தொலைதூரத்தில் உள்ளவர்களுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவணங்களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்கினான்.
அதன்பின் இணையம் ஊடாக புகைப்படங்கள், வீடியோ மற்றும் பல்வேறு மென்பொருட்களை அதன் தரம் மாறாமால் அனுப்பும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது இவற்றையெல்லாம் பின்தள்ளும் விதத்தில் 3டி பிரிண்டிங் எனும் முப்பரிமாண அச்சிடல் இயந்திரங்கள் மூலம் முப்பரிமாண பொருட்களையும் அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அமெரிக்காவில் அண்மையில் துப்பாக்கியொன்று 3டி பிரிண்டிங் மூலம் அனுப்பப்பட்டது. இந்தவரிசையில் 3டி பிரிண்டிங் மூலம் உரு வாக்கப்பட்ட கார் இன்னும் இரு வருடங்களுக்குள் வீதியில் ஓடும் என்கிறது ஸ்ட்ராடேஸிஸ் எனும் இஸ்ரேலிய நிறுவனம்.
கே.ஓ.ஆர். எக்கோலொஜிக் எனும் நிறுவனத்துடன் இணைந்து இக்காரை தயாரிக்கும் நடவடிக்கையில் மேற்படி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த காருக்கு என URBEE 2 பெயரிடப்பட்டுள்ளது. “ 3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்ட கார் வீதிக்கு வரும்நாள் வெகு தொலைவில் இல்லை. எரிபொருள் சிக்கனத் தன்மையுடையதாக இந்த காரை நாம் தயாரிக்கிறோம்” என கே.ஓ.ஆர். எக்கோலொஜிக் நிறுவனத்தை சேர்ந்த ஜிம் கோர் தெரிவித்துள்ளார்.
வழக்கமான கார்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான சிறிய பாகங்களைக் கொண்டுள்ள போதிலும் URBEE 2 காரானது 40 பாகங்களையே கொண்டிருக்கும்.
இதனால் இக்காரை 3 பிரிண் டிங் மூலம் உருவாக்குவது சாத் தியமானதாகும்” என அவர் கூறி யுள்ளார்.