சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, November 28, 2012

உலக super star இன் இறுதி அதிரடி திரைப்படம் : CZ 12 --Trailer மற்றும் கதைச் சுருக்கம்--

Marital arts அதாவது தற்காப்புக் கலையினை உலகெங்கும் எடுத்துக் காட்டிய Bruce Lee இன் இடத்தைப் பிடிப்பார் என நினைத்தால் அதற்கும் மேலாக ஒரு இடத்தைப் பிடித்தவர் Jacki Chan.

எத்தனை ஆயிரம் பேர் எதிரிகளாய் வந்தாலும் அவர்களைப் பந்தாடும் அசகாய சூரராக மிகைப்படுத்தப்பட்ட பாத்திரங்களில் நடித்த Bruce Lee இன் பாணியிலிருந்து விலகி தனக்கென ஒரு பாதையை Comedy, சிறந்த நடிப்பாற்றலுடன் உருவாக்கி அதிலே நடந்து வெற்றி பெற்றவர் இவர்.
தன் முதல் படத்திலிருந்து இன்று வரை தன் சண்டைக்காட்சிகளை தானே அமைத்துக்கொள்கிறார்.
உலகெங்கும் ரசிகர் பட்டாளம் உள்ள Jacki Chan இனை சென்னை தமிழ் பேச வைத்து இலங்கை மற்றும் இந்திய விலும் பிரபலப் படுத்தியுள்ளனர்.

Animation உச்சக் கட்டத்தில் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் கூட Real Action இனை மட்டுமே கடைப்பிடித்து animation இனை விட சிறந்த தரத்தில் சண்டைக்காட்சிகளை தருவதால் அதிக ஆபத்துக்களை சந்திக்கும் Jackie Chan "நான் இன்னும் இள வயதில் இல்லை. எதற்க்காக இந்த மாதிரியான விடயங்களுக்காக என் சொந்த உயிரை இனியும் நான் பணயம் வைக்க வேண்டும்? என்னால் இயன்றதை நான் இனியும் செய்வேன். ஆனாலும் நான் எனது வாழ்கையை ஆபத்துக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் உடகார்வதை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். எனவே, தானே தயாரித்து, இயக்கி நடிக்கும் தனது அடுத்த படமாகிய CZ 12 (Chinese Zodiac 2012) இனை தனது இறுதி Action திரைப்படமாக அறிவித்துள்ளார்.

எனினும் சண்டயினைப் பிரதானப்  படுத்தாத படங்களில் நடிப்பார் என்பது ஓரளவு அவரது ரசிகர்களுக்கு ஆறுதலே. ஏற்கனவே பல படங்களில் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை Jacki நிருபித்துள்ளதால் சண்டைக்காட்சிகள் இல்லாமலும் அவரது படங்களைப் பார்க்க முடியும் என்பது தெளிவு.

சரி இனி CZ 12 இற்கு வருவோம்.

CZ 12 விடுமுறைக்கு விருந்தாக அளிக்கப்படுகிறது. 12.12.12 இல் வெளியிடப்பட இருக்கிறது. 5  கண்டங்களையும் உள்ளடக்கி உலகின் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கதை ஆசியக் கழுகு எனப்படும் Chan ஐச் சுற்றி நடக்கிறது.
புதையல் வேட்டைக்காரர் ஒருவர் Jackie இனை பிரான்ஸ் இன் மாளிகை ஒன்றில் 1980 களில் வைக்கப்பட்டு  காணாமல் போன நான்கு வெண்கல சிலை தலைகளை கண்டு பிடிக்க வாடகைக்கு அமர்த்துகிறார்.
சீன இராசி சக்கரத்தில் இருக்கும் 12 விலங்குளின் 4 தலைகள் காணாமல் போகின்றன. அந்த இராசி சக்கரம்  சீனாவின் தேசிய சின்னமாகவும் புதயலாகவும் இருக்கிறது. அவற்றை Jackie தேடிக் கண்டு பிடிப்பதே கதை.

பிரதான நடிக நடிகையர்கள்  
Yao Xingtong, Hallyu star மற்றும்  Kwon Sang-woo.

பல மில்லியன் செலவில் எடுக்கப்படும் இவ்வாறன திரைப்படங்களே கதையை  சொல்லிய பின்பே வெளியிடப்படுகிறது. ஆனால் தமிழ் படங்கள்?? ஏன்?

இறுதி Action படம் என்பதால் முன்னைய படங்களை விட Jackie இதில் மிகக் கவனம் செலுத்தி இருப்பார்.

இன்னும் 2 வாரங்களே.... பொறுத்திருந்து பார்ப்போம்....!!!

அதுவரையில் இதோ trailer உங்களுக்காக......


Sunday, November 25, 2012

பாலாவின் பரதேசி ட்ரெய்லர் : மற்றுமொரு அழுக்காச்சி காவியம்


அவன் இவன் படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ''பரதேசி'' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாலா முதன் முறையாக இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இசையை தவிர்த்திருக்கிறார். பரதேசிக்காக ஜீ.வீ. பிரகாஷ் வழங்கியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை தற்போது கொலிவூட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற வண்ணமுள்ளதை சமூகவலைத்தளங்கள் காண்பிக்கிறது.

வெளியாகியுள்ள ட்ரெய்லர் இது முழுக்க முழுக்க பாலாவின் திரைப்படம் என்பதை காட்சிக்கு காட்சி பிரதிபலிப்பதுடன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

ஆனால் வழக்கம் போல அனைவரையும் அழுக்காக்கி அழகுபார்த்திருக்கிறார் பாலா. வேதிகா உடையை கழுவாமலே படம் முடியும் வரையில் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

உடையை துவைச்சிங்க மவனே நான் உங்களை தொவச்செடுப்பன் என்ற பாலாவின் கட்டளை வேதிக்காவுக்கு மட்டுமல்ல என்பது ட்ரெய்லர் பார்க்கும் போது புரிகிறது.

பஞ்சம் பொளைக்க ஒரு பயணம் என்பதை எழுத்தில் காட்டினாலும் ஒளிப்பதிவோ நிறத்தில் பஞ்சத்தை மிக அருமையாக காட்டுகிறது. பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி பரதேசியாக இருந்தாலும் சரி பாலாவின் படத்தில் நடிச்சே ஆகணும் என்பது விதி.

அதர்வாவின் நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. முரளி உயிரோடு இருந்தால் பெருமைகொள்ளும் தருணம் இதுவே.

வழமை போல ஆனால் புதியோர் களத்தில் மற்றுமொரு அழுக்காச்சி காவியம்  படைத்திருக்கிறார் பாலா. ஆனாலும் படம் ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். ஏனெனில் ட்ரெய்லருக்கு அத்தனை சிறப்பான வரவேற்பினை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

'எனக்கு போர்த்துற சால்வைய குளிர்ல நடுங்குற பிச்சக்காரனுக்கு போத்தலாம், அவனுக்கு பிரயோஜனமா இருக்கும்' என பாடல்கள் வெளியீட்டின் போது கூறியிருக்கிறார் பாலா. இதுவே அவரது படங்களில் பிம்பங்களாக வெளிப்படும் அதில் ஒன்றே இந்த பரதேசி என்பதை உணர்த்தும் அந்த ட்ரெய்லர் இதோ...


Sunday, November 11, 2012

தபாங் 2 - ட்ரெய்லர்... ஒஸ்தி 2 வருமா?

சல்மான் நடிப்பில் வெளியான தபாங் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதாங்க தமிழில் ஒஸ்தியாக வெளிவந்து குஸ்தி போட்ட படம். ஹிந்தியில் கிடைத்த வெற்றியின் தொடர்ச்சியாக தபாங் 2 தயாராகிவருகிறது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சல்மான் கானுடன் சோனாக்ஸி சின்ஹா நடித்துள்ளார். நம்ம ஏரியா தாதா பிரகாஷ்ராஜ்  செல்லம் தான் வில்லன்.

தபாங் படத்தின் தொடர்ச்சி என்பது ட்ரெய்லரை பார்த்தவுடன் புரிந்துகொள்ளும் அளவிற்குள்ளது. பாகம் 1 இலிருந்த அதேமாதிரியான பாடல் காட்சிகள், நம்பமுடியாத சண்டைக்காட்சிகள், என இருந்தாலும் மிடுக்கு குறையாமலே இருக்கிறார் சல்மான் கான்.

மிடுக்கான பொலிஸாக தபாங் 2 வந்தாச்சு அப்போ இம்முறை ஒஸ்தி 2 வருமா?

தபாங் 2 - ட்ரெய்லர் மற்றும் பாடல் இதோ...



Monday, November 5, 2012

வெற்றிச்செல்வன் - ட்ரெய்லர்



அஞ்சாதே மற்றும் கோ படங்களின் மூலம் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்கும் அளவிற்கு வந்துள்ள அஜ்மலின் புதிய படமான வெற்றிச்செல்வன் படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவொரு உண்மைக்கதை என்ற அறிமுகத்தோடு ஆரம்பமாகும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை உருவாக்கத் தவறவில்லை. 2 வித்தியாசமான வாழ்க்கையைக் காட்டும் வகையில் இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. சாதாரண வாழ்க்கைக்கும் சிறைச்சாலைக்குமிடையிலான வித்தியாசத்தை உணர்த்தும் வகையில் இருக்கிறது.

தமிழ்சினிமாவின் அண்மைக் கால படங்களிலிருந்து சற்றே வித்தியாசம் தெரிவது மகிழ்ச்சியளிக்கின்றது.

மேலும் படத்தின் நாயகி சின்ன ஐஸ்வர்யா (அப்டித்தான்யா இந்தப் பயபுள்ளங்க சொல்லிட்டுத் திரியுதுங்க) ராதிகா அப்டேக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என நம்பும் வகையிலமைந்துள்ளது ட்ரெய்லர்.


Wednesday, October 24, 2012

சில்லுன்னு ஒரு சந்திப்பு - ட்ரெய்லர்


ஓவியா - விமல் - தீபா ஷா நடித்திப்பில் அறிமுக இயக்குனர் ரவி  லல்லின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஓவியா மற்றும் விமல் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கெமிஸ்ட்ரியே இப்படம் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் காரணமானது. மேலும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஏற்பட்ட பரபரப்பில் படம் பத்திக்கிச்சு. (அதாங்க விமல்தான் ஓவியாவை சஜஸ்ட் பண்ணுறதா...)

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ட்ரெய்லரில் பெரியளவில் வித்தியாசமாக எதுவும் படத்தை பற்றி எதிர்பார்ப்பை தூண்டச்செய்யவில்லை. ஆனாலும் 2 நாயகிகள் ஒரு நாயகனை வைத்துக்கொண்டு இது ஒரு முக்கோணக் காதல் கதை அல்ல என்று அறிமுகப்படுத்தியுள்ளது சற்று வித்தியாசமாக உள்ளது. (ஒரு வேளை 2 விமலோ!)

மேலும் வழக்கமான முக்கோண காதல் கதை படங்களில் இடம்பெறும் காட்சியமைப்பே இதிலும் காண்பித்திருப்பது போல தெரிகிறது. படத்தில் ஏதாச்சும் இருந்தா சரி...

எதுக்கும் விமல் கொஞ்சம் அலாட்டாகிக்கிறது நல்லது




Wednesday, October 10, 2012

மோதிக்கொள்ளும் துப்பாக்கி மற்றும் போடா போடி ட்ரெய்லர் : இன்றைய சூடான வாதம்



ஏகப்பட்ட பிரச்சினை மற்றும் பில்ட் அப்புக்களை தாண்டி முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

முதலில் ஹரீஸ் ஜெயராஜின் பில்டப் வார்த்தைகளை தவிடுபொடியாக்கியது துப்பாக்கி பாடல்கள். கூகுள் கூகுள் பாடல் மட்டுமே ரசிகர்களை இப்போதைக்கு கூகுளில் தேடச்செய்துள்ளது. ஏனையவை துப்பாக்கியிலிருந்து வெளியான வெடிக்காத தோட்டாக்களாவே தெரிகிறது.

வழக்கமாக சுட்டாச்சும் நல்லவே பாட்டுப் போட்டுக்கொண்டிருந்த ஹரீஸ் ஜெயராஜுக்கு அண்மைக்காலமாக சரியாவே சுடத்தெரியாம போனது அனைவருக்கும் வேதனைதான் அதிலும் துப்பாக்கி படத்துக்காச்சும் கொஞ்சம் சத்தமா சுட்டிருக்கலாம் என்பது விஜய் ரசிகர்களின் உளக் குமுறல்.

இந்த படம் என்னோட படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமா இருக்கும் என்று விஜய் சொன்னார் ட்ரெய்லரில் அப்படியெதுவும் வித்தியாசமா தெரியல ஆனாலும் ட்ரெய்லர் ரசிக்கும் படி உள்ளது. சமூகவலைத்தளங்களிலும் தற்போதைய ஹொட் டோக் இதுதான். குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள I'm waiting வசனம் விஜய் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

ஆனாலும் வழக்கமான விஜய் தாவுறது, பறக்கிறது என ட்ரெய்லரில் வருவது சற்றே நெருடல். முருகதாஸ் சார் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஏனெனில் பாப்பா தள்ளிப்போய் விளையாடு என்ற பஞ்ச் வசனத்தை பஞ்சராக்குவது போல தெரியுது. ஆனாலும் விஜயின் Hair Style வித்தியாசமாக அதேசமயம் அழகாகவும் இருப்பது அறுதல்.

அடுத்தது சிம்புவின் போடா போடி : பாடல்கள் அனைத்தும் தமனின் இசையில் கேட்கும் படியாகவே உள்ளது. நடனம் சம்மந்தமான படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பாடல்கள் தெளிவுபடுத்துகின்றது. ஆனாலும் முதலில் வெளியிடப்பட்ட லவ் பண்ணலாமா வேணாமா பாடலே இன்னும் முணுமுணுக்கச் செய்கிறது.

மேலும் இப்போதைக்கு ஐ எம் எ  குத்து டான்சர், அப்பன் மவனே வாடா பாடல் ரசிகர்களை சூடேற்ற ஆரம்பித்திருப்பது பேஸ்புக்கிலுள்ள சிம்பு பேன் பேஜ்கள் கொமன்டாக பதிவு செய்கின்றது.

போடா போடி ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் சிம்புவின் ரசிகர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு துப்பாக்கி ட்ரெய்லர் வெளியீடு அமைந்துவிட்டது இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் சளைக்காமல் ப்ரொமோட் செய்கின்றனர்.

போடா போடி ட்ரெய்லர் சற்றே வித்தியாசமாகவும் ஈர்க்கும் வகையிலமைந்துள்ள அதேவேளை சிம்புவையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது மகிழ்ச்சி.

இந்த இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக அமையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதனால் ட்ரெய்லிருந்தே விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மோதலை ஆரம்பித்துவிட்டனர்.

எதுக்கு வம்பு யாரு விரலை உடைப்பார்? யாரு விரலை ஆட்டுவார்? என்று தீபாவளி ரேஸ் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!

மோதலை தூண்டிவிட்ட அந்த ட்ரெய்லர்கள் இதோ உங்களுக்காக...



Tuesday, October 9, 2012

ஆதிபகவன் - ட்ரெய்லர்


வரூம் ஆனா வராது பாணியில் இழுத்தடிக்கபட்டுக்கொண்டிருந்த ஆதிபகவன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் தற்போது முடியும் தறுவாயிலுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பாகவே உள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் ஆங்கிலப்படங்களின் லுக்கில் அசத்தலாக உள்ளது.

மேலும் இம்முறை அமீர் தனது வழக்கமான பாணியை மாற்றியுள்ளது போலவும் தெரிகின்றது. ஜெயம் ரவியின் லுக்கும் வித்தியாசமாக உள்ளது.

ஆதிபகவன் படத்தின் ட்ரெய்லர் இதோ...


Saturday, October 6, 2012

மாற்றான் - புதிய ட்ரெய்லர் : அஜித், விஜய் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை

சூர்யாவின் மாற்றான் படத்தின் 3ஆவது ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரில் புதிய காட்சிகள் பல இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அஜித், விஜய் ரசிகர்களாக அகிலனும் விமலனும் வருவது அனைத்து ரசிகர்களிடையேயும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒக்டோபர் 12இல் வெளிவர இருக்கும் மாற்றான் திரையரங்குகள் அனைத்தும் அஜித், விஜய் மற்றும் சூர்யாக ரசிகர்களால் அதிரும் போல தெரியுதே.

மாற்றான் காய்ச்சலை அஜித், விஜய் ரசிகர்ளையும் விட்டுவைக்காது துரத்த ஆரம்பித்திருக்கும் அந்த ட்ரெய்லர் இதோ உங்களுக்காக...