சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, June 21, 2013

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்? : நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.


சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.


இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.


நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில்  சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.


அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.


விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.


அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.


இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.


உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும்  நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா  விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.


இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு "லைகா" எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு  விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய "லைகா" நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.


இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.


இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது.  பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.


ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில்  கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.


ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.


#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல்  ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே.

ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவின் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில்.

-அமானுல்லா எம். றிஷாத்


தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுந்தர் சி.
நட்சத்திரங்கள் - சித்தார்த், ஹன்சிகா, சந்தானம்
ஒளிப்பதிவு - கோபி
எடிட்டிங் - பிரவீன் - ஸ்ரீகாந்த்

காதலில் சொதப்புவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுவதற்கு பதில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் காதலில் வெற்றிபெற எப்படி தீயா வேலைசெய்யணும் என்பதை சித்தார்த்துடன் இணைந்துந்து சந்தானம் கலகலப்பூட்டுவதே 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் கதை.

பரம்பரை பரையா காதல் திருமணம் செய்த குடும்பத்தில் பிறந்த குமார், சிறு வயதிலிருந்தே பெண்களென்றெலாலே நாமக்கு சரிப்பட்டு வராது என ஒதுங்கியிருக்கிறார். இவர் எப்படி காதலில் தீயா வேலை செய்து காதலியை கரம் பிடிக்கிறார் என்பதை அரங்கமே சிரிக்கும் திரைக்கதையில் சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

கலகலப்பு படத்தின் அதேபாணியில் இவருதாங்க இவரு என்ற அறிமுகத்தோடு படம் ஆரம்பாவது முதல் சிரிப்பலையும் ஆரம்பமாகிறது. ஐ.டி நிறுவனமொன்றில் அப்பாவியாக நாயகன் குமாரு வேலைபார்க்கிறார். அவரை அடப்பாவியாக மாற்ற சஞ்சனாவாக வேலைக்கு புதிதாக இணைகிறார் ஹன்சிகா.

அதுவரையில் ஐ.டி நிறுவனத்தை சுற்றி வந்த கதை சஞ்சனாவையும் குமாரையும் கூடவே சந்தானத்தையும் சுற்றத் தொடங்குகிறது. வழக்கம்போல பார்த்த நொடியிலேயே பாடல் ஒன்றையில் கனவில் பாடி காதலில் விழுகிறார் நாயகன்.

பின்னர் எப்படி சஞ்சனாவை காதலிக்க வைப்பது என்ற ஒரே சிந்தனையில் சுற்றுகிறார். இதற்காக காதலில் சேர்க்கிறது பிரிக்கிறது என சல்மான்கானுக்கே திட்டம் கொடுப்பதையே தொழிலாக செய்யும் சந்தானத்திடம் செல்கிறார் குமார்.

இந்த இடத்தில் மோக்கியா என்ற பாத்திரத்தில் அறிமுகமாகும் சந்தானத்திற்கு திரையரங்கில் கிடைக்கும் கைதட்டல் வரவேற்பு அடங்க சில நிமிடங்களாகின்றது. ஆனால் நாயகன் சித்தார்த் அறிமுகமகும் காட்சி குண்டூசி விழுந்தா கேட்கிற அளவுக்குக்குதான் இருந்தது. அதற்கேற்ப சந்தானத்தின் அறிமுகமும் அதற்கேற்றாற் போல நாயகன் ரேஞ்சுக்கே உள்ளது.

இனி என்ன சந்தானத்தின் கல கல சிரிப்புடன் குமாரு காலில் வெற்றியடைகிறார். அப்போது பெரிய திருப்பமாக தனது திட்டத்தில் குமாரு காதல் வலையில் விழுந்த சஞ்சனா தனது தங்கை என்பது தெரியவருகிறது. பின்னர் இவர்களது காதலை எப்படியாவது பிரிக்கணும் என தீயா வேலை செய்கிறார் சந்தானம்.

இவற்றையெல்லாம் தாண்டி குமார் எப்படி காதலியை கரம்பிடித்து சுபம் போடுகிறார்கள் என்பதே மீதிக்கதை. கதை என்பதை விட திரைக்கதையே இங்கு படத்தினை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. படத்தில் குறைகளும் உண்டு ஆனால் அவையும் ரசிகர்களின் சிரிப்பில் மறைந்தே விடுகிறது. அதுவே இயக்குனர் சுந்தர் சி.யின் வெற்றியும் கூட.

படத்தின் நாயகன் சித்தார்த் தேவையான அளவுக்கு நடித்து ரசிகர்களை தன்பங்கிற்கு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அதேபோல நாயகி கவர்ச்சி உத்தரவாதமாக இளைஞர்களை கிறங்கடிப்பதோடு பாத்திரத்திற்கு பொருந்திப்போகிறார். கணேஷ் வெங்கட் ராமன், தேவதர்ஷினி, பாஸ்கி, சித்ரா லக்ஷமன் என ஏனைய பாத்திரங்களும் அளவாக நடித்து அளவுக்கதிமாக சிரிப்பை ஏற்படுத்த உதவுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி நிற்கிறார் சந்தானம். நீண்ட நாட்களின் பின்னர் இரட்டை அர்த்த வசனங்களை மிக மிக குறைத்துப் பேசி முகஞ்சுழிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார்.

பாடத்திற்கு தேவையான பின்னணி இசை. படத்துடன் இணைந்து பாடல்கள் என்றாலும் பெரிதாக மனதில் நிற்கும்படி இல்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நன்று. அதேபோல பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங்கும் படத்தினை சிரிப்பூட்டுவதாக சிறப்பாக உள்ளது.
ஆர்ப்பாட்டமாக வந்து அடங்கிப்போகிற படங்களுக்கு மத்தியில் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு.

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அக்மார்க் சுந்தர் சி. படமாக உருவாக்க தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர் சி.

மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு... வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற குமாரு.

-அமானுல்லா எம். றிஷாத்

Tuesday, June 11, 2013

அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் பாவாடை அணிந்து பணிபுரியும் புகையிரத வண்டிச் சாரதிகள்

கோடை காலத்தில் அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் சுவீடன் நாட்டின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிர வண்டிச் சாரதிகள் பாவாடையுடன் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

சுவீடன் நாட்டின் தலைநகரிலுள்ள ரொஸ்லகஸ்பனன் புகையிரத சேவையில் பணியுரியும் 11 பேர் கொண்ட சாரதிக் குழுவொன்றே இவ்வாறு வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

தற்போது சுவீடனில் கோடை காலம் என்பதால் அதிக வெப்பம் காரணமாக காற்சட்டை அணிந்து பணிபுரிவது எரிச்சலூட்டுகிறதாம். ஆனாலும் அரைக் காற்சட்டை அணிந்து பணிக்கு வருவதை புகையிரத நிறுவனம் தடை செய்துள்ளது. இதனை எதிர்க்கும் முகமாவே குறித்த சாரதிக் குழு பாவாடையுடன் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் குறித்த சாரதிகள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கோடை காலம் நெருங்கும் போதும் நாங்கள் பாவாடை அணிவதாக கூறுவோம். ஏனெனில் கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பநிலையில் அரைக்காற்சட்டை அணியவே விரும்புவோம். ஆனால் அது முடியாது. எனவே பாவாடை அணிந்துள்ளோம். இது மிகவும் வசதியாக உள்ளது.

நாங்கள் இவ்வாறு பணிக்கு வருகின்றபோது பயணிகள் எங்களை உற்றுப் பார்க்கிறார்கள் இருப்பினும் எவரும் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாவாடையுடன் பணி புரியும் சாரதிகள் அவர்கள் பாவாடையுடன் பணிபுரிவதை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.


By AM.Rizath | Metronews.lk

பாடசாலைக்கு சென்று படித்து வரும் ரோபோ

அமெ­ரிக்­காவில் இரு­தய கோளாறினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மாண­விக்குப் பதி­லாக ரோபோ ஒன்று பாட­சா­லைக்கு சென்று படித்து  வரு­கின்­றது.

அமெ­ரிக்­காவில் சவூத் கரோ­லினா அரு­கே­யுள்ள சுமேடர் நகரைச் சேர்ந்­தவள் லெஸி (9). இவள் அங்­குள்ள ஒரு தனியார் பாட­சா­லையில் படித்து வரு­கிறாள். பிற­வி­யி­லேயே இரு­தய கோளா­றினால் பாதிக்­கப்­பட்ட இவளால் சரி­வர பாட­சா­லைக்கு செல்ல முடி­ய­வில்லை.

இதனால் பாடங்கள் பாதிக்­காமல் இருக்க அவ­ரது பெற்றோர் அவ­ளுக்கு புது­வி­த­மான ரோபோ  ஒன்றை வாங்கி கொடுத்­துள்­ளனர். தற்­போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதி­லாக பாட­சா­லைக்கு சென்று பாடங்­களை படித்து வரு­கி­றது. 'வி.ஜி.ஓ.' என அழைக்­கப்­படும் இந்த ரோபோ 4 அடி உய­ரமும், 18 இறாத்தல் எடையும் கொண்­டது.

இதன் முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ரோபோவில் கெமரா மற்றும் இணைய வச­தியும் உள்­ளது. பாட­சா­லைக்கு செல்­லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்­த­ப­டியே கம்ப்­யூட்­டரில் மவுஸ் மூலம் இயக்­கு­கிறாள்.

வகுப்­ப­றைக்கு செல்லும் ரோபோ வின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் தெரி­கி­றது. அதே வேளை, வகுப்­ப­றையில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்­களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடி­யோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் ஒளி­ப­ரப்பும். அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாண­வர்­க­ளையும் பார்த்து தெரிந்து கொள்­கிறாள்.

இதை வைத்து வீட்டில் இருந்­த­ப­டியே பாடம் படித்து பரீட்சை எழுதி வரு­கிறாள். இந்த ரோபோ­வுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்­கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு 'இளவரசி வி.ஜி.ஓ.' என அன்புடன் பெயரிட்டு இருக்கிறாள்.

By: Metronews.lk

Sunday, June 9, 2013

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பு

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பினை  வொண்டர்ஸினூடாக கண்டு மகிழுங்கள்...


Saturday, June 8, 2013

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு.


ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம்.


யோ மிங்  (Yao Ming) எனும் இவ்­வீரர் சீனாவைச் சேர்ந்­தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவ­ருக்கு 32 வயது. இதற்­கி­டையில் பெரும் பணமும் புகழும் சம்­பா­திதது விட்டு உபா­தைகள் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்டார்.


பொது­வாக சீனர்கள் குள்­ள­மா­ன­வர்கள் என்ற அபிப்­பி­ராயம் உள்­ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்­குலம் (2.29 மீற்றர்).


யோமிங்கின் தாய் தந்தை இரு­வரும் தொழிற்சார் கூடைப்­பந்­தாட்ட போட்­டி­யா­ளர்கள். தந்தை யோ ஸியு­வானின் உயரம் 6  அடி 7 அங்­குலம். தூய் பெங் பெங்­டியின் உயரம் 6 அடி 3 அங்­குலம். இத்­தம்­ப­தியின் ஒரே பிள்­ளை­யான யோ மிங் 9 வயதில் கூடைப்­பந்­தாட்டம் விளை­யாட ஆரம்­பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்­கு­ல­மாக இருந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் 7  அடி 3 அங்­குலம் வரை வளர்வார் என எதிர்­வு­கூ­றினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்­து­கொண்­டி­ருந்தார் யோ மிங்.


அவரின் உய­ரம்­போ­லவே அவரின் கூடைப்­பந்­தாட்ட ஆற்­றலும் உயர்ந்­தது. சீனாவின் சார்பில் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்­டி­களில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்­கு­பற்­றினார்.


காலில் ஏற்­பட்ட உபா­தைகள் கார­ண­மாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அவர் அறி­வித்தார். அவர் ஓய்வு பெறும்­போது என்.பி.ஏ. போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­களில் மிக உய­ர­மா­ன­வ­ராக யோ மிங் விளங்­கினார்.


சீனாவின் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்டு நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான யோ மிங் 2009 வரை­யான 6 வரு­ட­கா­லத்தில் 5 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றவர். பல்­வேறு சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணையை அவர் கொண்­டி­ருக்­கிறார்.


இதெல்லாம் இருக்­கட்டும் யோ மிங் எவ்­வாறு மேற்­படி சிரிப்பு மனி­த­ராக சமூக வலைத்­த­ளங்­களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழு­கி­றதா?


2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்­கு­பற்­றினார். அப்­போது ரொன் அட்டெஸ்ட் பேசி­யதை கேட்டு, அடக்க முடி­யாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­னது.


2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்­த­ளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்­வேறு வேடிக்கை ஓவி­யங்­களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவி­யமும் ஒன்­றாகும். மேற்­படி செய்­தி­யாளர் மாநாட்டு வீடி­யோவில் யோ மிங் சிரித்த காட்­சி­யொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்­ப­டை­யாக வைத்தே அந்த ஓவி­யத்தை வரைந்­த­தாக டவு­டன்லோ ஒப்புக்கொண்டார்.


அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும். அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



By: Metronews

3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார் இன்னும் இரு வருடங்களில் வீதியில் ஓடும்

தொலை­தூ­ரத்தில் உள்­ள­வர்­க­ளுடன் தொலை­பேசி மூலம் பேசு­வ­தற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவ­ணங்­களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்­கினான்.

அதன்பின் இணையம் ஊடாக புகைப்­ப­டங்கள், வீடியோ மற்றும் பல்­வேறு மென்­பொ­ருட்­களை அதன் தரம் மாறாமால் அனுப்பும் தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இப்­போது இவற்­றை­யெல்லாம் பின்­தள்ளும் விதத்தில் 3டி பிரிண்டிங் எனும் முப்­ப­ரி­மாண அச்­சிடல் இயந்­தி­ரங்கள் மூலம் முப்­ப­ரி­மாண பொருட்­க­ளையும் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­காவில் அண்­மையில் துப்­பாக்­கி­யொன்று 3டி பிரிண்டிங் மூலம் அனுப்­பப்­பட்­டது. இந்­த­வ­ரி­சையில் 3டி பிரிண்டிங் மூலம் உரு­ வாக்­கப்­பட்ட கார் இன்னும் இரு வரு­டங்­க­ளுக்குள் வீதியில் ஓடும் என்­கி­றது ஸ்ட்ராடேஸிஸ் எனும் இஸ்­ரே­லிய நிறு­வனம்.

கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் எனும் நிறு­வ­னத்­துடன் இணைந்து இக்­காரை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையில் மேற்­படி நிறு­வனம் ஈடு­பட்­டுள்­ளது.

இந்த காருக்கு என URBEE 2 பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. “ 3டி பிரிண்டிங் மூலம் உரு­வாக்­கப்­பட்ட கார் வீதிக்கு வரும்நாள் வெகு தொலைவில் இல்லை. எரி­பொருள் சிக்­கனத் தன்­மை­யு­டை­ய­தாக இந்த காரை நாம் தயா­ரிக்­கிறோம்” என கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் நிறு­வ­னத்தை சேர்ந்த ஜிம் கோர் தெரி­வித்­துள்ளார்.

வழக்­க­மான கார்கள் நூற்­றுக்­க­ணக்­கான அல்­லது ஆயி­ரக்­க­ணக்­கான சிறிய பாகங்­களைக் கொண்­டுள்ள போதிலும் URBEE 2 காரா­னது 40 பாகங்களையே கொண்டிருக்கும்.

இதனால் இக்காரை 3 பிரிண் டிங் மூலம் உருவாக்குவது சாத் தியமானதாகும்” என அவர் கூறி யுள்ளார்.



Friday, June 7, 2013

பாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்

ஒவ்­வொரு உயிரும் உலகில் உயி­ருடன் வாழ ஒட்­சிசன் என்ற வாயுவை நம்­பி­யி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. ஆனாலும் சுவா­சித்து உயிர் வாழ வழி­செய்யும் அந்த மூச்சுக் காற்று உண்­மையில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்­தி­ருந்தால் என்ன என எண்ணத் தோன்­று­கின்­றது.


ஏனெனில் நிலங்­களைத் துண்­டா­டிய மனி­தர்­களால் நதி­க­ளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடி­யாமல் அவற்றின் மீதான சர்ச்­சை­க­ளினால் பல்­வேறு நாடு கள் பிரிந்து சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வதே மேற்­படி எண்ணம் உதிக்க கார­மா­கின்­றது.


பூமி­யில் குறித்த சில காலப்­ப­கு­தி­களில் கண்­டங்கள், நாடுகள் என மனி­தர் ­களின் அர­சியல் ஆசைகள், நிலத்தின் மீதான மோகம் மற்றும் வேறு பல தேவை­க­ளாலும் புவி­யி­ல­மைந்த நிலங்கள் துண்­டா­டப்­பட்­டன.


இருப்­பினும், நிலத்தை சொந்­த­மாக்கி எல்­லைக்­கோ­டிட்டு பிரிக்க முடிந்­தாலும், எல்லைக் கோடு­களைத் தாண்டி பாயும் ஆறு­களை சாதா­ர­ண­மாக மனி­தனின் ஆசைக்கு சாத­க­மாக பிரித்­திட முடி­ய­வில்லை. இதனால் நாடுகள் பல ஒன்­றி ­ணைந்து காணப்­பட்­ட­போது எமது நாட்டின் நதி­யாக இருந்­தது. அதுவே நாடுகள் பிரிந்­ததும் எனது நாட்டு நதி­யென உரிமை கோர வேண்டி ஏற்­பட்­டது. இதுவே நதிகள் மீதான சர்ச்­சைக்கு வித்­திட்­டது.


தற்­போது உல­களில் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக தோற்றம் பெற்­றுள்­ளது நீர். எனவே ஜீவ­ந­தி­களை யாரும் யாருக்கும் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை. விளைவு நாடு­க­ளி­டையே சச்­ச­ர­வு­க­ளையும் சண்­டை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.


இனி ஓர் உலகப் போர் ஏற்­ப­டு­மே­யானால் அது நீருக்­கான ஒரு போரா­கவே இருக்­குமே அன்றி வேறு எதற்­கா­கவும் அல்ல என கடந்த 20 ஆண்­டு­க­ளாக சுற்­றுச்­சூழல் அறி­வி­ய­லா­ளர்­களும் சமூக அறி­ஞர்­களும் கூறி­வ­ரு­கின்­றார்கள். உண்­மையில் இதற்­கான அறி­கு­றிகள் பெரிய அளவில் இன்று காணப்­ப­டு­கி­றது.


முன்­னொரு காலத்தில் கோடை காலங்­களில் வீட்­டு­க­ளுக்கு வெளியே குடங்­களில் நீர் நிரப்பி வைப்­பார்­களாம் தாகத்தில் வரும் வழிப்­போக்­கர்­க­ளுக்­காக. இன்றும் வீடு­க­ளுக்கு வெளியே குடங்கள் உள்­ளன. ஆனால் இவை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருப்­பது வழிப்­போக்­கர்­களை அல்ல நீரின் வரு­கையை.


இது வீடு­க­ளுக்கு மட்­டு­மல்ல நாடு­க­ளுக்கும் பொருத்­த­மாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்­கையில் 'அனை­வ­ருக்கும் போது­மான நீர் உள்­ளது' எனத்­தெ­ரி­வித்­தி­ருந்­தது. ஆனாலும் தவ­றான நிர்­வாகம், அர­சியல் பின்­ன­ணியே தனி நப­ருக்­கான நீரின் அளவை மட்­டு­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இத­னா­லேயே பல்­வேறு நாடு­க­ளுக்கு குறுக்­காக பாயும் நதி­க­ளினால் உரு­வான சர்ச்­சைகள் பூதா­க­ர­மாக மாறி வரு­கின்­றது.


இந்­தியா என பெயர் வரக் கார­ண­மாக அமைந்த சிந்து நதியே இன்று பாகிஸ்­தானில் தானே பாய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்ந நதி காஷ்மீர் ஊடா­கவும் செல்­கின்­றது. காஷ்­மீரில் ஓடும் முக்­கிய 6 நதி­களில் 3 நதிகள் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன.  மீதி 3 நதி­க­ளுக்­காக இரு நாடு­களும் முட்­டிக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.


மேலும் தைக்ரீஸ், யூப்­ரடீஸ் நதி­களால் துருக்­கிக்கும் சிரி­யா­வுக்­கு­மி­டையே என பல நாடு­க­ளி­டையே நதி­க­ளுக்­காக பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இதில் பிர­தா­ன­மாக குறிப்­பி­டக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான நதி­யாக விளங்­கு­வது உலகின் அதி நீள­மான நைல் நதியும் ஒன்­றாகும்.


ஆபி­ரிக்­காவின் பல நாட்டு வயல்­க­ளுக்குச் செழிப்பும், மனி­த­ருக்கு உயிரும் ஊட்­டு­வ­துடன், எகிப்தின் நாக­ரிக வளர்ச்­சிக்குப் பல்­லா­யிரம் ஆண்­டுகள் உறு­து­ணையும் புரிந்த உலகின் அதி நீள­மான நைல் நதிக்­கா­கவும் குறித்த நாடு­க­ளி­டையே பல வரு­டங்­க­ளாக பிணக்­குகள் காணப்­பட்டு வரு­கின்­றது.


66670 கி.மீ நீள­மான இந்த ஜீவ­ந­தியில் 11 நாடுகள் தங்­கி­யுள்­ளன. ஆனாலும் சூடான், புருண்டி, ருவாண்டா, கொங்கோ, தன்­சா­னியா, கென்யா, உகண்டா, எத்­தி­யோப்­பியா, எகிப்து ஆகிய 9 நாடு­களே பெரு­ம­ளவில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. இதில் குறிப்­பாக நைல் நதியின் பிர­தான நீர் மூலத்­தினை எகிப்து மற்றும் சூடான் ஆகிய இரு நாடுகள் பெறு­கின்­றன.


ஆனால் நதியின் இரு பிரி­வு­க­ளான வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகிய இரண்டு பகு­திகள் முறையே கிழக்கு ஆபி­ரிக்கா (றுவண்டா அல்­லது புருண்டி) மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய இடங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றது.


இதனால் மின்­சாரம், வயல் நிலங்­க­ளுக்­கான நீர் என முதன்­மை­யான நீர் தேவை­களை அதி­க­ளவில் எகிப்தும் சூடானும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.


இந்­நி­லையில் நீல நதியின் குறுக்­காக அணை ஒன்­றினை மின் உற்­பத்­திக்­காக அமைப்­ப­தற்கு எத்­தி­யோப்­பியா நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதன் ஒரு அங்­க­மாக கடந்த வாரம் அணை கட்­டப்­ப­ட­வுள்ள குறி­த்த நதி ஓடும் திசையை மாற்றும் வேலை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


இத்­திட்­டத்­திற்கு இத்­தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதனால் உலக நாடு­களே இந்த அணையை கட்ட உத­வு­வ­தனால் இத்­திட்­டத்­திற்கு தனது எதிர்ப்­பினை தெரி­விக்கும் முக­மாக முக்­கிய கடல் மார்க்­க­மான பாதை­களில் ஒன்­றான சுயஸ் கால்­வாயை மூடி போக்­கு­வ­ரத்துத் தடையை ஏற்­ப­டுத்த எகிப்து தீர்மானித்துள்ளது.


இவ்வாறு சுயஸ் கால்வாயை மூடும் பட்சத்தில் கடல் மார்க்கமான போக்கு வரத்துகள் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகளிடையே பிணக் குகள் உருவாக வாய்ப்பாகலாம் என பர வலான கருத்துகள் வெளியாகின்றன. இது போலவே ஏனைய நதிகளுக்கான போராட்டங்களும் நாடுகளுக்கிடையில் பாரியளவில் வெடிக்கலாம்.


ஆனாலும் நதிகள் பாய்கின்ற அதே வேகத்தில் சர்ச்சைகளும் பாய்ந்து கொண் டேதான் இருக்கிறது.


- அமானுல்லா எம். றிஷாத்

Wednesday, June 5, 2013

உருண்டையான கார்

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

இச்வான் நூர் எனும் இக்கலைஞர் 1953 ஆம் ஆண்டின் வொக்ஸ்வொகன் பீட்டில் காரொன்றை இவ்வாறு பாரிய உருண்டை வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அண்மையில் ஹொங்கொங்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கார் உருண்டையை இச்வான் நூர் காட்சிப்படுத்தினார்.

இது முன்னர் வீதியில் ஓடிய கார் என்று நம்புவதற்கு கடினமான வகையில் முழு உருண்டை வடிவில் இக்கார் உருமாற்றப்பட்டுள்ளது. இக்காரின் சமிக்ஞை விளக்குகள் போன்ற சிறிய பாகங்கள்கூட அகற்றப்படவோ நீக்கப்படவோ இல்லை. அனைத்து பாகங்களையும் உள்தள்ளி அல்லது சற்று வெளித்தள்ளி இந்த உருண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 வயதான இச்வான் நூர், ஏற்கெனவே மற்றொரு வொக்ஸ்வொகன் காரை செவ்வகமாக உருமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைக் கடத்திச் சென்ற பூனை கைது

ரஷ்யாவின் கொமி எனும் பிரதேசத்திலுள்ள சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி, பெட்டரி மற்றும் சார்ஜர்களைக் கடத்திச் சென்ற பூனை ஒன்று கைதுசெய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறைச்சாலை நிவாகம் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் நுழைந்த பூனையின் அடிப்பகுதியில் வித்தியமான முறையில் இருப்பதனை சிறைச்சாலை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து பூனையை பிடித்த போது அதன் கீழ்ப்புறத்தில் 2 தொலைபேசிகள, பெட்டரிகள் மற்றும் சார்ஜர் போன்றவை இணைக்கப்படமை தெரியவந்தது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.


ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவம் பிரேசில் நாட்டிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.