சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Monday, October 22, 2012

வாங்க பழகலாம்... : Software இல்லாமல் Folder ஒன்றிற்கு Password கொடுப்பது எப்படி?


Folder, Lock, Advanced File Lock, dirLock, Folder Security Personal, Folder Latch, Folder Guard, Folder Access Pro, Lock and Hide Folder என கோப்புக்களை (Folders) குறிச்சொல்  (Password) மூலம் பாதுகாப்பதற்கு ஏராளமான மென்பொருட்கள் (Software) இருந்த போதிலும் அவற்றை உங்களது கணனியில் நிறுவியே (Install செய்தே) பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் கோப்புக்களை மறைத்து வைத்திருப்பதை நிறுவப்பட்டுள்ள மென்பொருள் காட்டிக்கொடுத்துவிடும். எனவே வேறு ஒரு பயனர் அந்த மென்பொருளின் குறிச்சொல்லினை (Password) கேட்கையில் சங்கடங்கள் ஏற்படுகின்ற வாய்ப்புக்கள் அதிகம்.

ஆனால் Software இல்லாமல் பயன்படுத்தும் இம்முறையில் இவ்வாறான சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம் (அத நாங்க பார்த்துக்கிறம் மேட்டருக்கு வாடி... என்று முணுமுணுக்காதிங்க மேட்டருக்கு வந்துட்டன்). அதாவது ஒரு .bat உருவாக்குவதன் மூலம் இலகுவாக கோப்பு ஒன்றுக்கு குறிச்சொல்லினை ஏற்படுத்த முடியும். அது எவ்வாறெனில்,

கீழே உள்ள இந்த html CodeஇனைCopy செய்து Note Padஇல் Paste செய்து கொள்ளுங்கள்

html Code :

cls
@echo off
title Folder Locker
IF EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}" GOTO UNLOCK
IF NOT EXIST Locker GOTO MDLOCKER
echo Folder Created.
:CONFIRM
echo Are you sure you want to lock the folder? (Y/N)
set/p "cho="
IF %cho%==Y GOTO LOCK
IF %cho%==y GOTO LOCK
IF %cho%==N GOTO END
IF %cho%==n GOTO END
echo Invalid Choice.
GOTO CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
echo Folder Locked.
GOTO END

:UNLOCK
echo Enter password to unlock the Folder :
set/p "pass="
IF NOT %pass% == YourPasswordHere GOTO FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}" LOCK
echo Folder Unlocked Successfully.
GOTO END
:FAIL
echo Invalid Password!
GOTO END

:MDLOCKER
md Locker
echo Folder created.

GOTO END
:END
PAUSE


பின்னர் இதில்YourPasswordHere (பார்க்க, படம் - 1) என்பதை உங்களுடைய Password (Eg : 1234) ஆக மாற்றிக்கொண்டு  இதனை .bat என்ற பெயரில் (File name - .bat) Save as (பார்க்க, படம் - 2) முறையில் உங்களுக்கு தேவையான இடத்தில் (Local Disk (C:, D: ) / Desktop / My document ) செய்துகொள்ளுங்கள்.
படம் - 1
படம் - 2
தொடர்ந்து நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யும் போது DOS Menu (பார்க்க, படம் - 3, மேலும் இந்த மெனுவை எதாவது ஒரு கீயை அழுத்தி மூடிக்கொள்ளவும்;) ஒன்றுடன்.bat File உள்ள அதே இடத்தில் Locker என்ற பெயரில் ஒரு Folder உம் உருவாகும். இந்த Folderக்குள் நீங்கள் மறைக்க விரும்பும் Fileகளை சேகரிவித்துட்டு மீண்டும் நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யுங்கள்.

படம் - 3
இப்போது தோன்றும் Menuவில் (பார்க்க, படம் - 4)  ''Y'' என்பதை டைப் செய்து Enter பண்ணுங்கள் அவ்வளதுதான் இப்போது Locker என்ற Folder மறைந்துவிடும். ஆனால் இதனை Folder Option மூலம் வெளியில் கொண்டுவர முடியாது.
படம் - 4
இனி உங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யும் போது DOS Menu ஒன்று தோன்றி Password இற்காக காத்திருக்கும் (பார்க்க, படம் - 5). அதில் உங்கள் குறிச்சொல்லினை (Passwordஇனை) கொடுத்து Enter பண்ணுங்கள். இப்போது நீங்கள் மறைத்துவைத்த கோப்பு Lock என்ற பெயரில் தோன்றும்.
படம் - 5
அவ்வளவுதான் இலகுவான படிமுறைகள் விளக்கப்படங்களின் உதவியுடன் முயற்சித்துப்பாருங்கள். அத்துடன் படம் பார்த்து கதை சொல்லும் முறையும் புரியவில்லை எனில் கேளுங்கள் பதில் கிடைக்கும்!

குறிப்பு : .bat  Fileஇனை அழித்து விட்டாலும் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய Passwordஇனை கொடுத்து மீண்டும் .bat Fileஇனை உருவாக்கி உங்களது மறைக்கப்பட்ட Fileகளை பெற்றுக்கொள்ளலாம்.


Thursday, October 18, 2012

முதன் முறையாக டேட்டா சென்டர்களின் படங்களை வெளியிட்டது கூகுள்

இணைய உலகில் தனக்கென தனியிடத்தினை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் முதன் முறையாக அதன் டேட்டா சென்டர்களிள் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜீ மெயில் என அனைத்து விடயங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் மேலும் அது தொடர்பான செயற்பாடுகள் எல்லாம் இங்கேயே இடம்பெறுகின்றது.

இவ்வாறு பெறுமிமிக்க இந்த இடத்திற்கு வெகு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் ஊழியர்களே அனுமதிக்கப்படுவதில்லை.

பயனர்களின் தரவுகள் மீதான பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே இந்த சென்டர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலரே அனுமதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' அமைந்துள்ள 8 இடங்களாவன

Berkeley County, S.C.
Council Bluffs, Iowa
Douglas County, Ga.
Mayes County, Okla.
Lenoir, N.C.
The Dalles, Ore.
Hamina, Finland
St. Ghislain, Belgium.

இவை தவிர தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும்  கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர்களை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கூகுளினால் வெளியிடப்பட்டுள்ள கண்கவரும் வகையிலமைந்து டேட்டா சென்டர்களின் படங்கள் இங்கே...








Wednesday, October 17, 2012

Facebook எதனை வளர்த்ததோ இல்லையோ ஆனால் இதனை வளர்த்தது


சமூகவலைத்தளங்களின் பாவனையானது போதைப்பொருளுக்கு அடிமையாவதை விடவும் கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது. அதிலும் குறிப்பாக Facebook சமூகவலைத்தளமே பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் எந்தவொரு கெட்ட விடயத்திலும் ஒரு நல்லது நடக்கும் என்பதிற்கிணங்க பேஸ்புக் இணையத்தளம் எத்தனை பல தீமைகளை ஏற்படுத்திய போதும் ஏராளமான மனிதர்களின் (மனிசனுங்க... சத்தியமா நாமதாங்க) மனங்களில் ஒரு நல்ல விடயத்தை விதைத்திருப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

அதாவது இவ்வுலகத்திலேயே மிகப்பெரிய விடயங்களில் ஒன்று 'அடுத்தவனை பாராட்டி அங்கீகரிப்பது' (சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்குமோ...ன்னு சந்தேகப்படாதிங்க). இதனை எந்தவொரு முன்னோடியினாலும் மனித மனங்களில் புகுத்த முடிவதில்லை. ஏனெனில் அது அடுத்தவர்வர்களின் மனங்களை சுத்தப்படுத்துவதைப் போல கடினமானவொரு இலக்கு.

ஆனால் Facebook வலைத்தளமோ சாத்தியமற்ற அந்த மனமாற்றத்தினை எம்மிடையே சாதாரணமாக ஏற்படுத்திருப்பதினை ஒவ்வொருவரினதும் Facebook சுவரிலுள்ள Status, Photos மற்றும் இதர விடயங்களில் விழுந்துள்ள Like உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் Facebook ஆல் கூட திருத்தமுடியாத பல ஜென்மங்கள் இன்னும் Facebookஇல் இருப்பதே ஆச்சரியம்! ஒரு Like இல்லை ஒரு Comment இல்லை பின்னர் எதற்காக இவர்கள் Facebook Account வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. (அட வெக்கம் கெட்டவெய்ங்களா இதுக்கெதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்).

அதற்காக கண்டவற்றுக்கெல்லாம் Like மற்றும் Comment பண்ணவேண்டும் என்றில்லை மனதிற்கு பிடித்திருந்தால் செய்யலாமே...

ஆனாலும் இந்த அளவிற்காவது மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியவரைக்கும் திருப்திகொள்ளத்தான் வேண்டும். எனவே Facebook என்ன சாதித்துள்ளது என்றால் உருப்படியாக வேறேதுமில்லையென்றாலும் (தொலைந்தவர்களை ஒரு சில சந்தர்ப்பங்களில் மீளப்பெற உதவியுள்ளது) அடுத்தவனை பாராட்டி அங்கீகரிக்கும் விடயத்தினை எம்மிடையே வளர்த்திருக்கின்றமை மகிழ்ச்சிதான்.

Tuesday, October 2, 2012

வெள்ளை மாளிகையையும் விட்டுவைக்காத ஹெக்கர்ஸ்

அண்மைக்காலமாக அரசாங்க ஸ்தாபனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் என பல அமைப்புகளின் கணனிக் கட்டமைப்புகளை குறிவைத்து செயலிழக்கச் செய்யும் அல்லது திருடும் வழக்கம் ஹெக்கர்ஸ் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் தனிப்பட்ட தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஹெக்கிங் செயற்பாடுகளை விட அதிகளவில் நாடுகளுக்கிடையேயான ஹெக்கிங் தாக்குதல் அண்மைக்காலங்களில் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஹெக்கிங் தாக்குதல்கள், மத்தியகிழக்கில் உள்ள சில நாடுகளின் வங்கிகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதல்கள் என பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுக்கையில், நாடொன்றின் அனுசரணையுடன் (state-sponsored hacking) இன்னொரு நாட்டின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர்களின் மின்னஞ்சல் கணக்கினை குறிவைத்தோ நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

மேலும் குறிப்பாக சீனாவில் தனிப்பட்ட நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளின் மீதான ஹெக்கிங் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூகுள் சுட்டிக்காட்டியிருந்தது.

இவை அனைத்தும் உலகநாடுகள் சைபர் யுத்தத்தினை (Cyber war fare) நோக்கி நகர்வதினையே சுட்டிக்காட்டுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக் கணனிகள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனை மறுத்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரிகள் கருத்துவெளியிடுகையில், குறிப்பிட்டதொரு வலையமைப்பினைக் குறிவைத்து ஸ்பெயா பிஸிங் (spear phishing) எனும் முறைமூலம் ஹெக்கிங் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

மேலும் இம்முயற்சியின்போது எந்தவிதமான முக்கிய இரகசியங்களும் திருடப்படவில்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

White computers has been hacked?

Wednesday, September 5, 2012

ஏ.ஆர்.எம். புரசசர்களுக்கு போட்டியாக இன்டெல் புரசசர்கள்

கணனி உலகில் மென்பொருட்களுக்கு மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினைப் போன்று ஹார்ட்வெயார் உற்பத்திகளுக்கு தனக்கென தனிமுத்திரை பதித்து தனிக்காட்டு ராஜாவா திகழும் இன்டெல் (Intel) நிறுவனம் தனது அடுத்த கட்ட நகர்வை திறம்பட செயற்படுத்தவுள்ளது.

இன்றைய தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சிகளின் காரணமாக உருவான முக்கிய கண்டுபிடிப்புக்களில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களான டெப்லட், ஸ்மார்ட் போன் (Tablet, Smart Phone) போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புரசசர்களுக்கு (Processors) போட்டியாக இன்டெல் நிறுவனம் தங்களது புரசசர்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போதைய கணனிகளில் பயன்படுத்தப்படும் புரசசர்களின் ஆதாரமாக கருதப்படும் எக்ஸ்86 (X86) தொடர் மைக்ரோ புரசசர்களில் உருவாக்கி அதில் தங்களை அசைக்க முடியாத அளவிற்கு மாற்றங்களையும் படைப்புக்களையும் உருவாக்கி ஏனைய நிறுவனங்களுக்கு என்றுமே சவாலாக விளங்குகிறது இன்டெல் நிறுவனம்.

டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களின் உலகிலும் தன்னை நிலைநிறுத்த அண்மைக்காலமாக இன்டெல் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக எல்.ஜீ (LG) நிறுவனத்துடன் இணைந்து கையடக்கத் தொலைபேசிகளை தயாரித்து வெளியிடுவதற்கென  மேற்கொண்ட முயற்சிகள் தோல்வில் முடிந்தமையினால் இன்டெல் நிறுவனத்தினால் தன்னை கையடக்கத் தொலைபேசிகளின் சந்தையில் அறிமுகம் செய்ய முடியாமல் போய்விட்டது.

தற்போது உலகையே தன் வசப்படுத்தி வைத்திருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் ஏ.ஆர்.எம் என்ற வகைப் புரசசர்களே பயன்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் சந்தையைப் பொறுத்தளவில் ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு (AMR Processors) போட்டியாக சந்தையில் இன்றைய காலகட்டத்தில் எதுவித போட்டியும் இல்லை. இதனால் இன்டெல் புரசசர்களினை அறிமுகம் செய்வதன் மூலம் இன்டெல் நிறுவனத்தினை டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையில் தமக்கான இடத்தினை கைப்பற்றிக்கொள்ள முடியும் என்பதுடன் அறிமுகம் செய்வதற்கான சரியான தருணமாகவும் இதனை இன்டெல் நிறுவனம் கருதுகின்றது.

ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் மதிப்பினை பெற்று விளங்கும் சம்சுங் (Samsung) மற்றும் அப்பிள் (Apple) நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாகிவரும் மொடொரொலா (Motorola) மற்றும் லெனோவா (Lenova) நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் ஸ்மார்ட் போன்களில் ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு பதிலாக இன்டல் நிறுவனத்தின் புரசசர்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளமையானது ஸ்மார்ட் போன் சந்தையில் இப்போது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுவரும் லெனோவா நிறுவனத்தின் இன்டெல் புரசசர் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் போன் ஒன்றின் மாதிரியை அண்மையில் லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் இன்னும் சில நாட்களில் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்டெல் புரசசர்களை கொண்டு உருவாக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் அன்ரொயிட் இயங்குதளங்களே பயன்படுத்தப்படவுள்ளதாக மொட்ரொல்லா நிறுவனம் தெரிவிக்கின்றது. தற்போது ஸ்மார்ட் போன்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க இயங்குதளங்களில் ஒன்றான அன்ரொயிட்டுடன் இணைவது இன்டெல்லுக்கு நிச்சயமாக சிறப்பாக அமையும் என கருதப்படுகிறது. காரணம் நாளொன்றுக்கு சராசரியாக ஏறக்குறைய 70 ஆயிரம் அன்ரொயிட் சாதனங்கள் புதிதாக செயற்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிக்கின்றமையே.

இது மட்டுமல்லாமல் உயர் தொழில்நுட்பத்தினை கொண்ட மிகவும் எடை குறைந்த டெப்லட் ஒன்றினையும் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது இன்டெல் நிறுவனம். இதன் முதற்கட்டமாக அண்மையில் அல்ட்ராபுக் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த அல்ட்ராபுக் செய்கைகள், அசைவுகள் மற்றும் குரல் வழியினால் கட்டுப்படுத்தப்படுத்த கூடிய முறையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுளமையே இதன் சிறப்பம்சம். குறித்த குரல் வழி தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்த அப்பிள் நிறுவனமும் முயற்சித்து வருகின்றது.

இதில் விசேட அம்சம் என்னவென்றால் இவ்வகை லெப்டொப்களை ஒத்த டெப்லட்களையே உருவாக்கப்படவுள்ளமையே. இந்த உயர் தொழில்நுட்பத்தினை புகுத்தவென இன்டெல் நிறுவனமானது நுவான்ஸ் கொமியூனிகேசன் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இவ்வகை லெப்டொப் மற்றும் டெப்லட் வருகையானது தொழில் நுட்பவளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். எனவே இவ்வுயர் தொழில் நுட்பத்தினை அமைத்து ஏனைய டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியை நிச்சயம் இன்டெல் நிறுவனம் ஏற்படுத்த வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. இதனாலேயே இவ்வகை டெப்லட்டுக்களை இவ்வாண்டு முதலே குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டுவர இன்டெல் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு பல வழிகளை தங்களை பலபடுத்தி உலகை தன்பக்கம் திருப்ப இன்டெல் நிறுவனம் சிறந்த அடித்தளத்தினை போட்டுள்ளது. இன்டெல் நிறுவனத்தின் வருகையானது ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு நிச்சயமாக போட்டியாக அமையும்.

கணனிகளில் பயன்படுத்துகின்ற புரசசர்களில் 4004 என்ற வகை புரசசர்களுடன் தங்களது புரசசர்களின் உற்பத்தியை ஆரம்பித்த இன்டெல் நிறுவனம் இன்று 'கோர் ஐ 7' வகை புரசசர்களில் வந்து நிற்கின்றது. இதற்கிடைப்பட்ட காலத்தில் இன்டெல் இன் வளர்ச்சி அபாரமானது. கணனியின் வேகத்தையும் செயற்பாட்டையும் அதிகரிக்கவென புரசசர்களில் ஏராளமான தொழில்நுட்பங்களை புகுத்தி இன்று அந்த முயற்சியில் இறுதியாக கோர் ஐ7 வந்து சேர்ந்துள்ளது. விரைவில் இதன் அடுத்தடுத்த பதிப்புக்களை விரைவில் என்பதில் சந்தேகமே இல்லை.

4004, 8008, 8080, 8086, பென்டியம் 1, பென்டியம் 2, பென்டியம் 3, பென்டியம் 4, டுயல் கோர், கோர் டு டுயல், கோர் ஐ3, கோர் ஐ5, கோர் ஐ7 (4004, 8008, 8080, 8086, Pentium I, Pentium II, Pentium III, Pentium IV, Dual Core, Core to Duo, Core I3, Core I5, Core I7 ) இது தவிர இன்டெல் செலரோன் (குறைந்த விலையில் விற்பனை செய்யவென உருவாக்கப்பட் இன்டெலின் இன்னொரு படைப்பு) வகை புரசசர் என மிக குறுகிய காலத்திற்கிடையில் ஏராளமான தயாரிப்புக்களை வெளியிட்டு கணனிப் பயனாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது இன்டெல் நிறுவனம்.

உண்மையில் இன்டெலின் வேகத்திற்கு பயனாளர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை எனலாம் காரணம் கோர் ஐ தொடர் புரசசர்களின் வருகை அவ்வளவுக்கு வேகமானது டுயல் கோர் மற்றும் கோர் டு டுயல் புரசசர்களினை பயனை அனுபவித்த அனுபவிக்கின்ற பயனாளர்கள் மிகக் குறைவானவர்களே. எம்மில் பலரும் இதனை உணர்ந்திருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது பென்டியம் வகை கணனியினை டுயல் கோர் மற்றும் கோர் டு டுயல் கணனியாக மாற்றியமைத்ததை விட அதிகமாக கோர் ஐ தொடராக மேம்படுத்தியதனை காணமுடிகிறது.

இவ்வாறு பயனாளர்களின் தேவைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயற்படக்கூடிய இன்டெல் (Intel) நிறுவத்தின் வருகை நிச்சயமாக ஏனைய நிறுவனங்களுக்கு பீதியை ஏற்படுத்தும். அதே போல இன்டெல் மீதுள்ள நம்பிக்கையினால் பலரும் அதன் பால் ஈர்க்கப்படவும் வாய்ப்புக்கள் அதிகமாவே உள்ளது.

இதற்கேற்போலவே குரல் வழி கட்டளைகள் மூலம் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களை இயங்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது குரல் வழி இயங்கும் டெப்லட்டுக்களுடனயே களமிறங்க முயற்சிக்கும் இன்டெலின் வருகை வெற்றி நடை போட உதவியாக இருக்கும்.

இவ்வாறு இன்டெல் நிறுவனம் தன்னகத்தே பல சாதகமான காரணிகளை கொண்டுள்ளதால் ஏ.ஆர்.எம். புரசசர்களுக்கு சவால் விடுத்து கணனி உலகின் நம்பிகையின் நாமமாக திகழும் இன்டெல் நிறுவனம் தனது புதுமையான கண்டுபிடிப்புக்கள் மூலம் மக்கள் மனம் வென்று டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையிலும் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டுமா? என்பதனை காலம் விரைவில் பதில் சொல்லும்...!!!

-ஏ.எம்.ஆர்

Tuesday, September 4, 2012

விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 மைக்ரோசொப்டின் எழுச்சியா? வீழ்ச்சியா?


காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் என்பார்கள் ஆனால் மைக்ரோசொப்ட்டின் விடயத்தில் இது பொய்யாகிவிடும் போலிருக்கிறது. இங்கு நிலைமை குருத்தோலை விழ காவோலை சிரிப்பது போல தோற்றமளிக்கின்றது.

கணனி உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களின் நிலைமை இன்றைய நிலவரப்படி வெற்றிப் படிக்கட்டுக்களிலேயே பயணிப்பதாக எண்ணத்தோன்றுகின்றது. இத்தனைக்கும் மைக்ரோசொப்டின் இயங்கு தளங்களுக்கு போட்டி என எந்தவொரு இயங்கு தளமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உலகில் மொத்த கணனி பாவனையாளர்களில் 80% இற்கும் அதிகமானோர் பயன்படுத்துவது மைக்ரோசொப்ட்டின் இயங்கு தளங்களே எனக் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தடுத்தடுத்த இடங்களில் இருக்மு; மெக் மற்றும் லினக்ஸ் முறையே 9%, 5% என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இயங்குதளங்களுக்கு முன்னோடியாகவும் தனிக்காட்டு ராஜாவாகவும் இருந்து வந்த விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற இயங்குதளத்திற்கு பின்னர் வெளியான விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பீ அளவிற்கு மக்களிடம் நற்பெயரினை எடுக்க தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். அதேவேளை விண்டோஸ் எக்ஸ்.பீயின் தரத்திற்கும் இவை ஈடுகொடுக்கவில்லை. இவ்வாறானதொரு இறுக்கமான நிலையிலேயே விண்டோஸ் 8 பீட்டா வெளியிடப்பட்டுள்ளது.



விஸ்டா வெளியாகிய போது பெருவாரியான கணனிப் பயனர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியது. என்றாலும் அந்த அலை மைக்ரோசொப்டின் உற்பத்தி என்பதாலே ஏற்பட்டது என்பது காலப்போக்கில் வெகுசீக்கிரமாகவே உணரப்பட்டது.

விண்டோஸ் எக்ஸ்.பீ வெளியாகி சுமார் ஐந்தரை வருடங்களின் பின்னரே விஸ்டா இயங்கு தளம் வெளியானது ஆனால் விஸ்டா ஒன்றரை வருடம் கூட மக்கள் மத்தியில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிதற்கு, விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் வெகு சீக்கிரமான வரவே சாட்சியாகிவிட்டது.

உண்மையில் விஸ்டாவில் மாற்றங்கள் பல இடம்பெற்றிந்தாலும் அம்மாற்றங்கள் மாற்றத்தை விரும்பிய பயனர்களை மிகப் பெரியளவில் அதிருப்தியை ஏற்படுத்தி மைக்ரோசொப்டின் இன்னுமொரு இயங்குதளத்தின் வரவினை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருந்தது.

விஸ்டா இயங்கு தளத்தின் பார்வை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் இதற்கு முன் வெளியான மைக்ரோசொப்ட்டின் எந்தவொரு இயங்குதளத்திலும் இல்லாத அளவிற்கு உயர்தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இவற்றை தாண்டி பல்வேறு பிரச்சினைகளையும் தொல்லையையும் பயனர்களுக்கு தந்தது. குறிப்பாக இணைய அமைப்பில் பிரச்சினைகளை தோற்றுவித்ததனால் பயனர்களுக்கும் விஸ்டா இயங்குதளத்திற்குமான தூரம் அதிகரித்தது.

இதனால் விஸ்டா இயங்குதளங்களுடன் வெளியான பல கணனிகள் விண்டோஸ் எக்ஸ்.பீ யை நாடிச்செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. விஸ்டாவின் வன்பொருள் தேவைகளை வின்டோஸ் எக்ஸ்.பீயுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என்றே சொல்லவேண்டும்.

பென்டியம் II புரொசசர்களுக்கே ஒத்துளைக்கும் தன்மை வாய்ந்தது எக்ஸ்.பீ. விஸ்டாவின் தேவைகள் சற்று அதிகம். விஸ்டாவின் இயங்கு தளத்தின் உச்சபயன்பாடுகளை பெற வேண்டுமாயின் பென்டியம் IV புரொசசர், 1 ஜீ.பீ நினைவகம், 128எம்.பீ. வீ.ஜீ.ஏ, டீ.வீ.டி ரொம் மற்றும் 40 ஜீ.பீ வன்தட்டு என இதன் தேவைகள் ஒப்பீட்டு ரீதியில் அதிகம் ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்.பீ இயங்கு தளத்தின் வேகத்தினை விஸ்டாவினால் வழங்க முடியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது.
மேலும் குறித்த வன்பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்திருந்த கணனிகளில் கூட விஸ்டா ஒத்திசையவில்லை காரணம் பல வன்பொருட்களுக்கான ட்ரைவர்ஸ் இதில் கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக ஒலி வன்பொருட்களுக்கான ஒத்திசைவு மிகக் குறைவாக காணப்பட்டது. இதனால் கையிருப்பில் இருந்த கணனிகளுக்கு விஸ்டாவினை பூட் செய்யமுடியாமல் போனது.

மேலும் இதுபோல் இன்னும் பல சிறு சிறு குறைபாடுகளை தோற்றுவித்து பயனர்களின் வெறுப்புக்குள்ளாகியது. இதன்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கிய மைக்ரோசொப்ட் வித்தியாசமாகவும் அதேவேளை நிலைக்கக்கூடியதுமான ஒரு இயங்கு தளத்தினை களம் நுழைக்க வேண்டி ஏற்பட்டது.

இவ்வாறனதொரு சந்தர்ப்பத்திலேயே விஸ்டாவின் தோல்வியினால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்தாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது அடுத்த அஸ்திரமான விண்டோஸ் 7 இயங்கு தளத்தினை 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிட்டது.

இந்த விண்டோஸ் இயங்கு தளமே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பயனர்களை விஸ்டாவிலிருந்து சற்று ஆறுதல் அளித்து வருகின்றது. தற்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தும் இயங்கு தளமும் இதுவே. இருப்பினும் இன்றளவிலும் டெக்ஸ்டொப் கணனிகளில் 60% இற்கும் அதிகமானோரும் மொத்தத்தில் 30% அதிகமானோரும் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்.பீ என்றே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இணையத்தளங்களில் நடாத்தப்படும் கருத்துக் கணிப்புக்களில் இதுவரை வெளியான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிறந்த படைப்பாக பலரும் ஆதரவாக வாக்களிப்பது விண்டோஸ் எக்ஸ்.பீ என்பதே. இதிலிருந்தே அறியமுடியகின்றது விண்டோஸ் 7 காலத்தின் தேவையிலிருந்து சற்று பின் நிற்பது.

இருந்தபோதும் இன்னும் சில நிறுவனங்கள் விண்டோஸ் எக்ஸ்.பீ மற்றும் சில அரிய நிறுவனங்களில் விண்டோஸ் 98 இயங்கு தளங்களும் கூட பயன்படுத்துகின்றது. எமது நாட்டினை போன்று மேற்கத்தேய நாடுகளில் தடைசெய்யப்பட்ட (Pirate) பதிப்புக்களை பயன்படுத்த முடியாது. எனவே செலவீனங்களை கருத்திற்கொண்டும் சில நிறுவனங்கள் புதிய இயங்கு தளங்களினை கொள்வனது செய்வதினை தவிர்த்து வருகின்றது. விண்டோஸ் 7 இன் பரவலுக்கும் இதுவும் ஒரு தடையாக அமைந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் விண்டோஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. காரணம் இதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பயனர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

64 பிட் கணனிகளுக்கு சிறந்த பயன்பாட்டினை காட்டும் விண்டோஸ் 7 இல் கோம் குரூப், ஸ்னெப், ஜம்ப் லிஸ்ட், விண்டோஸ் லைவ் எஸ்ஸென்சியல், விண்டோஸ் சேர்ச், விண்டோஸ் சேர்ச் பார் மற்றும் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்ட விண்டோஸ் பார் என தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சாதகமான பல புது அனுபவங்களை தரும் விடயங்கள் காணப்பட்டது.

இதனால் சிறிது சிறிதாக பயனர்கள் விண்டோஸ் 7 இல் கவரப்பட்டனர். மேலும் இதன் வன்பொருட்களின் தேவைகளை நிறைவு செய்ய தற்போது இலகுவாக உள்ளது. விஸ்டாவின் வருகையிருந்து விண்டோஸ் 7 இன் வருகையிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வன்பொருட்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இதனால் பழைய கணனிகளின் சில வன்பொருட்கள் சந்தையில் மறைந்துவிட்டது.

இதன் பொருட்டு கணனிகளின் வன்பொருட்களின் தரம் உயர்ந்தது. இதனால் விண்டோஸ் 7 இன் வன்பொருட்களின் தேவையை இலகுவில்; நிறைவேற்றக்கூடிய பயனர்கள் அதிகரித்தது விண்டோஸ் 7 இற்கான பரவலுக்கு வாய்ப்பாக அமைந்தது. மேலும் தற்போது மடிக்கணனி, நெட்புக், நோட் புக் மற்றும் டெப்லட் என்பவற்றின் பாவனை டெக்ஸ்டொப் கணனிகளை மிஞ்சுவதும் விண்டோஸ் 7 இன் தேவையினை அதிகரித்துள்ளது.

இவ்வாறிருந்த போதும் இதிலும் குறைபாடுகள் காணப்படவே செய்தது. குறிப்பாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மென்பொருட்கள் இதற்கு ஒத்திசையவில்லை, வேகம் குறைவு, விண்டோஸ் ஏரோ இயக்கம் தடைப்பட்டிருத்தல் மற்றும் டீ.வீ.டீ ரொம் இனை கணனியிலிருந்து விலக்குதல் என சில பல குறைபாடுகளை கொண்டிருந்தது. இவற்றுடன் சேர்த்து மேலும் சில குறைகளும் காணப்பட்டது.

விஸ்டாவில் ஏற்பட்ட குறைபாடுகளை போலல்லாமல் இக்குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. அதற்கான தீர்வுகளை மைக்ரோசொப்ட் நிறுவனமே வழங்கியமையால் பயனர்களை மெல்ல மெல்ல கவர்ந்தது.

மேலும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான கணனிகளில் முதன்மை இருப்பாக விண்டோஸ் 7 இயங்கு தளமே காணப்பட்டது.

இவ்வாறான பல சாதகமான காரணிகளை விஸ்டாவினை விட அதிகளவில் விண்டோஸ் 7 கொண்டிருந்தமையினால் விண்டோஸ் 7 இரண்டரை ஆண்டினை தாண்டி மக்களிடத்தில் நிலைத்திருக்க முடிந்து.

இனி வரும் காலங்களில் விண்டோஸ் 8 இயங்கு தளம் இந்த விண்டோஸ் 7 இன் பாவனை கட்டுப்படுத்தும் அளவிற்கு அற்புதமான பல புதிய தொழில்நுட்ப அம்சங்களினை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பீட்டா வெளியிட்டு இந்த குறுகிய காலப்பகுதியிலே மிகச் சிறப்பான பெயரினை விண்டோஸ் 8 அள்ளியிருப்பது மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு மட்டுமன்றி மாற்றத்தை விரும்பிய பயனர்களையும் உற்சாகப்படுத்தும் என நம்பலாம்.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகமான மாற்றங்களுடன் வெளிவந்திருக்கும் விண்டோஸ் 8 இன் குறிப்பிடத்தக்க மிக முக்கிய அம்சமாக தொட்டு இயக்கும் வசதி என தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் தற்போது அனேகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் என தொடுதிரை வசதியினை பயன்படுத்துவதனால் கணனியிலும் இதனை வெகுவாக எதிர்பார்க்கின்றனர்.

எனவே விண்டோஸ் 8 இல் இவ்வசதி காணப்படுவதனால் பலரும் இந்த அனுபவத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனாலும் பலரினால் இப்போது இவ்வசதியினை அனுபவிக்க முடியவில்லை இருப்பினும் பலரும் இணையத்தளங்களினூடாக இவ்வசதி சிறப்பாக இருக்கும் என பீட்டா பயனாளர்கள் தெரிவித்துவருகின்றனர். தொடுதிரையுடன் கூடிய கணனிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்துடன் வெளியாகி அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

தொடுதிரை தவிர்த்து விண்டோஸ் 8இல் பயனர்களை கவர்ந்துள்ள அம்சங்களாக விளையாட்டுக்கள், சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையத்தளங்களுடன் குறுந்தகவல் அனுப்பும் செயல்பாட்டில் இணைந்து இயங்கும் சேவை, ஸ்டர்ட் பாருக்கு பதிலாக அமைந்துள்ள மெட்ரோ என்ற அமைப்பினூடாக விண்டோஸ் எப்ளிகேசன் ஸ்டோரிலிருந்து அப்ளிகேசனை தரவிறக்கும் வசதி, மெட்ரோ அப்ளிகேஷன்கள் அமைந்துள்ள WinRT API கட்டமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்திரத்தன்மை, க்ளவ்ட் இணைப்பு, ஒருங்கிணைந்த பிற தள சேவைகள், ஒருங்கிணைக்கப்பட்ட மின்னஞ்சல் வசதி எல்லாவற்றுக்கும் மேலாக எளிமையான அமைப்பு என்பன பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விண்டோஸ் 8 பயனர்களை சென்றடைவதற்கான வாய்ப்பு அதிகமாவே உள்ளது எனலாம் காரணம் இதுவரையிலும் டெக்ஸ்டொப் கணனிகளில் அதிகளவில பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் எக்ஸ்.பீ இயங்கு தளம் ஒத்திசையக் கூடிய வன்பொருட்களுடைய கணனியிலும் இந்த விண்டோஸ் 8 இனை நிறுவிக்கொள்ளும வண்ணம் அமைக்கப்பட்டள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சாதகத் தன்மைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள விண்டோஸ் 8 இயங்கு தளமானது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஏற்படுத்திய சறுக்கலை நிவர்த்தி செய்து மைக்ரோசொப்டினையும் மற்றும் பயனர்களையும் நிச்சயம் மகிழ்ச்சியுறச் செய்யும்.

அத்தனை எளிமையான விண்டோஸ் எக்ஸ்.பீ எத்தனை ஆடம்பரமான பதிப்புக்களுக்கும் சவால்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது இவற்றை மீறி தன்னை நிலைநிறுத்தும் முனைப்புடன் களமிறங்கும் விண்டோஸ் 8 காலத்தின் தேவையை பூர்த்தி செய்யுமானால் விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற காலத்தை தாண்டி வாழும் வீரனை வீழ்த்த முடியும்.

விண்டோஸ் 95, விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற வரிசையில் இன்னுமொரு வெற்றியை ஏற்படுத்தக் காத்திருக்கும் மைக்ரோசொப்ட்டிற்கு கைகொடுக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் பொதிந்த இயங்கு தளமே விண்டோஸ் 8.

விரைவில் கணனி உலகில் புதியதொரு பரிணாமத்தினை ஏற்படுத்த களமிறங்கவுள்ள மைக்ரோசொப்ட்டின் புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8 இன் புதுமைகளை அனுவத்திட பீட்டா பதிப்பினை இன்றே தரவிறக்கி புதியதோர் பாதையை நோக்கிய புதிய பயணத்திற்கு தயாராகுங்கள்.

-ஏ.எம்.ஆர்