Total Pageviews

Wednesday, May 22, 2013

வழமைக்கு மாறான 'நித்திய சுடர்' (அணையாத தீ) : நியூயோர்க் நீர்வீழச்சியில் அதிசயம்


மனி­தர்­களின் ஆசையைப் போலவே அறி­வியல் உலகின் தேட­லுக்கும் ஓர் எல்லை இல்லை. ஆனால் அதுவே அறி­வி­யலின் எல்லை கடந்த வெற்­றி­க­ளுக்கும் மேலும் கடக்­க­வி­ருக்கும் எல்­லை­க­ளுக்கும் கார­ணமாய் அமைந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

அவ்­வா­றான ஒரு தேடலில் தெரி­ய­வந்த உண்மை ஒன்று ஆராய்ச்­சி­யா­ளர்­களை திண­றச்­செய்­துள்­ளது என்றே சொல்ல வேண்டும்.

அதா­வது "நித்­திய சுடர்" என்­பது இயற்­கை­யாக அணை­யாமல் ஓரி­டத்தில் தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்பே ஆகும். அது எவ்­வாறு தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்­கின்­றது என்றால், சூடான பாறை­களின் கீழி­ருந்து இயற்­கை­யாக வெளி­யேறும் ஒரு வகை வாயு­வினால் என அறி­வியல் விளக்கம் கூறு­கி­றது.

இவ்­வா­றான பாறைகள் உலகின் பல இடங்­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்கில் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பி­லெல்லாம் மறை­வான சக்­திகள் என்று மக்­களை பீதிக்­குள்­ளாக்கும் புரியாப் புதி­ரா­கவோ வேறு வகை­யான தடு­மாற்­றங்­களோ ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளிடம் இம்­மி­ய­ளவும் இல்லை. இதில் அறி­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எந்த குழப்­பமும் இல்லை.

சில உண்­மைகள் கற்­ப­னை­களைத் தாண்டி நிற்கும். அது­போ­லவே இந்த நித்­திய சுடர் என்ற அம்­சமும். நெருப்­பில்­லாமல் புகை­யாது என்­பார்கள். உண்­மைதான் நித்­திய சுடர் என்­ப­தற்கு பின்­னாலும் நெருப்பாய் சில கார­ணங்கள் இருக்­கத்தான் செய்­கி­றது. ஆனால் அவை அமா­னுஷ்ய சக்தி அல்ல என்­ப­தை தெளி­வாகக் கூறு­கின்­றனர் விஞ்­ஞா­னிகள்.

அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கி­லுள்ள எழில் கொஞ்சும் செஸ்ட்நட் றிட்ஜ் பூங்­கா­வி­லுள்ள நீர்­வீழ்ச்­சியின் அடியில் "நித்­திய சுடர்" ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இது உல­கி­லுள்ள வசீ­க­ர­மான நித்­திய சுடர்­களில் ஒன்று.

இந்த நித்­திய சுடரும் வழ­மை­யா­னது போன்றே என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்­பிக்­கொண்­டி­ருந்த நிலையில் அண்­மையில் இதன் மீதான இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­களின் ஆராய்ச்­சியில் தெரி­ய­வந்­துள்ள உண்மை அறி­வி­ய­லா­ளர்­களின் அறிவை சோதிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஏனெனில் குறித்த நித்­திய சுடர் வழ­மைக்கு மாறான முறையில் எரிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அது எப்­படி சாத்­தி­யப்­ப­டு­கின்­றது என தற்­போது அறி­ய­மு­டி­ய­வில்லை எனவும் குறித்த ஆராய்ச்­சி­குழு தெரி­வித்­துள்­ளது.

அதா­வது,  ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்னர் உரு­வா­ன­தாக நம்­பப்­படும் இந்த நித்­திய சுட­ரா­னது நீர்­வீழ்ச்­சியின் அடிப்­ப­கு­தியில் பாறைக்குள் இருக்­கி­றது. இதில் எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்­பா­னது பழை­மை­யா­னதும் மிக அதிக வெப்­ப­மான பாறையின் அடி­யி­லி­ருந்து எரிவை ஏற்­ப­டுத்தும் "சேல்" எனப்­படும் ஒரு வகை கல­வை­யி­லி­ருந்து வெளி­யாகும் இயற்கை வாயுவின் மூலம் எரி­வ­தாக நம்­பப்­பட்­டது.

சேல் என்ற அமைப்பு களி போன்று அமைந்­தி­ருக்கும். இதில் சுண்­ணாம்­புக்கல் மற்றும் குவார்ட்ஸ் உள்­ளிட்ட மேலும் பல கனி­மங்கள் படை­யாக இணைந்­தி­ருக்கும் இது ஒரு வகை இயற்கை வாயுவை வெளி­யி­ட­வல்­லது. அவ்­வாயு எரி­வதை ஊக்­கு­விக்கும் சக்­தி­யாக இருக்கும்.

ஆனால்  இந்த நித்­திய சுடர் சேல் மூலம் வாயுவைப் பெற்று எரி­ய­வில்லை என்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. இது குறித்து இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கையில், நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை தொடர்ச்­சி­யாக எரி­வ­தற்­கு­ரிய வெப்­பத்தை வளங்­கு­ம­ள­விற்கு சக்தி படைத்­தி­ருப்­ப­தற்கு சாத்­தி­ய­மில்லை.

ஏனெனில் அப்­பா­றையின் வெப்­ப­நிலை தேனீர் கோப்பை அள­விற்கே சூடா­க­வுள்­ளது. மேலும் அதி­­லுள்ள "சேல்" என்ற அமைப்பும் முதலில் எதிர்­பார்த்­தது போன்று பழை­ய­ன­வாக இல்லை. எனவே இவ்­வி­ரண்டு கார­ணி­க­ளா­லி­ருந்தும் குறித்த நித்திய சுடர் எரி­ய­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது என ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றனர்.

எனவே வேறு ஒரு எரி மூலத்தின் சக்­தி­யி­னா­லேயே எரிய வேண்டும் ஆனால் அது என்ன? அதனை குறித்த நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை எவ்­வாறு உரு­வாக்­கு­கின்­றது என்­பது தொடர்பில் தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­க­மு­டி­ய­வில்லை.

இயற்­கை­யுடன் சம்­மந்­தப்­பட்ட சில விட­யங்­க­ளுக்கு இயற்­கையே தீர்­வாக பல சமை­யங்­களில் அமைந்­து­விடும். அந்த வகையில் இந்த நித்­திய சுடரும் அமைந்­தி­ருக்­கக்­கூடும். ஆனால் அது என்ன என்­பது குறித்து அறி­வியல் உலகம் அறிய முற்­ப­டு­வது வழ­மையே. இதனால் ஆராய்ச்­சி­யா­ளர்கள் இந்த அணையா நெருப்பின் மீதான ஆராய்ச்­சி­க­ளையும் அணைப்­ப­தா­க இல்லை.

சேல் போன்ற மேலும் பல மூலங்கள் காணப்­பட வாய்ப்­பி­ருக்­கி­றது. ஆகவே இவ்­வ­கை­யான மூலங்­களை நீரி­லி­ருந்து அல்­லது பாறை­க­ளி­லி­ருந்து வெளி­யேறும் குறித்­த­ள­வி­லான வெப்பம் காபன் பிரிப்பு செய்­வ­தனால் அணையா நெருப்பு நியூ­யோர்க் நீர்­வீழ்ச்­சி­யில் உரு­வா­கி­யி­ருக்­கலாம்.

அல்­லது அமெ­ரிக்­காவின் கிழக்கு கடற்­க­ரையின் பூமியின் கீழ் மெதேன் வாயு உரு­வாகும். இதனை ஒத்த ஒரு வழி­யில் உரு­வாகும் வாயு மூலம் இங்­குள்ள அணையா சுடர் எரிந்­து­கொண்­டி­ருக்­கலாம் என்­பது ஆராய்ச்­சி­யா­ளர்களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதே­வேளை பென்­சில்­வே­னி­யாவின் வட­மேற்கு காட்டுப் பகு­தியில் உள்ள ஒரு குழியில் அணை­யாமல் நெருப்பு இருந்­து­கொண்டே இருக்­கி­றது. இதற்கு காரணம் பழை­மை­யான இயற்கை எரி­பொருள் வாயு அங்கு கசி­வ­துதான் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது அங்க ஏற்­பட்­டுள்­ள ஒழுக்கின் மூலம் எதேன் மற்றும் புரபேன் போன்ற வாயுக்கள் வெளி­யா­கின்­றது. அதுவே தொடர்ச்சியான எரிவுக்கு காரணமாகின்றது.

இதேபோல ஒரு அடர்த்தியான வாயுக் கசிவு இங்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அது என்ன என்பதை அறியவே தற்போது ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
விரைவில் அது என்னவென்பது தெரிய வரும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் மர்மத்திற்கான விடை காண் பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தமது முயற் சிகளை ஆராய்ச்சிகளாய் தொடர்ச்சியாக எரிய விட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே செஸ்ட்நட் றிட்ஜ் பூங்காவிலுள்ள நித்திய சுடரும் மர்மாய் எரிந்துகொண்டே இருக்கிறது.

-அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 17.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.