முதன் முறையாக மனிதர்களை விண்ணிற்கு அனுப்புதற்கு குறித்த நிறுவனம் தயாரிகியுள்ளது. இத்திட்டதினை இலவசமாக முன்னெடுப்பதற்காக தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடிவுசெய்துள்ளது.
இதற்காக செவ்வாயில் சென்றன் பின்னர் அங்குள்ள நடிவடிக்கைகளை படம்பிடித்து வெளியிடும் தொலைக்காட்சி உரிமத்தை விற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் இப்பயணத்தினை 2023இல் முன்னெடுக்கவுள்ளது. இதற்காக செவ்வாயில் மனிதன் வாழக்கூடியளவிற்கு சிறிய குடியிருப்பையும் அமைக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெறுமதிவாய்ந்ததும் செலவு அதிகமானதுமான இப்பயணத்தில், பயணிப்பவர்களில் 4 பேர் அங்கேயே தங்க வேண்டும் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படவுள்ளனராம். ஆனால் அழைத்துச் செல்லவுள்ள நபர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதனை உறுதிப்படும் விதமாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.