சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, May 11, 2016

அப்போது விக்கிலீக்ஸ், இப்போது பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ்

உலகயே அதிர்ச்சிக்குள்ளாக்கி தற்போது பேசு பொருளாக மாறியுள்ள பனாமா பேப்பர்ஸ் எனும் பணப்பதுக்கலுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் ஓப்சோர்லீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய அதே அளவிலானதொரு அதிர்ச்சியையே இந்த பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.




முழுமையான தகவலுக்கு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்.














Wiki leaks then, The Panama Papers now

The Panama papers create shocking waves all over the word as revealed the names that connect with the most controversial panama papers by The international consortium of investigation journalism via offshore website, last night.


for more information watch this video.

Wednesday, October 31, 2012

பாட்ஷா வெற்றியும் துப்பாக்கி தோல்வியும்


ரஜினியின் பாட்ஷா படம் மெகா ஹிட்டானதற்கும் அண்மையில் சில படங்கள் (ஓரளவு நல்லா இருந்தும்) தோல்வியானதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது இணையம் என்பதனை ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்றாலும் தகும்.

ஏனெனில் இணையப் பாவனை என்பது அந்தளவிற்கு எம்மிடையே பரந்துகிடக்கின்றது (என்ன பண்ண பேஸ்புக்கும் கூகுளும்தான் இணையம் என்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது). இதனால் ஏராளமான நன்மைகளும் கூடவே சில தீமைகளும் வளர்ந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும்; முடிந்தவரை நன்மைகளைப் பெற நாம் முயற்சிப்போம்.

வளர்ந்து நிற்கும் இணையத்தினால் இன்று தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ப்ளொக்கர்கள் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த வளர்ச்சியானது தேவையான விடயங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் பரவாயில்லை அதற்குப் பதில் சில பல விடயங்களின் வீழ்ச்சிக்கு காரணமாவதே வருத்தம்.

குறிப்பாக, மாட்டித்தவிக்கும் பிரதான அம்சங்களில் ஒன்றுதான் தமிழ்சினிமா. இணையத்தின் வளர்ச்சியால் பல தேவையான விடயங்களை அறிந்துகொள்ள ஒரு நடுநிலையாளனாய் இருந்து வந்த ப்ளொக்கர்ஸ் மத்தியில் இன்று பல்லாயிரக்கணக்கான ஈயடிச்சான் ப்ளொக்கர்ஸ் ஊடுருவியதில் பல படங்களுடன் சேர்த்து பல தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஈயடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் சொந்தச் சரக்கை எழுதும் ஒவ்வொரு ப்ளொக்கர்ஸுக்கும் வருத்தமே.

அந்த வகையில் இந்த வருடமும் கடந்த வருடமும் அதிகளவிலான தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய இணையத்துடன் சேர்ந்து ஈயடிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததும் ஒரு காரணம். (தமிழ் பட நாயகர்கள் மற்றும் இயக்குனர்களிடையேயும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே அதிகம்தான்)

உண்மையில் ஓரளவு நல்ல படங்களையும் சிறந்த மொக்கை படங்களாக்கிய பெருமை பரந்தளவில் வெளியாகும் ஈயடிக்கும் விமர்சனங்களுடன குறித்த நடிகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுமே.


அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுக்கு எதிராகவும் அவர்களின் படங்களுக்கு எதிராகவும் குறி வைத்து பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற குரூப்கள் அனைத்தும் ஒரு படத்தினை சாதாரணமாக திரையரங்கு களிலிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கு காரணமாகின்றது.

அண்மையில் இவ்வாறு வெளியான மயக்கம் என்ன, 3, சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என இந்த வரிசை மிக நீளமானது. இந்த படங்கள் எதுவும் படு மொக்கை திரைப்படங்கள் இல்லையென்றாலும் இணையத்தளங்களில் வெளியான மோசமான விமர்சனங்களே இப்படங்களை தோல்வியாக்கியது. (ஆனாலும் இந்த வரிசையில் இல்லாத சில படங்கள் ஓடவில்லை என்றாலும் போஸ்டரில் 100 நாட்கள் ஓடிவிட்டது... அது வேறு கதை)

உண்மையில் பாட்ஷா படமும் தோல்வியை சந்தித்திருக்கும், அப்போது இணையம் இருந்திருந்தால் ஏனெனில் பாட்ஷா படத்திற்கு ஏராளமான பத்திரிகைகள் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசியது பலருக்கும் நினைவிருக்கும் (தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சிக்கங்க). ஆனாலும் பாட்ஷா மெகா ஹிட்.

ஆனால் அன்று இணையம் வளர்ந்திருந்தால் ஈயடிக்கும் வல்லமை படைத்தவர்களும் ரஜினி ஹேட்டர்ஸ்ஸும் இணைந்து படத்தை துவம்சம் செய்திருக்கலாம் (பாபாவுக்கு நடந்த மாதிரி... ஆமா... பாபா நல்ல படமா? கெட்ட படமா?). ஏனெனில் நடிகர்களின் ஹேட்டர்ஸ் மற்றும் ஈயடிப்பவர்களை தாண்டி மக்களை திரையரங்குக்கு வரவழைப்பது அத்தனை கடினமான காரியம்.

இருப்பினும் சில மொக்கை படங்கள் விமர்சனங்களால் ஓரளவு தப்பித்தும் இருக்கிறது (இதுக்கு உதாரணம் வேணாமே... சிலர் மனம் வருத்தப்படும்).

அதேவேளை சில சமயங்களில் இத்தனை தடைகளையும் தாண்டி சில படங்கள் வெற்றிபெற்றுள்ளது. உதாரணமாக எதிர்மறையான பல விமர்சனங்களை கடந்து பில்லா ஒன்று, எஸ்.எம்.எஸ் போல வெகு சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசை தொடர வேண்டும் அவை நல்ல படங்களாக இருந்தால்.

அந்த வகையில்  விரைவில் வெளியாவுள்ள துப்பாக்கி படத்திற்கும் விஜய்க்கும் எதிராக இன்று பேஸ்புக்கில் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது (இதெல்லாம் விஜய்க்கு புதுசா... ஏன்னா பேஸ்புக்கில் அதிகமா கலாய்க்கப்படுற நடிகர் இவர்தான் இத நான் சொல்லல்ல போய் பாருங்க). எனவே துப்பாக்கி ஒரு நல்ல படமாக இருந்தால் அதற்கெதிரான வேலைகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே!. (விஜய்க்கிட்ட இருந்து நல்ல படமா? நடக்காதே... இப்படியெல்லாம் சொல்லப்படாது)


ஏற்கனவே பாடல்கள், போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை தாரளமாக கிண்டல் செய்து எதிர்மறை எண்ணத்தையும் தோற்றுவித்துவிட்டனர். மேலும் படம் வெளியானதும் முதலாவது விமர்சனத்தை ஈயடிக்கவும் இணையத்தளங்கள் தயார். அந்த விமர்சனம் எதிர்மறை எனில் செத்தாண்டா சேகர் நிலைமைதான் துப்பாக்கி படத்திற்கும்.

எனவே ஈயடிக்கும் இணையத்தளங்கள் இனிமேலாவது வருகின்ற படங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி மேலும் ஈயடிக்கும் தொழில்நுட்பத்தை குறைக்க முயற்சி எடுங்க.

இப்போ தெரியுதா துப்பாக்கி எப்படி தோல்வியடைப்போகுதுன்னு... அப்ப பார்த்து சூதானமா நடந்துக்குறீங்களாண்ணா... கொஞ்சோண்ணு ஸ்லிப்பாச்சு சாங்குதாண்டியோவ்!!!

Friday, September 7, 2012

இலவசமாக தமிழ்த்திரைப்படங்களை வழங்கும் இணையத்தளங்கள் - websites provide free downloadable tamil movies


இணையத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிப்பதில் அனைவருக்கும் தனி விருப்பமுண்டு. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை பார்பதற்கென ஏராளமான தளங்கள் உள்ளன.

எனினும் சிலவற்றைப் பற்றியே நாம் அறிந்துள்ளோம். இப்பதிவானது அத்தகைய தளங்கள் சிலவற்றைப் பற்றியது.

1) Movie Lanka
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் காணொளிகள் காணப்படுகின்றன.

2) Tamil Flix
இந்தத் தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் திரைப்படங்களைப் புதியவை, பழையவை, இடைக்காலத்தவை என்று தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளனர்.

3) Padangal
இணையத்தில் பழைய திரைப்படங்களைத் தேடுபவர்களுக்கான தளம் இது.

4) Tamil Peek
இந்தத் தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்கள் என இரு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர்.

5) Tamil tvs
இந்தத் தளத்தில் புதிய, பழைய படங்கள் காணப்படுகின்றன.

6) Good Lanka
இந்தத் தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாடல்களைக் கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர்.

7) Tube Kolly
இத்தளத்திலும் பல புதிய, பழைய திரைப்படங்கள் காணப்படுகின்றன.

8) TamilVix
இந்தத் தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகின்றன.

9) Rajshree
இந்தத் தளத்திலும் தமிழ்த் திரைப்படங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்தத் தளத்திலும் தமிழ்த் திரைப்படங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

இது தவிர மேலும் சில தளங்கள்
Cool Tamil
Runtamil
Thiraivirunthu
Puthupadam

திருட்டு வீசீடிக்களை படம் வெளியாகி ஓரிரு தினங்களில் வெளியிட்டு திரைத்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இத்தளங்களை உரியவர்கள் தடை செய்ய முயற்சி எடுக்கவும். அதுவரை பார்த்து மகிழலாம்...