துவிச்சக்கர வண்டியில் உலகைச் சுற்றிவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மேரி தோம்ஸ் (34) மற்றும் பீட்டர் றூட் (34) ஜோடி தாய்லாந்தில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஜோடி 2011ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி தங்களது பயணத்தை ஆரம்பித்து ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஊடாக பயணம் மேற்கொண்டிருந்தது.
இப்பயணத்தின் போது ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட 23 நாடுகளை இறக்கும் வரையில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில்இ கடந்த 13ஆம் திகதி பேங்கோக்கிலிருந்து சுமார் 70 மைல் தொலைவிலுள்ள வீதியொன்றில் ட்ரக் வண்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸ் இன்று திங்கட் கிழமை அறிவித்துள்ளது.
தாய்லாந்திலுள்ள பிரிலௌஸ் எனப்படும் பிரபல்யமான வீதியிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆண்டொன்றிற்கு 13 ஆயிரம் இவ்வீதியில் ஏற்படும் விபத்துக்களால் உயிரழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்துள்ள குறித்த ஜோடி தங்களையும் தங்களது பயணம் குறித்த தகவல்களைறறற.வறழழகெழரசறாநநடள.உழஅ எனும் இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளனர்.
By AM.Rizath