Innocence of Muslims படத்தினை நீக்குமாறு பல தடவைகள் கூகுள் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்து வந்தது பாகிஸ்தான். எனினும் கூகுள் நிறுவனம் அவற்றை எல்லாம் நிராகரித்து வந்த நிலையில் தற்போது யூடியூப் உட்பட 20 ஆயிரம் இணையத்தளங்களை தடைசெய்துள்ளது பாகிஸ்தான்.
இஸ்லாம் மதத்தினை அவமதிக்கும் மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்டிருந்த தளங்களே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள இணையத்தளங்களில் பல விரைவில் தளர்த்தப்படலாம் இருப்பினும் யுடியூப் தளத்தின் மீதான தடை நீண்டகாலம் வரையில் அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.