Total Pageviews

Tuesday, October 2, 2012

வெள்ளை மாளிகையையும் விட்டுவைக்காத ஹெக்கர்ஸ்

அண்மைக்காலமாக அரசாங்க ஸ்தாபனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் என பல அமைப்புகளின் கணனிக் கட்டமைப்புகளை குறிவைத்து செயலிழக்கச் செய்யும் அல்லது திருடும் வழக்கம் ஹெக்கர்ஸ் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் தனிப்பட்ட தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஹெக்கிங் செயற்பாடுகளை விட அதிகளவில் நாடுகளுக்கிடையேயான ஹெக்கிங் தாக்குதல் அண்மைக்காலங்களில் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஹெக்கிங் தாக்குதல்கள், மத்தியகிழக்கில் உள்ள சில நாடுகளின் வங்கிகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதல்கள் என பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுக்கையில், நாடொன்றின் அனுசரணையுடன் (state-sponsored hacking) இன்னொரு நாட்டின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர்களின் மின்னஞ்சல் கணக்கினை குறிவைத்தோ நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

மேலும் குறிப்பாக சீனாவில் தனிப்பட்ட நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளின் மீதான ஹெக்கிங் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூகுள் சுட்டிக்காட்டியிருந்தது.

இவை அனைத்தும் உலகநாடுகள் சைபர் யுத்தத்தினை (Cyber war fare) நோக்கி நகர்வதினையே சுட்டிக்காட்டுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக் கணனிகள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனை மறுத்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரிகள் கருத்துவெளியிடுகையில், குறிப்பிட்டதொரு வலையமைப்பினைக் குறிவைத்து ஸ்பெயா பிஸிங் (spear phishing) எனும் முறைமூலம் ஹெக்கிங் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

மேலும் இம்முயற்சியின்போது எந்தவிதமான முக்கிய இரகசியங்களும் திருடப்படவில்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

White computers has been hacked?