Total Pageviews

Monday, May 20, 2013

பக்டீரியாவிலிருந்து டீசல் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


உல­கி­லுள்ள மிகச் சில விட­யங்­களைத் தவிர்த்து ஏனை­ய­வற்­றிற்கு பிர­தி­யீடு என்­பது ஒருநாள் சாத்­தி­ய­மாகும் என்­பதை ஞாப­கப்­ப­டுத்­து­வதாய் சில சம்­ப­வங்கள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துண்டு.

அந்த வகையில் அண்மையில் விஞ்­ஞா­னிகள் பிர­தி­யீடு என்ற விட­யத்தை ஞாப­கப்­ப­டுத்­திய மற்­று­மொரு விட­யமாய் அமைந்­துள்­ளதே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் என்ற புத்தம் புதிய சாதனை முயற்சி.

மனிதன் உயிர் வாழ நீர், நிலம், உணவு, ஒக்­ஸிஜன் என்­பது போன்ற அத்­தி­ய­வ­சி­ய­மான சில விட­யங்கள் தேவைப்­ப­டு­கின்­றது. அது­போ­லவே இன்று மனிதன் இல­கு­வா­கவும் ஆடம்­ப­ர­மா­கவும் உயிர் வாழ்­வ­தற்கு பல விட­யங்கள் அவ­சி­யமாய் இருக்­கின்­றது.

அவற்றில் எரி­பொ­ரு­ளுக்­கான தேவை­யென்­பது தவிர்க்க முடி­யா­த­தொன்று. இந்­நி­லையில் தற்­போது பாரி­ய­ளவில் தேவைப்­படும் மூல­மாக பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரி­பொ­ருட்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் எதிர்­கால சந்­ததிக்கு இவ்­வகை எரி­பொ­ருட்கள் கிடைக்­காது போய்­விடும் என்­பது விஞ்­ஞா­னி­களின் கருத்து.

இருப்­பினும் அவற்­றுக்கு மாற்­றீ­டாக இன்­று­வ­ரையில் எது­வி­த­மான நிரந்­தரத் தீர்­வு­களும் கிடைக்­க­வில்லை. இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் உயி­ரி­னங்­களைப் போல இவ்­வகை எரி­பொ­ருட்­க­ளையும் கையி­ருப்பில் இருப்­ப­வற்றை பாது­காப்­பதைத் தவிர புதி­தாக உரு­வாக்க முடி­ய­வில்லை.



இதனால் எதிர்­கால சந்­த­திகள் பயன்­ப­டுத்த தேவை­யான ஆனால் அழிந்­து­கொண்­டி­ருக்கும் விட­யங்­களில் ஒன்­றாக இன்று எரி­பொ­ருட்கள் மாற்­ற­ம­டைந்­து­விட்­டது. இந்­நி­லையில் விஞ்­ஞா­னி­களின் அண்­மைய கண்­டு­பி­டிப்­பொன்று சற்றே திருப்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது எனலாம்.

அதா­வது ஈ கோலை எனும் ஒரு வகை பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசலை உரு­வாக்கி இங்­கி­லாந்து விஞ்­ஞா­னிகள் அடுத்த சந்­த­தியின் நகர்­வுக்கு நம்­பிக்கை அளித்­துள்­ளனர். தற்­போது பரீட்­சார்­த்த அளவில் வெற்றி பெற்றுள்ள இத்­திட்டம் விரைவில் பாரி­ய­ளவில் சாத்­தி­யப்­படும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பக்டீரியா உலகில் முதல் தோன்­றிய உயிர் வடி­வ­மாகும். பக்­டீ­ரி­யாக்­களில் பல வகை உண்டு. அவ்­வா­றானா வகைகளில் ஒன்றே இந்த ஈ கோலை எனப்­படும் பக்­டீ­ரியா. இவ்­வகை பக்­டீ­ரி­யாக்கள் மனி­தனின் பெருங்­கு­டலில் பெரு­ம­ளவில் காணப்­படும். இவை k2 விற்­ற­மினைத் தயா­ரித்து உட­லுக்கு நன்மை பயக்க வல்­லது. இதே­வேளை ஈ கோலை­யி­லுள்ள மற்­று­மொரு வகை பக்­டீ­ரியா, உண­வுகள் அல்­லது குடி நீர் ஊடாக வயிற்­றுக்குள் சென்றால் வயிறு சம்­மந்­த­மான பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

இந்த பக்­டீ­ரி­யா­வினை தற்­போது இல­கு­வாக பெருக்கம் செய்து பாது­காக்க முடியும். இவ்­வாறு ஆராய்ச்­சி­க்கூ­டங்­களில் வளர்க்கும் பக்­டீ­ரி­யாவின் மர­ப­ணுவில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தியே விஞ்­ஞா­னிகள் டீச­லினை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இவ்­வாறு தயா­ரிக்­கப்­படும் டீச­லா­னது. சாத­ர­ண­மாக நாம் பயன்­ப­டுத்தும் குரூட் எண்­ணெயில் இருந்து பிரித்து எடுக்­கப்­படும் டீசலைப் போன்றே இருக்கும். இவற்­றுக்­கி­டை­யி­லான வித்­தி­யாசம் மிக மிகக் குறைவு என்­கி­றார்கள் இதனை கண்­டு­பி­டித்த இங­்கி­லாந்­தி­லுள்ள எக்­செடர் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சிக்­குழு தெரி­விக்­கின்­றது.

எனவே இந்த உயி­ரியல் வகை எரி­பொ­ரு­ளான டீச­லைக்­கொண்டு தற்போது பயன்பாட்டிலுள்ள டீசல் வாக­னங்­களை இயக்­கவும் முடியும். இதன்­போது வாக­னத்தின் எஞ்­சி­னுக்கு ஒரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­கி­றார்கள்.

இது குறித்து எக்­செடர் பல்­க­லைக்­க­ழக உயி­ரியல் விஞ்­ஞான துறை பேரா­சி­ரியர் ஜோன் லவ் கூறு­கையில், இக்­கண்­டு­பி­டிப் பின் மூலம் தற்­போது புழக்­கத்­தி­லுள்ள டீசல் வாக­னங்­களின் எஞ்சினில் எது­வித மாற்­றமும் செய்ய வேண்­டி­ய­தில்லை. வணிக ரீதி­யான எரி­பொ­ருட்­களைப் போலவே இந்த உயி­ரியல் எரி­பொ­ருளும்.

வணிக ரீதி­யாக இந்த உயி­ரியல் எரி­பொ­ருளை வெளி­யிட்டு இப்­போ­தி­லி­ருந்து பயன்­ப­டுத்­தினால் 2050ஆம் ஆண்­ட­ளவில் 80 வீதத்­தினால் பச்சை வீட்டு வளைவு ஏற்­ப­டு­வ­தனைத் தவிர்க்­கலாம். எனவே இவ்­வகை எரி­பொருள் உலகின் சுற்­றுப்­புறச் சூழ­லையும் பாது­காக்கும் எனத் தெரி­வித்­துள்ளார்.

நிலைமை இவ்­வா­றி­ருக்க தற்­போதைய நிலை­மையில் பாரி­ய­ளவில் ஈ கோலை பக்­டீ­ரியா மூலம் டீசல் தயா­ரிப்­ப­தில் பல தடைகள் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது 200 லீட்டர் பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து ஒரு மேசைக்­க­ரண்டி அள­வான டீச­லையே தற்­போது தயா­ரிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

எனவே பல்­லா­யிரம் லீட்­டர்­களை குறைந்த உற்­பத்திச் செலவில் எவ்­வாறு தயா­ரிப்­பது என்­பதே தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்கள் முன்­னுள்ள சவால் ஆகும். முடிந்­த­வ­னுக்கு நீரும் நெருப்­பாகும் என்­ப­தனை அடிக்­கடி உணர்த்தும் விஞ்­ஞா­னி­க­ளுக்கு விரைவில் இது சாத்­தி­ய­மா­வது திண்ணம்.

இது தொடர்பில் இத்­திட்­டத்­திற்கு அனு­ச­ரணை வழங்கும் செல் ப்ரொஜக்ட் என்ட் டெக்­னொ­லொ­ஜியின் முக்­கிய உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான ரொப் லீ கூறு­கையில், தற்­போது இக் கண்­டு­பி­டிப்பில் பல தடைகள் இருப்­பினும் எதி­கா­லத்தில் தேவை­மிகு டீச­லாக மாறி சூழ­லையும் பாது­காக்­கின்ற உயி­ரியல் எரி­பொருள் கண்­டு­பி­டிப்பில் பங்­கா­ளி­யாக இருப்­பதில் பெரு­மை­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை உயி­ரியல் எரி­பொருள் என்­பது உல­கிற்கு ஒரு புத்தம் புதிய விட­ய­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் திட்டம் சாத்­தி­ய­மா­ன­தொன்று என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும்.

இலங்­கை­யில் கூட 2006ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கிளி­சரின் மரத்­தி­லி­ருந்து உயி­ரியல் எரி­பொருள் உற்­பத்தி செய்­யலாம் எனக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மேலும் தற்­போது இந்­தி­யா­விலும் சில பகு­தி­களில் காட்­டா­ம­ணக்கு எண்ணெய் சேர்க்­கப்­பட்ட டீசல் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

கன­டாவில் கடந்த வருடன் 15 பேர் பய­ணிக்கக் கூடிய விமானம் ஒன்று கடுகு எண்ணெய் மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு இயக்கி சாதனை படைக்­கப்­பட்­டது.

இது மட்­டு­மின்றி சோளத்­தி­லி­ருந்தும் எரி­பொருள் தாயா­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால் இது போன்ற உயி­ரியல் எரி­பொ­ருட்கள் பரந்தள வில் உற்பத்தி செய்ய பல்­லா­யி ரம் ஏக்கர் காணி­களில் தேவை­யான தாவ­ரங்­களைப் பயி­ரிட வேண்டி ஏற்­படும். எனவே உற்­பத்திச் செல­வுகள் அதி­க­மாக இருக்கும் என்பதுடன் பயிர் நிலங்களுக்கும் பயிர்களுக்கு மான முக்கியத்துவம் குறைந்து விடவும் வாய்ப்புண்டு. ஏனெ னில் எரிபொருளின் தேவை என்பது உயிரின் தேவை போல மாறிவிட்டதே காரணம்.

ஆனால் பக்டீரியாவிலிருந்து டீசல் என்ற திட்டம் அவ்வாறில்லை என்பதால் ''பக்டீரியா டீசல்'' உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் நிறுவப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உண்டு.ஏற்கனவே பக்டீரியாவினைக் கொண்டு தயாராகும் ஈஸ்ட், சீஸ், யோகட், சோய் சோர்ஸ், பிக்கிள் மற்றும் வைன் என பலவகைப் பொருட்களை உண்டு, பருகி மகிழ்வதைப் போல விரைவில் பக்டீரியாவினூடாக ஆரோக்கியமான சூழலில் எம்மை வாகனங்களில் பயணம் செய்ய வைக்கவும் அறிவியல் உலகம் தயாரிகிவிட்டது. நாமும் அனுபவிக்க மட்டுமாவது தாயாராகிவிடுவோம்!

-அமானுல்லா எம்.றிஷாத்