சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, May 13, 2016

நியாயத்தை அநியாய விலையில் வாங்கிவிட்டான் முதலாளி

நியாயம் என்ற ஒன்று ஒன்று எங்கேயாவது இருக்கும். அதை தோண்டி எடுக்கபோகிறேன் எனத் தேடினால் நியாயத்தை அநியாய விலையில் விற்கின்ற முதலாளியிடமே அதன் கடப்பாறையும் சிக்கிக்கொண்டிருக்கிறது.
 
10:1 என்ற விகிதத்திலேயே எனக்கு மொழிபெயர்ப்பு கதைகள் பிடிக்கும் அப்படி பிடித்ததில் இதுவும் ஒன்று. புது அனுபவத்தை தருகிறது இந்தக் கதை. இந்தக் கதையை மொழிபெயர்த்தது யார் எனத் தெரியவில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்.
 
 
 
அறிவியல் புனைகதை - ஜீன் திருடனின் விநோத வழக்கு
(மூலம் நான்ஸி க்ரெஸ்)
(இன்றைய விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் நான்ஸி க்ரெஸ். சிக்கலான
மரபணு விஞ்ஞானக் கதைகளுக்குப் பெயர் போனவர். அமெரிக்கர். நெபுலா, ஹ்யூகோ
போன்ற விருதுகள் பெற்றவர். Asimov 's இதழில் 2002-ஆம் வருடம் வெளிவந்த Patent
Infringement என்ற கதையின் தமிழாக்கம் இது. இவர் எழுதிய 'ட்ரினிட்டி ' போன்ற மிகச்
சிறந்த விஞ்ஞானக் கதைகள் அளவில் பெரியவை. தமிழில் மொழிபெயர்க்கக் கடினமானவை.
இது சாதாரணமான கதையே என்றாலும் அளவில் சிறியது. பத்திரிகை செய்தி, கடிதங்கள்,
அலுவலக மெமோக்கள் மூலம் சொல்லப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். நான்ஸி க்ரெஸ்ஸின்
இணைய தளம்: www.nancykress.com)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் போஸ்ட்
விஷக் காய்ச்சலுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு !
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் ஹாலிடெக்ஸ் என்ற புதிய மரபணு மருந்தை
மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்குப் பத்து
மாத்திரைகளில் முற்றிலும் குணம் தெரியும் என்று கம்பெனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அமெரிக்கா முழுவதும் மூன்று கோடி பேருக்கு மேல் இந்தக் கடுமையான தொற்று
நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். மிக வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ்
பாதித்தவர்களுக்கு இருமல், உடல் வலி, களைப்புடன் காய்ச்சல் ஏற்படும். நோய் அறிகுறிகள்
மறைந்த பிறகும் வைரஸ் உடலுக்குள்ளேயே தங்கியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும்
மறுபடி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இந்த வைரஸை முதன் முதலில் அடையாளம்
கண்டுபிடித்தவர் ப்ரொபஸர் அல்பர்ட்டன்.
 
அல்பர்ட்டன் வைரஸின் பாதிப்பால் அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 4 பில்லியன்
டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக முதன்மைக் கணக்காயர் அலுவலகக் குறிப்பொன்று
தெரிவிக்கிறது. ஹாலிடெக்ஸ் மருந்து நோயாளிகளின் உடலில் இந்த வைரஸுக்கு மாற்று மரபு
அணுக்களைச் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மறுபடி காய்ச்சல் வராமலும்
பாதுகாக்கிறது. கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி −ரண்டு வருட ஆராய்ச்சியின் பயனாக
இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நாடு முழுவதும் ஹாலிடெக்ஸ் பரவலான வரவேற்பு
பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
ஆஸ்பன் ஹில், மேரிலாண்ட் 20906
 
அன்புள்ள திரு.கெகல்மான்- திரு. பால்ஸ்டன் அவர்களுக்கு,
 
உங்கள் கம்பெனி அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்கு ஹாலிடெக்ஸ் என்ற ஜீன் சிகிச்சை
மருந்தை அறிமுகப் படுத்தியிருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். இந்த மருந்தில்
நீங்கள் உபயோகித்திருக்கும் ஜீன்கள் என்னுடையவை என்று நம்புகிறேன்.
இரண்டு வருடம் முன்பு - மே 5ம் தேதி - என்னுடைய குடும்ப டாக்டரிடம்
பேசிக்கொண்டிருந்த போது என்னைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் அல்பர்ட்டன் காய்ச்சல்
பரவியிருக்கிறது என்று தெரிவித்தேன். (எங்கள் அலுவலகத்தின் அக்கவுண்ட்ஸ்
டிபார்ட்மெண்ட் முழுவதற்கும் காய்ச்சல். என் மனைவி, குழந்தைகள், மாமியார்
எல்லோருக்கும் படுத்து விட்டார்கள். எங்கள் வீட்டு நாய்க்குக் கூட இந்த வைரஸ்
தாக்கியிருப்பதாக சந்தேகம்- ஆனால் வெட்னரி டாக்டர்தான் ஒத்துக் கொள்ளவில்லை.)
 
இத்தனைக்கு நடுவிலும் எனக்கு மட்டும் ஜுரம் வரவில்லை. என்னுடைய ஜீன்களில் ஏதோ
தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி −ருப்பதாக என் டாக்டர் சந்தேகித்து உடனே உங்கள்
ஆராய்ச்சிசாலைக்கு அனுப்பி அங்கே என் ரத்தம், திசு சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. உங்கள்
விஞ்ஞானிகள் என்னுடைய ஜீன்களை எதற்காவது பயன்படுத்தினால் தகவல் சொல்வதாகச்
சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் இன்றுவரை ஒரு தகவலும் வரவில்லை.
இதற்கிடையில் −ந்தப் பத்திரிகை செய்தியைப் பார்த்தேன்.
 
ஆகவே உங்கள் புதிய மருந்தில் என்னுடைய ஜீன்கள் எப்படிப் பயன் பட்டிருக்கின்றன
என்பதையும், லாபத்தில் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கு எவ்வளவு என்பதையும்
தயவு செய்து தெரிவிக்கவும். மிக்க நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : கடிதம் (இணைப்பு)
மார்ட்டி,
யார் இவன், கிறுக்கனா ? இதில் ஏதும் பிரச்சினை வருமா ?
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ் கடிதம்
 
பாப்,
 
ஆராய்ச்சிப் பிரிவில் விசாரித்து விட்டேன்; துரதிர்ஷ்டவசமாக, இந்த ஜோனதன் மீஸ் என்கிற
ஆளின் மரபணுக்களை வைத்துத்தான் நாம் ஹாலிடெக்ஸையே தயாரித்திருக்கிறோம். அதற்கு
எல்லா ரெக்கார்டும் −ருக்கிறது. அதைவிட சங்கடம் என்னவென்றால், ஜீன் சாம்பிள்
தருபவர்களின் உரிமைகளை ரத்து செய்ய நாம் சட்டம் கொண்டுவரச் செய்தோமே, அதற்குச்
சற்று முன்புதான் அவன் வந்துபோயிருக்கிறான்.
 
எப்படியிருந்தாலும், இந்த ஆசாமிக்கு சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது என்பதுதான்
என் கருத்து. மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் ஜீன்களின் பேடண்ட் எல்லாம்
கம்பெனிக்கே சொந்தம் என்பதற்குப் பல கோர்ட் தீர்ப்புகள் வந்திருக்கின்றன. இந்தக்
கடிதத்தை வைத்துப் பார்த்தால் மீஸ் அப்படி ஒன்றும் விவரமான ஆளாகவும் தெரியவில்லை.
(நாய்க்காவது, வைரஸாவது!) திரு. கெகல்மான் செத்துப் பத்து வருஷம் ஆகிவிட்டது என்பது
கூட இவனுக்குத் தெரியவில்லையே....அவன் இன்னும் வக்கீல் யாரையும் பார்க்கவில்லை
என்பது நிச்சயம்.
 
ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் சில்லறையை வீசியெறிந்து அவனை வாயை மூடிக்
கொண்டிருக்கச் சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி பேராசைக்காரர்களுக்கெல்லாம் காசு
தருவதே தப்பு. என்னைக் கேட்டால் இவனைக் கடுமையாக மிரட்டி ஒரு லெட்டர்
அனுப்பினால் போதும். பயத்தில் பாண்ட்டிலேயே கொஞ்சம் பாத்ரூம் போய்விட்டு, அத்துடன்
அடங்கிவிடுவான்.
என்ன சொல்கிறீர்கள் ?
- மார்ட்டி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
அதைச் செய்!
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
 
அன்புள்ள திரு மீஸ்,
 
எங்கள் கம்பெனியால் காப்புரிமை பெறப்பட்டுள்ள ஹாலிடெக்ஸ் மருந்தைப் பற்றிய உங்கள்
கடிதம், என் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டது. ஹாலிடெக்ஸின்மீது உங்களுக்குச்
சட்டபூர்வமான எந்த உரிமையும் இல்லை என்பதை இதன்மூலம் அறியவும். (தங்கள்
தகவலுக்காக, சில சட்ட முன்னுதாரணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.) −க்கடிதம்
பெற்ற பிறகும் தங்கள் தாவாக்களை உடனே விலக்கிக் கொள்ளவில்லையென்றால், தாங்கள்
என் கட்சிக்காரருக்கு மன உளைச்சல் தருவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதை அறியவும்.
 
உண்மையுள்ள,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
மேரிலாண்ட் 20906
 
அன்புள்ள திரு ப்ளேக்,
 
இது கொஞ்சம் கூட நியாயமல்ல. அத்தனையும் என்னுடைய ஜீன்கள்!! நான் ஒரு வக்கீலிடம்
போகப் போகிறேன். விரைவில் அவர் உங்களிடம் பேசுவார்.
- ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கேத்ரின் அட்வகேட்,
 
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் அவர்களின் சார்பில் நான் இதை எழுதுகிறேன்.
அவருடைய மரபணுக்களை அடிப்படையாக வைத்து நீங்கள் ஹாலிடெக்ஸ் என்ற மருந்தைத்
தயாரித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்கள் கம்பெனிக்கு லட்சக் கணக்கான - அல்லது
கோடிக்கணக்கான - டாலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இந்த மருந்தில் என் கட்சிக்காரரின்
கணிசமான பங்களிப்பை ஒப்புக் கொண்டு, அவருக்குச் சேரவேண்டிய பொருளாதார
ஈட்டையும் செய்வதே முறையாக இருக்கும் என்று நம்புகிறோம். இதைப் பற்றி விரிவாக
நேரில் பேசுவதற்கு விரைவில் ஒரு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
நாசமாய்ப் போச்சு! இந்த மாதிரி ஐந்தாம் படை வேலை செய்யும் மட்டிப் பயல்களைக்
கண்டாலே எனக்கு அடிமடியில் எரிகிறது. ஞாயிற்றுக் கிழமையன்று கோல்ப் விளையாடும்
போது ஸாம் ஒரு விஷயம் சொன்னான். (ஸாமைத் தெரியுமல்லவா உனக்கு ? நம் போட்டிக்
கம்பெனிகளைப் பற்றித் தகவல் கசியவிடுவானே, அவன்தான்). இர்வின்-லாஸி
கம்பெனிக்காரர்கள்தான் நம்மை ஒழித்துக் கட்டுவதற்காக −ந்த வக்கீல் நோட்டாஸ்
அயோக்கியனைத் தூண்டிவிடுவதாக ஸாம் நினைக்கிறான்.
அந்த அப்பன் பேர் தெரியாத ராஸ்கல் - இர்வினும் இதே வைரஸுக்கு மருந்து தயாரிக்கப்
படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். நாம் முந்திக்கொண்டுவிட்டோமே என்று அவனுக்கு
வயிற்றெரிச்சல்! நிச்சயம் அவன்தான் இதெல்லாம் செய்கிறான்.
இதில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் தாராளமாகக் கேஸ் போடட்டும்.
கோர்ட்டுக்கு வரட்டும். பார்த்துவிடலாம் ஒரு கை!
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ்
பாப்,
அதை விட நல்ல ஐடியா : நாமே முந்திக்கொண்டு மீஸ் மீது கேஸ் போட்டால் என்ன ?..
வைரஸ் தடுப்பு ஜீன்களுக்கான பேடண்ட் நம்மிடம் இருக்கும்போது அவன் எப்படி அந்த
ஜீன்களைச் சுமந்துகொண்டு திரியலாம் ? ஹாலிடெக்ஸை வாங்கிச் சாப்பிட்ட நம்
வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் −ந்த ஜீன்கள் −ருக்கலாம். எனவே அவன் நம்முடைய
மருந்தைப் போலவே வேறு எதையோ கள்ளச்சந்தையில் வாங்கித் தின்றிருக்கிறான் என்று
வாதாட முடியும்.
 
இதனால் பல விதத்தில் லாபம் : மீஸின் வக்கீல் நோட்டாசுக்குப் பதிலடி தருகிற மாதிரியும்
இருக்கும்; போட்டிக் கம்பெனிகளின் காற்றைப் பிடுங்கிவிட்ட மாதிரியும் இருக்கும். நம்
ஹாலிடெக்ஸுக்கு இன்னும் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் (பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை என்றாலும்). நம்மைப் பார்த்துக் காப்பியடித்துத் திருட்டு மருந்து தயாரிக்க
நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையும்.
 
அப்புறம் இன்னொரு விஷயம் : நம் ஆராய்ச்சிப் பிரிவில் மறுபடியும் நன்றாக விசாரித்தேன்.
ஜோனதன் மீஸ் என்று யாரும் நம்மிடம் வந்ததாகவோ, மரபணு சாம்பிள் கொடுத்ததாகவோ
எந்த ரெக்கார்டும் கிடையாது.
- மார்ட்டி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
என்ன மூளைய்யா உனக்கு!.. செய், ராஜா!.
ஆமாம், கேஸை விசாரிக்க யாராவது நல்ல ஜட்ஜ் வருகிறமாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா ?
திரு. பர்மிங்ஹாம் போல பிஸினஸ்காரர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட ஒரு நீதிபதி
கிடைத்தால் நன்றாக இருக்கும்.
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
நியூயார்க் டைம்ஸ்
ஹாலிடெக்ஸ் கள்ளச் சந்தை வழக்கு இன்று ஆரம்பம்
சட்ட விரோதமாக மரபணு மருந்துகள் சாப்பிட்டதாகக் கூறி ஜோனதன் மீஸ் மீது தொடுக்கப்
பட்ட வழக்கு −ன்று மன்ஹாட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மருந்து
தயாரிப்பாளர்களான கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் தொடுத்துள்ள இந்த வழக்கு சில
மாதங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப் பட்ட ஜோனதன் மீஸ்,
தனியார் கம்பெனி ஒன்றில் அக்கவுண்டண்ட் ஆகப் பணியாற்றி வருகிறார்.
 
இது மரபணு காப்புரிமை, உயிரியல் பொருள்களின் மீதான உரிமை போன்றவற்றின் சட்ட
நுணுக்கங்களைப் பற்றிய மிக முக்கியமான தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மரபணு பேடண்ட்டுகளை ரத்து செய்யக் கோரும் சில தன்னார்வ அமைப்புகள் நேற்று
இரவிலிருந்தே கோர்ட் வாசலில் தங்கி ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராக உள்ளன.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர் பர்மிங்ஹாம், கடந்த காலத்தில் பெரிய மருந்துக்
கம்பெனிகளுக்கு சாதகமான பல தீர்ப்புக்களை வழங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
கேத்ரின் அட்வகேட்,
 
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் இப்போதும் தங்கள் கம்பெனியுடன் சமாதான
உடன்படிக்கை காணத் தயாராக உள்ளார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
 
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
 
மகளே கேத்ரின்,
நீ எந்தக் காலேஜில் சட்டம் படித்தாய் ?... பாவம், ஏதோ தேங்காய் மூடி வக்கீல்
போலிருக்கிறது. எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம். எனவே, தோற்கிற
கட்சியிடம் பேச்சுவார்த்தைக்கு என்ன இருக்கிறது ?
உன்னுடைய அடுத்த கேஸாவது உருப்படியாக அமைய வாழ்த்துக்கள்.
 
வாஞ்சையுடன்,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் டைம்ஸ்
ஜோனதன் மீஸுக்கு சிறை!
ஜீன் திருட்டு வழக்கில் தீர்ப்பு!
 
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி உரிமம் பெற்றுள்ள மரபு அணுக்களைத் திருடியதாகத்
தொடுக்கப்பட்ட வழக்கில் ஜோனதன் மீஸ் குற்றவாளிதான் என்று நீதிபதி பர்மிங்ஹாம் −ன்று
தீர்ப்பளித்தார்.கம்பெனியிடம் அனுமதி பெறாமல் நோய் எதிர்ப்பு ஜீன்களை உடலில்
சுமந்துகொண்டு அலைந்த குற்றத்திற்காக மீஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த
நீதியரசர்....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
 
மார்ட்டி,
நான்தான் அப்போதே சொன்னேனே, உனக்கு உடம்பெல்லாம் மூளை! என்ன மாதிரி
விளம்பரம் கிடைத்திருக்கிறது நமக்கு, பைசா செலவில்லாமல்... ஜீனியஸ் !
உனக்காகவே ஒரு சின்ன வெற்றி விழா ஏற்பாடு செய்திருக்கிறேன் : பெண்டாட்டியை
அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ட்ரிப் அரூபா தீவுக்குப் போய்விட்டு வாயேன்; கம்பெனி
செலவில்.
- பாப்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
 
மார்ட்டி,
அந்தப் பயல் ஜெயிலுக்குப் போனதுடன் நமக்கு எல்லா பப்ளிஸிடியும் அடங்கிவிட்டது.
மறுபடியும் என் தோள் தினவெடுக்கிறது - இந்தப் புது ஐடியா சரிவருமா பார் : என்
பெண்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் - ஏதோ விஞ்ஞானப் பத்திரிகையில் படித்தாளாம்,
அந்த புரொபசர் அல்பர்ட்டன் இருக்கிறார் இல்லையா ? அவர் சில ஜீன்களை வைத்துக்
கொண்டு ஆராய்ச்சி செய்து கடைசியில் வைரஸைக் கண்டுபிடித்தார். அதே வைரஸ்
ஜீன்களைத்தான் நாம் மீஸிடமிருந்து எடுத்த ஜீன்களுடன் சேர்த்து மருந்து தயாரித்தோம்.
 
எனக்கு இந்த விஞ்ஞான இழவெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை - ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது - நாம் பேடண்ட் வாங்கியிருக்கிற ஜீன்களை வைத்துத்தான் அந்த மனிதர்
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உலகமெல்லாம் பிரசுரித்துப் பெயர் வாங்கிவிட்டார். ஆகவே
நாம் புரொபசர் அல்பர்ட்டன் மீதே ஒரு கேஸ் போட்டால் என்ன ? . . .

Wednesday, May 11, 2016

அப்போது விக்கிலீக்ஸ், இப்போது பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ்

உலகயே அதிர்ச்சிக்குள்ளாக்கி தற்போது பேசு பொருளாக மாறியுள்ள பனாமா பேப்பர்ஸ் எனும் பணப்பதுக்கலுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் ஓப்சோர்லீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய அதே அளவிலானதொரு அதிர்ச்சியையே இந்த பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.




முழுமையான தகவலுக்கு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்.














Wiki leaks then, The Panama Papers now

The Panama papers create shocking waves all over the word as revealed the names that connect with the most controversial panama papers by The international consortium of investigation journalism via offshore website, last night.


for more information watch this video.

Tuesday, May 10, 2016

Worst Horror Movies of 2016

-AM. RIFFAZ

Horror movies have existed for more than a century. Hollywood has produced many horror movies in the past that have really terrified us.
Movies like Nightmare on Elm Street, The Babadook, The Ring, Omen and many other films that have really makes the hair on the back of your neck stand up!

As a horror movie fan I am so disappointed about what Hollywood has produced in the last few years.
The number of horror movies is increasing year by year but most of these films fail to induce the audience's primal fears.

Worst Horror Movies I Watched

Let's forget the past. I never miss a horror movie. From the beginning of 2016 until this date I did not miss a movie which was released under the horror genre.

After watching these movies, I now want to help you save some time and money by listing the three worst horror movies I’ve watched from the beginning of this year – January 01, 2016 – until now - April 26, 2016.

So you can stay away from these worst horror movies and enjoy your time watching or doing something else.

01. Little Dead Rotting Hood

Produced by: David Michael Latt, David Rimawi, Paul Bales
Directed by: Jared Cohn
Starring: Eric Balfour, Bianca Santos, Heather Tom, Romeo Miller
Release Date: 5 January 2016 (USA)

This was surely my bad luck. My 2016 horror movies’ journey started with this low budget silly movie. Little Dead Rotting Hood was released in the first week of January 2016. Actually, it was the movie title that made me want to watch this ‘garbage’.

Right after the movie’s opening scene I felt this was going to be nothing but a waste of time. And, it was!
The movie was like a short home movie clip made by some kids. Actually, nowadays kids make some good short movies that are much better than this Little Dead Rotting Hood.

What makes this movie one of the worst? Everything except the story. I kind of like the story.
Everyone knows the classic story of Little Red Riding Hood. They changed the story and took only just a single slight line from the story we knew.

This list includes the worst horror movies I watched in January and February 2016


Thursday, May 5, 2016

பேர்கர் சாப்பிடுவது எப்படி? ‪அதுக்கு ஒரு ‪#‎பொறியியலாளர்‬ வேண்டும்

இந்த செய்தியை மட்டும் பார்த்துவிட்டு தூங்கலாம் என ஆரம்பமாகின்ற எனது இரவு நேர இன்டர்நெட் பயன்பாடு எப்போதுமே அதிகாலையில் சம்பந்தமே இல்லாமல் எவ்வாறு அணுகுண்டு தயாரிப்பது? என்பது போன்ற தேடல்களுடனே முடிவது வழக்கம். அப்படித்தான் நேற்றும்.
பேர்கர் எப்படி சாப்பிடுவது? இதற்கென்று ஏதாவது முறைகள்
இருக்குமா? என நானும் எனது பத்திரிகை ஆசிரியரும் எப்போதோ பேசிக்கொண்டது திடீரென ஞாபகத்துக்கு வந்தது. பிறகு என்ன? கூகுளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என நினைத்து கேட்டுப் பார்த்தேன். how to eat burger? பேர்கர் சாப்பிடுவதில் விஞ்ஞானமும் இருக்கிறது என்கிறார் கூகுள் நண்பன்.

இப்படித்தான் பேர்கர் சாப்பிட வேண்டும் என்ற எந்த நியமமான முறையும் இல்லை. கையினால் சாப்பிடுவது அறிவார்ந்தது. ஆனால் பேர்கரின் சோர்ஸ் மற்றும் டொப்பிங் போன்றவை கையில் வடிய சாப்பிடுவது பேர்கர் உண்ணுவதில் ஒரு பகுதியல்லவாம்.

பெரிய பேர்கர்ளைக் கூட சிந்தாமல் சாப்பிடுவது எப்படி? என திரவ இயக்கவியல், பொறியியல் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்ற 3 வல்லுநர்கள் 4 மாதங்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். தமது ஆய்வு குறித்து ஹொன்மா டிக்கா எனும் ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முப்பரிமாண படங்களுடன் விளக்கமளித்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் பெரு விரல்களினால் பேர்கரின் கீழ்பகுதியையும் ஏனைய 8 விரல்களால் மேல் பகுதியையும் பிடித்து கிடையாக வைத்தே சாப்பிடுகின்றனர். இதனால் அதிகளவிலான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு சிந்துகின்றது.


பெருவிரல்கள் மற்றும் சிறுவிரல்களால் பேர்கரின் கீழ் பகுதியையும் ஏனைய விரல்களால் மேல் பகுதியையும் பிடித்து நிலைக்குத்தாக சாப்பிட வேண்டும். அத்துடன் சாப்பிடத் தொடங்கு முன்னர் வாயை அகலத் திறந்து வோர்ம் அப் செய்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு பேர்கர் சாப்பிட அடர்த்தி, திணிவு, அமுக்கம். விசை எவ்வளவு விஞ்ஞானம். இனி பேர்கர் சாப்பிடப் போறப்போ திரவ பொறியிலாளரை கையோட கூட்டிக்கிட்டு போங்க.

_________________________________________________________________________________

How to eat Burger? : you will need engineer for it!

It is going to be a last news for this night. that's how my night time internet surfing starts everyday. but it ends always with strange matters like how to make nuclear?, in the early morning. same thing happened last night as well.
My editor (News paper) and me discussed one day that  How to eat burger? is there any standard way to eat burger?. suddenly I got remember that. then what??? I felt that Google knows everything, lets me ask him.
There is no standard method to eat burger but there is science. Eating burger with hand makes sense.
Japanese television show Honma Dekka!? had three researchers, experts in fluid mechanics, engineering, and dentistry try to figure out the best way to hold and eat a large hamburger. Apparently, they spent four months researching this. For science.
The researchers did a 3D scan of a hamburger, trying to figure out how the particles interacted while holding a large hamburger. Using the data, they showed that the typical way to hold a burger, thumbs on the bottom and fingers on top results in pushing the contents of the burger out of the buns.


The thumbs and the pinkies are on the bottom. The middle three fingers on each hand are on the top. As you can see the burger is divided visually into equal parts. If the burger is held uniformly, then its contents shouldn't spill out of the burger's backside.


Note that it's important not to hold the burger too tight. Doing so could cause the buns to be crushed, and the contents to spill out. Also, the dental expert recommended warming up the muscles in your mouth before eating a big hamburger by opening and closing it a few times.


So, Hereafter when you go to eat burger, please try to hire a engineer to avoid spills & enjoy your burger.


Thursday, January 16, 2014

என்னை விரும்பாதவர்களையும் நான் விரும்புகிறேன் : டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய்


நடிகர் விஜய் டுவிட்டவரில் ரசிகர்களுடன் இன்று சமூகவலைத்தளமான டுவிட்டரில் உரையாடியாடினார். டுவிட்டரில் அவரது உத்தியோகபூர்வ ரசிகர் பக்கத்தினூடாகவே அவர்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.



ஜில்லா வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனது கருத்துகளையும் ரசிகர்களின் இதன்போது மக்களுடன் பகிர்ந்துகொண்டார். விஜயின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.



இதன்போது ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் விஜயை வெறுப்பவர்களைப் பற்றியும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்இ அஜித் - விஜய் சண்டை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.



ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்இ 'அஜித் - விஜய் சண்டைகளை கைவிடப்பட வேண்டும் அவை ஆரோக்கிமானதல்ல. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என்னை விரும்பாதவர்களையும் தான் விரும்புகிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி' என விஜய் கூறியிருந்தார்.



இவரது கருத்துகளுக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தன. ரசிகர்கள் பலரும் பாராட்டியதோடு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இதேவேளை சிலர் அநாகரிமான முறையில் விஜயை தகாத வார்த்தைகளிலும் திட்டினர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாடு விஜய் நாகரீமாக நடந்துகொண்டு சரியான முறையில் கையாண்டிருந்தார்.



இக்கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பிரபல்யப்படுத்தியதுடன் தங்களது மகிழ்ச்சியையும் வெளியிட்டிருந்தனர்.

-ஏ.எம்

Sunday, January 12, 2014

வீரம் - விமர்சனம்

கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார்.


தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்). அண்ணனுக்கு வாழ்க்கை ஏற்படத்தத் துடிக்கும் 4 தம்பிகள். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு காயம் ஏற்படுத்தி வாழ்கிறார்கள். 

இந்த பாசமான குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் திருமணம் செய்யாமலேயே தானும் தம்பிகளுமாக இருக்கும் விநாயகத்தின் வாழ்க்கையில் கோப்பெரும் தேவியை (தமன்னா) இணைக்க தம்பிகளும் இவர்கள் கூடவே இருக்கும் சட்டத்தரணியாக வரும் சந்தானமும் முயற்சிக்கிறார்கள்.

தமன்னா - அஜித் ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்கிறார்கள். முன் ஜாமின் எடுத்து தப்பு செய்யும் அஜித் குடும்பமும் அமைதிக்காகவே வாழும் தமன்னாவின் குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான பதைபதைப்பும் பாசமும் என கலந்து விருந்து படைக்கிறது மீதிக் கதை.



90களில் வந்த கதையாகவும் ஹரியின் சாயலாகவும் இருந்தாலும் ரசிக்கும் படி படமாக்கி ரசிகர்களிடம் ஷபாஸ் பெறுகிறார் இயக்குநர் சிவா.
முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார் சந்தானம். விரசம் இல்லாத வசனங்கள் திருப்தி. அலுப்பில்லாமல் நகர்கிறது. இடைவேளையில் பரபரக்கும் சண்டைக் காட்சியுடன் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

பிற் பாதியில் சண்டை, குடும்பப் பாசம், நகைச்சுவை என அதிரடியாக படம் வேகமெடுக்கிறது. முற்பதியிலிருந்த வேகம் சற்றே குறைந்தது போல் ஓர் உணர்வு. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீ சென்டர் மற்றும் குடும்பங்களை கவர்கிறதொரு அஜித் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவா. 

படத்தினை பிரேம் பை பிரேமாக அஜித்துக்காக உருவாக்கி இருந்தாலும் வீணாக அஜித் புகழ்பாடமல் பார்த்திருப்பது வரவேற்கத்தக்கது. முடிஞ்சா என்ன தாண்டி தொட்றா பார்க்கலாம் என சவால் விடும் காட்சி, தொழில் போட்டி எதிரியிடம் பேசும் இடம், வில்லன்கள் தம்பிகளை துரத்திவர ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஆடும் அஜித் என பல இடங்களில் அஜித்துக்கான மாஸ் காட்சிகளையும் படத்தின் லொஜிக் மீறல்களை மறைக்கும் விதமான வேகமான திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் வென்றிருக்கிறார்.



அஜித்தின் நரை முடிக்கும் ஒரு காரணத்தை வைத்து திருப்திப்படுத்துகிறார். அஜித் ரசிகனாகவே வீரம் படத்தை தான் எடுத்ததாக கூறிய சிறுத்தை சிவா இனி வீரம் சிவா என அழைக்கப்பட்டாலும் ஆச்சரிமில்லை.

படத்தில் ஒரு சில காட்சிகைத் தவிர அனைத்து காட்சிகளிலும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அஜித் உச்சமாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் அதிரடியாக ஆர்ப்பாட்டம் செய்து பிற்பாதியில் அமைதியாக அதிரடி காட்டுகிறார். 

மதுரை மண் வாசனையை மறக்காமல் தமிழிலேயே படம் முழுவதும் பேசுகிறார். காதல், பாசம் என உருக்கம் காட்டுகிறார். மாட்டு வண்டி, வேஷ்டி சட்டையிலும் அஜித் கச்சிதமாப் பொருந்துகிறார். பல இடங்களில் பாசத்தாலும் வருடுகிறார். மொத்தத்தில் புது அவதாரத்தில் மிளிர்கிறார்.

தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஸ், சந்தோக் என அனைவரும் படம் முழுவதும் வருகிறார்கள். விதார்த் மற்றும் பாலாவுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். இறுதிவரை அண்ணனை ஏமாற்றாமலும் இறக்காமல் இருப்பது மகிழச்சி.

என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து வீரத்திலும் மீண்டெழுந்துள்ளார். டைமிங்கில் டைவடிக்கிறார். தம்பி ராமையாவுடன் தன் பங்கிற்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

3 வருட இடைவெளிக்கு பிறகு நாயகி தமன்னா ரசிக்க வைக்கிறார். பாடலுக்கு மட்டுமன்றி நடிக்க அதிக வாய்ப்பு. காதல் காட்சிகளில் அஜித்துக்கு சேலையுடன் வரும் தமன்னாவை ரசிக்கலாம்.



பாடல்கள் காட்சிகளையும் கிராமத்தில் இயல்பாக காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் நடக்கும் பாடல் காட்களில் தமன்னா - அஜித் டூயட் குறைபாடுதான்.

நாசர் வழக்கம்போல பாத்திரத்தின் தேவையை உணர்த்துகிறார். வில்லன்களாக வரும் பிரதீப் ராவத் நல்ல தேர்வுதான். ஆனாலும் வழக்கம்போல விறைப்பாக வந்து சிரிப்பாகிப் போகிறார். ரசிக்கலாம். அத்துல் குல்கர்னி கொலை வெறியாக அலைகிறார். அவினாஸ் சிறுத்தையை தொடர்கிறார். 

இவர்கள் தவிர தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி அஜித்தின் கூடப்பிறக்காத தம்பியாக வந்து கண்கலங்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, இளவரசு, மயில்சாமி, தேவதர்ஷினி, அபினயா, மனோசித்ரா, வித்யூலேகா என பலர் பாத்திரத்தின் தெரிவுகளாக உள்ளனர். அஜிதுடன் நெருங்கிப் பழகும் அந்த குழந்தை திணிக்கப்படாத பாசம் நெகிழ்ச்சி.


படத்தில் பல லொஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் அஜித்தும் திரைக்கதை மூலம் சிவா மறைத்ததில் நிச்சயம் வெற்றி. 

பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை துள்ள வைக்கிறது. மாஸ் படத்துக்கு தேவையானது. முதல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஏனையவை பெரிதாக ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார் டி.எஸ்.பி.

பாடல் வரிகளில் விவேகா தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கிராமத்தை ரம்மியமாகவும் அதிரடியாகவும் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தை அதிகரிப்பதில் பக்க பலமாகவுள்ளது. 

சண்டைக் காட்சிகளில் சில்வா பலரையும் பறக்கவிட்டுள்ளார். டூப் இல்லாத அஜித்தின் ரயில் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் வசனங்கள் பன்ச்சாகவுள்ளது. பரதனின் வரிகளுக்கு அஜித் சிறப்பாக உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக உழைக்கிற ஜாதிடா..., சோறு போட்டா தாய் சொல்லிக்கொடுத்தா தகப்பன் போன்ற பல வசனங்கள் நச் நகரம்.

பொங்கல் ஜல்லிக் கட்டில் காளையாக குதித்துள்ளது வீரம் படத்தில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினியை காட்டிவிட்டு அஜித்தின் 'வீரம்' படத்துக்கு வரும் நாகி ரெட்டியின் விஜய ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் ஏதோ சொல்லாமல் சொல்லிவிட்டது. 

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ, பீ, சீ என அனைத்து சென்டர்களிலும் புதியதோர் அவதாரத்தில் அஜித்தை வீர நடை போடச் செய்துள்ள இந்த வீரம்.

-ஏ.எம்.ஆர்

ஜில்லா - விமர்ச்சனம்

விமர்சனங்களாலும் வணிக ரீதியாகவும் மட்டுமன்றி விஜயின் அரசியல் தலைவர் கனவுக்கும் தலைவலியாக அமைந்த தலைவா திரைப்படத்தினைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளிடையே இளைய தளபதி விஜய் மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ளது 'ஜில்லா'.


தலைவாவில் இழந்ததை ஜில்லாவில் நிலைநிறுத்த தீயா வேலை செய்யணும் என்பதை காட்டும் வகையில் இளைய தளபதியில் வரும் 'தி' இல் தீ எரிந்தவாறு படம் ஆரம்பமாகின்றது.

பின்னரே தெரிகிறது படம் பார்க்க வந்த எமது காசுக்கு வைத்த தீ அதுவென்பது. இன்னும் தடவைதான் ஏமாறப்போகின்றோமோ?

சிவனிடம் (மோகன்லால்) வேலை செய்யும் சக்தியின் (விஜய்) அப்பா பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட அந்த இடத்திலிருந்து காக்கியை வெறுக்கும் நாயகன், வளர்ப்புத் தந்தை சிவன், அவரது மனைவி, மகள், மகன் மீது பாசத்தை கொட்டி வளர்கிறார்.

தவறு எனத் தெரியாமலேயே தவறுக்கு துணை போகிறார் சக்தி. ஒரு கட்டத்தில் சிவன் தனது குற்றச் செயல்களை தடையின்றி மேற்கொள்ள காக்கி என்றாலே வெறுக்கும் சக்திக்கு பொலிஸ் வேலையை வாங்கிக் கொடுக்கிறார். பின்னர் அந்த பொலிஸ் வேலையே சிவனுக்கு எமனாகிறது.

குற்றங்கள் அதிகரிக்கிறது பலர் பலியாகக் காரணமாகின்றார் சிவன். தவறுக்கு துணை போவதை உணர்ந்து தந்தைiயும் திருத்தி எதிரிகளிடமிருந்து குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஷ்யமில்லாத ஓட்டைத் திரைக்கதையில் பொறுமையை சோதிக்கிறார் இயக்குநர் நேசன்.


ஆரவாரமாக விஜய்யை வரவேற்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆரம்பமே நம்ப மறுக்கும் காட்சியுடன் கல் வீசும் சிறு வயது விஜய்க்கு கைதட்டல் வரவேற்பு இல்லாதது ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதை தெளிவுபடுத்துவதாய் அமைந்தது.

திரைக்கதையினால் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். மதுரையில் கதை நகர்ந்தாலும் மதுரை (மீனாட்சி கோவிலைத் தவிர) வாசனை எங்கும் தெரியவில்லை. பரப்பான காட்சிகள், திருப்பங்கள் என நினைக்கும் காட்சிகள் திரையில் வருவதற்கு முன்பே எளிதாக கண்டுபிடித்து கூச்சலிடுகின்றனர் ரசிகர்கள்.


முதல் பாதியில் நகைச்சுவையுடன் கரையேறி இடைவேளையில் சூடு பிடித்தது. 2 ஆம் பாதி ஆர்வமாக அமர்ந்தால் மீண்டும் முதலிருந்து ஆரம்பமாகி சண்டை... சண்டை... சண்டை... என தவள்கிறது. இடையில நடுவுல வழக்கமான மானே தானே போட்டுக்கங்க!

படம் முடிந்துவிட்டதாக நினைத்து ரசிகர்கள் எழுந்த பின்னர் சுமார் 5 நமிடங்களுக்கு மேல் படம் நீள்கிறது. (கண்ணக் கட்டுதே...!)

தீனாவையும் விஜயின் பழைய படங்கள் உடை, நடை போன்றவை ஞாபகத்துக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். ஓவர் நைட்டில் ஓபாவாகிறது போல ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள ரௌடிகளை ஜஸ்ட் லைக் தட் என அள்ளுகிறார். நாயகனின் செயல் ரசிகர்களை கொல்கிறது. படத்தில் இருக்கும் லொஜிக் ஓட்டைகளை சொல்லப்போன ஓட்டையில கொஞ்சமும் படத்தை காணோம் என்றுதான் வரும்.

கம்ப்ளீட் அக்டர் மோகன்லால் கம்பளீட்டாக வீணடிக்கப்பட்டுள்ளார். கேரளத்து தமிழில் சிவன்டா சிவன்டா என கத்துகிறார் அதுவே படத்துக்கு எமன்டா... என எதிரொலிக்கிறது. ஏராளமான காட்சிகளில் தோன்றினாலும் ஜில்லாவில் பெரிய சக்தியாக சிவன் இருப்பதாக சொல்லாவிட்டால் புரியாது. விஜய்க்கு சமமாக காட்சிகள் அமைப்பதில் ஏற்பட்ட தடுமாற்றமாற்றம் போல தெரிகிறது.

படத்தினை தனது ரசிகர்களுக்காக மட்டுமே விஜய் தாங்கிப்பிடிக்கிறார். தாடியில் மாற்றம் செய்திருப்பது திருப்தி. ஒரு சில காட்சிகளில் முகபாவனையும் ரசிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோசம். முதல் பாதியில் வரும் பாடல் வசனங்களிலும் காட்சிகளிலும் பலரைச் சீண்டுகிறார்.

ஆனாலும் விஜயின் அத்தனை உடல் மொழிகளும் ஏற்கனவே பார்த்து பழகியவை சலிப்படிக்கிறது. துப்பாக்கி, தலைவாவை ஞாபகப்படுத்துகிறது. நகைச்சுவை காட்சிகளில் பொதுவான ரசிகர்ளை எரிச்சலூட்டுகிறார். மீண்டும் ஒரு சுறா தராமல் விடமாட்டார் போலிருக்கிறதே?

விஜய் பொலிஸாக வருவதே கெக்கப்புக்க கெக்கப்புக்க சிரிப்பு வர நாயகி காஜல் அகர்வால் பொலிஸாக (சிரிப்பு பொலிஸ்?) கிச்சுக்கி மூட்டுகிறார். 3 பாட்டுக்கும் 4 சீனுக்கு வந்துபோகிறார். சூரி படத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் பலவற்றுக்கு திரையரங்கில் சிரிப்பலை. இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். போதாக் குறையாக விஜயின் பின்புறத்தை காஜலும் காஜலின் பின்புறத்தை விஜயும் தடவுவது விரசம். ஜோக்காமா...

வில்லனும் விஜயும் துரத்தும் காட்சியில் ஒரு சில விநாடிகள் மட்டும் பதபதைக்க வைக்கும் ஒர காட்சி தவிர நடிக்க வாய்ப்பில்லை. பின்னால் நின்று செல்கிறார். வில்லனாக சம்பத் நல்ல தேர்வு. பொருத்தமாக இருக்கிறார். அத்துடன் பிரதீப் ராவத், பூர்ணிமா, நிவேதா, தம்பி ராமையா, ஆர்.கே என பலர் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரியின் மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் பாடலொன்றுக்கு ஆடிச்செல்கிறார்கள்.

பாடல்கள் ஹிட்டடித்தாலும் திரையில் கண்டாக்கி மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசை அசத்தல். வசனங்கள் பல இடங்களில் இயல்பாக உள்ளமை ஆறுதலளிக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாகவுள்ளது. படம் முழுவதும் வண்ண மயமாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கவனித்து கத்தரித்திருக்கலாம்.

சில்வாவின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகவுள்ளது. விஜய் அடித்து நொறுக்குகிறார். தலைவா பிரச்சினையில் கைகட்டி பேசியது போல நின்றுகொண்டு விஜய் போடும் சண்டை அரசியல் பன்ச். (அதான் நிஜத்தில பம்முறிங்களே அப்புறம் எதுக்கு வெட்டி சீன்)  ஒப்பனையில் விஜயின் முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது அப்பட்டமாக தெரிகிறது. ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது.

யானை இரண்டை பூனை சுமந்தது போல் இரு மாநில சுப்பர் ஸ்டார்களை சுமந்து செல்லத் தடுமாறிய இயக்குநர் நேசன் படத்தின் நேர்த்தியை தவறவிட்டதில் தீவிர விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிறது இந்த ஜில்லா.

எனக்கு பயமில்லை என்ற சீன்களை கவனமாக மறக்காமல் வைத்து அடுத்தவனை சீண்டி நிஜத்தில் அடிவாங்குவதற்கு பதிலாக நல்ல கதைகள் தேர்ந்தெடுப்பதில் மறக்காமல் கவனம் செலுத்தலாங்கண்ண....

சுறாவுக்கு சில படி மேலேயும் தலைவாவுக்கு பல படி கீழேயுமுள்ள இந்த ஜில்லா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது நல்லா!


இந்த பதிவை ஈயடிச்சா தயதுசெய்து இந்த வலைத்தள முகவரியையும் கொடுங்க... http://aachariyam.blogspot.com/2014/01/blog-post.html

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்தான்...
விஜயும் நேசனும் சேர்ந்தா தமாஸுடா...
படம் பார்க்கிற நாங்க லூஸுடா...

-ஏ.எம்.ஆர்

Wednesday, November 13, 2013

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல் : முழுமையான அலசல்

அஜித் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபா வசூலினை நெருங்கியுள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஸ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்பஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் திகதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிகூடிய நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது.



விளம்பரங்களில் அஜித் பங்குகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அப்படத்தினை பெரியளவில் விளம்பரப்படுத்தி அஜித்தின் பெரிய ஓப்பனிங்கை மிகப்பெரிதாக்கினர். இதனால் முதல் வாரத்தில் 50 கோடியினை வசூலித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் அனைத்து இடங்களிலும் எந்திரன், விஸ்வரூபம் படங்களுக்கு அடுத்த படியாக வசூலை வாரிக்குவித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியான ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறியது. இதனையடுத்து ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்களுக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழ்நாட்டில் பெருவாரிய திரையரங்குகளை இவை கைப்பற்ற புதிய படங்களும் திரையிடப்படவில்லை. இதனால் 3ஆவது வாரமாகவும் ஆரம்பம் வசூல் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 91.63 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி ரூபா வசூலினை ஆரம்பம் படம் பெற்றுவிடும்.

தமிழ்சினிமாவில் எந்திரன் மற்றும் சிவாஜி (உரிமைகளையும் சேர்த்து) படங்களே இதுவரையில் 100 கோடி ரூபா வசூலினைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அஜித்தின் ஆரம்பமும் விரைவில் இணைந்துவிடும் என்பதை சினிமா ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பு : பகுதிவாரியான வசூல் நிலைமைகள் சற்றே வித்தியாசப்பட்டு காணப்படுதால் மொத்தமான தொகை மட்டும் குறிப்பிடப்பட்டள்ளது. அத்துடன் வசூல் தொகை அனைத்தும் இந்திய மதிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


-ஏ.எம் .http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2958