பரம்பரை பரம்பரையாக நீண்டகாலமாக நம்மில் குடிகொண்டிருந்த நம்பிக்கைகள் பல, மூட நம்பிக்கைகளென வளர்பிறை போல தெரியவர அறிவியல் வழி செய்துகொண்டே இருக்கி றது.
சில காலங்களுக்கு முன்னர் இரவு நேரங்களில் தெளிவான வான் பரப்பிலிருந்து தீடிரென ஒளிக்கீற்றொன்று செல்வதை அவதானித்தால் போதும் தள்ளா டும் வயதானர்கள் பலரும் ஏற்றுக்கொள்ள முடியாத பல கதை கள் சொல்வார்கள்.
அவற்றுள் பலவும் நீண்ட கால நம்பிக்கைகளாகவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்க லாம். சில சமயங்களில் நட்சத்திரம் பூமியில் இறங்குவதாக வும் அவிழ்த்துவிடுவார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழியில்லை.
அவ்வாறான நிகழ்வொன்றை ஏற்படுத்தும் எரிகல் பொழிவுவொன்று அண்மையில் நம்நாட்டிலும் ஏற்பட்டது.
ஆனால் அவை நட்சத்திரம் அல்ல என்பது நிச்சயம். ஏனெ னில் நட்சத்திரம் ஒன்று பூமியை போன்று பல்லாயிரம் மடங்கு பெரியவை. அவை பூமியிலிருந்து கோடிக்கணக்கான கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ளவை. அதுமட்டுமன்றி நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ளவை. அத்துடன் அவை பூமியிலிருந்து மிக வேகமாக தூரமாகச் செல்கின்றது.
அப்படியெனில் உண்மையில் வான் பரப்பில் காண்களை ஈர்த்துக்கொண்டு பாயும் அந்த ஒளிக்கீற்றுகள்தான் என்ன? என்று விஞ்ஞானம் கூறுகிறது எனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!
பறக்கும் கற்கள் என அழைக்கப்படும் விண்கற்களின் (அஸ்டிரொய்டுகள்) பாகங்களே அவை. இந்த விண்கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்தியாசமான அளவுகளில் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.
இவை சூரியனைச் சுற்றி வருகையில் ஒன்றொன்று மோதுவதனால் வெடித்துச் சிதறுகின்றன. இதன்போது வெளியாகும் தூசு துணிக்கைகள் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வெளியா கும் துணிக்கைகள் புவியின் காற்று மண்டலத்துக்குள் நுழை யும் போது தீப்பற்றி எரிந்து சாம்பலாகின்றன.
இவையே எமது கண்ணுக்கு காற்றைக் கிழித்துச்செல்லும் ஒளிக்கீற்றாகத் தெரிகின்றது. இதனையே எரிகல் பொழிவு என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் எரிகல் பொழிவினால் வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்டவெளித்தூசுகள் புவியை வந்தடைவதா கக் கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு வருடத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடுப்பகுதியில் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும். அண்மையில் இலங்கையின் சில பாகங்களில் இவ்வாறு எரி கல் பொழிவு ஏற்பட்டதனை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்பீர்கள். மேலைத்தேய மக் கள் இந்நிகழ்வினை இரசிப்பதற்காக எரிகல் பொழிவு ஏற்படும் காலங்களில் தெளிவான வான்பரப்பை குடும்பத்துடன் அவதானிப்பர். நம்நாட்டில் குடும்பமாக இல்லை என்றாலும் தனிநபராகக் கூட வெகுசிலர் இக்காட்சியை இரசிப்பர்.
அபூர்வமாக பல வருடங்களுக்கு ஒரு முறையே எரிகற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறுமனே தூசுகள் மட்டுமே புவியை வந்தடைகின்றன.
ஆனால் அபூர்வமாக பூமியின் காற்று மண்டலத்திற்கு வரும் எரிகல்லினால் (இது எரிகல் பொழிவல்ல) சில சந்தர்ப்பங்களில் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வீதியில் சென்றுகொண்டிருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்தர்ப்பமும் உண்டு.
நமீபியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விணகல்லே பூமியில் கண்டெ டுக்கப்பட்ட மிகப்பெரிய விண் கல் எனக் கூறப்படுகின்றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்திலேயே பாதுகாக்கப்பட்டுள்ள இந்த விண்கல் பலரையும் ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் எரிகல்லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காயமடைந்தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் தர்ப்பமே. மேலும் 1908ஆம் ஆண்டிலும் ரஷ்யாவில் எரிகல்லொன்று வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவ்வாறு விழும் கற்களால் பணம் சம்பாதித்தவர்களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.
இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.
எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!
பரம்பரை பரம்பரையாக நீண்டகாலமாக நம்மில் குடிகொண்டிருந்த நம்பிக்கைகள் பல, மூட நம்பிக்கைகளென வளர்பிறை போல தெரியவர அறிவியல் வழி செய்துகொண்டே இருக்கி றது. சில காலங்களுக்கு முன்னர் இரவு நேரங்களில் தெளிவான வான் பரப்பிலிருந்து தீடிரென ஒளிக்கீற்றொன்று செல்வதை அவதானித்தால் போதும் தள்ளா டும் வயதானர்கள் பலரும் ஏற்றுக்கொள்ள முடியாத பல கதை கள் சொல்வார்கள்.
அவற்றுள் பலவும் நீண்ட கால நம்பிக்கைகளாகவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்க லாம். சில சமயங்களில் நட்சத்திரம் பூமியில் இறங்குவதாக வும் அவிழ்த்துவிடுவார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழியில்லை.
அவ்வாறான நிகழ்வொன்றை ஏற்படுத்தும் எரிகல் பொழிவுவொன்று அண்மையில் நம்நாட்டிலும் ஏற்பட்டது.
ஆனால் அவை நட்சத்திரம் அல்ல என்பது நிச்சயம். ஏனெ னில் நட்சத்திரம் ஒன்று பூமியை போன்று பல்லாயிரம் மடங்கு பெரியவை. அவை பூமியிலிருந்து கோடிக்கணக்கான கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ளவை. அதுமட்டுமன்றி நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பல நூறு கோடி கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ளவை. அத்துடன் அவை பூமியிலிருந்து மிக வேகமாக தூரமாகச் செல்கின்றது.
அப்படியெனில் உண்மையில் வான் பரப்பில் காண்களை ஈர்த்துக்கொண்டு பாயும் அந்த ஒளிக்கீற்றுகள்தான் என்ன? என்று விஞ்ஞானம் கூறுகிறது எனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!
பறக்கும் கற்கள் என அழைக்கப்படும் விண்கற்களின் (அஸ்டிரொய்டுகள்) பாகங்களே அவை. இந்த விண்கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்தியாசமான அளவுகளில் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.
இவை சூரியனைச் சுற்றி வருகையில் ஒன்றொன்று மோதுவதனால் வெடித்துச் சிதறுகின்றன. இதன்போது வெளியாகும் தூசு துணிக்கைகள் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வெளியா கும் துணிக்கைகள் புவியின் காற்று மண்டலத்துக்குள் நுழை யும் போது தீப்பற்றி எரிந்து சாம்பலாகின்றன.
இவையே எமது கண்ணுக்கு காற்றைக் கிழித்துச்செல்லும் ஒளிக்கீற்றாகத் தெரிகின்றது. இதனையே எரிகல் பொழிவு என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் எரிகல் பொழிவினால் வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்டவெளித்தூசுகள் புவியை வந்தடைவதா கக் கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு வருடத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடுப்பகுதியில் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும். அண்மையில் இலங்கையின் சில பாகங்களில் இவ்வாறு எரி கல் பொழிவு ஏற்பட்டதனை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்பீர்கள். மேலைத்தேய மக் கள் இந்நிகழ்வினை இரசிப்பதற்காக எரிகல் பொழிவு ஏற்படும் காலங்களில் தெளிவான வான்பரப்பை குடும்பத்துடன் அவதானிப்பர். நம்நாட்டில் குடும்பமாக இல்லை என்றாலும் தனிநபராகக் கூட வெகுசிலர் இக்காட்சியை இரசிப்பர்.
ஆனால் இவை ஆபத்தை விளைவிக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகுபாடின்றி அனைத்து இடங்களிலுமுள்ள படித்தவர்கள் கூட கூறக்கேட்டிருக்கலாம். ஆனால் அவற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அபூர்வமாக பல வருடங்களுக்கு ஒரு முறையே எரிகற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறுமனே தூசுகள் மட்டுமே புவியை வந்தடைகின்றன.
ஆனால் அபூர்வமாக பூமியின் காற்று மண்டலத்திற்கு வரும் எரிகல்லினால் (இது எரிகல் பொழிவல்ல) சில சந்தர்ப்பங்களில் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வீதியில் சென்றுகொண்டிருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்தர்ப்பமும் உண்டு.
நமீபியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விணகல்லே பூமியில் கண்டெ டுக்கப்பட்ட மிகப்பெரிய விண் கல் எனக் கூறப்படுகின்றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்திலேயே பாதுகாக்கப்பட்டுள்ள இந்த விண்கல் பலரையும் ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் எரிகல்லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காயமடைந்தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் தர்ப்பமே. மேலும் 1908ஆம் ஆண்டிலும் ரஷ்யாவில் எரிகல்லொன்று வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவ்வாறு விழும் கற்களால் பணம் சம்பாதித்தவர்களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.
இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.
எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!
–அமானுல்லா எம்.றிஷாத்
இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.