சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Monday, May 16, 2016

புறூஸ் லீயின் தனித்துவமான ஒரு அங்குல குத்து : கேமராவில் படம் பிடிக்க முடியாத வேகம்



எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின் றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கும் நிரந்தரமாகிவிடுகின்றது.

அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புறூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புறூஸ் லீயின் பங்கு அளப்பரியது.


குங்பூ, கராத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புறூஸ் லீ.

எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புறூஸ் லீ கையாண்டிருந்தமையும் அதற்கான காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு அங்குலம் மற்றும் 6 அங்குலம் இடைவெளியிலான புறூஸ்லியின் குத்து இன்றும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தற்காப்பு கலையை விட பிரபல்யமும் அச்சரியமிக்கதுமான குத்து அவை. இந்த குத்து கில் பில் எனும் ஹொலிவூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த புறூஸ் லீயை ஆராதிக்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர். ஒரு வகையான வலிப்பு மற்றும் தலைவலி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் இவரது மரணத்தின் மர்மம் புதிராகவே நீடிக்கின்றது. அது போலவே புறூஸ் லீயின் தனித்துவமான சிறிய இடைவெளியிலமைந்த குத்துக்களும்.

இதனால் புறூஸ் லீயின் நகர்வுகள் குறித்து இப்போதும் ஆய்வு செய்யப்படுகின்றது. உலகின் மிக குறைந்த வெப்பமளிக்கா காலம் கொண்டவராக புறூஸ் லீ கருதப்படுகின்றது. இதுவே அவரது வேகமான செயற்பாட்டுக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் தனித்துவமான குத்துக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அங்குல இடைவெளி குத்தானது தசையை விட அதிகளவில் மூளையுடன் தொடர்புடையதாக உள்ளது ஏன் என அறிந்து கொள்ள வேண்டும். இச்சிக்கலான முழு உடல் அசைவில் அமைந்து குத்து மில்லி செக்கனில் இடம்பெறும் செயற்பாடு. இருப்பினும் புறூஸ் லீ எவ்வாறு அதனை மேற்கொள்கிறார் என அறிய அவதானிப்பு முக்கியமானது என்கிறது இந்த ஆய்வு.

இவ்வாய்வினை அமெரிக்காவின் ஸ்டேன்போர் பலகலைக்கழக உயிரியல் இயந்திரவில் ஆய்வாளரான ஜேஸிக்கா ரோஸ் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஜெஸிகா கூறுகையில், 'குத்துக்கான அசைவு கால்களில் இருந்து ஆரம்பமாகின்றன. ஒரு அங்குல குத்தினை உன்னிப்பாக அவதானிக்கும் போது புறூஸ் லீயின் முன் மற்றும் பின் கால்கள் விரைவில் நேராக வந்து அதிவிரைவில் வந்து செல்வதை உங்களால் காண முடியும்' என்கிறார் ரோஸ்.


கால் இவ்வாறு நேராகும் போது இடுப்பினூடாக தோட்பட்டைக்கு சக்தி கடத்தப்பட்டு கைக்கு செல்கின்றது. இதனால் மில்லி செக்கன் இடைவெளியில் கையில் கிடைக்கும் ளூஒன்று சேர்க்கப்பட்ட சக்திளூயால் எதிரியை ஒரேயொரு, ஒரு அங்குல குத்தினால் புறூஸ் லீயினால் வீழ்த்த முடிந்துள்ளது என விளக்களித்துள்ளார் ஆய்வாளர் ரோஸ்.

குறைந்த நேர இடைவெளியில் இடம்பெறும் இந்த குத்து குறித்து ரோஸ் கூறுகையில், 'இந்த ஒருங்கிணைப்பில் தசை நார்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அத்துடன் ஒரு அங்கு இடைவெளி போன்ற குத்துக்களுக்கு பிரதான பின்னணி காரணியாக ஒருங்கிணைப்பும் நேரமைப்புமே முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன' என்கிறார் ரோஸ்.


2012ஆம் ஆண்டிலும் இந்த உடலமைப்பு முறையில் சிறிய இடைவெளியில அமைகின்ற குத்து குறித்து லண்டன் இம்பெரியல் கல்லூயின் நரம்பியல் விஞ்ஞானியான எட் ரொபேர்ட்ஸ் என்பவரும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று புறூஸ் லீயின் வேகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வம்சாவளியான புறூஸ் லீ, 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கலிபோர்னியாவில் பிறந்து ஜுலை 20ஆம் திகதி 1973ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் ஹொங்கொங்கில் மர்மமாக மரணமானார்.


அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புறூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹொலிவூட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சிறு வயது முதல் தற்காப்புக் கலையில் நாட்டம் கொண்டிருந்த புறூஸ் லீ தற்காப்புக் கலையை ஐபி மேன் என்பவரிடம் கற்றார். தனது தனித்துவமான திறனால் 1969 முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மார்லோவ், த பிக் பொஸ், பிஸ்ட் ஒப் பியூரி, வே ஒப் ட்ரகன், எண்டர் த ட்ரகன் மற்றும் கேம் ஒப் த டெத் (முழுமையாக முடிக்கப்படவில்லை) ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து நாயகனாகவும் பெரு வெற்றி பெற்றார். புறூஸ் லீயின் படங்கள் இன்றும் அவரது சண்டைகளுக்காக ரசிக்கப்படுகின்றது.





இக்காலப் பகுதியில் கெமராவின் செக்கனுக்கான பிரேம் தற்போதைய கெமராவுடன் ஒப்பிடுகையில் பல ஆயிரம் மடங்கு குறைவு. இதனால் படப்பிடிப்பில் இவரது அதிவேகமான சண்டைகளை படம் பிடிக்க முடியாமல் அவரது நிஜமான வேகத்தினைக் குறைத்து படம்பிடிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.


அதி திறன்மிக்க இக்கலைஞனால் குறித்த காலப் பகுதியில் சீனப் பிராந்தியங்களில் தற்காப்புக் கலை நிலையங்கள் வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது. புறூஸ் லீயின் மரணத்தின் பின்னர் அவரது மனைவி தற்காப்புக் கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரது மகள் தற்போதும் ஈடுபடுகின்றார்.

புறூஸ் லீ தனது 32 வயதில் மரணமடைந்த போதிலும் இன்னும் 32 தலைமுறைகளானாலும் மறக்க முடியாத தனித்துவக் கலைஞராக வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

-ஏ.எம்.ஆர்

Friday, July 12, 2013

வாங்க சூரியனைப் பார்த்துவிட்டு வரலாம்... விண்வெளி சுற்றுலாவவுக்கு அழைக்கும் நிறுவனங்கள்

கன­வுகள் மட்டும் ஆகா­யத்தை தாண்டி சிற­க­டித்­து­கொண்­டி­ருக்க என்­றைக்­கா­வது அண்­டத்தை தாண்டிச் செல்லும் எண்­ணங்­களை நிஜ­மாக்­கிட எமது சிந்தை மயங்­கு­வது சாதா­ர­ண­மா­ன­துதான். இருப்­பினும் அந்தக் கன­வினை நிஜ­மாக்­கு­வது ஒன்றும் சாதா­ர­ண­மானதல்ல  என்­ப­துதான் நிஜம்.

ஆனால் அண்­மைக்­கா­ல­மா­கவே டீ குடிக்­கலாம் வாங்க... என்­ற­வாறு சில நிறு­வ­னங்­களும் விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க... என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்­து எமது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றன.

ஏற்கெ­னவே மார்ஸ் வன் எனும் இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் குடி­யேற ஆட்­களை இணைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதே­போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.

இதே­போல மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­வைத்து செவ்வாய், நிலா என விண்­வெ­ளி சுற்­று­லா­வுக்கு தயா­ரா­கி­வ­ரு­கி­றது.

ஷீரோ 2 இன்­பி­னிட்டி
இந்­நி­லையில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி எனும் ஸ்பெய்னைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மொன்று சாமா­னி­யர்­க­ளையும் குறைந்த விலையில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்ல தயா­ரா­கி­யுள்­ளது.

ஏற்கெ­னவே ஆபத்­துக்­களை எதிர்­கொள்ள துணிந்த ரஷ்­யாவின் அர்­டமி லெபடெவ் உள்­ளிட்ட மேலும் சிலர் விரைவில் இந்நிறுவனத்தின் ஊடாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் செல்ல தயா­ரா­கி­விட்­டனர்.

இதே­­வேளை மேற்­படி நிறு­வனம் 2015ஆம் ஆண்டு முதல் வணிக ரீதி­யி­லான பய­ணத்தின் மூலம் சுற்­றுலாப் பய­ணி­களை விண்­வெ­ளிக்கு அழைத்துச் செல்ல திட்­ட­மிட்­டுள்­ளது. இப் பய­ணத்தின் போது பிர­யா­ணிகள் எந்­த­வொரு கிர­கத்­திற்கும் அழைத்துச் செல்­லப்­ப­ட­மாட்­டார்கள். மாறாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் அழைத்­துச்­செல்­லப்­ப­ட­வி­ருக்­கி­றார்கள்.

இவை­யெல்லாம் அனு­ப­விக்­கலாம்
விண்­வெளி வீரர்­களால் பாது­காப்­பாக அழைத்­துச்­செல்­லப்­பட்­ட­வுள்ள இப்­ப­ண­யத்தின் போது பய­ணி­களால் எழுந்து நிற்க முடியும் அத்­துடன் புவி­யினை பனோ­ரமிக் வீவ் மூலம் கண்டு மகி­ழலாம்.

இது மட்­டு­மன்றி நிறை­யற்ற பூச்­சி­ய­நி­லையை உணரும் வாய்ப்பும் கிடைக்கும் மேலும் பய­ணிகள் தமக்கு விரும்­பிய உண­வையும் பெற முடியும் என ஷீரோ 2 இன்­பி­னிட்டி தெரி­வித்­துள்­ளது.

இப்­ப­யணம் குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி மேலும் குறிப்­பி­டு­கையில், சுற்­றுலாப் பிர­யா­ணிகள் செல்­ல­வுள்ள கெப்சூல் எனும் அமைப்பை பாரிய பலூனில் இணைத்து விண்­ணுக்கு செலுத்­தப்­படும். இந்த கெப்­சூலில் ஒரே நேரத்தில் 4 பய­ணிகள் மற்றும் 2 விமா­னி­களும் செல்லக் கூடி­ய­வாறு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்தைச் சேர்ந்த அன்­னலி சோன்­மேக்கர் கூறு­கையில், இந்த பயண­மா­னது உண்­மையில் சுற்­றுலாப் பய­ணி­களும் மிகவும் அமை­தி­யா­ன­தா­கவும் அதே­வேளை ஏது­வான சுற்றாடலிலும் அமையும் சூழ்­நி­லையும் நிலவும்.

பய­ணி­களால் சூரி­ய­னையும் மேலும் பல நட்­சத்­தி­ரங்­க­ளையும் அண்­மையில் பார்க்­க­கூடி­ய­தாக அமையும். அத்­துடன் பூமியின் அழ­கையும் மேலி­ருந்து அவ­தா­னிக்­கலாம்.

வாழ்நாள் சிறப்­பு­மிக்க இப்­ப­ய­ணத்­தினை பய­ணிகள் நிச்­ச­ய­மாக விரும்­பு­வார்கள். இந்த கெப்­சூலில் செய்யும் பிர­யாணம், விமா­னத்தில் பய­ணிப்­பது போல் இருக்கும். இருப்­பினும் பயணம் செய்யும் கெப்­சூ­லினுள் சுற்­றுலாப் பய­ணிகள் 30 செக்கன் வரை நிறையை இழந்து பூச்­சிய நிலையை அடைந்து மிதக்கும் அனு­ப­வத்தை பெறலாம்.

பயணம் முழு­வதும் பய­ணிகள் விருப்­பப்­படியே அமைக்­கப்­படும். அவர்­களின் சுதந்­திரம் முழு­மை­யாக பேணப்­படும். அவர்கள் விரும்பும் உணவு மேலும் கெப்­சூலில் மறைக்­கப்­பட்ட தனி­யான அறை­களும் வழங்­க­வுள்ளோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

யார் பய­ணிக்­கலாம்? குறைந்த கட்­டணம்
இது இவ்­வா­றி­ருக்க தொழில்­நுட்­பத்­தினை அதி­க­ரிக் கச் செய்து குறைந்த செலவில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்­லவும் எதிர்­பார்த்­துள்­ளது ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ னம்.

தற்­போது விஞ்­ஞான ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு மட்டுமென மட்­டுப்­ப­டுத்­தி­யுள்ள இப்­ப­ய­ணத்­தினை சாமா­னிய மக்­க­ ளுக்­கு­மாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சி­களை இந் நிறு­வனம் முன்னெடுத்துள்ளது.

தற்­போது இப்­ப­ய­ணத்தில் இணைந்­து­கொள்ள ஒரு­வ­ருக்கு மிகக் குறைந்த கட்­ட­ண­மாக இலங்கை மதிப்பில் 50 இலட்­சங்கள் மாத்­தி­ரமே அற­வி­டப்­படும் என குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. ஒப்­பீட்டு ரீதியில் விண்­வெ­ளிக்கு செல்­லு­வ­தற்­கான மிகக் குறைந்த கட்­ட­ண­மா­கவே இது உள்­ளது.

காரணம் இந்­நி­று­வனம் புவி யின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து விமா­னங்கள் செல்லும் தூரத்தைப் போன்று இரு­ம­டங்கு அதா­வது சுமார் 24 கி.மீ உய­ரத்­திற்கு செல்­ல­வுள்­ளார்கள். ஆனால் ஏற்­கெ­னவே இவ்­வகை சுற்­று­லாவை ஏற்­பாடு செய்த நிறு­வ­னங்கள் வேற்றுக் கிர­கங்­க­ளுக்கே செல்­லு­வ­தற்கு திட்­ட­மிட்­டனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­ப­ய­ணத்­தினை ஸ்பெ யினின் கொர்­டுபா எனு­மி­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தாத நிலையில் கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு 2015ஆம் ஆண்டு விண்ெவளி செல்­ல­வுள்ள பய­ணத்தில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்­துடன் அண்­மையில் இணைந்­து­கொண்ட ஸ்பானிஷ் பல்­க­லைக்­க­ழ­கத் தின் நஒ (NAO) எனும் மனித ரொபோக்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன் மூலம் ரொபோ தொடர்­பி­லான ஆராய்ச்­சி­களை மேம்­ப­டுத்த பல்­க­லைக்­க­ழகம் எதிர்­பார்த்­துள்­ளது.

எம்­ம­வர்­க­ளுக்கு இவ்­வா­றான ஆபத்­தான பய­ணங்­களில் பெரி­ய­ளவில் ஆர்வம் இல்லை என்று சொல்லாம். என்­றாலும் மேற்­கத்­தி­யர்­க­ளுக்கு இவ்­வா­றான விட­யங்­களில் அலா­திப்­பி­ரி­ய­முண்டு என்­பதால் விரைவில் இத்­திட்­டத்­திற்கு பாரிய வர­வேற்பு கிடைக்­கப்­போ­வது திண்ணம்.

இனி என்ன நீங்களும் அந்த 50 இலட்சத்தை மட்டும் செலுத்தி பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்.

முன்னரெல்லாம் சுற்றுலா என்றதும் அதிகபட்சமாக வெளி நாடொன்றிலுள்ள இடமொன் றைக் குறிப்பிடுவோம். ஆனால் வரும் நாட்களில் பால்வெளியிலுள்ள கிரக மொன்றை கூறினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை!

– அமானுல்லா எம். றிஷாத்





Friday, June 21, 2013

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்? : நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.


சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.


இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.


நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில்  சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.


அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.


விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.


அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.


இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.


உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும்  நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா  விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.


இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு "லைகா" எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு  விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய "லைகா" நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.


இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.


இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது.  பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.


ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில்  கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.


ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.


#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல்  ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே.

ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவின் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில்.

-அமானுல்லா எம். றிஷாத்


Tuesday, May 28, 2013

வர்த்தக மயமாகியுள்ள கிரிக்கெட்டில் மலிந்து வரும் ஊழல்

22 வீரர்கள் குறித்த சில விதிகளுக்கு உட்பட்டு எல்லைக்கோடு, பந்து, விக்கெட், துடுப்பு மட்டை போன்றவற்றைக்கொண்டு  திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடி,11 பேர் வெற்றிபெற பல்லாயிரம் பேர் திருப்தியுடன் மகிழ்வுறும் கிரிக்கெட்,  சில காலத்திற்கு முன்பு வரையில் கனவான்களின் விளையாட்டாக விளையாடப்பட்டது.

சில காலத்திற்கு முன்பு வரையிலா, இப்போதும் கிரிக்கெட் எனும் விளையாட்டு விளையாடப்படுகிறதுதானே என்று கேட்டால்  ஏமாற்றம் மட்டுமே எமக்கு பதிலாய் அமையும்.

உண்மையில் கிரிக்கெட் என்ற விளையாட்டு, வர்த்தக மயமாக மாறி பல காலமாகிவிட்டது. ஆனால் அந்த கொடுமையை பேசி முடிப்பதற்குள் சூதாக மாறிவிட்டமையே கிரிக்கெட்டை விளையாட்டாகவும் புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபதுக்கு20, ஐ. பி.எல் என அமைய வேண்டிய கிரிக்கெட்டின் தரம் அப்படியே தலை கீழாக இன்று மாறியுள்ளது. அத்தனைக்கும் காரணம் பணம் என்ற ஒரு விடயம் மட்டுமே.

உலகின் சனத்தொகை அதிகமான பகுதியான ஆசியாவிலேயே கிரிக்கெட் விளையாட்டு சொர்க்கமாகவும் அதில் பங்குபெறும் வீரர்கள் கடவுளாக மாற்றம் பெற்றனர்.

இதனை நன்கு உணர்ந்துகொண்ட வர்த்தக நிறுவனங்கள் மெதுவாக கிரிக்கெட்டினுள் நுழைந்தன. ரசிகர்களின் கிரிக்கெட்டின் கடவுள்களையும் நாயகர்களையும் கொண்டு விளம்பரங்களை த் தயாரித்தன.

மக்கள் அன்றாடம் விழித்தது முதல் உறங்கும் வரையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிரிக்கெட்டும் அது சார்ந்த வர்த்தக நிறுவனங்களுமே தீர்மானித்ததன.

இதற்காக ஏற்கனவே எம்முள் தூங்கியும் விழித்தும் இருக்கும் இனத் துவேசத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டிவிட்டார்கள். விளைவு அரசியலிலும் தாக்கம் செலுத்தும் அளவிற்கு போனது நிலைமை. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எல்லைகளில் நடைபெறும் போர்களாக பார்க்கப்பட்டது. அதன் வெற்றி போரின் வெற்றியாக ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்டது.

அதுபோலவே இலங்கை , இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் அரசியல் பழிவாங்கல்களாகவும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். உண்மையில் இவற்றில் வெற்றியும் பெற்றார்கள். அப்பாவி ரசிகர்கள் அல்ல அடங்காத ஆசை கொண்ட வர்த்தகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே.

இதனால் எந்த நாட்டு கிரிக்கெட் சபை இலாபமடைந்ததோ இல்லையோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேலும் பணம் கொழிக்கும் சபையாக மாறியது. கூடவே கிரிக்கெட்டும் வர்தகமாக மாற ஆரம்பித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் சபையின் செல்வாக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் காணிக்கையாக இந்திய, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளிலுள்ள ரசிகர்களின் பொன்னான நேரமும் பணமும் பறிபோனது. இது தலையை தடவி கண்ணை பிடுங்கிய கதையானது.

இந்நிலையில் வெறிபிடித்த ரசிகர்களின் பணத்தை மேலும் கொள்ளையடிக்க வந்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆதரவின்றி கபில்தேவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐ. சி.எல் (இன்டியன் கிரிக்கெட் லீக்) என்ற அமைப்பு. இதனை கிரிக்கெட் துரோமாக அறிவித்த இந்திய கிரிக்கெட் சபை, ஐ.சி.எல்.லைவிட பெரிய வியாபார யுக்தியுடன் ஆரம்பித்ததே இந்த ஐ.பி.எல்.

கொள்ளை இலாபம் ஈட்டுவதை மட்டும் இலக்காக கொண்டு இந்த அமைப்பை உருவாக்கிய லலித் மோடி, 2008ஆம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி போட்டிகளுடன் தனது திட்டங்களையும் செயற்படுத்த ஆரம்பித்தார்.

இதில் பிரதேச ரீதியான அணிகளை உருவாக்கியதில் ஒரே நாடென இணைந்திருந்த ரசிகர்கள் பிரதேச மற்றும் மொழி ரீதியாக மேலும் பிளவுபட்டதில் ஐ.பி.எல் என்ற வணிக சினிமா, இந்தியா தாண்டி தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.


விளைவு குறித்த செல்வந்தர்கள், தரகர்கள், மற்றும் வீரர்களால் கிரிக்கெட் ரசிகர்களின் பணங்களை அட்டையாக உறுஞ்சுவதற்கு வழிவகுக்கப்பட்டது.

போட்டியில் எவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்களுக்கு தோல்வியே இல்லை என்ற நிலைமை உருவானது.

இதனை மறைக்க கவர்ச்சிப்பெண்களின் ஆட்டம், பொலிவூட் நடிகர்கள் மற்றும் நடிகைகள், வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் பாடகிகள் என கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமன்றி பொதுவானவர்களையும் ஈர்க்கும் கழியாட்டங்கள் மூலம் ஐ.பி.எல் மேலும் பிரபலமடைந்தது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் ஓரளவு உணர்த்தும் வகையில் ஐ.பி.எல் இல் ஸ்பொட் பிக்ஸிங், மெட்ச் பிக்ஸிங், பாலியல் சர்ச்சைகள் என வரிசையாக பிரச்சினைகள் வர ஐ.பி.எல்லில் இருக்கும் சூழ்ச்சிகளும் வெளியில் தெரியவந்தது. மக்களும் கதையை உணர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து அரசியல், கலாசாரம், விளையாட்டு துறைகளிலிருந்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தன. இருப்பினும் பணம் பாதளம் வரையல்லவா பாயும்? ஐ.பி.எல் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெற்றன. ஆனாலும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஸ்பொட் பிக்ஸிங்கில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.

இதனால் ஐ.பி.எல் இனை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இதுவென கருத்துக்கள் வலுத்தது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐ.பி.எல் தொடரினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை இணையத்தளம், ஆர்ப்பாட்டம் மற்றும்  சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய, ஸ்ரீசாந்துடன், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர்  சூதாட்ட முகவர்களுக்கு சாதகமாக ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுடன் குறைந்தபட்சம் 11 சூதாட்ட முகவர்கள், பொலிவூட் நடிகர் வின்டு தாரா சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இன் தலைவரான என். ஸ்ரீனிவாசன் இது தொடர்பில் கூறுகையில், "இந்த ஊழல் விவகாரத்தில் இந்திய டெஸ்ட் அணி  வீரர் ஸ்ரீசாந்த் மாட்டியிருப்பதைப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஊழலால் ஐ.பி.எல். போட்டியை நிறுத்தி விட வாய்ப்பு இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஒரு வீரர் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார் என்பது என்னைப் போலவே, ஏனையவர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதற்காக ஒட்டு மொத்த போட்டியும் ஊழல் என்று அர்த்தமாகி விடாது. ஐ.பி.எல். போட்டியை நிறுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.பி.எல் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ரசிகர்களால் முன்வைக்கப்படும் கேள்விகள் இவ்வாறு உள்ளன:

இந்திய மதிப்பில் 10 கோடி முதற் பரிசை தட்டிச் செல்ல ஒவ்வொரு அணியும் சுமார் 1500 கோடிவரை செலவு செய்வது எதற்காக?
கிரிக்கெட்டினை அழிக்கும் ஐ.பி.எல் இற்கு பி.சி.சி.ஐ இன் பலம்வாய்ந்த ஆதரவு எதற்காக?
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா?
ஐ.பி.எல் இல் குற்றம் செய்தார் என தெரிவிக்கப்பட்ட உடனே முழுமையாக நிரூபிக்கப்படாமலேயே அவசரமாக தடை விதி க்கக்கோருவது எதற்காக?
என இன்னும் ஏராளமான கேள்விகளை எழுப்பி இணையத்தளங்களினூடாக ஐ.பி.எல் மீது மண்ணை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.


5 வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு மட்டும் வருமானம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறு பணத்தை அள்ளித் தரும் தங்க முட்டையிடும் வாத்தான ஐ.பி.எல்இனை இப்போதைக்கு விட்டுத்தர சி.பி.பி.ஐயும் தயாராக இல்லை என்பதே உண்மை.

"முடிவு" என்ற விடயம் இறுதிவரை தெரியாமலிருப்பதே அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் மெட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பொட் பிக்ஸிங் போன்றவற்றால், முடிவு தெரிந்த பரீட்சை போன்று அமைந்துள்ள போட்டிக ளில் இளைஞர்களும் சிறுவர்களும் நேரத்தையும் பணத்தையும் கரியாக்கும் செயற்பாடுகள் இனியும் வேண்டுமா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 23.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Thursday, May 9, 2013

செவ்வாய்க்கு போகலாம் வாங்க.. : இலவச அழைப்பு விடுக்கும் டச்சு நிறுவனமும் பயணத்திற்கு தயாராகும் ஆர்வலர்களும்


முன்­னொரு காலத்தில் ஆற்றைக் கடந்து அடுத்த கிரா­மத்­திற்கு செல்­வதே பாரிய இலக்­காக இருந்­தது. ஆனால் இன்று விஞ்­ஞா­னத்தின் வளர்ச்­சியில் ஆகா­யத்தைக் கடந்து அடுத்த கிர­கத்­திற்குச் செல்­வதே சாதா­ரண இலக்­காக மாற்றம் பெற்று வரு­கின்­றது.

அப்­ப­டி­யா­ன­தொரு பாரிய இலக்கை நோக்­கிய பய­ண­மொன்று டச்சு நிறு­வ­ன­மொன்­றினால் திட்­ட­மிட்­ட­படி வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி என்ன உலகை தாண்டும் திட்டம் என எண்­ணு­கின்­றீர்­களா?

அப்­ப­டி­யெனில் உங்கள் எண்ணம் சரி­யா­னதே. ஏனெனில் புவி­யி­லி­ருந்து செவ்வாய்க் கிர­கத்­திற்கு குடி­யேறும் திட்டம் ஒன்றே அது.

அதா­வது, புவி­யி­லுள்ள அனைத்துப் பாகங்­க­ளி­லு­முள்ள மக்­களில் செவ்வாய் கிர­கத்­திற்கு சென்று, வாழ்ந்து அங்­கேயே இறக்க விரும்பும் மனி­தர்­களை இல­வ­ச­மாக அழைத்துச் செல்ல "Mars One" என்ற இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வ­ன­மொன்று தயா­ரா­கி­யுள்­ளது. இத்­திட்­டத்­திற்கும் அந்­நி­று­வனம் "Mars One" எனப் பெய­ரிட்­டுள்­ளது.

கடந்த 2011ஆம் நெதர்­லாந்தைச் சேர்ந்த பாஸ் லேண்ட்ஸ்டோப் மற்றும் அர்னோ ஏ. வீல்டர்ஸ் என்­ப­வர்கள் பல முன்­னணி அறி­வி­ய­லா­ளர்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் "Mars One" திட்­டத்­தினை உரு­வாக்­கினர். இவர்­களே இந்­நி­று­வ­னத்தின் நிறு­வ­னர்­க­ளாவர்.

செவ்வாய் கிர­கத்தில் மனி­தர்கள் வாழலாம் என்ற நம்­பிக்கை வலு­வ­டைந்து வரு­கி­றது. எனவே இந்­நி­று­வ­ன­மா­னது மனி­தர்கள் செவ்­வாயில் வாழ குடி­யி­ருப்பை நிறுவி அங்கு மனி­தர்­களை அழைத்துச் செல்ல முடிவு செய்­துள்­ளது. இதனை முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­யவும் முன்­வந்­துள்­ளது.

இதற்­கான பயணம் 2022ஆம் ஆண்டில் புவி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 2023ஆம் ஆண்டு புதி­யதோர் கிர­கத்தில் தரை இறங்கி புதிய தடம் பதிக்கும் மனி­தர்கள் புதி­யதோர் சந்­த­தி­யி­ன­ரையும் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளனர்.

இது குறித்த தக­வல்­களை முதன் முதலில் கடந்த வருடன் 2012 ஆண்டு மே மாதம் 31ஆம் திக­தியே அதி­கா­ர­பூர்­வ­மாக ஊட­கங்கள் மூலம் உல­கிற்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

அதி­க­ரிக்கும் ஆர்­வ­லர்கள்
இதற்­காக http://applicants.mars-one.com எனும் இணை­யத்­தளம் பிரத்­தி­யே­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ணை­யத்­த­ளத்தின் மூலம் பயணம் தொடர்­பான தக­வல்­களை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதில் செவ்வாய் கிரகம் செல்லும் ஒரு வழி டிக்­கட்­டினை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்­காக ஆர்­வ­மிக்­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளது. முதற்­கட்டத் தேர்வு இவ்­விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்தே இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­காக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் விண்­ணப்­பங்­களை அனுப்ப ஆர்­வ­லர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அன்­றி­லி­ருந்த அடுத்த 4 நாட்­களில் உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான விண்­ணப்­பங்கள் கிடைத்­துள்­ளது. இதுவே "Mars One" திட்டம் வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­கான வித்­தினை விதை­துள்­ளது. இந்த ஆர்வ வித்­துக்­களை செவ்­வாயில் மர­மாக்­கு­வதே "Mars One" இன் திட்டம்.

இதில் ஆச்­ச­ரியம் என்­ன­வெனில் இள­வ­ய­தி­னரே அதி­க­ளவில் செவ்வாய் செல்­வ­தற்கு நாட்டம் காண்­பிக்­கின்­றனர். குறிப்­பாக 18--30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். மேலும் சீனா­வி­லி­ருந்தே அதி­க­மான விண்­ணப்­பங்கள் இது­வ­ரையில் கிடைத்­துள்­ளது. இது தவிர அமெ­ரிக்கா, ஜேர்மன், கனடா, ஸ்வீடன், ஸ்பெய்ன் உள்­ளிட்ட மேலும் பல நாடு­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­பங்கள் அதி­க­ளவில் வரு­வ­தனை "Mars One" இணை­யத்­தளம் காட்­டு­கின்­றது. இலங்­கை­யி­லி­ருந்து கடந்த மாதம் 30ஆம் திகதி வரையில் விண்­ணப்­பங்கள் எதுவும் அனுப்­பப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விண்­ணப்­பிக்கும் திகதி எப்­போது முடி­வ­டையும் என தெரி­விக்­கப்­ப­டாத இந்­நி­லையில் ஆரம்­ப­கட்­ட­மாக விண்­ணப்­பிப்­போரின் தொகைக்­கொண்டு பார்க்­கையில் மேலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­க­ணக்­கானேர் இப்­ப­ண­யத்­திற்கு ஆர்வம் காட்டி விண்­ணப்­பிப்­பார்கள் என "Mars One" நிறு­வு­னர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.


இத்­த­னைக்கும் இப்­ப­யணம் ஆபத்தும் பலத்த சவால்­மிக்­கதும் என தெரிந்த பின்னர் கிடைக்­கப்­பெற்­றதே.

தேர்வு முறை
இதே­வேளை அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் கிடைத்­தாலும் அவர்கள் அத்­தனை பேரையும் செவ்வாய் கிர­கத்­திற்கு அழைத்துச் செல்­வ­தென்­பது சாத்­தி­ய­மில்லை. காரணம் இது மிகவும் சவால்­மிக்க பயணம் என்­ப­துடன் செல­வு­மிக்க பயணம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்கது.

எனவே வரும் விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்து சிறந்த ஆரோக்­கியம், மொழித் தேர்ச்சி, குழு­வாக செயற்­ப­டுத்தும் தன்மை, பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் ஆற்றல் மற்றும் மேலும் பல திற­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஆட்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு 7 வரு­டங்கள் பயிற்­சிகள் அளிக்­கப்­பட்டு பய­ணத்­திற்கு தயார் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இத்­திட்­டத்தில் ஆங்­கிலம், ஸ்பானிஸ், டச், அரபு, இந்­தோ­னேஷியன், ஜப்பான், சீன மொழிகள் போன்­றவை பயன்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டாலும் ஆங்­கி­லமே பொது மொழி­யாகக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பணம் திரட்டும் நட­வ­டிக்­கைகள்
செலவு அதி­க­மிக்க இப்­ப­ய­ணத்­திற்­காக முதற் கட்­ட­மாக 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை திரட்ட குறித்த நிறு­வனம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக செவ்வாய் கிர­கத்­திற்கு சென்றன் பின்னர் அங்­குள்ள நட­வ­டிக்­கை­களை படம்­பி­டித்து வெளி­யிடும் தொலைக்­காட்சி உரி­மத்தை அதிக விலைக்கு விற்­க­வுள்­ளது.

மேலும் "Mars One" திட்­டத்தின் பிரத்­தி­யேக இணை­யத்­த­ளத்தின் மூலம் நன்­கொடை பெறவும் ஏற்­பாடு செய்­துள்­ளது. இல­வ­ச­மாக ஒரு வழி டிக்­கெட்­டினை செவ்வாய் கிர­கத்­திற்கு வழங்­கு­வ­தற்­காக தெரிவு செய்­யப்­படும் இத்­திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்க மட்டும் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கின்­றது. விண்­ணப்­பிக்கும் நாட்­டினைப் பொறுத்து விண்­ணப்ப கட்­டணம் 7-25 அமெ­ரிக்க டொலர்கள் வரை அற­வி­டப்­ப­டு­கின்­றது.

செவ்­வாயில் குடி­யே­று­வது சாத்­தி­யமா?
சாத்­தி­யமா? முடி­யுமா? என்­ப­தெல்லாம் முயற்­சி­யற்ற மூடர்­க­ளுக்கே வரும் என்­பது போல உள்­ளது "Mars One" இன் திட்­டங்கள். ஏனெனில் செல­வு­மிக்க இத்­திட்­டத்­தினை செல­வு­களை குறைத்து நேரத்தை மீதப்­ப­டுத்தி, அங்­குள்ள வளங்­களின் மூலம் மீள புவிக்கு வராது செவ்­வா­யி­லேயே வாழும் மனி­தர்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய தேவை­களை எது­வித அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி செயற்­ப­டுத்து அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்­ளனர் "Mars One" திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­வர்கள்.

இதற்கு மேலும் இது­வெல்லாம் சாத­ர­ண­மான வீண் முயற்­சிகள் என்­ப­துடன் செவ்­வாயில் குடி­யே­று­வ­தெல்லாம் சாத்­தி­யமா? என்று அறி­வி­ய­லையும் அறி­வி­ய­லா­ளர்­க­ளையும் கிண்டல் செய் யும் ஒரு வகையான சமூகமும் இருக் கத்தான் செய்கிறது. அவர்களுக்கு புரி யவா போகிறது. முயற்சிகளினதும் தேட லினதும் முடிவில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி.

மூச்சு எடுப்பதும் விடுவதும் சாதாரண மாகத்தான் தோன்றும் ஆனால் அவற்றை நிறுத்திவிட்டால்.... ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு பின்னர் சிந்திந்தால் புரியும் அதன் தேவை. அதுபோலவே அறிவியலில் எடுக்கப்படும் முயற்சிகளும் தேடல்களும. அது முயற்சிகள் மூலம் தேடல்களின் சுவாரஸ்யத்தினை உணர்ந்தவர்களுக்கே புரியும்.

எனவே விரைவில் செவ்வாயில் குடியேறி புவியிலுள்ளவர்களை வாய் பிளக்க வேடிக்கை பார்க்க வைக்கும் திட்டமாகவே அமையும் இந்த MARS ONE என்பதே ஏற்பாட்டாளர்களினதும் ஆர்வலர்களினதும் தற்போதைய நம்பிக் கையாக உள்ளது.

-அமானுல்லா எம்.றிஷாத்


இக்கட்டுரையானது 03.05.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

இதன் தற்போதைய நிலவரம் -

இலவசமாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப் பயணமாக செல்ல உலகின் பல பாகங்களிலிருந்தும் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பத்துள்ளனர். இதில் சுமார் 10 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் அடக்கம். 

Thursday, April 4, 2013

உலக சனத்தொகையை விஞ்சும் செல்லிடத் தொலைபேசிகளின் தொகை


'தூற்­றுவார் தூற்­றட்டும் போற்­றுவார் போற்­றட்டும்' என விமர்­ச­னங்­களைக் கடந்து மானிட வர்க்கம் மட்­டுமே வெற்றி பெற­வேண்­டி­ய­தில்லை என்ற உண்­மையை மானி­டர்­களின் கைக்­கு­ழந்­தை­களாய் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் தவழும் கைப்­பே­சிகள் இன்று உணர்த்­தி­யுள்­ளன. இதில் தொழில்­நுட்ப பிரி­யர்­க­ளுக்கும் மகிழ்ச்­சிதான்.

உலகில் வெற்­றி­பெறும் ஒவ்­வொரு புதிய விட­யமும் பழை­ய­னவாய் மாறியே முழு­மை­யான அங்­கீ­கா­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்­கின்­றது. அந்த வரி­சையில் செல்­லிடத் தொலை­பே­சி­களுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் செல்­லிடத் தொலை­பே­சி­களின் வர­விற்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து இன்று வரையில் பர­வ­லான எதிர்ப்­புகள் இருந்­து­கொண்­டேதான்  இருக்­கின்­றன. இருப்­பினும் அதன் தேவையை  கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் திண்­டா­டு­கி­றார்கள்.

ஆனாலும், செல்­லிடத் தொலை­பே­சி­களின் வளர்ச்சி என்­பது சனத்­தொகை வளர்ச்­சியைப் போலவே உள்­ளது. அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல்லின் கண்­டு­பி­டிப்­பான தொலை­பே­சியின் பின்னர் 1906ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஈ.அல்டன் என்­பவர் முதன் முத லில் வெஸ்ட் பொக்கெட் எனும்  செல்­லிடத் தொலை­பேசி என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்தார்.
  
இதுவே தற்­போ­தைய செல்­லிடத் தொலை­பே­சியின் வளர்ச்­சியின் ஆரம்­பமாய் அமைந்­தது. இருப்­பினும் சார்ல்ஸ் ஈ. அல்­ட­னினால் பெரி­ய­ளவில் அவ­ரு­டைய கண்­டு­பி­டிப்பை வளர்ச்சி பெறச் செய்­யவோ அல்­லது அதிக எண்­ணிக்­கை­யிலோ பெருக்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை.

இதன் பின்னர் 1946ஆம் ஆண்­ட­ளவில் சிக்கா­கோ­வி­லி­ருந்த பெல் சிஸ்டம் தொலை­பேசி ஊடாக நட­மாடும் ஒரு தொலை­பே­சியில் இருந்து முத­லா­வது அழைப்பு அதுவும் காரி­ லி­ருந்து ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  இதன்­போது பயன்­பட்ட  செல்­லிடத் தொலை­பே­சியின் நிறை 36 கி.கி ஆகும். கண­னிகள் போலவே தொலை­பே­சியும் பெரி­ய­ன­வாக இருந்தே சிறி­ய­ன­வா­கின.

பின்னர் இதன் மீதான ஈர்ப்பு மிக மெது­வாக அதி­க­ரித்து இன்று வலு­வாக மக்­க­ளி­டையே இணைந்து அனை­வ­ரையும் தனி­மையில் கூட்­டாக பேச­வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. 1973ஆம் ஆண்டில் ஜோன் எப். மிட்சல் என்­ப­வ­ரினால் கைக்­க­டக்­க­மான முத­லா­வது செல்­லிடத் தொலை­பேசி தயா­ரிக்­கப்­பட்­டது. இதன ்­போதே கைப்­பே­சி­களின் பரி­ணாம வளர்ச்சி ஆரம்­ப­மா­னது.


1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி மோட்­ட­ரொலா நிறு­வ­னத்தின் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்த ஜோய­லுக்கு கூப்பர் என்பர் முத­லா­வது அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார். அதுவே ஏனை­யோரும் தொலை­பே­சியின் அழைப்­புக்கு செவி­ம­டுக்க வைக்க போடப்­பட்ட அடித்­தளம். இந்த செல்­லிடத் தொலை­பேசி அன்று 3995 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

ஆனால் முதன்­மு­றை­யாக வணிக ரீதி­யி­லான கைப்­பே­சிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறு­வ­னத்­தினால் 1979ஆம் ஆண்­ட­ள­வி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொடர்ந்து பல நிறு­வ­னங்கள் கைப்­பே­சி­களை அறி­முகம் செய்ய ஆரம்­பித்­தன.

அவ்­வாறு அன்று அறி­மு­க­மான கைப்­பேசி இவ்­வ­ருட இறு­தியில் எண்­ணிக்­கையில் உலக சனத்­தொ­கை­யினை தாண்டிச் செல்லும் வாய்ப்­புகள் மிக அதி­க­மாக இருப்­ப­தாக ஆய்­வு­களின் முடி­வி­லி­ருந்து ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை தற்­போது 600 கோடி பேர் கைப்­பே­சிகளை வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும் 450 கோடி பேர் மாத்­தி­ரமே மல­சல கூடத்தை வைத்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் மற்­று­மொரு அறிக்கை தெரி­விக்­கின்­றது.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் எண்­ணிக்கை எந்­த­ள­விற்கு அதி­க­ரிக்­கி­றதோ அதே அள­விற்கு அதன் மீதான குற்­றங்­களும் குறை­களும் அதி­க­ரிக்­கத்தான் செய்­கின்­றன. ஆனால் அதுவே ஒரு சாரா­ருக்கு நிறை­க­ளையும் தேவை­க­ளை­யுமே அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது. மேலும் செல்­லிடத் தொலை­பேசி அவர்­க­ளுக்கு இன்­றி­ய­மை­ய­ாததாக ஒரு சாத­ன­மா­கவே மாறி­விட்­டது. அதா­வது கவ­னிக்க வேண்­டிய முதல் குழந்­தையாய் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது என்றே சொல்ல வேண் டும்.

செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் பாவ­னையால் உல­க­ள வில் பல்­வேறு பிரச்­ச­ினைகள் ஏற்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக இளம் சந்­த­தி­யி­னரின் தகுந்த நண்­ப­ னாக மாறி­யி­ருக்கும் செல்­லிடத் தொலை­பேசி பல வழி­களில் அவர்­களை சீர்­கேட்­டிற்கு இட்டுச் செல்லும் தகாத நண்­ப­னா­கவே இருக்­கி­றது என்­பது பெற்­றோர்­களின் வாதமாய் அமை­கின்­றது. அதுவும் ஒரு வகையில் உண்­மையே என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது.

இருப்­பினும் கால­வோட்­டத் தில் ஒவ்­வொரு காலப்­ப­கு­தி­யிலும் ஏதா­வ­தொரு சாதனம் மனித சமூ­கத்தில் பழிச்­சொல்­லுக்கு ஆளா­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. தொலைக்­காட்சி, கணனி வரி­சையில் இப்­போது  சிக்­கி­யி­ருப்­பது இந்த கைப்­பே­சி­களே. இதுவே இன்னும் சில ஆண்­டு­களின் பின்னர் கைப்­பே­சி­க­ளிற்கு பதில் வேறொரு சாத­னத்தின் நன்­மை­களை விட தீமைகள் பற்றி அதிகம் விவா­திக்­கப்­படும் என்­பது நிச்­சயம்.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் வரு­கை­களின் பின்னர் எழுத்து மற்றும் வாசிப்பு போன்ற பல தேவை­யான விட யங்கள் குறைந்­து­விட்­ட­தாக ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றது. அதே­வேளை செல்­லிடத் தொலை­பே­சி­க­ளி­னூ­டாக வெளி­யேறும் கதிர்கள் மற்றும் நுண்­ண­லைகள் மூலம் கண்ணுக் தெரி­யாத மற்றும் சிறிய உயி­ரி­னங்கள் பலவும் உயி­ரி­ழப்­ப­தா­கவும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.  இது போன்ற கார­ணிகள் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தவே செய்யும்.

பயிர் வள­ர­வென பயன்­ப­டுத்தும் அசே­தனப் பொருட்­க­ளினால் நிலத்­திற்கு தீங்கு ஏற் ­ப­டு­வது போலவே மக்­களின் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள உரு­வான கைப்­பே­சி­ க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களும்.

ஆனால் தொல்­லைகள் என்று கூறு­ப­வர்­க­ளி­டமும் கைய­டக் கத் தொலை­பே­சிகள் உண்­டென்­பதே அதன் வெற்­றியும் தேவை­யு­மாகும். இந்த வெற்­றியின் உச்­சமே வெகு­வி­ரைவில் கைப்­பே­சிகள் அடை­ய­வுள்ள தொகை. அதா­வது உல­கி­லுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் ஒரு கைப்­பேசி என்ற ரீதியில் உல­க­ளவில் 2014ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் அல்­லது இவ்­வ­ருட முடிவில் கைப்­பே­சி­களின் எண்­ணிக்கை அமைந்­து­விடும் என என எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது 7 பில்­லி­யன்­களை மிக வேக­மாக நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது உலக சனத்­தொகை. ஆனால் செல்­லிடத் தொலை­பே­சி­களின் தொகை உலக சனத்­தொ­கை­யினை விட வேக­மாக 7 பில்­லி­யன்­களை நெருங்­கி­விடும் என ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.


இதில் விஷேடம் என்­ன­வெனில் உல­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­படும் கைப்­பே­சி­களில் அரை­வா­சிக்கும் அதி­க­மாக ஆசிய நாடு­க­ளி­லேயே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உல­களில் செல்­லிடத் தொலை­பே­சிகள் பயன்­ப­டுத்தும் நாடு­களில் சீனா முதலிடத்திலும் அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியா மற்றும் அமெரிக்காவும் உள்ளன.

மேலும் இவ்வருட இறுதி யில் சுமார் 2.7 பில்லியன் மக்கள் அதாவது உலக சனத் தொகை யில் 39 சதவீதமான மக்கள் செல்லிடத் தொலைபேசிகளில்  இணைய சேவையைப் பயன் படுத்துவார்கள். இணைமின்றி உலகம் ஸ்தம்பிக்கக் கூடிய நிலையில் இணையத்தை இலகுவாக வழங்கும் கைப் பேசிகள் இன்றேலும் உலகம் ஸ்தம்பிக்கும் நிலையே தற் போது காணப்படுகிறது.

எனவே இன்று சீனாவில் குடிசைக் கைத்தொழிலாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசிகள்  நாளை அனை த்து குடிசைகளையும் சேர்த்தே ஆளும் என்பதை சொல்லாமல் சொல்லும் கைப்பேசிகளின் தொகை, சனத்தொகையை விஞ் சும் வேளையில் அதன் உச்சப் பயன்களை அடைய நாமும் தயாராவோம்.

-அமானுல்லா எம்.றிஷாத்

Thursday, March 21, 2013

விண்ணைத் தாண்டி சாதிக்கும் பெண்கள்


முன்­னொரு காலத்தில் கண­வ­னுடன் உடன் கட்டை ஏறிக்­கொண்­டி­ருந்த பெண்கள், விஞ்­ஞா­னத்தின் கனவு உல­கங்­க­ளுக்கு விண்­க­லங்­க­ளுடன் விண்­ணிற்கு ஏற ஆரம்­பித்து முன்­னு­தா­ர­ணமாய் இம்­மண்ணில் பெண்­களின் கண்­களை விண்ணை நோக்கி பார்க்க வைத்த பெருமை ரஷ்­யா­வுக்கே உண்டு.

1963 ஜுலை 16ஆம் திகதி வொஸ்டக் 6   என்ற மனித விண்­க­லத்தில் வலென்டினா டெரஸ்­கொவா என்ற பெண்­ணையும் ரஷ்யா விண்­ணிற்கு ஏவி­யது. அதுவே முதன் முறை­யாக பெண்­மணி ஒருவர் விண்­க­லத்தில் விண்­வெ­ளிக்கு பய­ண­மான முதல் சந்­தர்ப்­ப­மாகும். அன்று பெண்­க­ளுக்­கான சுதந்­தி­ரத்தின் எல்­லைக்­கான கதவு தகர்க்­கப்­பட்டு விண்­ணிற்கு பறந்­தது டெரஸ்­கொவா என்ற பெண் மட்­டு­மல்ல பெண்­க­ளுக்­கான பல தடை­க­ளுமே.

குனிந்த தலை நிமி­ர­வி­டாமல் பெண்­களை நடக்­க­விட்டு வானை மறைத்த சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் வானையும் தாண்டிச் செல்ல ஒரு பெண்ணை அனு­ம­தித்த ரஷ்­யாவின் செயற்­பாட்­டுக்கு பின்னர் இன்­று­வரை விண்­வெ­ளிக்குச் பய­ணித்­துள்ள 525 பேரில் 56 பெண்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கண்­ணுக்குத் தெரியும் சக்­தி­களை விட காற்று மற்றும் உயிர் போன்ற உணரக் கூடி­ய­வற்­றுக்­கான சக்­திகள் என்­றுமே அதிகம் என்­பதை ஒரு வகையில் பெண்­களும் உணர்த்தி இருக்­கி­றார்கள் என்­றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வொஸ்டக் 6 விண்­க­லத்தின் பயணம் வரையில் விண்­வெளி தொடர்­பான ஆராய்ச்­சி­களில் பெண்­களின் திற­மை­களை யாரும் பெரி­ய­ளவில் அறிந்­தி­ருக்­க­வில்லை அல்­லது வெளிக்­கொ­ணர விரும்­ப­வில்லை என்­ப­து­வாகத் தான் இருக்க வேண்டும். காரணம் அன்று ஆண்­களின் சட்­டங்கள் பல பெண்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

ஆனால், தற்­போது நிலை­மைகள் அவ்­வா­றில்லை. உல­கி­லுள்ள அத்­தனை துறை­க­ளிலும் இன்று பெண்­க­ளுக்­கான உரிமை என்­பது நிச்­ச­யிக்­கப்­பட்­ட­தொன்­றா­கவே இருக்­கி­றது. பெண்­களும் அவற்­றிற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இருப்­பினும் இத­னையும் மீறி பெண்­ணியம் என்ற பெயரில் ஆண்­களை அடக்கி ஆள்­வ­தற்கு முயற்­சிக்கும் பெண்கள் கூட்­ட­மொன்றும் இருக்­கத்தான் செய்­கி­றது.

சரி இப்­போது விடயம் அது­வல்ல. விண்­வெ­ளிக்கு முதல் பெண்­ம­ணியை சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது ரஷ்யா அனுப்பி வைத்து எதிர்­வரும் ஜுலை மாதம் 6ஆம் திக­தி­யுடன் 50 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றது. இதனை முன்­னிட்டு 50ஆவது ஆண்டைக் கொண்­டாடும் முக­மாக பெண்­ணொ­ரு­வரை மீண்டும் விண்­வெ­ளிக்கு அனுப்­பு­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ளது.


கடந்த 1997ஆம் ஆண்­டுக்கு பின்னர் ரஷ்யா இது­வரை பெண்­களை விண்­வெ­ளிக்கு அனுப்-­ப­வில்லை. தற்­போது எதிர்­வரும் ஆண்டு எலினா செரோவா என்ற 36 வய­தான பெண்­ணொ­ரு­வரை விண்­வெ­ளிக்கு அனுப்பத் திட்­ட­மிட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு விண்ணில் பறக்க உள்ள எலினா செரோவா, சர்­வ­தேச விண்­வெளி ஆய்­வு­நி­லை­யத்தில் ஆறு மாதம் தங்க வைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மொத்­த­மாக 50 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­க­வுள்ள பெண்­களின் விண்­வெளி வாழ்க்­கையில் பல்­வேறு தரு­ணங்­களில் தங்­க­ளது நாடு­க­ளையும் பெண்­க­ளையும் பெரு­மைப்­ப­டுத்­திய பெண்கள் தொடர்பில் சற்­றேனும் அறிந்­தி­ருக்­கிறோம் எனும் பெரு­மை­யா­னது எம்மைச் சார்ந்­தி­ருப்­பது சிறப்­பாக இருக்கும்.

முதன் முதலில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த பெண் என்ற பெருமை வலன்டைன் டெரஸ்­கொ­வா­வுக்கு இருப்­பது போல ரஷ்­யாவைச் சேர்ந்த ஸ்வெட்­லனா ஸவிட்ஸ்­கியா என்ற பெண்ணே முதன் முதலில் விண்­வெ­ளியின் தரை­யி­றங்கி நடந்­தவர் என்ற பெரு­மை­யுண்டு.

இதன் தொடர்ச்­சி­யாக ரஷ்­யாவின் விண்­வெளி ஆராய்ச்­சி­களில் போட்­டிக்கு நின்ற அமெ­ரிக்கா சல்லி ரைட் என்ற பெண்ணை அவ­ரது 32ஆவது வயதில் 1983ஆம் ஆண்டில் விண்­ணிற்கு அனுப்­பி­ய­போதும் 1984ஆம் ஆண்டில் கத்ரின் என்ற பெண்­ணையே முதன் முதலில் விண்­வெ­ளியில் தரை­யி­றங்கச் செய்­தது. சல்லி ரைட் கடந்த ஆண்டில் ஜுலை 23ஆம் திகதி தனது 61ஆவது வயதில் புற்­று­நோ­யினால் உயி­ரி­ழந்தார்.

இது­வ­ரையில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த 56 பெண்­களில் 45 பெண்­களை அமெ­ரிக்­காவே அனுப்பி வைத்­துள்­ளது. அதே­வேளை ரஷ்யா சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது 2 பெண்­க­ளையும் சோவியத் யூனியன் பிரிந்­ததன் பின்னர் ஒரு­வரை மாத்­தி­ரமே அனுப்­பி­யுள்­ளது.

மேலும் சீனா, ஜப்பான், வட­கொ­ரியா, ஈரான் மற்றும் இந்­தியா உள்­ளிட்ட ஆசியா கண்­டத்தைச் சேர்ந்த 5 பெண்­களும் விண்­வெ­ளிக்கு சென்­றுள்­ளனர் என்­பதில் எமக்கும் பெரு­மைதான். ஆனால் இவற்றில் இந்­தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பெண்கள் அமெ­ரிக்கா சார்­பா­கவே சென்­றுள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யாவைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சுனிதா வில்­லியம்ஸ் என்­பவரே அதி­க­ள­வான நாட் கள் (195 நாட்கள்) விண்­வெ­ளியில் இருந்த பெண்.

மிகச் சிறிய வயதில் பய­ணித்­தவர் என்ற பெருமை இங்­கி­லாந்­தினால் முதன் முதலில் அனுப்­பப்­பட்ட பெண் ஹெலன் ஷர்மன் என்­ப­வ­ரையே சாரும். இவர் தனது 29ஆவது வயதில் விண்­வெ­ளிக்கு பய­ண­மானார்.


இவை­த­விர விண்­வெளிப் பய­ணங்­களில் சாதனை நிலை­நாட்ட பரிந்­து­ரைக்­கப்­பட்டு இறு­தியில் வாய்ப்பை இழந்த பெண்கள் 15 பேர் உள்­ளனர்.

வாய்ப்புக் கிடைத்து விண்­வெ­ளிக்குச் சென்று உயி­ரி­ழந்­த­வர்­களும் மூவர் உள்­ளனர். இதில் எம்­ம­வர்­க­ளுக்கு அதிகம் பரீட்­ச­ய­மான கல்­பனா சாவ்­லாவும் அடங்­கு­கிறார். இவரே விண்­ணிற்கு சென்ற இந்­தியப் பெண்­மணி. இவ­ருக்கு முதல் சுனிதா வில்­லியம்ஸ் பய­ணித்­தி­ருந்த போதிலும் அவர் இந்தியாவில் பிறந்தவரல்ல.

2003ஆம் ஆண்டில் எஸ்.ரீ.எஸ்-107 விண்வெளி விபத் துக்குள்ளானதில் கல்பனாவும் அமெரிக்காவைச் சேர்ந்த லூறல் பீ. க்ளார்க் என்ற இன்னொரு பெண்மணியும் உயிரிழந்தார். இதேபோல 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜலென்ஜர் விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரெஸ்னிக் என்ற பெண்ணும் உயிரிழந்தார்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதிக்கத் துடித்து உயிரிழந்த இப்பெண்கள் விதைகளாகவே வீழ்ந்திருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக மரமாகவே எழு வார்கள் என்பதில் சந்தேக மில்லை.


 -அமானுல்லா எம்.றிஷாத்

இக்கட்டுரையானது 08.03.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Sunday, March 3, 2013

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்


காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதை அண்மைய திருட்டுகள் பல நிரூபிக்கின்றன.

அடுத்தவர் உடைமையை அனுமதியின்றி கையகப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் திருட்டாகவே அமைகிறது. இதில் பொருள் மட்டுமே என்றல்ல. பிறர் வார்த்தைகள் கூட சில நேரங்களில் திருட்டாக அமைந்துவிடலாம். அண்மைக் காலமாக பொருள்சாரா திருட்டுகள் குறிப்பாக இணையத்தில் மிக அதிகமாகவே அதிகரித்துவிட்டது.

இணையவாசிகள் அத்தனை பேரும் தற்போது அதிகம் அதிகமாய் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாய் மாறியுள்ளது 'ஹெக்' என்ற சொல். இணைப் பாவனையாளர்கள் பலருக்கும் இது சாதரண சொல்லாக இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய 'ஷெல்'லாகவே மாறிவிட்டது.

காரணம் இணையத்தின் ராஜா, மந்திரியாக கூகுள், பேஸ்புக்குடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஈரான், போட்டியாக பல விடயங்களில் களமிறங்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்து நடக்கும் 'சைபர் க்ரைம்' தாக்குதல்கள் அளவுக்கதிகமாகவே தற்போது நடைபெற்ற வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 'ஹெக்' செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஹெக் என்பது உரிமையாளர் அனுமதியின்றி அவருடைய செயற்பாடுளில் இயங்குதளம் மற்றும் வலையமைப்பின் குறைபாடுகளைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும். அவை தேவைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்து பல்வேறு வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றில் குறிப்பாக வைட் ஹெட் மற்றும் பிளக் ஹெட் என்ற பிரிவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் வைட் ஹெட் என்பது கணனிகளையும் தரவுகளையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுபவை இதன் மூலம் எவ்வாறு ஹெக் செய்யாமல் தடுப்பது என்பது குறித்து ஆராயப்படுவதன் ஹெக்கர்ஸிடமிருந்து தப்பிக்க பிரத்தியேமான மென் பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் பிளக் ஹெட் என்பது வைட் ஹெட்டுக்கு எதிரானது. தனி நபரோ குழுவோ இணைந்து சுய இலாபத்திற்காக கணனி இயங்குதளம் மற்றும் இணைய வலையமைப்பிலுள்ள ஓட்டைகளில் புகுந்து தங்களுக்கு தேவையான தகவல்களை களவாடுவதை குறிப்பதே பிளக் ஹெட். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. ஹெக்கிங் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஹெக்கர்ஸ் என அழைக்கப்படும்.

இன்றைய நாட்களில் இணையம் நுழையாத துறையே இல்லை எனலாம். இதனால் ஒவ்வொரு துறையினரது தகவல்களையும் இணையத்தில் களவாட அவற்றின் எதிரிகள் புறப்பட ஆரம்பித்தனர். அது தற்போது ஒரு உயர் எல்லையினைத் தொட்டு சைபர் க்ரைமாக மாறி நாடுகளிடையேயான மோதல்கள் வரை சென்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல், பாதுகாப்பு என அனைத்து மட்ட விடயங்களும் இணைத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் அவற்றினை களவாடவென பலர் முயற்சிக்கும் போது அவை நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

இதில் ஒரு அங்கமே ஜுலியன் அசேன்ஜ். இவர் உலகின் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் முக்கிய விடயங்களை ஹெக் செய்து வெளியிட்டார். ஆனால் இவர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் இடைத்தரகர்களாக செயற்பட்டு நாடுகளின் முக்கிய தகவல்களை ஹெக் செய்து அவற்றை விற்பனை செய்யும் ஹெக்கர்ஸும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க அமெரிக்க நிறுவனங்கள் மக்களின் தகவல்களை திருடவும் மேலும் அவர்களை உளவும் பார்க்கவுமே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற மேலும் பல இணையத்தளங்கள் செயற்படுவதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காவே ஈரான் தனக்கென பிரத்தியேகமான உள்வலையமைப்புகளை (iவெசயநெவ) உருவாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனனில் ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியது. இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.

குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

இவ்வானதொரு நிலையில் தற்போது அமெரிக்கா மீதே சைபர் தாக்ககுதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பென்டகன் கணனிகளையும் ஹெக்கர்ஸ் பதம்பார்ந்தமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரமே அமெரிக்காவின் பிரபலமான நிறுவனங்களான நிவ்யோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட், அப்பிள், பேஸ் புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் ஹெக் செய்யப்பட்டமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, இங்குள்ள பிரதான நிறுவனங்களை குறி வைத்து ஹெக் செய்வது சீனா எனவும் இதற்காக அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னணியில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் பல ஹெக் செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் எதுவிதமான தகவல் திருட்டுகளும் இடம்பெறவில்லை என மாதம் கழிந்த நிலையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தங்களது 250 ஆயிரம் பயனர்களின் முழுமையான தகவல்களும் களவாடப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தது.

திடீரென இவ்வாறு அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல் அதிகரித்தமையின் பின்னணி பற்றி எதனையும் எவரும் இதுவரையில் கூறவில்லை. மேலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்காவும் மிகப்பெரிய அளவில் வெளியுலகிற்கு தெரியும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

உண்மையில் ஈரான் குற்றம் சுமத்துவது போல தேள் கொட்டுப்பட்ட திருடனாய் அமெரிகக்கா விழி பிதிங்கி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை.

-அமானுல்லா எம். றிஷாத்


Friday, February 22, 2013

அகிலத்தை அச்சுறுத்தும் அஸ்டரொய்ட்டுக்கள் : விஞ்ஞானிகளை விஞ்சுகிறது!


எதிர்பார்ப்புக்குரிய விருந்தாளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அழையா விருந்தாளியாய் எதிர்பாராமல் வந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் அமைந்துவிட்டது ரஷ்ய வான் பரப்பில் வெடித்துச் சிதறிய எரிகல் விடயம்.

கடந்த 15ஆம் திகதி வானியல் தொடர்பான அத்தனை பேரும் 2012 DA14 என்ற அஸ்டரொய்ட் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிரதேசத்திலுள்ள யுரல் மலைத்தொடரின் மேலாக அழையாக விருந்தாளியாக வந்த எரிகல்லொன்று வெடித்துச் சிதறியது. கூடவே விஞ்ஞானிகளின் கணிப்புக்களும் தான்.

எரிகல் வெடித்த குறித்த பகுதியில் மக்கள் சனத்தொகை மிகக் குறைவு என்பதனால் ஆபத்துக்கள் குறைவாவே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு எரிகல் வெடித்ததில் சிறு காயங்கள் உட்பட 1200 மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர். இதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து பாரிய தொழிற்சாலையொன்றின் 6ஆயிரம் சதுர அடியுடைய கூரையொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளும் ஆங்காகங்கே நொறுங்கிக் காணப்படுகின்றது என ரஷ்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வானிலிருந்து வேகமாக வந்த எரிகல்லானது புவிலிருந்து சுமார் 50 கி.மீ. உயரத்தில் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்புகள் பிரம்மாண்டமாக வெடித்துள்ளது. இதில் சுமார் 32 மைல் பரப்பில் துகள்கள் சிதறியுள்ளது. இதன்போது யுரல் மலைப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிர்வுக்குட்பட்டுள்ளது.

இவ்வதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துள்ளது. இதனாலேயே அங்குள்ள பெரும்பாலானர்வர்கள் காயங்களுக்குள்ளாகினர்.

ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்தால் இந்த எரிகல் ஆபத்தானது தான் என்றாலும் பெரியளவில் ஆபத்து என்று சொல்லுமளவிற்கு இல்லை என எண்ணிவிட வேண்டாம். வானில் வெடித்த அதே எரிகல் புவின் மேற்பரப்பில் மோதி வெடித்திருக்குமானால்.... நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுமார் 68 வருடங்களுக்கு முன்னர் 2ஆம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஸிமா நகரை உலுக்கியது 'சின்னப் பையன் (Little Boy)' எனும் அணுகுண்டு. இதன் தாக்கம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. வருடா வருடம் அணுகுண்டு வெடித்த தினமான ஓகஸ்ட் 6ஆம் திகதியை கொண்டாடியே உலகிற்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது ஜப்பான்.

அமெரிக்காவின் அதி புத்திசாலித்தனமான வேலையில் அணு விதைக்கப்பட்ட ஹிரோஸிமாவின் பூமியில் இன்றளவிலும் வீரியமிக்க அடுத்த சந்ததியின் விதைகளான குழந்தைகள் உருவாக முடியாமலே உள்ளது. 

இவ்வாறு ஹிரோஸிமாவை உலுக்கிய அணுகுண்டைப் போன்று 30 மடங்கு அதிக வலுவுடைய எரிகல்லே ரஷ்யாவின் வான் பரப்பில் வெடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யாவின் 1908ஆம் ஆண்டில் பாரிய எரிகல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1200 வருடங்களுக்கு ஒரு முறை பாரிய வெடிப்பில் ஒரு சம்பவமே அது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எரிகல்லிற்கு காசு
இந்தளவிற் ஆபத்தை விளைவிக்கக் கூடிய எரிகல் என்பதனால் ஆராய்சிக்காக இக்கல்லிற்கு ஆராய்ச்சியாளர்களிடையே கேள்வி நிலவுகின்றது. வெடித்து எரிகல்லின் சிதறல்கள் கிடைக்கப்பெற்றவர் அவற்றை விற்பனை செய்துள்ளனர். சுமார் 6500 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

இதனால் குறித்த பிரதேசத்திற்கு எரிகல் வேட்டைக்கென ஏராளமானவர்கள் வந்துள்ளனர். இதனை ரஷ்ய பாதுகாப்புப் படை தடை செய்துள்ளதுடன் கல்லினை வெறுங் கையினால் தொடுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர்.

ஆபத்துக்கள் எதுவுமின்றி புவியைக் கடந்தது அஸ்டரொய்ட் 2012 DA14 
இதேவேளை அன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட் 2012 DA14 எனும் அஸ்டரொய்ட் பூமிக்கு எதுவித ஆபத்துக்களையும் ஏற்படுத்தாமல் புவியைக் கடந்து சென்றது.

பூமிக்கு மிக அண்மையாக அஸ்டரொய்ட் ஒன்று கடந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனவே இக்கல் புவியைக் கடக்கும் போது அஸ்டரொய்ட் தொடர்பான ஆராய்ச்சிகளும் அடுத்த கட்டத்திற்கு நகரும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

150 அடி நீளமானதும் 130,000 தொன் நிறையுடையதுமான (உதை பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு) 2012 DA14 அஸ்டரொய்ட், சுமாத்ரா தீவிற்கு மேலாக கடந்த 15ஆம் திகதி இரவு சுமார் 11.55 மணியளவில் 28,000 கி.மீஃமணி வேகத்தில் புவியுடன் மோதாது சுமாத்ரா தீவுகளுக்கு மேலாக 27,700 கி.மீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றுள்ளது.

ஆய்வாளர்களின் கணிப்பினை பொய்யாக்காமல் குறித்த அஸ்டரொய்ட் புவியைக் கடந்தது. இதன் பின்னர் உண்மையில் இக்கல் புவியை மோதுவதற்கு மிகச் சிறியளவில் வாய்ப்பு இருந்தது. அவற்றை நாங்கள் வெளியிடவில்லை என விஞ்ஞானிகள் கூறினர் எனத் தகவல்கள் வெளியாகின.

மேலும் இவ் அஸ்டரொய்ட் பூமியில் மோதியிருந்தால் 800 அடிக்கும் மேல் சுனாமி ஏற்பட்டிருக்கும். மேலும் மீண்டும் சின்னப் பையனுடனேயே இதுவும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2012 DA14 அஸ்டரொய்ட் புவியுடன் சின்னப் பையன் அணுகுண்டினை விட 1000 மடங்கு ஆபத்தை விளைவித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.

வருடத்திற்கு ஆகக் குறைந்தது 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுக்கள் பூமியைக் கடந்து செல்கிறது. இவற்றில் ஒரு சிலவற்றை விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்க முடிகிறது நாசாவினையும் சேர்த்து. 2012 DA14 அஸ்டரொய்ட் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நாசா இது தொடர்பில் மக்களுக்கு அறிய உதவியிருந்தது. அத்துடன் 2012 DA14 அஸ்டரொய்டின் நகர்வினையும்  http://eyes.nasa.gov/index.html என்ற இணையத்தளத்தில் நேரடியாக காண வழிசெய்தமை குறிப்பிடத்தக்கது. (இந்த அஸ்டரொய்ட் தொடர்பில் 2013.02.08ஆம் திகதி மெட்ரோவில் பார்க்கலாம்.)

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிடுகையில், அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் எரிகற்கள் என்ற விடயம் தொடர்பில் விஞ்ஞானிகளின் நிலைப்பாடுதான் என்ன? என பொதுவான ஒரு கேள்வி எழச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

இந்நிலையில் அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் கற்களை அவதானிக்கவும் அவற்றிலிருந்து புவியை காக்கவும் புதிய சட்டலைட் மூலம் சூரியக் கதிர்கள் மூலம் கற்களை அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது புதிதாக முன்னெடுக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே எதிர்வரும் நாட்களிலும் பல்லாயிரக் கணக்கான கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டுக்களுக்கு விஞ்ஞானத்தின் விடை என்ன என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரையானது மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் 22.02.2013 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Friday, February 15, 2013

தொழில்நுட்பக் காதலர்களே... காதலர் தின வாழ்த்துக்கள்!


ஆணும் பெண்ணும் சமமென்று வாழும் இக்காலத்தில் கூட ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் அடிமையாக்கி எதிர்பார்ப்புக்களை தாண்டிய அன்பால் உணர்வுகளை இணைக்கும்  திறன்மிக்க 'காதல்' என்ற உணர்பூர்வமான விடயத்தை கொண்டாடிய அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

நிலையான மாற்றத்தினில் நிலைமாறும் உலகியல் விடயங்களில் காதலர்களும் தொழில்நுட்பத்துடனான மாற்றத்தினில் காதல் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கதைகளில் படித்தது போன்று காடுகளை தாண்டி தூது சென்ற புறாக்களின் சிறகுகளில் வளர்ந்தது அன்றைய காதல்கள். அதுவே கண்டங்களைத் தாண்டி இலத்திரனியல் அலைகளில் வளர்கிறது இன்றைய காதல்கள். இதனால்தான் என்னவோ இயற்கையை சுவாசித்து வாழ்ந்த காதல்கள் உருவாக்கிய காவியங்களை இப்போது படைக்கமுடியவில்லை.

என்றாலும் காதலினை வளர்க்கூடிய பல சாதனங்களை தொழில்நுட்பங்கள் படைத்துவிட்டது என்றால் வலைக் காதலர்கள் உட்பட ஏனையவர்களும் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் குதிரை, புறா, ஓலை, தபால் என்றிருந்த காதல் போய் பேஜர், குறுஞ்செய்தி, எம்.எம்.எஸ், ஈமெயில், சமூகவலைத்தளங்கள் என்றல்லவா வளர்ந்து நிற்கிறது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்பாடலின் மூலம் உலகிலுள்ள அத்தனை துறையினரும் பயன்பெறுகின்றனர். ஆனால் காதலர்கள் உச்சப் பயனை அடைவதை தனிமையில் இனிமையாய் சிரித்துப்பேசும் ஒவ்வொருவரும் எமக்கு உணர்த்தத் தவறவில்லை.

காதலித்துப் பார் கவிதை வரும் என்றார் கவிஞர் வைரமுத்து. ஆனால் காதலித்துப் பார் கையடக்கத் தொலைபேசி வரும் என்பதே இப்போதைய உண்மை நிலைமை.

3ஜீ, 4ஜீ என்ற சந்ததியினருக்கு முன்னர் வாழ்ந்த சந்ததியிடம் காதல் பற்றிக் கேட்டால் அந்த சுகமான சந்தோசங்கள், காத்திருப்புகள், வலிகள் என எல்லாவற்றையும் லயித்துப் போய்க் கூறுகிக்கொண்டே இருக்கிறார்கள். அது கேட்போரையும் காதல் கொள்ளத் தூண்டும் வகையில் உண்மையாகவும் உணர்பூர்வமாகவும் இருக்கிறது.

ஆனால் இன்றை தொழில்நுட்பக் காதலர்களின் கதையானது அவர்களது காதலைப் போலவே மிகச் சுருக்கமானது. அதாவது கைப் பேசியின் மின்கலத்தில்  (Battery) இருக்கும் சார்ஜின் நேரமே காதலின் நேரமாகவும் அமைந்துவிடுகிறது. இதை விடக்கொடுமை என்னவென்றால் இவர்களது மகிழ்ச்சி, வேதனை, முத்தம் என அனைத்தையும் சொந்தம் கொண்டாடுகிறது இந்த கையடக்கத் தொலைபேசிகள்.

நிலைமை இவ்வாறே நீடித்தால் எச்சில் எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி ஒப்புக்கொள்வாயா? என்ற மதன் கார்க்கியின் வசனங்களும் நிஜமாகிவிடுமோ என அச்சமும் ஏற்படுகிறது.

இல்லை, இல்லை இப்போதும் கடலை விட ஆழமான, வானை விட நீளமான காதல் என்னுடையது என்பவர்களிடம் இதுவெல்லாம் ஹோர்மோன்ஸ் செய்யும் வேலை என்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்!

இருந்தாலும் காதலுக்கென நேரத்தை ஒதுக்கி ஈ-வாழ்த்து அட்டைகள் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்கையில், பெபரவரி 14ஆம் திகதியையும் சேர்த்து 8 நாட்கள் காதலர் தினத்தினை கொண்டாடுகிறார்கள். இக்கொண்டாட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. அதேவேளை சீனா (சில பகுதிகளில்) உட்பட பல நாடுகளில் காதலர் தினம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலைமைகள் இன்றளவிலும் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் ரோஸ் தினம், ப்ரொபோஸன் தினம், சொகோலேட் தினம், டெடி (டெடி பியர்) தினம், பிரொமிஸ் தினம், ஹக் தினம், கிஸ் தினம் என காதலர்கள் கொண்டாடுகிறார்கள்.

இவ்வகையான கொண்டாட்டங்கள் தற்போது கீழத்தேய நாடுகளிலும் தற்போது அதிகளவில் பரவி வருகின்றது. என்றாலும் மேலயத்தேய நாடுகளிலேயே பரவலாக காணப்பாடுகிறது. அவ்வாறான குறித்த சில நாடுகளில் இவ்வாறு அமைகிறது.

அமெரிக்கா 
ஆடல் பாடல் களியாட்டாம் என திருவிழாவாக கொண்டாடுவார்கள். காதலர்கள் தங்களுக்குள் வண்ணமயமான லித்தோகிராப், கையால் வண்ணம் தீட்டிய வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் விதைகள், சிப்பிகள் போன்றவற்றினால் அணிகலன் உருவாக்கி மாட்டிக்கொள்வார்கள். மாணவர்களும் தங்களது வகுப்பறைகளில் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

லண்டன்
ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமாக தமது அன்பினை வலன்டைன் பாதிரியாரின் பெயரில் பகிர்ந்துகொள்வார்கள். ஒரு குழுவினர் இதற்காக பாடல்களை தயார் செய்து சிறுவர்களைக் கொண்டு பாடவைத்து இனிப்பு பரிசுகளை வழங்குவதுடன் காதலர் தினத்திற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பண் ஒன்றையும் வழங்கி மகிழ்வனர்.

பிரான்ஸ்
இங்கு வித்தியாசமாக காதலர்கள் ஆண்கள், பெண்களாக தனி அறையில் சென்று அடுத்த சென்றுவிடுவார்கள். பின்னர் பெண்கள் ஆண்களை அழைக்க வேண்டும். இதில் ஈர்க்கபடாத ஆண்கள் காதலில் தோல்வியுற்றவராகிவிடுவர். தொடர்ந்து படங்களை எதிர்த்து ஆண்களை பெண்கள் திட்டித்தீர்த்துக்கொள்வர். தற்போது இம்முறை பிரான்ஸ் அராசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் 
காதலர் தினம் இங்கு பெப்ரவரி மற்றும் மார்ச் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படும். பெப்.14இல் பெண்கள் ஆண்களுக்கு சொகொலேட் போன்ற பரிசுகளை வழங்குவர். இத்தினங்களை வெள்ளை தினம் என அழைப்பர். பதிலுக்கு மார்ச் 14இல் ஆண்கள் தங்களது பதில் பரிசை வழங்கு தங்களது அன்பை பரிமாறிக்கொள்வர். இது 1960ஆம் முதல் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.

கொரியா
முற்றிலும் வித்தியாசமாக ஆண்டில் ஒவ்வொரு மாத்தின் 14ஆம் திகதியும் இங்கு காதலர் தினத்தினை கூரும் வகையில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்களாம். ஜப்பானைப் போலவே இங்கும் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 14ஆம் திகதி காதலில் தோல்வியடைந்தவர்கள் கறுப்பு தினத்தினை கொண்டாடுவார்கள். இதன்போது காதல் தோல்வியடைந்த பலரும் ஒன்றாக இணைந்து ஜஜாங் எனும் கறுப்பு நூடுல்ஸை உண்பார்கள்.

இவ்வாறெல்லாம் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது தற்போதும் சில இடம்பெறுகிறது. என்றாலும் இவற்றையெல்லாம் தூர எறியச்செய்து தொழில்நுட்பத்தினால் இணைக்கும் காதல் அதனாலே பிரிவது வருத்தமே.

இவற்றையெல்லாம் கடந்து உண்மைக் காதலை தொழில்நுட்பத்திலும் வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான காதலர்களுக்கு இந்த காதலர்கள் தினம் சிறப்பாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி. அவ்வாறான தொழில்நுட்பக் காதலர்கள் அனைவரும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஏ.எம்.ஆர்