உலகில் வெற்றிபெறும் ஒவ்வொரு புதிய விடயமும் பழையனவாய் மாறியே முழுமையான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்கின்றது. அந்த வரிசையில் செல்லிடத் தொலைபேசிகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் செல்லிடத் தொலைபேசிகளின் வரவிற்கு ஆரம்பத்திலிருந்து இன்று வரையில் பரவலான எதிர்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் அதன் தேவையை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.
ஆனாலும், செல்லிடத் தொலைபேசிகளின் வளர்ச்சி என்பது சனத்தொகை வளர்ச்சியைப் போலவே உள்ளது. அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்லின் கண்டுபிடிப்பான தொலைபேசியின் பின்னர் 1906ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஈ.அல்டன் என்பவர் முதன் முத லில் வெஸ்ட் பொக்கெட் எனும் செல்லிடத் தொலைபேசி என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
இதுவே தற்போதைய செல்லிடத் தொலைபேசியின் வளர்ச்சியின் ஆரம்பமாய் அமைந்தது. இருப்பினும் சார்ல்ஸ் ஈ. அல்டனினால் பெரியளவில் அவருடைய கண்டுபிடிப்பை வளர்ச்சி பெறச் செய்யவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ பெருக்கிக்கொள்ள முடியவில்லை.
இதன் பின்னர் 1946ஆம் ஆண்டளவில் சிக்காகோவிலிருந்த பெல் சிஸ்டம் தொலைபேசி ஊடாக நடமாடும் ஒரு தொலைபேசியில் இருந்து முதலாவது அழைப்பு அதுவும் காரி லிருந்து ஏற்படுத்தப்பட்டது. இதன்போது பயன்பட்ட செல்லிடத் தொலைபேசியின் நிறை 36 கி.கி ஆகும். கணனிகள் போலவே தொலைபேசியும் பெரியனவாக இருந்தே சிறியனவாகின.
பின்னர் இதன் மீதான ஈர்ப்பு மிக மெதுவாக அதிகரித்து இன்று வலுவாக மக்களிடையே இணைந்து அனைவரையும் தனிமையில் கூட்டாக பேசவைத்துக்கொண்டிருக்கிறது. 1973ஆம் ஆண்டில் ஜோன் எப். மிட்சல் என்பவரினால் கைக்கடக்கமான முதலாவது செல்லிடத் தொலைபேசி தயாரிக்கப்பட்டது. இதன ்போதே கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சி ஆரம்பமானது.
1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி மோட்டரொலா நிறுவனத்தின் ஆய்வுகூடத்திலிருந்த ஜோயலுக்கு கூப்பர் என்பர் முதலாவது அழைப்பினை ஏற்படுத்தினார். அதுவே ஏனையோரும் தொலைபேசியின் அழைப்புக்கு செவிமடுக்க வைக்க போடப்பட்ட அடித்தளம். இந்த செல்லிடத் தொலைபேசி அன்று 3995 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் முதன்முறையாக வணிக ரீதியிலான கைப்பேசிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறுவனத்தினால் 1979ஆம் ஆண்டளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல நிறுவனங்கள் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.
அவ்வாறு அன்று அறிமுகமான கைப்பேசி இவ்வருட இறுதியில் எண்ணிக்கையில் உலக சனத்தொகையினை தாண்டிச் செல்லும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுகளின் முடிவிலிருந்து ஐக்கிய நாடுகள் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தற்போது 600 கோடி பேர் கைப்பேசிகளை வைத்திருக்கின்றபோதிலும் 450 கோடி பேர் மாத்திரமே மலசல கூடத்தை வைத்திருப்பதாக ஐ.நா.வின் மற்றுமொரு அறிக்கை தெரிவிக்கின்றது.
செல்லிடத் தொலைபேசிக ளின் எண்ணிக்கை எந்தளவிற்கு அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு அதன் மீதான குற்றங்களும் குறைகளும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதுவே ஒரு சாராருக்கு நிறைகளையும் தேவைகளையுமே அதிகரிக்கச் செய்திருக்கிறது. மேலும் செல்லிடத் தொலைபேசி அவர்களுக்கு இன்றியமையாததாக ஒரு சாதனமாகவே மாறிவிட்டது. அதாவது கவனிக்க வேண்டிய முதல் குழந்தையாய் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது என்றே சொல்ல வேண் டும்.
செல்லிடத் தொலைபேசிக ளின் பாவனையால் உலகள வில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இளம் சந்ததியினரின் தகுந்த நண்ப னாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசி பல வழிகளில் அவர்களை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் தகாத நண்பனாகவே இருக்கிறது என்பது பெற்றோர்களின் வாதமாய் அமைகின்றது. அதுவும் ஒரு வகையில் உண்மையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இருப்பினும் காலவோட்டத் தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஏதாவதொரு சாதனம் மனித சமூகத்தில் பழிச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறது. தொலைக்காட்சி, கணனி வரிசையில் இப்போது சிக்கியிருப்பது இந்த கைப்பேசிகளே. இதுவே இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் கைப்பேசிகளிற்கு பதில் வேறொரு சாதனத்தின் நன்மைகளை விட தீமைகள் பற்றி அதிகம் விவாதிக்கப்படும் என்பது நிச்சயம்.
செல்லிடத் தொலைபேசிக ளின் வருகைகளின் பின்னர் எழுத்து மற்றும் வாசிப்பு போன்ற பல தேவையான விட யங்கள் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது. அதேவேளை செல்லிடத் தொலைபேசிகளினூடாக வெளியேறும் கதிர்கள் மற்றும் நுண்ணலைகள் மூலம் கண்ணுக் தெரியாத மற்றும் சிறிய உயிரினங்கள் பலவும் உயிரிழப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற காரணிகள் அடுத்த சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
பயிர் வளரவென பயன்படுத்தும் அசேதனப் பொருட்களினால் நிலத்திற்கு தீங்கு ஏற் படுவது போலவே மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உருவான கைப்பேசி களினால் ஏற்படும் பாதிப்புக்களும்.
ஆனால் தொல்லைகள் என்று கூறுபவர்களிடமும் கையடக் கத் தொலைபேசிகள் உண்டென்பதே அதன் வெற்றியும் தேவையுமாகும். இந்த வெற்றியின் உச்சமே வெகுவிரைவில் கைப்பேசிகள் அடையவுள்ள தொகை. அதாவது உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு கைப்பேசி என்ற ரீதியில் உலகளவில் 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அல்லது இவ்வருட முடிவில் கைப்பேசிகளின் எண்ணிக்கை அமைந்துவிடும் என என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது 7 பில்லியன்களை மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது உலக சனத்தொகை. ஆனால் செல்லிடத் தொலைபேசிகளின் தொகை உலக சனத்தொகையினை விட வேகமாக 7 பில்லியன்களை நெருங்கிவிடும் என ஐக்கிய நாடுகள் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் விஷேடம் என்னவெனில் உலகளவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் அரைவாசிக்கும் அதிகமாக ஆசிய நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகிறது. உலகளில் செல்லிடத் தொலைபேசிகள் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்திலும் அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியா மற்றும் அமெரிக்காவும் உள்ளன.
மேலும் இவ்வருட இறுதி யில் சுமார் 2.7 பில்லியன் மக்கள் அதாவது உலக சனத் தொகை யில் 39 சதவீதமான மக்கள் செல்லிடத் தொலைபேசிகளில் இணைய சேவையைப் பயன் படுத்துவார்கள். இணைமின்றி உலகம் ஸ்தம்பிக்கக் கூடிய நிலையில் இணையத்தை இலகுவாக வழங்கும் கைப் பேசிகள் இன்றேலும் உலகம் ஸ்தம்பிக்கும் நிலையே தற் போது காணப்படுகிறது.
எனவே இன்று சீனாவில் குடிசைக் கைத்தொழிலாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசிகள் நாளை அனை த்து குடிசைகளையும் சேர்த்தே ஆளும் என்பதை சொல்லாமல் சொல்லும் கைப்பேசிகளின் தொகை, சனத்தொகையை விஞ் சும் வேளையில் அதன் உச்சப் பயன்களை அடைய நாமும் தயாராவோம்.
-அமானுல்லா எம்.றிஷாத்