்புக்கள் சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


விரைவில் செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா...

ஆரம்பத்தில் நிலவுக்கு குறியேற அறிவியல் உலகில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடவில்லை. ஆனால் அண்மையில் நாசாவின் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர் இணைந்து 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு தேசத்தின் பெருமைக்காக அல்லது ஆராய்ச்சிகளுக்காக ஆட்களை அழைத்துச் செல்ல முடிவுசெய்துள்ளனர்.

இதற்கான கட்டணம் வாயைப் பிளக்க வைக்கிறது. அதாவது அமெரிக்க டொலரில் 1.5 பில்லியன்களாகும். இது இருவருக்கான கட்டணம் மட்டுமே. இவ்வாறான அதிக செலவுகள் காரணமாக நாசாவே நிலவிற்கு மனிதனை அனுப்புவதனை கடந்த 40 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் அமைப்பாளரான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் சுமார் 80ஆயிரம் பேரை குடியமர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

முதற்கட்டமாக முன்னேறிய நாடுகளிலுள்ள தேகாரோக்கியமுடைய நடுத்தர வயதினரை தலா ஒருவருக்கு 5 கோடி செலவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சேகரிக்கக் கூடிய குறைந்தளவிலான தொகையாகவே இதனை நிர்ணயித்துள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் அங்கே எதிர்காலத்தில் வரவுள்ளவர்களில் நலனுக்காக பணியாற்றி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. மேலும், வீடுகள் கட்டுவதற்கான உபகரணங்களையும் கொண்டுசெல்ல தயார் செய்யப்படுகிறது.

முதலில் பயணம் செய்யவுள்ளவர்கள் தங்கவென காபனீரோட்சைட் நிரப்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது. அதன் மேல் சூரியனின் வெப்பத்தைத் தாங்க நீர் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் சுதந்திரமாக செவ்வாய் கிரகத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே முதற் பயணத்தின் போதே விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மீத்தேன், ஆக்ஸிஜன் வாயுக்கள் போன்றவை எடுத்துச்செல்லப்படவுள்ளது. தூர நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சவால்மிக்க திட்டத்தில் பங்குகொள்ள தற்போது, உலகிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டம் வெற்றி பெறுமானால், பூமியிலுள்ள 7 பில்லியன் மக்களும் ஆசைப்படுவார்கள்.

அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் இத்திட்டம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இப்போதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்கென செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடிய விசேடமான ரொக்கட் ஒன்று பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது.

இந்த ரொக்கட்டுக்கு 'பல்கொன் 9' என பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு லண்டனில் உள்ள ராயல் வான்வழி சமூகத்தில் வைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் அமைப்பாளரும், முதன்மை செயல் அலுவலருமான எலன் மஸ்க் தெரிவித்தார்.

எனவே விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டமானது 'செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க' என அழைக்கபோவதை உறுதியாக நம்புகிறது அறிவியல் உலகம். அந்த நம்பிக்கை நிஜமாகும் போது அந்த சவால்மிக்க பயணத்திற்கு நாமும் தயாராவோம்!

-அமானுல்லா எம். றிஷாத்



Friday, December 7, 2012

நிலவுக்கு நாமும் போகலாம் ஆனா 1.5 பில்லியன் டொலர் செலவாகுமாம்


நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லுவதற்காக நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் சாதாரணமாக எல்லோரும் பயணிக்க முடியாது காரணம் இந்த பயணத்திற்கான கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும். இரண்டு பேருக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அறவிடப்படும் என அறிவித்துள்ளது குறித்த நிறுவனம்.

ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காகவும் அங்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களை வேறு நிறுவனங்களிடம் தயாரிக்க ஒப்படைத்துள்ளதுடன் சிலவற்றை ஏற்கனவே இயங்கிவரும் விண்வெளி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்காக தற்போது உபயோகத்தில் உள்ள விண்வெளி ஓடங்கள் மற்றும் தொழிநுட்பங்களை 'கோல்டன் ஸ்பைக்' நிறுவனம் பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செலவினங்களை கருத்திற்கொண்டு நிலவிற்கு பயணிப்பபதை நிறுவைத்துள்ளது. நாசா இறுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவிற்கு பயணித்திருந்தது.




Friday, November 30, 2012

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றிக்கிக்கும் உந்துசக்தியாகின்றது. அவ்வகையில் ஒவ்வொரு தேவைக்குமான மாற்றீட்டினை கண்டுபிடித்து வரும் அறிவியல் உலகத்தில் பூமிக்குரிய மாற்றீடு என்ன? என்ற தேடலும் முக்கியமான ஒன்று.

பல வருடங்களாகவே நடைபெறும் இந்த தேடலின் மற்றுமொரு வளர்ச்சியே கெப்ளர் விண்கலம். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பூமியை போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கிரகத்தினைத் தேடி கெப்ளர் எனும் விண்கலத்தினை அண்டவெளியில் தீவிரமாக அலையவிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அண்டவெளியை கெப்ளர் போட்டுத் தேடிப்பார்த்தும் புவியை ஒத்த எந்த கிரகமும் இதுவரையில் சிக்கவில்லை. ஆனாலும் கிடைக்கிறது - என்றைக்குமே கிடைக்காமல் இருக்காது என்ற நம்பிக்கையில் தொடர்கிறது ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள்.

ஏன் குறிப்பாக பூமி மாதிரியான ஒரு கிரகத்தினை ஆய்வாளர்கள் தேடியலைகிறார்கள்? மனித சனத்தொகை வளர்ச்சியானது 1950ஆம் ஆண்டுகளில் பின்னர் படுவேகமாக ஜே வடிவில் வளர்ந்து இன்று சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அண்ணளவாக 7.1 பில்லின்கள் ஆகும். இதுவே 2025ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 8 பில்லினுக்கும் (8,000,000,000) அதிகமாகிவிடும் என்கிறது ஆய்வுகள்.

இதனால் காலப்போக்கில் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவுசெய்வதே சாதனைக்குரியனவாய் மாறிவிடும். நீர், நிலம் மற்றும் வாயு போன்றவற்றுக்கே தட்டுப்பாடு நிலவலாம். ஏனெனில் அதிகரித்துவரும் சனத்தொகையினால் இவைகள் வெகுவிரைவாகவே மாசடைந்து விடும்.

எனவே மனித குலத்தினை காப்பாற்றுவதனை நோக்காக கொண்டே வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் பூமியை ஒத்த கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களின் மாதிரியிலமைந்த வேற்றுக்கிரகவாசிகள் புவியை ஒத்த கிரகத்திலேயே இருப்பார்கள் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கையிலமைந்த எதிர்பார்ப்பே.

சூரிய மண்டலத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களில் எதிலும் உயிரினங்கள் வாழத் தேவையான கூறுகள் எதுவும் இல்லை. இதனாலேயே அண்டவெளியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்களில் பூமி மாதிரியான கிரகங்கள் இருக்கின்றனவா? என்று அறிய கெப்ளர் விண்கலத்தினை அண்டவெளியில் உலவவிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் புவியை ஒத்த கிரகம் என்பது அளவில் ஒத்திருப்பதோ சூரினைச் சுற்றி வரவேண்டும் என்பதோ இல்லை. தட்ப வெப்ப நிலைகள், காற்று மண்டலம், காற்றழுத்தம், நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்குமிடையிலான தூரம் மற்றும் இன்ன பிற காரணிகள் போன்றன புவியை ஒத்திருக்க வேண்டும். அதாவது மனிதன் வாழ ஏதுவான காரணிகள் காணப்படவேண்டும்.

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் புவியிலுள்ள அந்தாட்டிக்கா பிரதேசத்திலேயே எம்மால் வாழ முடியாது காரணம் அங்கு நிலவும் குளிரான சூழல். இசைவாக்கமடைந்தால் முடியுமே என நாம் எண்ணக்கூடும். அவ்வாறில்லை மீனுக்கு நீச்சல் கற்றுத்தரத் தேவையில்லைதான் ஆனால் அது தண்ணீரில் மட்டுமே சாத்தியம்!

சரி, ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களின் நிலைமைகள் என்னவென்று பார்ப்போமானால் வெள்ளிக் கிரகமானது புவியின் அளவை ஒத்தது என்றாலும் தீம்பிளம்பு போல சூடாக உள்ளதுடன் கூடிய காற்றழுத்தம் காரணமாக இங்கு செல்லும் விண்கலங்களே சுக்குனூறாக வெடித்துச்சிதறும். புதன் கிரகத்திலோ வெப்பமும் குளிரும் அசாதாரணமாக மாறி மாறி வருகின்றது.

இதேவேளை புவிக்கு அடுத்து வரும் செவ்வாய் கிரகமே தற்போது அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட காணப்பட்டுள்ளதாக அண்மையில் கியூரியோசிட்டி விண்கலம் மூலம் கண்டுபிடிக்கபட்டது. ஆனாலும் அங்கு காணப்படும் குளிர் விபரீதமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

செவ்வாய்க் கிரகத்திலேயே குளிர் வாட்டுகிறது என்றால் சூரியனிலிருந்து தூரம் அதிகரித்துச்செல்லும் வழியிலுள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ போன்ற கிரகங்களின் நிலைமைகளை சிந்திப்பார்க்கவே முடியாதுள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அவையெல்லாம் ஐஸாக உறைந்து காணப்படுகிறது.

இவை தவிர பூமியில் காணப்படும் காற்றுமண்டலமானது ஆபத்தான புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது. மேலும் சூரியனிலிருந்து, தகுந்த தட்ப வெப்ப நிலைகள் கிடைக்கும் தூரத்தில் உள்ளதுடன் பூமி தகுந்த வேகத்தில் சுழல்வதனால் இரவும் பகலும் தேவையான அளவில் கிடைக்கிறது. இல்லையேல் எமக்கும் ஒரு பக்கத்தில் வாட்டப்படும் உணவு வகைகளின் நிலைமைதான்.

சந்திரன் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் காணப்படுகின்ற போதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காப்பு சந்திரனில் இல்லை. அத்துடன் தொடர்ந்து 14 நாள் வெயில் பின்னர் 14 நாள் குளிர் என இருப்பதனால் மனிதன் வாழ சந்திரனும் உகந்தாக இல்லை.

இவ்வாறு உயிரினங்கள் வாழ ஏதுவாக புவி திடமாக உள்ளது போல் ஞாயிற்றுத் தொகுதியில் வேறு கிரகங்கள் இல்லை என்பதே தற்போது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கெப்ளர் விண்கலம் இதுவரையில் சுமார் நூற்று ஐம்பது ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் சில கிரகங்கள் - அது சுற்றும் சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து புவி அமைந்துள்ள தூரத்தை ஒத்த தூரத்தில் காணப்படுகிறது. அவையே தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் துருப்புச் சீட்டாகவும் இருக்கிறது. அவை தொடர்பில் மேலும் பகுத்தாராயப்பட்டு வருகிறது எனவே சிலவேளை அவற்றில் புவியை ஒத்த கிரகம்(கள்) இருக்கலாம் என்பது ஆராய்வாளர்களின் நம்பிக்கை.

கிரகங்களை இந்த கெப்ளர் விண்கலம் எப்படி கண்டுபிடிக்கிறது தெரியுமா? இரவு வானில் தெளிவாக தெரியும் நட்சத்திம் திடீரென மறையும்போது வானில் மிக உயரத்தில் பறக்கும் விமானத்தின் ஓசைகள் எதுவுமின்றி அங்கே விமானம் செல்லுகிறது என்று நாம் சாதரணமாக எதிர்வுகூறுவது போலவே வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது கெப்ளர்.

கெப்ளர் அனுப்புகின்ற அவ்வாறான படங்கள், தகவல்கள்களைக் கொண்டு நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து குறித்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

தற்போது கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணிகள் முடிவடைந்த போதிலும் மேலும் நான்கு ஆண்டுகள் அண்டவெளியில் தனது ஆராய்ச்சியைத் தொடரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகளை தேடி சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1 

இதேவேளை 1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கோ ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியின் குரல் கேட்கிறது. அதை நோக்கிய வொயஜரின் பயணமும் தொடர்கிறது. எம்மைத் தொடர்புகொள்ள அவர்களும் முயற்சிக்கிறார்கள் விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை - வெற்றிபெறும் தேடலின் பயணமாக தொடர்கிறது.

- அமானுல்லா எம். றிஷாத்