சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Wednesday, July 24, 2013

யுத்தகளம், அணுசக்தி பேரழிவுகளை எதிர்கொள்ளும் அதிநவீன ரோபோ

அறி­வியல் வளர்ச்­சியில் இயற்­கையின் மாற்­றங்­க­ளையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முயற்­சிக்கும் மனி­தனை அறி­வியல் கட்­டுப்­ப­டுத்தும் நாள் நெருங்­கிக்­கொண்­டி­ருப்­பது போன்ற சிந்­த­னை­களை அவ்­வப்­போது கதை­க­ளா­கவும் திரைப்­ப­டங்­க­ளா­கவும் பலரும் சித­ற­விட்­டுக்­கொண்­டுதான் இருக்­கி­றார்கள்.


அவை சில சந்­தர்ப்­பங்­களில் நிஜ­மா­கலாம். பல கற்­ப­னை­க­ளாக மட்­டுமே அமைந்­து­விடு;ம்.
கற்­ப­னை­களை நிஜ­மாக்கிப் பார்க்கும் வல்­ல­மை­கொண்ட அறி­வி­ய­லா­ளர்கள் அண்­மையில் ஹொலிவூட் திரைப்­ப­டங்­களை நிஜ­மாக்­கு­வது போன்­ற­தொரு கண்­டு­பி­டிப்­பினை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

அதா­வது திரையில் கண்டு மகிழ்ந்த அழி­வி­லி­ருந்து மனித குலத்­தினைக் காக்கும் நாய­க­னாக சித்­த­ரிக்­கப்­படும் அதி திறமை வாய்ந்த ரோபோக்­களை ஒத்த ரோபோ ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அறி­வியல் வளர்ச்­சியில் ஆராய்ச்­சி­யா­ளர்­கள ; “ரோபோட்டிக்” தொழில்­நுட்­பத்தில் நினைத்­துப்­பார்க்க முடி­யாத எல்­லை­யினை தொட்டு நிற்­கி­றார்கள். ஏற்­கெ­னவே மனித குலத்­திற்கு உதவும் வகை­யி­லான பல்­வேறு துறை­களில் மாறு­பட்ட திற­மை­க­ளைக்­கொண்ட ரொபோக்­க­ளையும் விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அழி­வுக்­கு­மாக வித்­திட்ட அறி­வி­யலின் கண்­டு­பி­டிப்­புக்­க­ளான அணு உற்­பத்தி, துப்­பாகி, பீரங்­கி­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டக்­கூ­டிய அதி நவீன ரொபோ ஒன்­றினை பொஸ்டன் டைனமிக் எனும் நிறு­வனம் வடி­வ­மைத்­துள்­ளது.

மூளை மட்­டுமே இல்­லாத இந்த அதி­ந­வீன ரொபோ­வுக்கு அட்லஸ் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இதனை அண்­மையில் DARPA எனப்­படும் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு மேம்­பட்ட ஆராய்ச்சி நிறு­வனம் அறி­முகம் செய்து வைத்­தது.

இந்த ரோபோவின் விசேட அம்சம் என்­ன­வெனில் ஜப்­பானில் 2011ஆம் ஆண்டு ஏற்­பட்ட அணு உலை வெடிப்­பினைப் போன்ற அனர்த்­தங்கள் மற்றும் யுத்த களத்­திலும் மனி­தர்­க­ளுக்கு உதவும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மை­யாகும்.

6 அடி 2 அங்­குல  உய­ரத்தில் 150 கிலோ கிராம் நிறை­யு­டைய இந்த ரோபோ அதிக வெப்­பத்­திலும் அதே­வேளை நீரிலும் தொழிற்­படும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் நீரியல் தொழில்­நுட்­பத்தில் 28 மூட்­டுக்­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்ட இந்த அட்­ல­ஸினால் மனி­தனின் அசை­வு­களை அப்­ப­டியே பிர­தி­ப­லிக்க முடியும். இவ்­வகை ஆற்­றலை ஐரொபோட் மற்றும் சன்­டிலா தேசிய ஆய்­வகம் உரு­வாக்­கி­யுள்­ளது.

இது­மட்­டு­மன்றி தானாக ஓடிச் செல்­லக்­கூ­டிய கூகுள் காரி­லுள்­ளது போன்ற ரேடார் ஸ்டீரியோ கெம­ராவும் பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­தனை வச­திகள் கொண்ட இந்த ரொபோ இயங்­கு­வ­தற்­கான சக்தி வெளி­யி­லி­ருந்த வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் தானாக சக்­தியை உரு­வாக்­கிக்­கொள்ளும் ஆற்­றலை வழங்க இதனை உரு­வாக்­கிய நிறு­வனம் எதிர்­பார்த்­துள்­ளது.

ஏனெனில் யுத்த களம், அணு சக்தி பேர­ழி­வு­களில் மனிதன் செல்ல முடி­யாத இடங்­க­ளுக்கு அனுப்பி மீட்புப் பணி­களை மேற்­கொள்­ள­வதை பிர­தான நோக்­காகக் கொண்டே இந்த அட்லஸ் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அட்லஸ் தானே தனக்கு தேவை­யான சக்தி மூலத்தை உரு­வாக்­கினால் அது சிறப்­பாக அமை­யுமாம்.

எது எவ்­வா­றா­யினும் இந்த அட்­ல­ஸுக்­குள்ள திற­மையால் இல­கு­வாக யுத்த களத்­திலும் அணு சக்தி பேர­ழி­வு­க­ளிலும் படை வீரர்­களை விட திட­மா­கவும் மிக துல்­லி­ய­மா­கவும் செயற்­படும்.

இத்­தனை திற­மை­களைக் கொண்­டுள்ள இந்த அதி நவீன ரோபோ­வுக்கு மூளை மட்­டுமே இல்­லையாம். ஆனால் அத­னையும் விரைவில் பொருத்­தி­விட ஆராய்ச்­சி­யா­ளர்கள் தயா­ரா­கி­விட்­டனர்.

இதற்­காக DARPA நிறு­வனம் ஒரு சோடிக்கும் அதி­க­மான ரோபோ பொறி­யி­ய­லா­ளர்கள் குழுவினைக் கொண்டு முயற்­சித்து வரு­கின்­றது. இதில் ஒவ்­வொரு குழுவும் வித­வி­த­மான மென்­பொ­ருட்­களை தயா­ரித்து தொடர்ச்­சி­யான ஆராய்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

DARPA நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்ற 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வைத்து இவ்­வ­ருட இறுதிக்குள் மென்பொருட்களை மேம்படுத்த பொறியியலாளர்கள் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனவே அறிவியலால் ஏற்பட்ட குறைக்கு அறிவியலே தீர்வாக விரைவில் அமையப்போகிறது. என்றாலும் அதுவும் மனித குலத்திற்கு திரும்பவிடுமோ என்ற அச்சமும் இருக்கத் தான் செய்கிறது.

இருப்பினும் இவ்வருடத்திற்குள்ளேயே அதிசயிக்கும் எந்திரனின் உதவிகளை ஆபத்துக்களில் அனுபவித்தாலும் ஆச்சரிப்படத் தேவையில்லை.

–அமானுல்லா எம்.றிஷாத்

Friday, July 12, 2013

வாங்க சூரியனைப் பார்த்துவிட்டு வரலாம்... விண்வெளி சுற்றுலாவவுக்கு அழைக்கும் நிறுவனங்கள்

கன­வுகள் மட்டும் ஆகா­யத்தை தாண்டி சிற­க­டித்­து­கொண்­டி­ருக்க என்­றைக்­கா­வது அண்­டத்தை தாண்டிச் செல்லும் எண்­ணங்­களை நிஜ­மாக்­கிட எமது சிந்தை மயங்­கு­வது சாதா­ர­ண­மா­ன­துதான். இருப்­பினும் அந்தக் கன­வினை நிஜ­மாக்­கு­வது ஒன்றும் சாதா­ர­ண­மானதல்ல  என்­ப­துதான் நிஜம்.

ஆனால் அண்­மைக்­கா­ல­மா­கவே டீ குடிக்­கலாம் வாங்க... என்­ற­வாறு சில நிறு­வ­னங்­களும் விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க... என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்­து எமது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றன.

ஏற்கெ­னவே மார்ஸ் வன் எனும் இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் குடி­யேற ஆட்­களை இணைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதே­போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.

இதே­போல மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­வைத்து செவ்வாய், நிலா என விண்­வெ­ளி சுற்­று­லா­வுக்கு தயா­ரா­கி­வ­ரு­கி­றது.

ஷீரோ 2 இன்­பி­னிட்டி
இந்­நி­லையில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி எனும் ஸ்பெய்னைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மொன்று சாமா­னி­யர்­க­ளையும் குறைந்த விலையில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்ல தயா­ரா­கி­யுள்­ளது.

ஏற்கெ­னவே ஆபத்­துக்­களை எதிர்­கொள்ள துணிந்த ரஷ்­யாவின் அர்­டமி லெபடெவ் உள்­ளிட்ட மேலும் சிலர் விரைவில் இந்நிறுவனத்தின் ஊடாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் செல்ல தயா­ரா­கி­விட்­டனர்.

இதே­­வேளை மேற்­படி நிறு­வனம் 2015ஆம் ஆண்டு முதல் வணிக ரீதி­யி­லான பய­ணத்தின் மூலம் சுற்­றுலாப் பய­ணி­களை விண்­வெ­ளிக்கு அழைத்துச் செல்ல திட்­ட­மிட்­டுள்­ளது. இப் பய­ணத்தின் போது பிர­யா­ணிகள் எந்­த­வொரு கிர­கத்­திற்கும் அழைத்துச் செல்­லப்­ப­ட­மாட்­டார்கள். மாறாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் அழைத்­துச்­செல்­லப்­ப­ட­வி­ருக்­கி­றார்கள்.

இவை­யெல்லாம் அனு­ப­விக்­கலாம்
விண்­வெளி வீரர்­களால் பாது­காப்­பாக அழைத்­துச்­செல்­லப்­பட்­ட­வுள்ள இப்­ப­ண­யத்தின் போது பய­ணி­களால் எழுந்து நிற்க முடியும் அத்­துடன் புவி­யினை பனோ­ரமிக் வீவ் மூலம் கண்டு மகி­ழலாம்.

இது மட்­டு­மன்றி நிறை­யற்ற பூச்­சி­ய­நி­லையை உணரும் வாய்ப்பும் கிடைக்கும் மேலும் பய­ணிகள் தமக்கு விரும்­பிய உண­வையும் பெற முடியும் என ஷீரோ 2 இன்­பி­னிட்டி தெரி­வித்­துள்­ளது.

இப்­ப­யணம் குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி மேலும் குறிப்­பி­டு­கையில், சுற்­றுலாப் பிர­யா­ணிகள் செல்­ல­வுள்ள கெப்சூல் எனும் அமைப்பை பாரிய பலூனில் இணைத்து விண்­ணுக்கு செலுத்­தப்­படும். இந்த கெப்­சூலில் ஒரே நேரத்தில் 4 பய­ணிகள் மற்றும் 2 விமா­னி­களும் செல்லக் கூடி­ய­வாறு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்தைச் சேர்ந்த அன்­னலி சோன்­மேக்கர் கூறு­கையில், இந்த பயண­மா­னது உண்­மையில் சுற்­றுலாப் பய­ணி­களும் மிகவும் அமை­தி­யா­ன­தா­கவும் அதே­வேளை ஏது­வான சுற்றாடலிலும் அமையும் சூழ்­நி­லையும் நிலவும்.

பய­ணி­களால் சூரி­ய­னையும் மேலும் பல நட்­சத்­தி­ரங்­க­ளையும் அண்­மையில் பார்க்­க­கூடி­ய­தாக அமையும். அத்­துடன் பூமியின் அழ­கையும் மேலி­ருந்து அவ­தா­னிக்­கலாம்.

வாழ்நாள் சிறப்­பு­மிக்க இப்­ப­ய­ணத்­தினை பய­ணிகள் நிச்­ச­ய­மாக விரும்­பு­வார்கள். இந்த கெப்­சூலில் செய்யும் பிர­யாணம், விமா­னத்தில் பய­ணிப்­பது போல் இருக்கும். இருப்­பினும் பயணம் செய்யும் கெப்­சூ­லினுள் சுற்­றுலாப் பய­ணிகள் 30 செக்கன் வரை நிறையை இழந்து பூச்­சிய நிலையை அடைந்து மிதக்கும் அனு­ப­வத்தை பெறலாம்.

பயணம் முழு­வதும் பய­ணிகள் விருப்­பப்­படியே அமைக்­கப்­படும். அவர்­களின் சுதந்­திரம் முழு­மை­யாக பேணப்­படும். அவர்கள் விரும்பும் உணவு மேலும் கெப்­சூலில் மறைக்­கப்­பட்ட தனி­யான அறை­களும் வழங்­க­வுள்ளோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

யார் பய­ணிக்­கலாம்? குறைந்த கட்­டணம்
இது இவ்­வா­றி­ருக்க தொழில்­நுட்­பத்­தினை அதி­க­ரிக் கச் செய்து குறைந்த செலவில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்­லவும் எதிர்­பார்த்­துள்­ளது ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ னம்.

தற்­போது விஞ்­ஞான ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு மட்டுமென மட்­டுப்­ப­டுத்­தி­யுள்ள இப்­ப­ய­ணத்­தினை சாமா­னிய மக்­க­ ளுக்­கு­மாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சி­களை இந் நிறு­வனம் முன்னெடுத்துள்ளது.

தற்­போது இப்­ப­ய­ணத்தில் இணைந்­து­கொள்ள ஒரு­வ­ருக்கு மிகக் குறைந்த கட்­ட­ண­மாக இலங்கை மதிப்பில் 50 இலட்­சங்கள் மாத்­தி­ரமே அற­வி­டப்­படும் என குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. ஒப்­பீட்டு ரீதியில் விண்­வெ­ளிக்கு செல்­லு­வ­தற்­கான மிகக் குறைந்த கட்­ட­ண­மா­கவே இது உள்­ளது.

காரணம் இந்­நி­று­வனம் புவி யின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து விமா­னங்கள் செல்லும் தூரத்தைப் போன்று இரு­ம­டங்கு அதா­வது சுமார் 24 கி.மீ உய­ரத்­திற்கு செல்­ல­வுள்­ளார்கள். ஆனால் ஏற்­கெ­னவே இவ்­வகை சுற்­று­லாவை ஏற்­பாடு செய்த நிறு­வ­னங்கள் வேற்றுக் கிர­கங்­க­ளுக்கே செல்­லு­வ­தற்கு திட்­ட­மிட்­டனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­ப­ய­ணத்­தினை ஸ்பெ யினின் கொர்­டுபா எனு­மி­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தாத நிலையில் கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு 2015ஆம் ஆண்டு விண்ெவளி செல்­ல­வுள்ள பய­ணத்தில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்­துடன் அண்­மையில் இணைந்­து­கொண்ட ஸ்பானிஷ் பல்­க­லைக்­க­ழ­கத் தின் நஒ (NAO) எனும் மனித ரொபோக்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன் மூலம் ரொபோ தொடர்­பி­லான ஆராய்ச்­சி­களை மேம்­ப­டுத்த பல்­க­லைக்­க­ழகம் எதிர்­பார்த்­துள்­ளது.

எம்­ம­வர்­க­ளுக்கு இவ்­வா­றான ஆபத்­தான பய­ணங்­களில் பெரி­ய­ளவில் ஆர்வம் இல்லை என்று சொல்லாம். என்­றாலும் மேற்­கத்­தி­யர்­க­ளுக்கு இவ்­வா­றான விட­யங்­களில் அலா­திப்­பி­ரி­ய­முண்டு என்­பதால் விரைவில் இத்­திட்­டத்­திற்கு பாரிய வர­வேற்பு கிடைக்­கப்­போ­வது திண்ணம்.

இனி என்ன நீங்களும் அந்த 50 இலட்சத்தை மட்டும் செலுத்தி பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்.

முன்னரெல்லாம் சுற்றுலா என்றதும் அதிகபட்சமாக வெளி நாடொன்றிலுள்ள இடமொன் றைக் குறிப்பிடுவோம். ஆனால் வரும் நாட்களில் பால்வெளியிலுள்ள கிரக மொன்றை கூறினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை!

– அமானுல்லா எம். றிஷாத்





Thursday, July 11, 2013

சிங்கம் 2 - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி
நட்சத்திரங்கள் - சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம்
இசை - தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஒளிப்பதிவு - பிரியன்
எடிட்டிங் - வி.டி.

சிங்கம் படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணியில் பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் தனியாக திரையரங்குகளை வேட்டையாட வந்திருக்கிறது இந்த சிங்கம் 2.

தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹெரோயின் கடத்துகின்ற ஒரு கும்பலை துரைசிங்கம் என்ற பொலிஸினால் தடுத்து நிறுத்தப்படுவதே படத்தின் கதை.

இதற்காக தென்னாபிரிக்கா வில்லன், ஹன்சிகாவின் பாடசாலைக் காதல், துரைசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, விவேக், சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை என்பவற்றையும் சரியான கலவையில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஹரி.

மிகச் சிறிய கதைக்கு மிகப்பெரிய பலமான திரைக்கதையில் வழக்கம் போலவே இயக்குனர் ஹரி அசத்தியிருக்கிறார். சிங்கம் 1 இனை எழுத்தோட்டமாக காண்பித்துவிட்டு அதன் முடிவிலிருந்து சிங்கம் 2 படம் ஆரம்பமாகிறது. என்னவொன்று பாகம் ஒன்றில் ஒன்றரை டொன்னில் ஓங்கி அடித்த சூர்யா இதில் 10 டொன்னில் பாய்ந்தடிக்கிறார்.

அஞ்சலியின் குத்தாட்டத்துடன் ஆரம்பமாகும் போது அலுப்படையச் செய்யும் வழக்கமாக மசாலா திரைப்படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம். ஆனால் இதனையடுத்து இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.

சிங்கம் 1இல் மக்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்யும் துரைசிங்கம், மறைமுகமாக தனது டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சம்பளமின்றிய பொலிஸ் வேலையை என்.சி ஆசிரியராக தூத்துக்குடியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து தொடர்கிறார்.

இங்கிருந்து கடத்தல் காரர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கிறார் துரைசிங்கம். கடத்தல்காரர்களின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு டி.எஸ்.பியாக பதவியேற்க நினைக்கும் துரைசிங்கம் எதிர்பாராதவிதமாக திடீரென பதவியேற்க வேண்டி ஏற்படுகிறது.

இதன் பின்னர் எவ்வாறு எதிரிகளை எதிர்கொண்டு அடித்துநொறுக்குகிறார். ஹன்சிகாவின் காதலுக்கு என்னவாகின்றது? அப்பாவின் சம்மதத்துடன் எவ்வாறு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் என்பதை படு வேகமான பரபரப்பான திரைக்கதையில் துப்பாக்கி, அருவாள் என சத்தமிட்டுக்கொண்டே சூர்யாவை வைத்து கர்ஜிக்கிறார் இயக்குனர் ஹரி.

படம் முழுவதும் மிடுக்கான பொலிஸாகவே வாழ்ந்து மொத்தப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார்  சூர்யா. காதல், பாசம், அதிரடி சண்டை, நடனம் என அனைத்து இடங்களில் ரசிகர்களைக்கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதமாகவே கர்ஜிக்கிறார்.

அடிக்கடி மூக்கு வீங்க, கழுத்து நரம்பு புடைக்க கத்துமிடங்களுக்கு ஆங்காங்கே கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு முழுமையாக வணிக ரீதியான படத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை ஹரியிடமிருந்து பல இயக்குனர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதன் முறையாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கும் ஹரி தயாரிப்பாளருக்கு மொட்டை போடாமல், தேவையானதை செய்துகாட்டியிருக்கிறார். படத்திலுள்ள ஓட்டைகளை அவதானிப்பதற்கு கூட இடமளிக்காமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பதே ஹரியின் வெற்றி. மேலும் இயல்பான வசனங்களாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆனால் 3ஆம் பாகத்தினை மனதில் வைத்து படத்தினை நகர்த்தியிருப்பதால் இறுதிக் காட்சி, படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் வழக்கமாக வில்லன்களுக்கு முடிவு கட்டும் ஹரி இப்படத்தில் வில்லன்களுக்கு என்னவாகின்றது என பாகம் 3இல் பாருங்கள் என்றவாறு அமைத்துள்ளார்.

அதிரடிக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவ்வப்போது விவேக்கும் சந்தானமும் திரையரங்கை சிரிப்பலைகளால் அதிரச் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தவாறு நகைச்சுவை காட்சிகள் இல்லை.

குறிப்பாக பாடசாலை ஆசியர்களை கேலி செய்து விட்டு பிதாவின் பெயரால் மன்னிப்புக் கேட்பது, விஸ்வரூபம் சண்டையை ஞாபமூட்டும் நகைச்சுவைக் காட்சிகள் போன்றன அட்டகாசமாய் அமைந்திருக்கிறது.

நாயகி அனுஷ்கா சில காட்சிகளுக்கு வந்து போவதுடன் கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனமும் ஆடுவதோடு அவரது பங்கு முடிந்தது. பாடசாலை மாணவியாக வரும் ஹன்சிகாவுக்கு ரசிகர்களின் மனதை நெருடும் வகையிலான ஓரளவு முக்கியத்துமிக்க காட்சிகள் உண்டு.

வில்லன்களாக வரும் டேனி, ரஹ்மான், முகேஷ் ரிஷி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மிரட்டும் பாணியில் அறிமுகமாகி சாதாரணமாக அடங்கிப் போகிறது இவர்களது சத்தம்.

இவர்கள் தவிர நாசர், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி போன்றோரும் வந்து போகிறார்கள்.

ஹரியின் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியன். தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் பின்னணி இசையில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.


நீண்ட படத்தின் வேகத்திற்கு திரைக்கதைக்கு அடுத்தபடியாக வீ.டி. விஜயனின் எடிட்டிங்  காரணம் என்றால் தகும். தேவையான இடங்களில் கத்தரி போட்டு குறைகளை மறைக்க வழி செய்திருக்கிறார்.

சாதாரண மாசாலா திரைப்படத்தை படு விறுவிறுப்பாக கூறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுக்கொள்ளும் இந்த சிங்கம், பரபரப்பை மிஞ்சும்!

அமானுல்லா எம். றிஷாத் / Metronews.lk