கடந்த 14 திகதி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நடைபெற்ற பாரம்பரிய மற்றும் கலாசார விழாவொன்றில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினரின் கூடாரப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மூவரே சவூதி மதவிவகார பொலிஸாரினால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் மிக அதிக அழகானவர்களாக இருப்பதால் விழாவுக்கு வரும் பெண்கள் இவர்களின் அழகில் மயங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் சவூதி மத விவகார பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அரேபிய மொழி பத்திரிகையான “இலாப்” செய்தி வெளியிட்டது.
அப்படி நாடுகடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல மொடல்களில் ஒருவர் இவாரன அல் காலா, நடிகர், பாடகர், புகைப்படக்கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர்.
1987 செப்டெம்பர் 23 ஆம் திகதி தான் பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 25 வயதான அல் காலா உண்மையிலேயே மிக வசீகரமான முகத்தோற்றம் கொண்டவர். இதுதான் சவூதி மத சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டதுபோலும்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா உலகெங்கும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயை தளமாகக்கொண்ட ஒமர் பொர்கான் அல் காலா, இச்செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
ஆனால், மேற்படி நாடுகடத்தல் தொடர்பாக தனது புகைப்படத்துடன் கூடிய இணைய செய்திக்கான இணைப்பொன்றை தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டார்.
அந்த செய்தி இணைப்பும் அவரின் அழகிய தோற்றம் கொண்ட புகைப்படங்களும் மேற்படி செய்திக்குரியவர்களில் ஒருவர்தான் அல் காலாதான் என்ற கருத்தை வலுபடுத்துவதாக அமைந்தன.
அதன்பின் ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ் புக் பக்கத்தை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவிட்டது. இப்போது 3 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் அப்பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
ஆனால் “அழகு என்பது உள்ளே (மனதில்) நீங்கள் உணர்வது. அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கிறது. அது உடல் சார்ந்தது அல்ல” என்கிறார் இந்த அல் காலா.
பெண்கள் பற்றி அல் அவர் என்ன கூறுகிறார்? “ஒரு பெண்ணின் அழகு அவள் கண்களிலிருந்து பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அதுதான் காதல் குடிகொண்டிருக்கும் இதயத்துக்கான வாசல்” - இது பேஸ்புக்கில் அல் காலா தரவேற்றியுள்ள ஒரு போஸ்ட்.
ஆனால், இவர் தனது புகைப்படங்களில் கண்ணுக்கு மை (சுருமா) பூசியிருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. அல் காலா திருமணமானவரா என்பது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.
ஒமர் பொர்கா அல் காலா புகைப்படங்களையும் அழகாக இருப்பதால் அவர் நாடு கடத்தப்பட்ட செய்திகளையும் அறிந்த பலர் அழகாக பிறந்தமை சட்டவிரோதமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் யுவதிகள் பலர் “அல் காலாவை நாடு கடத்துவதென்றால் எங்கள் நாட்டுக்கு நாடு கடத்தக்கூடாதா?” என்ற ரீதியில், கொமண்ட் அடித்திருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் மதச்சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாரின் அச்சம் சரியானதுதானோ?
Courtesy : Metro News