Total Pageviews

Monday, May 20, 2013

இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்'

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மனல் டொரஸ் என்ற ஆடை வடிவமைப்பாளரே இச்சாதனத்தை கண்டுபிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த துணிகள்-தெளிப்பானைக் கண்டுபிக்க லண்டனிலுள்ள இம்பரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் உதவியையும் பெற்றுள்ளார் மனல் டொரஸ்.

பொலிமர் கலவையினால் உருவாக்கப்பட்ட கலவையைக் கொண்டு குறித்த சாதனத்தின் மூலம் 15 நிமிடங்களில் ஒரு டீசேர்ட்டினை உருவாக்குகிறார் மனல். இந்த ஆடையை கழுவி மீண்டும் அணிந்துகொள்ளமுடியும் எனத் தெரிவிக்கிறார் மனல்.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், இதனை விட சிறந்த ஒரு துணிக்கலவையினை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இவரது கண்டுபிடிப்பினை எதிர்வரும் வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பெஷன் நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சாதனத்தை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்வதோடு இதற்காக ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கவுள்ளார் மனல்.

இனி துணிகளைக் கொண்டு தைத்து அதை உடுத்துவதை மறந்து ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம் போல இருக்கே..


By AM.Rizath/Metronews