Total Pageviews

Monday, December 3, 2012

இறுவட்டையும் வெளியிடுகிறார் உலக நாயகன் : இதுவொரு விஸ்வரூப முயற்சி


தமிழ்சினிமாவில் அவ்வப்போது விஸ்வரூப மாற்றத்தை கொண்டுவருபவர் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாசன் மட்டுமே. அது நடிப்பாக இருந்தாலும் சரி தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி.

அந்த வகையில் கமல் ஹாசனே தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்கில் வெளியிடும் அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் உரிமையை வழங்கி வெளியிட புதியதோர் முயற்சியை திட்டமிட்டுள்ளார் உலகநாயகன்.

மேலும் டிவீடி, இன்டர்நெட் உரிமைகளையும் மொத்தமாக விற்பனை செய்யவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் உரிய தொகை கிடைத்து விடும் அதேவேளை திருட்டு விசீடி, டீவீடீக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது உலகநாயகனின் யுக்தி.

ஆனால் திரையரங்கங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பும் இம்முயற்சிக்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மேலும் வழக்கம் போல எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் தமிழ்சினிமாவிலுள்ள சிலர் இதை பற்றி அலட்டிக்கொண்டதாக இல்லை.

இருப்பினும் உலக நாயகனும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதுவே உண்மை. காரணம் இதற்கு முதலும் கமலின் புதுமையான கருத்துக்களுக்கும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த பலர் அவற்றின் வெற்றிகளுக்கு பின்னர் ஆதரவாக பேசி கைதட்டல் வாங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு.

தொலைக்காட்சிகள் சனல்கள் ஆரம்பமானபோதும் கூட இது சினிமாவிற்கு ஆபத்து என்று சினிமாக்காரர்கள் அர்த்தமில்லாமல் பேச கமல் மட்டுமே ஆதரவாக பேசினார். தற்போது திரையரங்கில் ஈயடிக்கும் படங்களைக்கூட 100 கோடி 1000 கோடி வசூலை நோக்கி என்று கூவி கூவிக் ஓரளவு கூட்டம் சேர்ப்பது இந்த தொலைக்காட்சிகளினூடவே என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதே போலவே கமல் ஹாசன் தன் சொந்தப்படத்தில் எடுக்கும் குறித்த முயற்சி வெற்றிபெற்றால் அதனை ஈயடிக்கவும் பெரிய கூட்டமே வரிந்து கட்டி நிற்கும் என்பது மட்டும் இப்போதைக்கு திண்ணம்.

விடா முயற்சி விஸ்வரூவ வெற்றி எனவே தீயா வேலை செய்வார் மிஸ்டர் உலகநாயகன்!