சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Thursday, May 30, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.


'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.

தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.

அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

By : AM. Rizath / Metronews

15 வயது வரை ஆணாக வாழ்ந்தபின் அழகுராணிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவானவர்

பிரிட்­டனின் “பேஸ் ஒவ் சன்­டர்லேண்ட்” அழ­கு­ராணி போட்­டியின் இறுதிச் சுற்­றுக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவர் பமி ரோஸ். 20 வய­தான பமி ரோஸ், ஆணாக பிறந்­தவர். 15 வயது வரை சிறு­வ­னா­கவே வாழ்ந்தார் என்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது.

ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­பட்ட யுவ­திகள் பங்­கு­பற்­றிய அழ­கு­ராணி போட்­டியில் இறு­திச்­சுற்­றுக்கு தெரி­வான பின்­னர்தான் நேர்­கா­ண­லின்­போது தனது வர­லாற்றை தெரி­வித்தார் பமி.

ஆணாக பிறந்த பமி ரோஸுக்கு பெற்றோர் சூட்­டிய பெயர் போல் விட்டன். ஆணாக பிறந்­த­போ­திலும் தான் பெண் தன்­மை­யுடன் இருப்­பதை  அவர் உணர்ந்தார்.

அவர் நான்கு வய­தா­ன­வ­ராக இருந்­த­போதே தனது உடல் தனக்கு பிடிக்­க­வில்லை என தனது தாயான ஜூலி­யிடம் கூறி­னாராம்.

15 வய­து­வரை அவர் சிறுவன் போன்றே வாழ்ந்தார். எனினும் தான் பெண்­ணாக வாழ்­வது என அவர் தீர்­ம­னித்தார். தலை­ம­யிரை நீள­மாக வளர்க்க ஆரம்­பித்தார். பெண்­க­ளுக்­கான ஆடை­க­ளையே அணிய ஆரம்­பித்த அவர் மேக் அப் செய்­து­கொண்டார்.

அவர் மாண­வி­களைப் போன்று ஆடை­ய­ணிந்து பாட­சா­லைக்கு செல்ல ஆரம்­பித்­த­வுடன் பலர் கேலி செய்­தனர். பாட­சா­லையில் மாண­விகள் குழு­வு­ட­னேயே அவர் சேர்ந்­தி­ருந்தார். தனது நண்­பிகள் தனக்கு ஆத­ர­வ­ளித்­தாலும் தன்னை முழு­மை­யாக யாரும் புரிந்­து­கொள்­ள­வில்லை என்­கிறார் பமி.

பின்னர் முழு­மை­யான பெண்­ணாக மாறு­வ­தற்­காக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொள்ள அவர் தீர்­மா­னத்தார். குரல் மாற்­றத்­திற்­கா­கவும் மீசை வளர்­வதை தடுப்­ப­தற்­கா­கவும் மார்­பக வளர்ச்­சிக்­கா­கவும் அவரின் உடலில் ஹோர்­மோன்கள் செலுத்­தப்­பட்­டன.

19 வய­தா­ன­போது, போல் விட்டன் எனும் தனது பெயரை பமி ரோஸ் என அவர் மாற்­றிக்­கொண்டார். அவர் நடிகை பமேலா அண்­டர்சன் போல் இருப்­ப­தாக அவரின் நண்­பி­யொ­ருவர் கூறி­ய­தை­ய­டுத்து பமி எனும் பெயரை தெரி­வு­செய்­தாராம்..

எனினும் பலரும் தன்னை பெண்­ணாக ஏற்­கொள்­கி­றார்­களா என்­பது அவ­ருக்கு சந்­தேகம் இருந்­தது. அதனால் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்றத் தீர்­மா­னித்த அவர் பேஸ் ஒவ் சந்­தர்லண்ட் அழ­ராணி போட்­டிக்கு விண்­ணப்­பித்தார்.

இப்­போட்­டியில் எவ்­வ­ளவு தூரம் தன்னால் முன்­னேற முடியும் என்று அறி­வ­தற்கு விரும்­பிய பமி ரோஸ் தான் ஆணாக இருந்து பெண்­ணாக மாறி­யதை நடு­வர்­க­ளுக்கு ஆரம்­பத்­தி­லேயே தெரி­விக்­க­வில்லை.

6 பேர் கொண்ட இறு­திச்­சுற்­றுக்கு தெரி­வான பின்னர் அவர் தனது வர­லாற்றை கூறி­ய­போது நடு­வர்கள் பெரும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தனர்.

அழ­கு­ராணி போட்­டியில் பமி ரோஸ் முடி­சூ­டப்­ப­ட­வில்லை. எனினும் இறு­திச்­சுற்­று­வரை முன்­னே­றி­ய­மையே தனக்கு கிடைத்த பெரும் வெற்­றி­யா­கவும் அங்­கீ­கா­ர­மா­கவும் கரு­வ­தாக அவர் கூறு­கிறார்.

“இப்­போட்­டியின் முதல் சுற்றில் போட்­டி­யா­ளர்­களின் புகைப்­ப­டத்­துக்கு எத்­தனை “லைக்” கிடைக்­கி­றது என்­ப­தி­லே­லேயே வெற்றி தங்­கி­யுள்­ளது.

உண்­மையில் அழ­கான பல யுவ­திகள் இதில் பங்­கு­பற்­றினர். எனக்கு முதல் நாளி­லேயே 300 லைக் கிடைத்­தது. அது அன்­றைய தினத்தில் போட்­டி­யா­ளர்கள் பெற்ற அதி­க­பட்ச புள்­ளி­களில் அதுவும் ஒன்­றாகும்.

நடு­வர்­க­ளிடம் நான் ஆணாகப் பிறந்த உண்­மையை கூறி­ய­போது அவர்கள் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். பெண்­ணாக நான் தோற்­ற­ம­ளிப்­பதால் அவர்கள் அதை எதிர்­பார்க்­கவே இல்லை. எனினும் அவர்கள் மிக நட்­பு­ணர்­வுடன் என்னை தொடர்ந்து போட்­டியில் பங்­கு­பற்ற ஊக்­கு­வித்­தனர்” என்­கிறார் பமி ரோஸ்.

எவ்­வா­றெ­னினும், ஆணாக பிறந்து பின்னர் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­றிய முதல் நபர் பமி ரோஸ் அல்லர். கடந்த வருடம் மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணிப் போட்­டியின் அரை­யி­றுதிச் சுற்­றுக்கு தெரி­வான ஜெக்கி கிறினும் ஆணாக பிறந்­தவர்.

கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் கனடா போட்­டியில் பங்­கு­பற்­றிய ஜென்னா தல­கோவா பெண்­ணாக பிறந்தவர் என்பது கண்டு பிடிக்கப் பட்டபின் போட்டியிலி ருந்து விலக்கப்பட்டார். இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பின்னர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அவர் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.

அப் போட்டியில் ஜென்னா அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். ஆனால் பமி ரோஸ் இறுதிச்சுற்றுவரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 29, 2013

செவ்வாய் கிரகத்தில் பல்லி : நாசாவுக்கு தெரியாதது ஜப்பானியருக்கு தெரிந்தது எப்படி?

செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படத்தில் பல்லி வகையைச் சேர்ந்த ஒரு உயிர் காணப்படுவதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் படமொன்றினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகவே செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ முடியுமா? என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதில் நாசா அனுப்பிய கியூரியோசிட்டி விண்கலத்தின் பங்கு முக்கியமாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஆறொன்று ஓடிமைக்கான ஆதாரங்களை அனுப்பி வைத்தது கியூரியோசிட்டி விண்கலம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கியூரியோசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களை அண்மையில் நாசா வெளியிட்டது.

இந்நிலையில் அப்படத்தில் முதலையை ஒத்த ஒரு பல்லி வகை  தென்படுவதாக ஜப்பானைச் சேர்ந்த பெயர் வெளியிடாத ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இப்படத்தினை ஏற்கமுடியாது. இருப்பினும் உயிரினங்கள் செவ்வாயில் வாழ முடியுமா? என தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படத்தில் பெண் சிலை இருப்பதாக ஒரு போலியான படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

By AM.Rizath | Metronews

இது சைவ முட்டை : அமெரிக்காவில் தாவரங்களிலிருந்து முட்டை தயாரிப்பு

அமெரிக்க உணவு நிறுவனம் கோழி முட்டைக்கு பதிலாக தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, "ஹாம்டன் க்ரீக் புட்ஸ்' நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் உதவியுடன் முட்டை தயாரித்து வருகிறது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர்  கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள் முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட்டை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

Tuesday, May 28, 2013

வர்த்தக மயமாகியுள்ள கிரிக்கெட்டில் மலிந்து வரும் ஊழல்

22 வீரர்கள் குறித்த சில விதிகளுக்கு உட்பட்டு எல்லைக்கோடு, பந்து, விக்கெட், துடுப்பு மட்டை போன்றவற்றைக்கொண்டு  திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடி,11 பேர் வெற்றிபெற பல்லாயிரம் பேர் திருப்தியுடன் மகிழ்வுறும் கிரிக்கெட்,  சில காலத்திற்கு முன்பு வரையில் கனவான்களின் விளையாட்டாக விளையாடப்பட்டது.

சில காலத்திற்கு முன்பு வரையிலா, இப்போதும் கிரிக்கெட் எனும் விளையாட்டு விளையாடப்படுகிறதுதானே என்று கேட்டால்  ஏமாற்றம் மட்டுமே எமக்கு பதிலாய் அமையும்.

உண்மையில் கிரிக்கெட் என்ற விளையாட்டு, வர்த்தக மயமாக மாறி பல காலமாகிவிட்டது. ஆனால் அந்த கொடுமையை பேசி முடிப்பதற்குள் சூதாக மாறிவிட்டமையே கிரிக்கெட்டை விளையாட்டாகவும் புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபதுக்கு20, ஐ. பி.எல் என அமைய வேண்டிய கிரிக்கெட்டின் தரம் அப்படியே தலை கீழாக இன்று மாறியுள்ளது. அத்தனைக்கும் காரணம் பணம் என்ற ஒரு விடயம் மட்டுமே.

உலகின் சனத்தொகை அதிகமான பகுதியான ஆசியாவிலேயே கிரிக்கெட் விளையாட்டு சொர்க்கமாகவும் அதில் பங்குபெறும் வீரர்கள் கடவுளாக மாற்றம் பெற்றனர்.

இதனை நன்கு உணர்ந்துகொண்ட வர்த்தக நிறுவனங்கள் மெதுவாக கிரிக்கெட்டினுள் நுழைந்தன. ரசிகர்களின் கிரிக்கெட்டின் கடவுள்களையும் நாயகர்களையும் கொண்டு விளம்பரங்களை த் தயாரித்தன.

மக்கள் அன்றாடம் விழித்தது முதல் உறங்கும் வரையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிரிக்கெட்டும் அது சார்ந்த வர்த்தக நிறுவனங்களுமே தீர்மானித்ததன.

இதற்காக ஏற்கனவே எம்முள் தூங்கியும் விழித்தும் இருக்கும் இனத் துவேசத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டிவிட்டார்கள். விளைவு அரசியலிலும் தாக்கம் செலுத்தும் அளவிற்கு போனது நிலைமை. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எல்லைகளில் நடைபெறும் போர்களாக பார்க்கப்பட்டது. அதன் வெற்றி போரின் வெற்றியாக ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்டது.

அதுபோலவே இலங்கை , இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் அரசியல் பழிவாங்கல்களாகவும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். உண்மையில் இவற்றில் வெற்றியும் பெற்றார்கள். அப்பாவி ரசிகர்கள் அல்ல அடங்காத ஆசை கொண்ட வர்த்தகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே.

இதனால் எந்த நாட்டு கிரிக்கெட் சபை இலாபமடைந்ததோ இல்லையோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேலும் பணம் கொழிக்கும் சபையாக மாறியது. கூடவே கிரிக்கெட்டும் வர்தகமாக மாற ஆரம்பித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் சபையின் செல்வாக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் காணிக்கையாக இந்திய, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளிலுள்ள ரசிகர்களின் பொன்னான நேரமும் பணமும் பறிபோனது. இது தலையை தடவி கண்ணை பிடுங்கிய கதையானது.

இந்நிலையில் வெறிபிடித்த ரசிகர்களின் பணத்தை மேலும் கொள்ளையடிக்க வந்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆதரவின்றி கபில்தேவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐ. சி.எல் (இன்டியன் கிரிக்கெட் லீக்) என்ற அமைப்பு. இதனை கிரிக்கெட் துரோமாக அறிவித்த இந்திய கிரிக்கெட் சபை, ஐ.சி.எல்.லைவிட பெரிய வியாபார யுக்தியுடன் ஆரம்பித்ததே இந்த ஐ.பி.எல்.

கொள்ளை இலாபம் ஈட்டுவதை மட்டும் இலக்காக கொண்டு இந்த அமைப்பை உருவாக்கிய லலித் மோடி, 2008ஆம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி போட்டிகளுடன் தனது திட்டங்களையும் செயற்படுத்த ஆரம்பித்தார்.

இதில் பிரதேச ரீதியான அணிகளை உருவாக்கியதில் ஒரே நாடென இணைந்திருந்த ரசிகர்கள் பிரதேச மற்றும் மொழி ரீதியாக மேலும் பிளவுபட்டதில் ஐ.பி.எல் என்ற வணிக சினிமா, இந்தியா தாண்டி தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.


விளைவு குறித்த செல்வந்தர்கள், தரகர்கள், மற்றும் வீரர்களால் கிரிக்கெட் ரசிகர்களின் பணங்களை அட்டையாக உறுஞ்சுவதற்கு வழிவகுக்கப்பட்டது.

போட்டியில் எவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்களுக்கு தோல்வியே இல்லை என்ற நிலைமை உருவானது.

இதனை மறைக்க கவர்ச்சிப்பெண்களின் ஆட்டம், பொலிவூட் நடிகர்கள் மற்றும் நடிகைகள், வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் பாடகிகள் என கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமன்றி பொதுவானவர்களையும் ஈர்க்கும் கழியாட்டங்கள் மூலம் ஐ.பி.எல் மேலும் பிரபலமடைந்தது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் ஓரளவு உணர்த்தும் வகையில் ஐ.பி.எல் இல் ஸ்பொட் பிக்ஸிங், மெட்ச் பிக்ஸிங், பாலியல் சர்ச்சைகள் என வரிசையாக பிரச்சினைகள் வர ஐ.பி.எல்லில் இருக்கும் சூழ்ச்சிகளும் வெளியில் தெரியவந்தது. மக்களும் கதையை உணர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து அரசியல், கலாசாரம், விளையாட்டு துறைகளிலிருந்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தன. இருப்பினும் பணம் பாதளம் வரையல்லவா பாயும்? ஐ.பி.எல் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெற்றன. ஆனாலும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஸ்பொட் பிக்ஸிங்கில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.

இதனால் ஐ.பி.எல் இனை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இதுவென கருத்துக்கள் வலுத்தது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐ.பி.எல் தொடரினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை இணையத்தளம், ஆர்ப்பாட்டம் மற்றும்  சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய, ஸ்ரீசாந்துடன், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர்  சூதாட்ட முகவர்களுக்கு சாதகமாக ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுடன் குறைந்தபட்சம் 11 சூதாட்ட முகவர்கள், பொலிவூட் நடிகர் வின்டு தாரா சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இன் தலைவரான என். ஸ்ரீனிவாசன் இது தொடர்பில் கூறுகையில், "இந்த ஊழல் விவகாரத்தில் இந்திய டெஸ்ட் அணி  வீரர் ஸ்ரீசாந்த் மாட்டியிருப்பதைப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஊழலால் ஐ.பி.எல். போட்டியை நிறுத்தி விட வாய்ப்பு இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஒரு வீரர் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார் என்பது என்னைப் போலவே, ஏனையவர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதற்காக ஒட்டு மொத்த போட்டியும் ஊழல் என்று அர்த்தமாகி விடாது. ஐ.பி.எல். போட்டியை நிறுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.பி.எல் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ரசிகர்களால் முன்வைக்கப்படும் கேள்விகள் இவ்வாறு உள்ளன:

இந்திய மதிப்பில் 10 கோடி முதற் பரிசை தட்டிச் செல்ல ஒவ்வொரு அணியும் சுமார் 1500 கோடிவரை செலவு செய்வது எதற்காக?
கிரிக்கெட்டினை அழிக்கும் ஐ.பி.எல் இற்கு பி.சி.சி.ஐ இன் பலம்வாய்ந்த ஆதரவு எதற்காக?
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா?
ஐ.பி.எல் இல் குற்றம் செய்தார் என தெரிவிக்கப்பட்ட உடனே முழுமையாக நிரூபிக்கப்படாமலேயே அவசரமாக தடை விதி க்கக்கோருவது எதற்காக?
என இன்னும் ஏராளமான கேள்விகளை எழுப்பி இணையத்தளங்களினூடாக ஐ.பி.எல் மீது மண்ணை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.


5 வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு மட்டும் வருமானம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறு பணத்தை அள்ளித் தரும் தங்க முட்டையிடும் வாத்தான ஐ.பி.எல்இனை இப்போதைக்கு விட்டுத்தர சி.பி.பி.ஐயும் தயாராக இல்லை என்பதே உண்மை.

"முடிவு" என்ற விடயம் இறுதிவரை தெரியாமலிருப்பதே அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் மெட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பொட் பிக்ஸிங் போன்றவற்றால், முடிவு தெரிந்த பரீட்சை போன்று அமைந்துள்ள போட்டிக ளில் இளைஞர்களும் சிறுவர்களும் நேரத்தையும் பணத்தையும் கரியாக்கும் செயற்பாடுகள் இனியும் வேண்டுமா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 23.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் அஜித்தான் : சோ ராமசாமி

எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அதிகமான ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி பாராட்டுவதென்றால் அளவுக்கு அதிகமாகவே கஞ்சப்படுவார். இவர் வயாயால் ஒருவர் பாராட்டு பெறுவதென்றால் சாதரணமான விடயமல்ல.

விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.

இது குறித்து சோ ராமசாமி கூறுகையில், எம்.ஜி.ஆர். தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர், அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித்தான். ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை என தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 25 வருடங்களான பின்னரும் அவர் மீது பற்றுக்கொண்ட ரசிகர்கள் இன்றுவரையில் அதிகமாகவே காணப்படுகின்றனர்.  தற்போது அந்தளவிற்கு அதிகமான ரசிகர்களை  கொண்ட நடிகர் 'தல' அஜித் என்கிறார் சோ.

உண்மையிலேயே சோ ஒருவரை புகழ்கிறார் என்றால், அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான் என்கிறார்கள் கொலிவூட்காரர்கள்.

தகவலறிந்த ரசிகர்கள் 'தல' போல வருமா என்று மகிழ்ச்சியடைவது கேட்குதுங்களாண்ணா...

மணிக்கு 263 கி.மீ வேகத்தில் ரொக்கெட் துவிச்சக்கரவண்டியை செலுத்தி சாதனை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மணிக்கு 263 கி.மீ வேகத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.


பிரான்கொய்ஸ் கிஸ்ஸி என்ற இளைஞனே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது சாதாணரமான துவிச்சக்கரவண்டி போன்றதுததான். ஆனால் இதில் ஹைட்ரஜன் பேரொக்சைடில் இயங்கும் ரொக்கட் சாதனத்தைப் பொருத்தி பிரான்கொய்ஸே இந்த துவிச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார்.


இந்த துவிச்சக்கரவண்டியைக்கொண்டு பிரானஸின் வடகிழக்கு பகுதிலுள்ள மன்ச்ஹொவுஸ் என்ற இடத்திலுள்ள பழைய ரன் வே ஒன்றிலே இச்சாதனை நிகழத்தப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் சென்ற இந்த துவிச்சக்கரவண்டிக்கு 'ரொக்கெட் துவிச்சக்கரவண்டி' என பிரான்கொய்ஸ் பெயரிடப்பட்டுள்ளது.


இது குறித்து பிரான்கொய்ஸ் கூறுகையில், ஹைட்ரஜன் பேரொக்சைட் நிரப்பப்பட்டிருக்கும் ரொக்கெட் மூலமே இந்த சைக்கிள் மிக வேகமாக ஓடுகிறது. இதனால் எதுவிதமான தீங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே துவிச்சக்கரவண்டியில் மணிக்கு 242.6 கி.மீ வேகத்தில் சென்றமையே சாதனையாக இருந்தது. இச்சாதனை 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை புற்கள் பதிக்கப்பட்ட செருப்புகள்

வெறுங்காலுடன் புற்களில் நடந்து செல்வதற்கு பலரும் விரும்புவதுண்டு.  இதை கருத்திற்கொண்ட பிரித்தானிய நிறுவன மொன்று, செயற்கை புல் பதித்த செருப்புகளை தயாரித்துள்ளது.


புற்களைப் போன்று மிருதுவானதாக இந்த செயற்கை புற்களும் உள்ளன. இதை அணிந்துகொண்டு நடக்கும்போது புற்கள் மீது நடக்கும் உணர்வு ஏற்படுமாம்.


ஆண்கள், பெண்களுக்காக வெவ்வேறு வகையான பாதணிகளை பயர்பொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

Friday, May 24, 2013

விண்வெளி குப்பைகளுடன் ஈக்குவடோர் செய்மதி மோதியது

ஈக்குவடோர் நாட்டின் ஒரேயொரு செய்மதியான 'பேகஸோ' விண்வெளிக் குப்பைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து அச்செய்மதியிருந்து மீண்டும் சமிக்ஞைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஈக்குவடோர் விண்வெளி முகவரகம் ஈடுபட்டுள்ளது.

இச்செய்மதி ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அச்செய்மதி நேற்று விண்வெளி சிதைவுடன் மோதியுள்ளது. பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் இச்செய்மதி பூமியை வலம்வந்துகொண்டிருந்தது.

1985ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்றின் சிதைவுகளுடன் ஈக்குவடோரின் செய்மதி மோதியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அச்செய்மதியிலிருந்து மீண்டும் சமிக்ஞைகளை பெற முடியுமா என்பதை 3 அல்லது 4 நாட்களின் பின்னரேஅறிய முடியும் என ஈக்குவடோர் விண்வெளி முகவரகத்தின் தலைவரான ரொனி நாடர் தெரிவித்துள்ளார்.

சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி

இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று சிறந்த உடற்கட்டுக்கான உலக சம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக உடற்கட்டு சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

43 வயதான டொன் அகிம் மற்றும் 33 வயதான ரோசன்னா பெக்கட் என்ற தம்பதியே இந்த பெருமைக்குரியவர்களாவர். இத்தம்பதிக்கு கார்மென் என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.

டொன் கப்பல் தொழிலாளியாகவும் அவரது மனைவி நடனக் கலைஞராகவும் பணி புரிகின்றனர். இத்தம்பதி சிறந்த உடற்கட்டுள்ளவர்களுக்கா செய்ன்ட் ஒல்பன்ஸ் நகரில் நடத்தப்பட்ட மியாமி சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் கலந்து கொண்டே இச்சாதனையை நிகழ்த்தியு;ளளனர்.

200க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்போட்டியில் இத்தம்பதி 3 பிரிவுகளில் பரிசுகளை வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் சிறந்த உடற்கட்டு உலக சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதியாக இவர்கள் தடம் பதித்துள்ளனர்.

இதில் ஆண்களுக்கான மிஸ்டர் மஸ்ஸல் மொடல் ஏ மற்றும் ஆண்களுக்கான உடற்கட்டு ஆகிய இருபிரிவுகளில் டொன் வெற்றி பெற ரோசன்னா மிஸ் பிகினி பி பிரிவுக்கான பட்டத்தை தனதாக்கினார்.

இது குறித்து ரோசன்னா கூறும்போது, இப்போட்டி குறித்த அறிவிப்பினை இணையதளத்தில் பார்த்தோம். பின்னர் இப்போட்டிக்காக கடந்த 4 மாதங்களாக நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கொண்டோம். இதன்போது வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் வரையில் நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கோண்டோம்.

இதேவேளை வெற்றியின் பின்னர் டொன் கூறுகையில், நாங்கள் இருவரும் தம்பதிகள் என நாங்கள் கூறும் வரையில் நடுவர்களை அதனை அறிந்திருக்கவில்லை. முதலில் ரோசன்னாவே பரிசுக்குத் தெரிவானார். அப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்நிலையில் நானும் பட்டத்திற்கு தெரிவானேன் எனத் தெரிவித்துள்ளார்.

By : AM. Rizath / Metronews





சம்பியன்ஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார் அசாத் ரவுப் : சூதாட்ட சர்ச்சையின் எதிரொலி

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவரான ஆசாத் ரவுப் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சூதாட்டங்களில் தொடர்புபட்டிரக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சம்பியன்ஸ் போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊழல் மற்றும் சூதாட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஐ.பி.எல் கேளிக்கை கிரிக்கெட்டில் முதன் முறையாக நடுவர் ஒருவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் எதிரொலியாக சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிரடியாக அசாத் ரவுப் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், நடுவர் அசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலிசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சம்பியன்ஸ் தொடரிலிருந்து அவரை நீக்குவது என தீர்மானித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டில் மும்பை மொடல் அழகி லீனா கபூருடன் அசாத் ரவுப் பாலியல் தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியமை  குறிப்பிடத்தக்கது.

By : AM. Rizath/Metronews

Thursday, May 23, 2013

5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா

பந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார்.


உலகின் வேகமான மனிதரான உசைன் போல்டினைப் போல பந்தயங்களில் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தி வாயந்த புறாவிற்கு போல்ட எனப் பெயரிட்டுள்ளனர்.


தற்போது ஒரு வயதாகும் இப்புறாவே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு பறவை என்ற சாதனையை தன்னகப்படுத்தியுள்ளது. இதற்கு கடந்த ஆண்டில் ஜனவரியில் ஒரு பறவை 322,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது.


பெல்ஜியத்தில் இடம்பெற்ற பந்தயங்களில் கலந்துகொள்ளும் வேகமான பறவைகள் ஏலத்திலேயே இந்த போல்ட் எனும் புறாவை சீனாவைத் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.


இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.


இதனால் குறித்த ஏலத்தின்போது ஹெரிமன்ஸ் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.

By : AM. Rizath/Metronews

Wednesday, May 22, 2013

சூர்யா - விஜய் இடையே மோதல் இல்லையாம்... தள்ளிப்போனார் தலைவா


சூர்யா - விஜய் படங்கள் ஒன்றாக வெளியாகி மோதிக்கொள்ளப்போகின்றது என்ற தகவல், மோதுவோம் ஆனா... மோத மாட்டோம் பாணியில் அமைந்திருக்கிறது.


விஜயின் தலைவாவும் சூர்யாவின சிங்கம் 2வும் ஒன்றாக வெளியாகப் போவதாக தகவலைக் கசியவிட்டார்கள். இந்நிலையில் இந்த மோதல் இடம்பெறாது என கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜய்யின் பிறந்த நாளுக்காவது தலைவாவை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்களாம் படக்குழுவினர். இருப்பினும் படத்தினை ஜுலையில் வெளியிட தற்போது முடிவாகியுள்ளதாம்.


சத்யராஜ் நடிக்க வேண்டிய காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டியுள்ளதாலேயே இத்தாமதம் என கூறப்படுகிறது.


அப்படின்னா சிங்கம் தனியாத்தான் வரப்போகுது. பின்ன எதுக்கு பப்ளிசிட்டிக்கு பேயா அலையணுங்ணா...

கடல் நீரில் யுரேனியம் பிரிப்பு : வெற்றிபெற்றனர் விஞ்ஞானிகள்


கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த விஞ்ஞானிகள் தற்போது அதில் வெற்றிபெற்றுள்ளனர்.


அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகுக்கும் யுரேனியத்திற்கு இன்று உலகளவில் பாரிய கேள்வி உண்டு. மிக அரிய மூலகமான யுரேனியம் நிலத்திலுள்ளதைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமாக கடலில் உள்ளதாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து கடல் நீரிலிருந்து யுரேனியத்தை எவ்வாறு பிரித்தெடுப்பது என பல வருடங்களாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் இரசயான துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.


இவர்களின் ஆய்வின் பயனாக தற்போது கடல் நீரிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சிகளின் ஒரு மைல்லாக மாறி அறிவியல் உலகின் மற்றுமொரு வெற்றியாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா?


இங்கிலாந்திலுள்ள சேவல் ஒன்று விரைவில் உலகின் மிகப் பெரிய சேவலாக இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள மௌன்ட்பிட்சட் கெஸ்ல் பண்ணையில் வளரும் வேவல் ஒன்றே இவ்வாறு கின்னஸில் இடம்பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


லிட்டில் ஜோன் எனப்பெயரிடப்பட்டுள்ள இச்சேவலின் நீளம் 66 செ.மீ (26 இன்ச்) ஆகும்.


இந்த சேவல் கூறித்து அதன் உரிமையாளரான 45 வயதாகும் ஜெரமி கோல்ட்ஸ்மித் கூறுகையில், சாதாரண சேவல்களுடன் ஒப்பிடுகையில் லிட்டில் ஜோன் மிக உயரமானது.


மேலும் லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இதற்கு முன்னர் கின்னஸில் இடம்பிடித்துள்ள மெல்வின் என்ற சேவல் 60 செ.மீ. (24 இன்ச்) எனவே லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை கின்னஸ் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த சேவல்களின் அளவீடுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் லிட்டில் ஜோன் கின்னஸில் இடம்பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

By : AM. Rizath / Metronews

வழமைக்கு மாறான 'நித்திய சுடர்' (அணையாத தீ) : நியூயோர்க் நீர்வீழச்சியில் அதிசயம்


மனி­தர்­களின் ஆசையைப் போலவே அறி­வியல் உலகின் தேட­லுக்கும் ஓர் எல்லை இல்லை. ஆனால் அதுவே அறி­வி­யலின் எல்லை கடந்த வெற்­றி­க­ளுக்கும் மேலும் கடக்­க­வி­ருக்கும் எல்­லை­க­ளுக்கும் கார­ணமாய் அமைந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

அவ்­வா­றான ஒரு தேடலில் தெரி­ய­வந்த உண்மை ஒன்று ஆராய்ச்­சி­யா­ளர்­களை திண­றச்­செய்­துள்­ளது என்றே சொல்ல வேண்டும்.

அதா­வது "நித்­திய சுடர்" என்­பது இயற்­கை­யாக அணை­யாமல் ஓரி­டத்தில் தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்பே ஆகும். அது எவ்­வாறு தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்­கின்­றது என்றால், சூடான பாறை­களின் கீழி­ருந்து இயற்­கை­யாக வெளி­யேறும் ஒரு வகை வாயு­வினால் என அறி­வியல் விளக்கம் கூறு­கி­றது.

இவ்­வா­றான பாறைகள் உலகின் பல இடங்­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்கில் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பி­லெல்லாம் மறை­வான சக்­திகள் என்று மக்­களை பீதிக்­குள்­ளாக்கும் புரியாப் புதி­ரா­கவோ வேறு வகை­யான தடு­மாற்­றங்­களோ ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளிடம் இம்­மி­ய­ளவும் இல்லை. இதில் அறி­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எந்த குழப்­பமும் இல்லை.

சில உண்­மைகள் கற்­ப­னை­களைத் தாண்டி நிற்கும். அது­போ­லவே இந்த நித்­திய சுடர் என்ற அம்­சமும். நெருப்­பில்­லாமல் புகை­யாது என்­பார்கள். உண்­மைதான் நித்­திய சுடர் என்­ப­தற்கு பின்­னாலும் நெருப்பாய் சில கார­ணங்கள் இருக்­கத்தான் செய்­கி­றது. ஆனால் அவை அமா­னுஷ்ய சக்தி அல்ல என்­ப­தை தெளி­வாகக் கூறு­கின்­றனர் விஞ்­ஞா­னிகள்.

அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கி­லுள்ள எழில் கொஞ்சும் செஸ்ட்நட் றிட்ஜ் பூங்­கா­வி­லுள்ள நீர்­வீழ்ச்­சியின் அடியில் "நித்­திய சுடர்" ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இது உல­கி­லுள்ள வசீ­க­ர­மான நித்­திய சுடர்­களில் ஒன்று.

இந்த நித்­திய சுடரும் வழ­மை­யா­னது போன்றே என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்­பிக்­கொண்­டி­ருந்த நிலையில் அண்­மையில் இதன் மீதான இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­களின் ஆராய்ச்­சியில் தெரி­ய­வந்­துள்ள உண்மை அறி­வி­ய­லா­ளர்­களின் அறிவை சோதிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஏனெனில் குறித்த நித்­திய சுடர் வழ­மைக்கு மாறான முறையில் எரிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அது எப்­படி சாத்­தி­யப்­ப­டு­கின்­றது என தற்­போது அறி­ய­மு­டி­ய­வில்லை எனவும் குறித்த ஆராய்ச்­சி­குழு தெரி­வித்­துள்­ளது.

அதா­வது,  ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்னர் உரு­வா­ன­தாக நம்­பப்­படும் இந்த நித்­திய சுட­ரா­னது நீர்­வீழ்ச்­சியின் அடிப்­ப­கு­தியில் பாறைக்குள் இருக்­கி­றது. இதில் எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்­பா­னது பழை­மை­யா­னதும் மிக அதிக வெப்­ப­மான பாறையின் அடி­யி­லி­ருந்து எரிவை ஏற்­ப­டுத்தும் "சேல்" எனப்­படும் ஒரு வகை கல­வை­யி­லி­ருந்து வெளி­யாகும் இயற்கை வாயுவின் மூலம் எரி­வ­தாக நம்­பப்­பட்­டது.

சேல் என்ற அமைப்பு களி போன்று அமைந்­தி­ருக்கும். இதில் சுண்­ணாம்­புக்கல் மற்றும் குவார்ட்ஸ் உள்­ளிட்ட மேலும் பல கனி­மங்கள் படை­யாக இணைந்­தி­ருக்கும் இது ஒரு வகை இயற்கை வாயுவை வெளி­யி­ட­வல்­லது. அவ்­வாயு எரி­வதை ஊக்­கு­விக்கும் சக்­தி­யாக இருக்கும்.

ஆனால்  இந்த நித்­திய சுடர் சேல் மூலம் வாயுவைப் பெற்று எரி­ய­வில்லை என்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. இது குறித்து இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கையில், நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை தொடர்ச்­சி­யாக எரி­வ­தற்­கு­ரிய வெப்­பத்தை வளங்­கு­ம­ள­விற்கு சக்தி படைத்­தி­ருப்­ப­தற்கு சாத்­தி­ய­மில்லை.

ஏனெனில் அப்­பா­றையின் வெப்­ப­நிலை தேனீர் கோப்பை அள­விற்கே சூடா­க­வுள்­ளது. மேலும் அதி­­லுள்ள "சேல்" என்ற அமைப்பும் முதலில் எதிர்­பார்த்­தது போன்று பழை­ய­ன­வாக இல்லை. எனவே இவ்­வி­ரண்டு கார­ணி­க­ளா­லி­ருந்தும் குறித்த நித்திய சுடர் எரி­ய­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது என ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றனர்.

எனவே வேறு ஒரு எரி மூலத்தின் சக்­தி­யி­னா­லேயே எரிய வேண்டும் ஆனால் அது என்ன? அதனை குறித்த நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை எவ்­வாறு உரு­வாக்­கு­கின்­றது என்­பது தொடர்பில் தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­க­மு­டி­ய­வில்லை.

இயற்­கை­யுடன் சம்­மந்­தப்­பட்ட சில விட­யங்­க­ளுக்கு இயற்­கையே தீர்­வாக பல சமை­யங்­களில் அமைந்­து­விடும். அந்த வகையில் இந்த நித்­திய சுடரும் அமைந்­தி­ருக்­கக்­கூடும். ஆனால் அது என்ன என்­பது குறித்து அறி­வியல் உலகம் அறிய முற்­ப­டு­வது வழ­மையே. இதனால் ஆராய்ச்­சி­யா­ளர்கள் இந்த அணையா நெருப்பின் மீதான ஆராய்ச்­சி­க­ளையும் அணைப்­ப­தா­க இல்லை.

சேல் போன்ற மேலும் பல மூலங்கள் காணப்­பட வாய்ப்­பி­ருக்­கி­றது. ஆகவே இவ்­வ­கை­யான மூலங்­களை நீரி­லி­ருந்து அல்­லது பாறை­க­ளி­லி­ருந்து வெளி­யேறும் குறித்­த­ள­வி­லான வெப்பம் காபன் பிரிப்பு செய்­வ­தனால் அணையா நெருப்பு நியூ­யோர்க் நீர்­வீழ்ச்­சி­யில் உரு­வா­கி­யி­ருக்­கலாம்.

அல்­லது அமெ­ரிக்­காவின் கிழக்கு கடற்­க­ரையின் பூமியின் கீழ் மெதேன் வாயு உரு­வாகும். இதனை ஒத்த ஒரு வழி­யில் உரு­வாகும் வாயு மூலம் இங்­குள்ள அணையா சுடர் எரிந்­து­கொண்­டி­ருக்­கலாம் என்­பது ஆராய்ச்­சி­யா­ளர்களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதே­வேளை பென்­சில்­வே­னி­யாவின் வட­மேற்கு காட்டுப் பகு­தியில் உள்ள ஒரு குழியில் அணை­யாமல் நெருப்பு இருந்­து­கொண்டே இருக்­கி­றது. இதற்கு காரணம் பழை­மை­யான இயற்கை எரி­பொருள் வாயு அங்கு கசி­வ­துதான் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது அங்க ஏற்­பட்­டுள்­ள ஒழுக்கின் மூலம் எதேன் மற்றும் புரபேன் போன்ற வாயுக்கள் வெளி­யா­கின்­றது. அதுவே தொடர்ச்சியான எரிவுக்கு காரணமாகின்றது.

இதேபோல ஒரு அடர்த்தியான வாயுக் கசிவு இங்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அது என்ன என்பதை அறியவே தற்போது ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
விரைவில் அது என்னவென்பது தெரிய வரும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் மர்மத்திற்கான விடை காண் பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தமது முயற் சிகளை ஆராய்ச்சிகளாய் தொடர்ச்சியாக எரிய விட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே செஸ்ட்நட் றிட்ஜ் பூங்காவிலுள்ள நித்திய சுடரும் மர்மாய் எரிந்துகொண்டே இருக்கிறது.

-அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 17.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

குறுகிய கால நினைவிழப்பால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு பிறந்த சாதாரண குழந்தை


பிரிட்டனில் உள்ள சௌத்வேல்ஸ் என்ற பகுதியில் Short term memory loss  (குறுகிய கால நினைவிழப்பு) என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை எவ்வித மூளை பாதிப்பும் இன்றி பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லூசிஸ் மற்றும் ஜெனஸ் என்ற தம்பதிகள் இருவருமே Short term memory loss (குறுகிய கால நினைவிழப்பு) என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்களுடைய ஞாபகசக்தி அதிகபட்சமாக 24 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். இவர்கள் தங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் எழுதி வைத்து ஞாபகப்படுத்தி செய்வார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு சென்ற வாரம் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக இவர்களுடைய குழந்தையின் மூளையில் எவ்வித பாதிப்பின்றி சாதாரணமாக இருப்பதால் மருத்துவர்கள் தெரிவித்துள்னர். அதனால் இந்த தம்பதிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தீவிர பயிற்சி எடுப்பதன் காரணமாக இவர்களுடைய ஞாபகசக்தியும் அதிகரித்து வருவதாக இவர்களுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த தம்பதியினர் 90 தொலைபேசி இலக்கங்களை ஞாபகமாக வைத்துக்கொள்ளும் திறன் உள்ளவர்களாக மாறியுள்ளனர்.

By : Metronews

Tuesday, May 21, 2013

சம்பளம் இல்லாமல் வாய்ப்புக்காக நடிக்கிறாரா விக்ரம்?

ஐ, மரியான், வல்லினம் என ஒரே நேரத்தில் 3 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இப்படங்களில் விரைவில் வெளியாகவுள்ள தனுஷின் மரியான் மற்றும் நகுலின் வல்லினம் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பில்லையாம். இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் புதிய யுக்தியை கையளாவுள்ளாராம்.

அதாவது இப்படங்களை வாங்கினால் அவர்களுக்கு விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ஐ படத்தினை தருவாக கூறி இப்படங்களை வியோகிக்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில் ஐ படத்தில் விக்ரமிற்கு இன்னும் சம்பளம் பேசவில்லையாம். மாறாக உங்கள் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளதால் இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள். படம் வெற்றியடைந்தால் உங்களுக்கு அதில் குறித்த ஒரு சதவீதமான இலாபத்தை சம்பளமாக தருகிறோம் என விக்ரமிடம் கூறப்பட்டுள்ளதாம்.

இதற்கு சம்மதித்தே விக்ரமும் நடித்து வருகிறாராம். இதேவேளை ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடி என தாயரிப்பு மற்றும் நடிகர் தரப்பில் கூறப்பட்டாலும் இயக்குனர் ஷங்கரோ 80 கோடிதானே என்று கூறுவதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடக்கடவுளே விருது நடிகருக்கு இப்படியொரு சோதனை!

By: Metronews

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி


குரோஷிய நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிவெடிகளை கண்டுபிக்க தேனீக்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கும், செர்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 1991ல் நடந்த போரின்போது, ஏறக்குறைய, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், கண்ணிவெடியில் சிக்கி, 2,500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சண்டையின்போது, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த சூழலில், மிர்ஜனா பிலிபோவிக் என்பவர், தன் ஆண் நண்பருடன் குரோஷிய நகர் ஒன்றில், மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணிவெடி வெடித்ததில், அவரது நண்பர் அதே இடத்தில் பலியானார். மிர்ஜனாவின் இடது கால் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து, ஏறக்குறைய, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்த, குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, தேனீக்களின் நடத்தைகளை பற்றி நன்கு அறிந்தவரும், தேனீக்களின் நிபுணருமான நிகோலா கிசெக், சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களுடன், ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில், ஆலோசனை நடத்தினார். அப்போது, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நிகோலா கிசெக் கூறுகையில், தேனீக்கள், நறுமணத்தை முகர்வதில் அபாரத்திறமை கொண்டவை. எனவே, அவற்றிற்கு, கண்ணிவெடிகளின் மணம் குறித்து பயிற்சி அளிக்கும் போது, அவற்றால் கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும். தேனீக்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் உணவுடன், கண்ணிவெடியின் நறுமணம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். அப்போது, அவற்றால் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.

இது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் அல்ல ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்களுக்கு பயிற்சி அளிப்பதுதான், சற்று சவாலான காரியம் என தெடரிவித்துள்ளார்.

Monday, May 20, 2013

20 விநாடிகளுக்குள் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்யும் கருவி : 18 வயதான யுவதியின் கண்டுபிடிப்பு


செல்லிடத் தொலைபேசி பற்றரிகளை 20 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை 18 வயதான யுவதியொருவர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இஷா குராய் எனும் யுவதியே இக்கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இக்கருவிக்கு சுப்பர் கெப்பாசிட்டர் (Super Capacitor) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செல்லிடத் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்வதற்காக மணித்தியாலக் கணக்காக காத்திருக்கும் நிலையை மாற்றக்கூடிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கருவியை கண்டுபிடித்தமைக்காக இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியின்போது இஷாவுக்கு இன்டெல் இளம் விஞ்ஞானிக்கான விருதும் 50 ஆயிரம் டொலர் பணப் பரிசும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதைக் கண்டுபிடிப்பதற்கு உநது சக்தியாக இருந்தது எதுவென தொலைக்காட்சி செவ்வியொன்றின்போது இஷாவிடம் வினவப்பட்டது. எனது செல்லிடத் தொலைபேசி பற்றரி எப்போதும் சார்ஜ் இறங்கியிருப்பதே எனக்கு இக்கண்டுபிடிப்புக்கான சிந்தனையைத் தூண்டியது என அவர் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் கார்களுக்கான பற்றரிகளையும் விரைவாக சார்ஜ் செய்வதற்கு தனது கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என இஷா கருதுகிறார்.

By : Metronews

பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்


பீட்சா படத்தின் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அஜித் நடிக்க முடிவு செய்திருப்பதாக கொலிவூட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொலிவூட்டின் முக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள சுப்புராஜின் முதற் படமான பீட்சா படத்தினை அண்மையில் 'தல' பார்த்துள்ளார்.

படம் அஜித்திற்கு பிடித்துப்போயுள்ளது. இதனையடுத்து திறமையானவர்கள் வீட்டு அழைத்து மனதார பாராட்டும் அஜித், வழக்கம் போல சுப்புராஜையும் அழைத்து பாராட்டியுள்ளர்.

இச்சந்திப்பின் போது சுப்புராஜ் தன்னிடமிருந்த கதை ஒன்றை அஜித்திடம் கூறியுள்ளார். அக்கதை அஜித்தை வெகுவாக கவர்ந்ததாகவும் இப்படத்தினை நாம் இணைந்து செய்யலாம் என அஜித் கூறியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இது தொடர்பிலான உறுதியான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்க் ஷக்கர்பேர்கின் நாய் உட்பட பேஸ்புக்கில் 10 சத வீதமான பயனர்கள் மனிதர்களல்ல : ஆய்வின் முடிவு


இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

உலக சனத்தொகையுடன் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 7 பேருக்கு ஒருவர் பேஸ்புக்கினைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் emarketer எனும் இணைய சந்தை நிறுவனமொன்று மேற்கொண்ட ஆராய்ச்யிலிருந்து வெளிவந்த தகவல் மிகவும் விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

அதாவது இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி 1.11 பில்லியன் பேஸ்புக் பயனர்களில் 889.3 மில்லியன் பயனர்கள் மட்டுமே மனிதர்களாம். மேலும் பேஸ்புக் பயனர்களில் மார்க் ஷக்கபேர்கின் பீஸ்ட் எனும் நாய் உட்பட 10 சத வீதமானவை மனிதர்களல்லதவை என அவ்வாய்வறிக்கை குறிப்பிடுகிறது.

மார்க் ஷக்கர்பேர்க்கின் செல்லப்பிராணியான பீஸ்ட் எனும் நாயினை 1.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமூக இணையத்தளங்களில் மிக அதிகளவான பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கில் இவ்வாண்டின் புதிய பயனர்கள் இந்தியா, பிரேசில், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலேயே அதிகளவில் காணப்படுகிறது.

ஏனைய நாடுகளிலிருந்து வரும் பயனர்கள் வளர்ச்சி வீதமானது 30 சத வீதமானவை மட்டுமே எனக் ஆய்வு தெரிவிக்கின்றது.

By AM.Rizath / Metronews
______________________________________________________________________________


Study: 10% of FB user are not human including Zuckerberg's dog


They know the Facebook who don't know even internet. FB has now attracted almost 1.11 billion users. the comparison between world population and FB users are 7:1 ratio.



புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் 'QE2'

'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.

இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By AM.Rizath/Metronews

ரஷ்ய விஞ்ஞானிகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை பூமி திரும்பியது


ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.


செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகளிடத்தில் நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றது. இதனால் செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான ரஷ்யாவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எலி, பல்லி மற்றும் உள்ளிட்ட உயிரனங்களை 'பயோன்-எம்' என்ற விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பினர்.


இதன் மூலம் புவி ஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உயிரினங்களின் இதயம், நரம்பு, தசை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய ரஷ்ய விஞ்ஞானிகள் முற்பட்டுள்ளனர்.


கடந்த மாதம் விண்வெளிக்கும் அனுப்பட்ட 45 எலிகள் மற்றும் 15 பல்லிகள் உள்ளிட்ட மேலும் சில உயிரினங்கள் நேற்று தரையிறக்கப்பட்டது. இதேவேளை திரும்பு வந்த உயிரினங்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றில் எத்தனை உயிருடன் உள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் எதனையும் விஞ்ஞானிகள் வெளியிடவில்லை.

AM. Rizath/Metronews

'ஜெகஜால புஜ பல தெனாலிராமன்' கௌம்பிட்டான்யா... கௌம்பிட்டான்யா... இன்று முதல் படப்பிடிப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் வடிவேலு


அரசியல் பிரச்சினைகளால் சிக்கித்தவித்துவந்த வைகைப்புயல் வடிவேலு இன்று படப்பிடிப்புக்களில் கலந்துகொண்டு ந(கை)டிக்கப்போகிறார்.

நகைச்சுவையால் கொலிவூட்டை ஆண்டுகொண்டிருந்த வைகைப்புயல் தமிழகத்தை ஆண்டு
கொண்டும் அதனை எதிர்த்துக்கொண்டும் இருக்கும் கட்சிகள் கடந்த 2 ஆண்டுகளில் பட வாய்ப்புகள் இன்றி தவித்துவந்தார்.

இதனால் இரட்டை அர்த்த வசனங்களொல்லாம் நகைச்சுவையாக புகழப்பட்ட வேண்டிய காலத்தின் கொமடித் தேவையாகிவிட்டது.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஸ், கல்பாத்தி சுரேஸ் ஆகியோர் தாயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெகஜால புஜ பல தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் கொலிவூட்டில் நுழையவுள்ளார் வடிவேலு.

இப்படத்தில் வடிவேலு இரட்டை வேடமேற்று கொமடி இன்றி காய்ந்து போய் கிடக்கும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனையவிட இன்று  முதல் படப்பிடிப்புக்கு கௌம்பிட்டான்யா... கௌம்பிட்டான்யா...

By AM.Rizath/Metronews

5 ஜி தொழிற்நுட்பத்தினை பரீட்சித்த சம்சுங் : ஒரே செக்கனில் முழுப்படத்தையும் தரவிறக்கும் வேகம்

5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது.

சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம் என தென் கொரியாவை மையமாகக்கொண்ட நிறுவனம் சம்சுங் தெரிவித்துள்ளது.

உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடு தென கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியன் 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

AM. Rizath / Metronews

இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்'

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மனல் டொரஸ் என்ற ஆடை வடிவமைப்பாளரே இச்சாதனத்தை கண்டுபிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த துணிகள்-தெளிப்பானைக் கண்டுபிக்க லண்டனிலுள்ள இம்பரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் உதவியையும் பெற்றுள்ளார் மனல் டொரஸ்.

பொலிமர் கலவையினால் உருவாக்கப்பட்ட கலவையைக் கொண்டு குறித்த சாதனத்தின் மூலம் 15 நிமிடங்களில் ஒரு டீசேர்ட்டினை உருவாக்குகிறார் மனல். இந்த ஆடையை கழுவி மீண்டும் அணிந்துகொள்ளமுடியும் எனத் தெரிவிக்கிறார் மனல்.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், இதனை விட சிறந்த ஒரு துணிக்கலவையினை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இவரது கண்டுபிடிப்பினை எதிர்வரும் வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பெஷன் நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சாதனத்தை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்வதோடு இதற்காக ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கவுள்ளார் மனல்.

இனி துணிகளைக் கொண்டு தைத்து அதை உடுத்துவதை மறந்து ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம் போல இருக்கே..


By AM.Rizath/Metronews

பக்டீரியாவிலிருந்து டீசல் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


உல­கி­லுள்ள மிகச் சில விட­யங்­களைத் தவிர்த்து ஏனை­ய­வற்­றிற்கு பிர­தி­யீடு என்­பது ஒருநாள் சாத்­தி­ய­மாகும் என்­பதை ஞாப­கப்­ப­டுத்­து­வதாய் சில சம்­ப­வங்கள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துண்டு.

அந்த வகையில் அண்மையில் விஞ்­ஞா­னிகள் பிர­தி­யீடு என்ற விட­யத்தை ஞாப­கப்­ப­டுத்­திய மற்­று­மொரு விட­யமாய் அமைந்­துள்­ளதே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் என்ற புத்தம் புதிய சாதனை முயற்சி.

மனிதன் உயிர் வாழ நீர், நிலம், உணவு, ஒக்­ஸிஜன் என்­பது போன்ற அத்­தி­ய­வ­சி­ய­மான சில விட­யங்கள் தேவைப்­ப­டு­கின்­றது. அது­போ­லவே இன்று மனிதன் இல­கு­வா­கவும் ஆடம்­ப­ர­மா­கவும் உயிர் வாழ்­வ­தற்கு பல விட­யங்கள் அவ­சி­யமாய் இருக்­கின்­றது.

அவற்றில் எரி­பொ­ரு­ளுக்­கான தேவை­யென்­பது தவிர்க்க முடி­யா­த­தொன்று. இந்­நி­லையில் தற்­போது பாரி­ய­ளவில் தேவைப்­படும் மூல­மாக பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரி­பொ­ருட்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் எதிர்­கால சந்­ததிக்கு இவ்­வகை எரி­பொ­ருட்கள் கிடைக்­காது போய்­விடும் என்­பது விஞ்­ஞா­னி­களின் கருத்து.

இருப்­பினும் அவற்­றுக்கு மாற்­றீ­டாக இன்­று­வ­ரையில் எது­வி­த­மான நிரந்­தரத் தீர்­வு­களும் கிடைக்­க­வில்லை. இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் உயி­ரி­னங்­களைப் போல இவ்­வகை எரி­பொ­ருட்­க­ளையும் கையி­ருப்பில் இருப்­ப­வற்றை பாது­காப்­பதைத் தவிர புதி­தாக உரு­வாக்க முடி­ய­வில்லை.



இதனால் எதிர்­கால சந்­த­திகள் பயன்­ப­டுத்த தேவை­யான ஆனால் அழிந்­து­கொண்­டி­ருக்கும் விட­யங்­களில் ஒன்­றாக இன்று எரி­பொ­ருட்கள் மாற்­ற­ம­டைந்­து­விட்­டது. இந்­நி­லையில் விஞ்­ஞா­னி­களின் அண்­மைய கண்­டு­பி­டிப்­பொன்று சற்றே திருப்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது எனலாம்.

அதா­வது ஈ கோலை எனும் ஒரு வகை பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசலை உரு­வாக்கி இங்­கி­லாந்து விஞ்­ஞா­னிகள் அடுத்த சந்­த­தியின் நகர்­வுக்கு நம்­பிக்கை அளித்­துள்­ளனர். தற்­போது பரீட்­சார்­த்த அளவில் வெற்றி பெற்றுள்ள இத்­திட்டம் விரைவில் பாரி­ய­ளவில் சாத்­தி­யப்­படும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பக்டீரியா உலகில் முதல் தோன்­றிய உயிர் வடி­வ­மாகும். பக்­டீ­ரி­யாக்­களில் பல வகை உண்டு. அவ்­வா­றானா வகைகளில் ஒன்றே இந்த ஈ கோலை எனப்­படும் பக்­டீ­ரியா. இவ்­வகை பக்­டீ­ரி­யாக்கள் மனி­தனின் பெருங்­கு­டலில் பெரு­ம­ளவில் காணப்­படும். இவை k2 விற்­ற­மினைத் தயா­ரித்து உட­லுக்கு நன்மை பயக்க வல்­லது. இதே­வேளை ஈ கோலை­யி­லுள்ள மற்­று­மொரு வகை பக்­டீ­ரியா, உண­வுகள் அல்­லது குடி நீர் ஊடாக வயிற்­றுக்குள் சென்றால் வயிறு சம்­மந்­த­மான பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

இந்த பக்­டீ­ரி­யா­வினை தற்­போது இல­கு­வாக பெருக்கம் செய்து பாது­காக்க முடியும். இவ்­வாறு ஆராய்ச்­சி­க்கூ­டங்­களில் வளர்க்கும் பக்­டீ­ரி­யாவின் மர­ப­ணுவில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தியே விஞ்­ஞா­னிகள் டீச­லினை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இவ்­வாறு தயா­ரிக்­கப்­படும் டீச­லா­னது. சாத­ர­ண­மாக நாம் பயன்­ப­டுத்தும் குரூட் எண்­ணெயில் இருந்து பிரித்து எடுக்­கப்­படும் டீசலைப் போன்றே இருக்கும். இவற்­றுக்­கி­டை­யி­லான வித்­தி­யாசம் மிக மிகக் குறைவு என்­கி­றார்கள் இதனை கண்­டு­பி­டித்த இங­்கி­லாந்­தி­லுள்ள எக்­செடர் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சிக்­குழு தெரி­விக்­கின்­றது.

எனவே இந்த உயி­ரியல் வகை எரி­பொ­ரு­ளான டீச­லைக்­கொண்டு தற்போது பயன்பாட்டிலுள்ள டீசல் வாக­னங்­களை இயக்­கவும் முடியும். இதன்­போது வாக­னத்தின் எஞ்­சி­னுக்கு ஒரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­கி­றார்கள்.

இது குறித்து எக்­செடர் பல்­க­லைக்­க­ழக உயி­ரியல் விஞ்­ஞான துறை பேரா­சி­ரியர் ஜோன் லவ் கூறு­கையில், இக்­கண்­டு­பி­டிப் பின் மூலம் தற்­போது புழக்­கத்­தி­லுள்ள டீசல் வாக­னங்­களின் எஞ்சினில் எது­வித மாற்­றமும் செய்ய வேண்­டி­ய­தில்லை. வணிக ரீதி­யான எரி­பொ­ருட்­களைப் போலவே இந்த உயி­ரியல் எரி­பொ­ருளும்.

வணிக ரீதி­யாக இந்த உயி­ரியல் எரி­பொ­ருளை வெளி­யிட்டு இப்­போ­தி­லி­ருந்து பயன்­ப­டுத்­தினால் 2050ஆம் ஆண்­ட­ளவில் 80 வீதத்­தினால் பச்சை வீட்டு வளைவு ஏற்­ப­டு­வ­தனைத் தவிர்க்­கலாம். எனவே இவ்­வகை எரி­பொருள் உலகின் சுற்­றுப்­புறச் சூழ­லையும் பாது­காக்கும் எனத் தெரி­வித்­துள்ளார்.

நிலைமை இவ்­வா­றி­ருக்க தற்­போதைய நிலை­மையில் பாரி­ய­ளவில் ஈ கோலை பக்­டீ­ரியா மூலம் டீசல் தயா­ரிப்­ப­தில் பல தடைகள் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது 200 லீட்டர் பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து ஒரு மேசைக்­க­ரண்டி அள­வான டீச­லையே தற்­போது தயா­ரிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

எனவே பல்­லா­யிரம் லீட்­டர்­களை குறைந்த உற்­பத்திச் செலவில் எவ்­வாறு தயா­ரிப்­பது என்­பதே தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்கள் முன்­னுள்ள சவால் ஆகும். முடிந்­த­வ­னுக்கு நீரும் நெருப்­பாகும் என்­ப­தனை அடிக்­கடி உணர்த்தும் விஞ்­ஞா­னி­க­ளுக்கு விரைவில் இது சாத்­தி­ய­மா­வது திண்ணம்.

இது தொடர்பில் இத்­திட்­டத்­திற்கு அனு­ச­ரணை வழங்கும் செல் ப்ரொஜக்ட் என்ட் டெக்­னொ­லொ­ஜியின் முக்­கிய உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான ரொப் லீ கூறு­கையில், தற்­போது இக் கண்­டு­பி­டிப்பில் பல தடைகள் இருப்­பினும் எதி­கா­லத்தில் தேவை­மிகு டீச­லாக மாறி சூழ­லையும் பாது­காக்­கின்ற உயி­ரியல் எரி­பொருள் கண்­டு­பி­டிப்பில் பங்­கா­ளி­யாக இருப்­பதில் பெரு­மை­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை உயி­ரியல் எரி­பொருள் என்­பது உல­கிற்கு ஒரு புத்தம் புதிய விட­ய­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் திட்டம் சாத்­தி­ய­மா­ன­தொன்று என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும்.

இலங்­கை­யில் கூட 2006ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கிளி­சரின் மரத்­தி­லி­ருந்து உயி­ரியல் எரி­பொருள் உற்­பத்தி செய்­யலாம் எனக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மேலும் தற்­போது இந்­தி­யா­விலும் சில பகு­தி­களில் காட்­டா­ம­ணக்கு எண்ணெய் சேர்க்­கப்­பட்ட டீசல் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

கன­டாவில் கடந்த வருடன் 15 பேர் பய­ணிக்கக் கூடிய விமானம் ஒன்று கடுகு எண்ணெய் மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு இயக்கி சாதனை படைக்­கப்­பட்­டது.

இது மட்­டு­மின்றி சோளத்­தி­லி­ருந்தும் எரி­பொருள் தாயா­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால் இது போன்ற உயி­ரியல் எரி­பொ­ருட்கள் பரந்தள வில் உற்பத்தி செய்ய பல்­லா­யி ரம் ஏக்கர் காணி­களில் தேவை­யான தாவ­ரங்­களைப் பயி­ரிட வேண்டி ஏற்­படும். எனவே உற்­பத்திச் செல­வுகள் அதி­க­மாக இருக்கும் என்பதுடன் பயிர் நிலங்களுக்கும் பயிர்களுக்கு மான முக்கியத்துவம் குறைந்து விடவும் வாய்ப்புண்டு. ஏனெ னில் எரிபொருளின் தேவை என்பது உயிரின் தேவை போல மாறிவிட்டதே காரணம்.

ஆனால் பக்டீரியாவிலிருந்து டீசல் என்ற திட்டம் அவ்வாறில்லை என்பதால் ''பக்டீரியா டீசல்'' உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் நிறுவப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உண்டு.ஏற்கனவே பக்டீரியாவினைக் கொண்டு தயாராகும் ஈஸ்ட், சீஸ், யோகட், சோய் சோர்ஸ், பிக்கிள் மற்றும் வைன் என பலவகைப் பொருட்களை உண்டு, பருகி மகிழ்வதைப் போல விரைவில் பக்டீரியாவினூடாக ஆரோக்கியமான சூழலில் எம்மை வாகனங்களில் பயணம் செய்ய வைக்கவும் அறிவியல் உலகம் தயாரிகிவிட்டது. நாமும் அனுபவிக்க மட்டுமாவது தாயாராகிவிடுவோம்!

-அமானுல்லா எம்.றிஷாத்

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது.


மற்ற நறுமணம் வீசும் மலர்களைப் போலன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரும் இந்த 'டைட்டன் அரும்' மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.


பூக்கும் காலத்தில் 'டைட்டன் அரும்' செடி நாளொன்றுக்கு 10 செ.மீ வரை வளரும். முழுதாக பூத்த பின்னர் மலர் 48 மணி நேரத்திற்குள் சுருங்கி இறந்துவிடும்.


இந்த மலரின் அழகை ரசிப்பவர்கள் அது வெளிப்படுத்தும் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.


அழுகிப்போன இறைச்சி, சாணம், கெட்டுப்போன பாலாடைக் கட்டி ஆகியவற்றின் முக்கூட்டு கலவையாக இந்த மலரின் துர்நாற்றம், எரையும் முகம் சுளிக்க வைத்துவிடும்.

Thursday, May 9, 2013

செவ்வாய்க்கு போகலாம் வாங்க.. : இலவச அழைப்பு விடுக்கும் டச்சு நிறுவனமும் பயணத்திற்கு தயாராகும் ஆர்வலர்களும்


முன்­னொரு காலத்தில் ஆற்றைக் கடந்து அடுத்த கிரா­மத்­திற்கு செல்­வதே பாரிய இலக்­காக இருந்­தது. ஆனால் இன்று விஞ்­ஞா­னத்தின் வளர்ச்­சியில் ஆகா­யத்தைக் கடந்து அடுத்த கிர­கத்­திற்குச் செல்­வதே சாதா­ரண இலக்­காக மாற்றம் பெற்று வரு­கின்­றது.

அப்­ப­டி­யா­ன­தொரு பாரிய இலக்கை நோக்­கிய பய­ண­மொன்று டச்சு நிறு­வ­ன­மொன்­றினால் திட்­ட­மிட்­ட­படி வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி என்ன உலகை தாண்டும் திட்டம் என எண்­ணு­கின்­றீர்­களா?

அப்­ப­டி­யெனில் உங்கள் எண்ணம் சரி­யா­னதே. ஏனெனில் புவி­யி­லி­ருந்து செவ்வாய்க் கிர­கத்­திற்கு குடி­யேறும் திட்டம் ஒன்றே அது.

அதா­வது, புவி­யி­லுள்ள அனைத்துப் பாகங்­க­ளி­லு­முள்ள மக்­களில் செவ்வாய் கிர­கத்­திற்கு சென்று, வாழ்ந்து அங்­கேயே இறக்க விரும்பும் மனி­தர்­களை இல­வ­ச­மாக அழைத்துச் செல்ல "Mars One" என்ற இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வ­ன­மொன்று தயா­ரா­கி­யுள்­ளது. இத்­திட்­டத்­திற்கும் அந்­நி­று­வனம் "Mars One" எனப் பெய­ரிட்­டுள்­ளது.

கடந்த 2011ஆம் நெதர்­லாந்தைச் சேர்ந்த பாஸ் லேண்ட்ஸ்டோப் மற்றும் அர்னோ ஏ. வீல்டர்ஸ் என்­ப­வர்கள் பல முன்­னணி அறி­வி­ய­லா­ளர்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் "Mars One" திட்­டத்­தினை உரு­வாக்­கினர். இவர்­களே இந்­நி­று­வ­னத்தின் நிறு­வ­னர்­க­ளாவர்.

செவ்வாய் கிர­கத்தில் மனி­தர்கள் வாழலாம் என்ற நம்­பிக்கை வலு­வ­டைந்து வரு­கி­றது. எனவே இந்­நி­று­வ­ன­மா­னது மனி­தர்கள் செவ்­வாயில் வாழ குடி­யி­ருப்பை நிறுவி அங்கு மனி­தர்­களை அழைத்துச் செல்ல முடிவு செய்­துள்­ளது. இதனை முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­யவும் முன்­வந்­துள்­ளது.

இதற்­கான பயணம் 2022ஆம் ஆண்டில் புவி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 2023ஆம் ஆண்டு புதி­யதோர் கிர­கத்தில் தரை இறங்கி புதிய தடம் பதிக்கும் மனி­தர்கள் புதி­யதோர் சந்­த­தி­யி­ன­ரையும் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளனர்.

இது குறித்த தக­வல்­களை முதன் முதலில் கடந்த வருடன் 2012 ஆண்டு மே மாதம் 31ஆம் திக­தியே அதி­கா­ர­பூர்­வ­மாக ஊட­கங்கள் மூலம் உல­கிற்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

அதி­க­ரிக்கும் ஆர்­வ­லர்கள்
இதற்­காக http://applicants.mars-one.com எனும் இணை­யத்­தளம் பிரத்­தி­யே­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ணை­யத்­த­ளத்தின் மூலம் பயணம் தொடர்­பான தக­வல்­களை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதில் செவ்வாய் கிரகம் செல்லும் ஒரு வழி டிக்­கட்­டினை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்­காக ஆர்­வ­மிக்­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளது. முதற்­கட்டத் தேர்வு இவ்­விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்தே இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­காக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் விண்­ணப்­பங்­களை அனுப்ப ஆர்­வ­லர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அன்­றி­லி­ருந்த அடுத்த 4 நாட்­களில் உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான விண்­ணப்­பங்கள் கிடைத்­துள்­ளது. இதுவே "Mars One" திட்டம் வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­கான வித்­தினை விதை­துள்­ளது. இந்த ஆர்வ வித்­துக்­களை செவ்­வாயில் மர­மாக்­கு­வதே "Mars One" இன் திட்டம்.

இதில் ஆச்­ச­ரியம் என்­ன­வெனில் இள­வ­ய­தி­னரே அதி­க­ளவில் செவ்வாய் செல்­வ­தற்கு நாட்டம் காண்­பிக்­கின்­றனர். குறிப்­பாக 18--30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். மேலும் சீனா­வி­லி­ருந்தே அதி­க­மான விண்­ணப்­பங்கள் இது­வ­ரையில் கிடைத்­துள்­ளது. இது தவிர அமெ­ரிக்கா, ஜேர்மன், கனடா, ஸ்வீடன், ஸ்பெய்ன் உள்­ளிட்ட மேலும் பல நாடு­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­பங்கள் அதி­க­ளவில் வரு­வ­தனை "Mars One" இணை­யத்­தளம் காட்­டு­கின்­றது. இலங்­கை­யி­லி­ருந்து கடந்த மாதம் 30ஆம் திகதி வரையில் விண்­ணப்­பங்கள் எதுவும் அனுப்­பப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விண்­ணப்­பிக்கும் திகதி எப்­போது முடி­வ­டையும் என தெரி­விக்­கப்­ப­டாத இந்­நி­லையில் ஆரம்­ப­கட்­ட­மாக விண்­ணப்­பிப்­போரின் தொகைக்­கொண்டு பார்க்­கையில் மேலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­க­ணக்­கானேர் இப்­ப­ண­யத்­திற்கு ஆர்வம் காட்டி விண்­ணப்­பிப்­பார்கள் என "Mars One" நிறு­வு­னர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.


இத்­த­னைக்கும் இப்­ப­யணம் ஆபத்தும் பலத்த சவால்­மிக்­கதும் என தெரிந்த பின்னர் கிடைக்­கப்­பெற்­றதே.

தேர்வு முறை
இதே­வேளை அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் கிடைத்­தாலும் அவர்கள் அத்­தனை பேரையும் செவ்வாய் கிர­கத்­திற்கு அழைத்துச் செல்­வ­தென்­பது சாத்­தி­ய­மில்லை. காரணம் இது மிகவும் சவால்­மிக்க பயணம் என்­ப­துடன் செல­வு­மிக்க பயணம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்கது.

எனவே வரும் விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்து சிறந்த ஆரோக்­கியம், மொழித் தேர்ச்சி, குழு­வாக செயற்­ப­டுத்தும் தன்மை, பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் ஆற்றல் மற்றும் மேலும் பல திற­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஆட்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு 7 வரு­டங்கள் பயிற்­சிகள் அளிக்­கப்­பட்டு பய­ணத்­திற்கு தயார் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இத்­திட்­டத்தில் ஆங்­கிலம், ஸ்பானிஸ், டச், அரபு, இந்­தோ­னேஷியன், ஜப்பான், சீன மொழிகள் போன்­றவை பயன்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டாலும் ஆங்­கி­லமே பொது மொழி­யாகக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பணம் திரட்டும் நட­வ­டிக்­கைகள்
செலவு அதி­க­மிக்க இப்­ப­ய­ணத்­திற்­காக முதற் கட்­ட­மாக 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை திரட்ட குறித்த நிறு­வனம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக செவ்வாய் கிர­கத்­திற்கு சென்றன் பின்னர் அங்­குள்ள நட­வ­டிக்­கை­களை படம்­பி­டித்து வெளி­யிடும் தொலைக்­காட்சி உரி­மத்தை அதிக விலைக்கு விற்­க­வுள்­ளது.

மேலும் "Mars One" திட்­டத்தின் பிரத்­தி­யேக இணை­யத்­த­ளத்தின் மூலம் நன்­கொடை பெறவும் ஏற்­பாடு செய்­துள்­ளது. இல­வ­ச­மாக ஒரு வழி டிக்­கெட்­டினை செவ்வாய் கிர­கத்­திற்கு வழங்­கு­வ­தற்­காக தெரிவு செய்­யப்­படும் இத்­திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்க மட்டும் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கின்­றது. விண்­ணப்­பிக்கும் நாட்­டினைப் பொறுத்து விண்­ணப்ப கட்­டணம் 7-25 அமெ­ரிக்க டொலர்கள் வரை அற­வி­டப்­ப­டு­கின்­றது.

செவ்­வாயில் குடி­யே­று­வது சாத்­தி­யமா?
சாத்­தி­யமா? முடி­யுமா? என்­ப­தெல்லாம் முயற்­சி­யற்ற மூடர்­க­ளுக்கே வரும் என்­பது போல உள்­ளது "Mars One" இன் திட்­டங்கள். ஏனெனில் செல­வு­மிக்க இத்­திட்­டத்­தினை செல­வு­களை குறைத்து நேரத்தை மீதப்­ப­டுத்தி, அங்­குள்ள வளங்­களின் மூலம் மீள புவிக்கு வராது செவ்­வா­யி­லேயே வாழும் மனி­தர்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய தேவை­களை எது­வித அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி செயற்­ப­டுத்து அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்­ளனர் "Mars One" திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­வர்கள்.

இதற்கு மேலும் இது­வெல்லாம் சாத­ர­ண­மான வீண் முயற்­சிகள் என்­ப­துடன் செவ்­வாயில் குடி­யே­று­வ­தெல்லாம் சாத்­தி­யமா? என்று அறி­வி­ய­லையும் அறி­வி­ய­லா­ளர்­க­ளையும் கிண்டல் செய் யும் ஒரு வகையான சமூகமும் இருக் கத்தான் செய்கிறது. அவர்களுக்கு புரி யவா போகிறது. முயற்சிகளினதும் தேட லினதும் முடிவில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி.

மூச்சு எடுப்பதும் விடுவதும் சாதாரண மாகத்தான் தோன்றும் ஆனால் அவற்றை நிறுத்திவிட்டால்.... ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு பின்னர் சிந்திந்தால் புரியும் அதன் தேவை. அதுபோலவே அறிவியலில் எடுக்கப்படும் முயற்சிகளும் தேடல்களும. அது முயற்சிகள் மூலம் தேடல்களின் சுவாரஸ்யத்தினை உணர்ந்தவர்களுக்கே புரியும்.

எனவே விரைவில் செவ்வாயில் குடியேறி புவியிலுள்ளவர்களை வாய் பிளக்க வேடிக்கை பார்க்க வைக்கும் திட்டமாகவே அமையும் இந்த MARS ONE என்பதே ஏற்பாட்டாளர்களினதும் ஆர்வலர்களினதும் தற்போதைய நம்பிக் கையாக உள்ளது.

-அமானுல்லா எம்.றிஷாத்


இக்கட்டுரையானது 03.05.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

இதன் தற்போதைய நிலவரம் -

இலவசமாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப் பயணமாக செல்ல உலகின் பல பாகங்களிலிருந்தும் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பத்துள்ளனர். இதில் சுமார் 10 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் அடக்கம். 

Tuesday, May 7, 2013

ஆணி மீது தலைகீழாக நின்ற நபர்


 சீனாவைச் சேர்ந்த நபரொருவர் கூரிய ஆணியின் மீது தலைகீழாக நின்று அனைவரையும் ஆச்சரிப்படுத்துகின்றார்.

லி ஷின் என்ற 47 வயதான சீனாவைச் சேர்ந்தவரே சவாலான வேலையை சாதரணமாக செய்து ஆச்சரியமூட்டுகிறார்.

கூரிய ஆணி ஒன்றை தரையில் நிறுத்தி வைத்தி அதில் அவரது தலையால் நிற்கிறார். இதன்போது அவரது நிறை அனைத்தையும் ஆணியி மீது தலையினால் வேறு பிடிமானங்கள் இன்றி தாங்கப்படுகிறது.


66 கிலோ கிராம் உடல் நிறையைக் கொண்ட லி ஷின் சுமார் 10 செக்கன்கள் வரையில் ஆணியின் மீது தலையால் நிற்கிறார். இதன் போது இவரது தலையில் சிறியளவிலான துறை மட்டுமே ஏற்படுகிறது.

இது தவிர லி ஆணியில் வயிற்றில் மூலமும் நின்று அசத்துகிறார். அச்சத்தை ஏற்படுத்தும் இவ்வேலையை 20 வருடங்களாக லி பயிற்சி செய்துவருகிறாராம்.

சீனாவில் நன்னிங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தனது திறமை வெளிப்படுத்திய போதே இங்குள்ள புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

வேலை தலைவலி என்போருக்கு மத்தியில் தலைவலியையே வேலையாக்கிக் கொண்டுள்ளார் இந்த மனிதர்.

AM. Rizath/Metro News