சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Thursday, January 16, 2014

என்னை விரும்பாதவர்களையும் நான் விரும்புகிறேன் : டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய்


நடிகர் விஜய் டுவிட்டவரில் ரசிகர்களுடன் இன்று சமூகவலைத்தளமான டுவிட்டரில் உரையாடியாடினார். டுவிட்டரில் அவரது உத்தியோகபூர்வ ரசிகர் பக்கத்தினூடாகவே அவர்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.



ஜில்லா வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனது கருத்துகளையும் ரசிகர்களின் இதன்போது மக்களுடன் பகிர்ந்துகொண்டார். விஜயின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.



இதன்போது ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் விஜயை வெறுப்பவர்களைப் பற்றியும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்இ அஜித் - விஜய் சண்டை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.



ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்இ 'அஜித் - விஜய் சண்டைகளை கைவிடப்பட வேண்டும் அவை ஆரோக்கிமானதல்ல. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என்னை விரும்பாதவர்களையும் தான் விரும்புகிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி' என விஜய் கூறியிருந்தார்.



இவரது கருத்துகளுக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தன. ரசிகர்கள் பலரும் பாராட்டியதோடு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இதேவேளை சிலர் அநாகரிமான முறையில் விஜயை தகாத வார்த்தைகளிலும் திட்டினர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாடு விஜய் நாகரீமாக நடந்துகொண்டு சரியான முறையில் கையாண்டிருந்தார்.



இக்கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பிரபல்யப்படுத்தியதுடன் தங்களது மகிழ்ச்சியையும் வெளியிட்டிருந்தனர்.

-ஏ.எம்

Sunday, January 12, 2014

வீரம் - விமர்சனம்

கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார்.


தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்). அண்ணனுக்கு வாழ்க்கை ஏற்படத்தத் துடிக்கும் 4 தம்பிகள். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு காயம் ஏற்படுத்தி வாழ்கிறார்கள். 

இந்த பாசமான குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் திருமணம் செய்யாமலேயே தானும் தம்பிகளுமாக இருக்கும் விநாயகத்தின் வாழ்க்கையில் கோப்பெரும் தேவியை (தமன்னா) இணைக்க தம்பிகளும் இவர்கள் கூடவே இருக்கும் சட்டத்தரணியாக வரும் சந்தானமும் முயற்சிக்கிறார்கள்.

தமன்னா - அஜித் ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்கிறார்கள். முன் ஜாமின் எடுத்து தப்பு செய்யும் அஜித் குடும்பமும் அமைதிக்காகவே வாழும் தமன்னாவின் குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான பதைபதைப்பும் பாசமும் என கலந்து விருந்து படைக்கிறது மீதிக் கதை.



90களில் வந்த கதையாகவும் ஹரியின் சாயலாகவும் இருந்தாலும் ரசிக்கும் படி படமாக்கி ரசிகர்களிடம் ஷபாஸ் பெறுகிறார் இயக்குநர் சிவா.
முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார் சந்தானம். விரசம் இல்லாத வசனங்கள் திருப்தி. அலுப்பில்லாமல் நகர்கிறது. இடைவேளையில் பரபரக்கும் சண்டைக் காட்சியுடன் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

பிற் பாதியில் சண்டை, குடும்பப் பாசம், நகைச்சுவை என அதிரடியாக படம் வேகமெடுக்கிறது. முற்பதியிலிருந்த வேகம் சற்றே குறைந்தது போல் ஓர் உணர்வு. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீ சென்டர் மற்றும் குடும்பங்களை கவர்கிறதொரு அஜித் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவா. 

படத்தினை பிரேம் பை பிரேமாக அஜித்துக்காக உருவாக்கி இருந்தாலும் வீணாக அஜித் புகழ்பாடமல் பார்த்திருப்பது வரவேற்கத்தக்கது. முடிஞ்சா என்ன தாண்டி தொட்றா பார்க்கலாம் என சவால் விடும் காட்சி, தொழில் போட்டி எதிரியிடம் பேசும் இடம், வில்லன்கள் தம்பிகளை துரத்திவர ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஆடும் அஜித் என பல இடங்களில் அஜித்துக்கான மாஸ் காட்சிகளையும் படத்தின் லொஜிக் மீறல்களை மறைக்கும் விதமான வேகமான திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் வென்றிருக்கிறார்.



அஜித்தின் நரை முடிக்கும் ஒரு காரணத்தை வைத்து திருப்திப்படுத்துகிறார். அஜித் ரசிகனாகவே வீரம் படத்தை தான் எடுத்ததாக கூறிய சிறுத்தை சிவா இனி வீரம் சிவா என அழைக்கப்பட்டாலும் ஆச்சரிமில்லை.

படத்தில் ஒரு சில காட்சிகைத் தவிர அனைத்து காட்சிகளிலும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அஜித் உச்சமாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் அதிரடியாக ஆர்ப்பாட்டம் செய்து பிற்பாதியில் அமைதியாக அதிரடி காட்டுகிறார். 

மதுரை மண் வாசனையை மறக்காமல் தமிழிலேயே படம் முழுவதும் பேசுகிறார். காதல், பாசம் என உருக்கம் காட்டுகிறார். மாட்டு வண்டி, வேஷ்டி சட்டையிலும் அஜித் கச்சிதமாப் பொருந்துகிறார். பல இடங்களில் பாசத்தாலும் வருடுகிறார். மொத்தத்தில் புது அவதாரத்தில் மிளிர்கிறார்.

தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஸ், சந்தோக் என அனைவரும் படம் முழுவதும் வருகிறார்கள். விதார்த் மற்றும் பாலாவுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். இறுதிவரை அண்ணனை ஏமாற்றாமலும் இறக்காமல் இருப்பது மகிழச்சி.

என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து வீரத்திலும் மீண்டெழுந்துள்ளார். டைமிங்கில் டைவடிக்கிறார். தம்பி ராமையாவுடன் தன் பங்கிற்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

3 வருட இடைவெளிக்கு பிறகு நாயகி தமன்னா ரசிக்க வைக்கிறார். பாடலுக்கு மட்டுமன்றி நடிக்க அதிக வாய்ப்பு. காதல் காட்சிகளில் அஜித்துக்கு சேலையுடன் வரும் தமன்னாவை ரசிக்கலாம்.



பாடல்கள் காட்சிகளையும் கிராமத்தில் இயல்பாக காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் நடக்கும் பாடல் காட்களில் தமன்னா - அஜித் டூயட் குறைபாடுதான்.

நாசர் வழக்கம்போல பாத்திரத்தின் தேவையை உணர்த்துகிறார். வில்லன்களாக வரும் பிரதீப் ராவத் நல்ல தேர்வுதான். ஆனாலும் வழக்கம்போல விறைப்பாக வந்து சிரிப்பாகிப் போகிறார். ரசிக்கலாம். அத்துல் குல்கர்னி கொலை வெறியாக அலைகிறார். அவினாஸ் சிறுத்தையை தொடர்கிறார். 

இவர்கள் தவிர தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி அஜித்தின் கூடப்பிறக்காத தம்பியாக வந்து கண்கலங்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, இளவரசு, மயில்சாமி, தேவதர்ஷினி, அபினயா, மனோசித்ரா, வித்யூலேகா என பலர் பாத்திரத்தின் தெரிவுகளாக உள்ளனர். அஜிதுடன் நெருங்கிப் பழகும் அந்த குழந்தை திணிக்கப்படாத பாசம் நெகிழ்ச்சி.


படத்தில் பல லொஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் அஜித்தும் திரைக்கதை மூலம் சிவா மறைத்ததில் நிச்சயம் வெற்றி. 

பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை துள்ள வைக்கிறது. மாஸ் படத்துக்கு தேவையானது. முதல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஏனையவை பெரிதாக ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார் டி.எஸ்.பி.

பாடல் வரிகளில் விவேகா தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கிராமத்தை ரம்மியமாகவும் அதிரடியாகவும் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தை அதிகரிப்பதில் பக்க பலமாகவுள்ளது. 

சண்டைக் காட்சிகளில் சில்வா பலரையும் பறக்கவிட்டுள்ளார். டூப் இல்லாத அஜித்தின் ரயில் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் வசனங்கள் பன்ச்சாகவுள்ளது. பரதனின் வரிகளுக்கு அஜித் சிறப்பாக உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக உழைக்கிற ஜாதிடா..., சோறு போட்டா தாய் சொல்லிக்கொடுத்தா தகப்பன் போன்ற பல வசனங்கள் நச் நகரம்.

பொங்கல் ஜல்லிக் கட்டில் காளையாக குதித்துள்ளது வீரம் படத்தில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினியை காட்டிவிட்டு அஜித்தின் 'வீரம்' படத்துக்கு வரும் நாகி ரெட்டியின் விஜய ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் ஏதோ சொல்லாமல் சொல்லிவிட்டது. 

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ, பீ, சீ என அனைத்து சென்டர்களிலும் புதியதோர் அவதாரத்தில் அஜித்தை வீர நடை போடச் செய்துள்ள இந்த வீரம்.

-ஏ.எம்.ஆர்

ஜில்லா - விமர்ச்சனம்

விமர்சனங்களாலும் வணிக ரீதியாகவும் மட்டுமன்றி விஜயின் அரசியல் தலைவர் கனவுக்கும் தலைவலியாக அமைந்த தலைவா திரைப்படத்தினைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளிடையே இளைய தளபதி விஜய் மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ளது 'ஜில்லா'.


தலைவாவில் இழந்ததை ஜில்லாவில் நிலைநிறுத்த தீயா வேலை செய்யணும் என்பதை காட்டும் வகையில் இளைய தளபதியில் வரும் 'தி' இல் தீ எரிந்தவாறு படம் ஆரம்பமாகின்றது.

பின்னரே தெரிகிறது படம் பார்க்க வந்த எமது காசுக்கு வைத்த தீ அதுவென்பது. இன்னும் தடவைதான் ஏமாறப்போகின்றோமோ?

சிவனிடம் (மோகன்லால்) வேலை செய்யும் சக்தியின் (விஜய்) அப்பா பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட அந்த இடத்திலிருந்து காக்கியை வெறுக்கும் நாயகன், வளர்ப்புத் தந்தை சிவன், அவரது மனைவி, மகள், மகன் மீது பாசத்தை கொட்டி வளர்கிறார்.

தவறு எனத் தெரியாமலேயே தவறுக்கு துணை போகிறார் சக்தி. ஒரு கட்டத்தில் சிவன் தனது குற்றச் செயல்களை தடையின்றி மேற்கொள்ள காக்கி என்றாலே வெறுக்கும் சக்திக்கு பொலிஸ் வேலையை வாங்கிக் கொடுக்கிறார். பின்னர் அந்த பொலிஸ் வேலையே சிவனுக்கு எமனாகிறது.

குற்றங்கள் அதிகரிக்கிறது பலர் பலியாகக் காரணமாகின்றார் சிவன். தவறுக்கு துணை போவதை உணர்ந்து தந்தைiயும் திருத்தி எதிரிகளிடமிருந்து குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஷ்யமில்லாத ஓட்டைத் திரைக்கதையில் பொறுமையை சோதிக்கிறார் இயக்குநர் நேசன்.


ஆரவாரமாக விஜய்யை வரவேற்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆரம்பமே நம்ப மறுக்கும் காட்சியுடன் கல் வீசும் சிறு வயது விஜய்க்கு கைதட்டல் வரவேற்பு இல்லாதது ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதை தெளிவுபடுத்துவதாய் அமைந்தது.

திரைக்கதையினால் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். மதுரையில் கதை நகர்ந்தாலும் மதுரை (மீனாட்சி கோவிலைத் தவிர) வாசனை எங்கும் தெரியவில்லை. பரப்பான காட்சிகள், திருப்பங்கள் என நினைக்கும் காட்சிகள் திரையில் வருவதற்கு முன்பே எளிதாக கண்டுபிடித்து கூச்சலிடுகின்றனர் ரசிகர்கள்.


முதல் பாதியில் நகைச்சுவையுடன் கரையேறி இடைவேளையில் சூடு பிடித்தது. 2 ஆம் பாதி ஆர்வமாக அமர்ந்தால் மீண்டும் முதலிருந்து ஆரம்பமாகி சண்டை... சண்டை... சண்டை... என தவள்கிறது. இடையில நடுவுல வழக்கமான மானே தானே போட்டுக்கங்க!

படம் முடிந்துவிட்டதாக நினைத்து ரசிகர்கள் எழுந்த பின்னர் சுமார் 5 நமிடங்களுக்கு மேல் படம் நீள்கிறது. (கண்ணக் கட்டுதே...!)

தீனாவையும் விஜயின் பழைய படங்கள் உடை, நடை போன்றவை ஞாபகத்துக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். ஓவர் நைட்டில் ஓபாவாகிறது போல ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள ரௌடிகளை ஜஸ்ட் லைக் தட் என அள்ளுகிறார். நாயகனின் செயல் ரசிகர்களை கொல்கிறது. படத்தில் இருக்கும் லொஜிக் ஓட்டைகளை சொல்லப்போன ஓட்டையில கொஞ்சமும் படத்தை காணோம் என்றுதான் வரும்.

கம்ப்ளீட் அக்டர் மோகன்லால் கம்பளீட்டாக வீணடிக்கப்பட்டுள்ளார். கேரளத்து தமிழில் சிவன்டா சிவன்டா என கத்துகிறார் அதுவே படத்துக்கு எமன்டா... என எதிரொலிக்கிறது. ஏராளமான காட்சிகளில் தோன்றினாலும் ஜில்லாவில் பெரிய சக்தியாக சிவன் இருப்பதாக சொல்லாவிட்டால் புரியாது. விஜய்க்கு சமமாக காட்சிகள் அமைப்பதில் ஏற்பட்ட தடுமாற்றமாற்றம் போல தெரிகிறது.

படத்தினை தனது ரசிகர்களுக்காக மட்டுமே விஜய் தாங்கிப்பிடிக்கிறார். தாடியில் மாற்றம் செய்திருப்பது திருப்தி. ஒரு சில காட்சிகளில் முகபாவனையும் ரசிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோசம். முதல் பாதியில் வரும் பாடல் வசனங்களிலும் காட்சிகளிலும் பலரைச் சீண்டுகிறார்.

ஆனாலும் விஜயின் அத்தனை உடல் மொழிகளும் ஏற்கனவே பார்த்து பழகியவை சலிப்படிக்கிறது. துப்பாக்கி, தலைவாவை ஞாபகப்படுத்துகிறது. நகைச்சுவை காட்சிகளில் பொதுவான ரசிகர்ளை எரிச்சலூட்டுகிறார். மீண்டும் ஒரு சுறா தராமல் விடமாட்டார் போலிருக்கிறதே?

விஜய் பொலிஸாக வருவதே கெக்கப்புக்க கெக்கப்புக்க சிரிப்பு வர நாயகி காஜல் அகர்வால் பொலிஸாக (சிரிப்பு பொலிஸ்?) கிச்சுக்கி மூட்டுகிறார். 3 பாட்டுக்கும் 4 சீனுக்கு வந்துபோகிறார். சூரி படத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் பலவற்றுக்கு திரையரங்கில் சிரிப்பலை. இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். போதாக் குறையாக விஜயின் பின்புறத்தை காஜலும் காஜலின் பின்புறத்தை விஜயும் தடவுவது விரசம். ஜோக்காமா...

வில்லனும் விஜயும் துரத்தும் காட்சியில் ஒரு சில விநாடிகள் மட்டும் பதபதைக்க வைக்கும் ஒர காட்சி தவிர நடிக்க வாய்ப்பில்லை. பின்னால் நின்று செல்கிறார். வில்லனாக சம்பத் நல்ல தேர்வு. பொருத்தமாக இருக்கிறார். அத்துடன் பிரதீப் ராவத், பூர்ணிமா, நிவேதா, தம்பி ராமையா, ஆர்.கே என பலர் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரியின் மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் பாடலொன்றுக்கு ஆடிச்செல்கிறார்கள்.

பாடல்கள் ஹிட்டடித்தாலும் திரையில் கண்டாக்கி மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசை அசத்தல். வசனங்கள் பல இடங்களில் இயல்பாக உள்ளமை ஆறுதலளிக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாகவுள்ளது. படம் முழுவதும் வண்ண மயமாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கவனித்து கத்தரித்திருக்கலாம்.

சில்வாவின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகவுள்ளது. விஜய் அடித்து நொறுக்குகிறார். தலைவா பிரச்சினையில் கைகட்டி பேசியது போல நின்றுகொண்டு விஜய் போடும் சண்டை அரசியல் பன்ச். (அதான் நிஜத்தில பம்முறிங்களே அப்புறம் எதுக்கு வெட்டி சீன்)  ஒப்பனையில் விஜயின் முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது அப்பட்டமாக தெரிகிறது. ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது.

யானை இரண்டை பூனை சுமந்தது போல் இரு மாநில சுப்பர் ஸ்டார்களை சுமந்து செல்லத் தடுமாறிய இயக்குநர் நேசன் படத்தின் நேர்த்தியை தவறவிட்டதில் தீவிர விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிறது இந்த ஜில்லா.

எனக்கு பயமில்லை என்ற சீன்களை கவனமாக மறக்காமல் வைத்து அடுத்தவனை சீண்டி நிஜத்தில் அடிவாங்குவதற்கு பதிலாக நல்ல கதைகள் தேர்ந்தெடுப்பதில் மறக்காமல் கவனம் செலுத்தலாங்கண்ண....

சுறாவுக்கு சில படி மேலேயும் தலைவாவுக்கு பல படி கீழேயுமுள்ள இந்த ஜில்லா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது நல்லா!


இந்த பதிவை ஈயடிச்சா தயதுசெய்து இந்த வலைத்தள முகவரியையும் கொடுங்க... http://aachariyam.blogspot.com/2014/01/blog-post.html

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்தான்...
விஜயும் நேசனும் சேர்ந்தா தமாஸுடா...
படம் பார்க்கிற நாங்க லூஸுடா...

-ஏ.எம்.ஆர்