Total Pageviews

Wednesday, March 6, 2013

உலகிலேயே மிகச் சிறியளவான கைப்பேசியினை வெளியிட்டது ஜப்பான்


தொழில்நுட்பத்தில் என்றுமே ஏனைய நாடுகளை விட ஒரு படி முன்னோக்கி நிற்கும் ஜப்பான் உலகிலேயே மிகச் சிறியளவான கைப்பேசியினை வெளியிட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வில்கொம் என்ற நிறுவனமே தயாரித்துள்ளது. தற்போது குறித்த கையடக்கத்தொலைபேசி ஜப்பானில் மட்டுமே உண்டு. 

இதுவரையில் விலை தீர்மானிக்கப்படாத இக்கைபேசியை இவ்வாண்டு இறுதியில் டிசம்பர் மாதமளவில் விற்பனைக்கு கொண்டு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு விளையாட்டு சாதனம் போல் தோன்றும் இந்த போனின் அளவு வெறும் 32X70X10.7 மி.மீ மட்டுமே. மேலும் இதன் நிறை 32 கிராம் என்பதுடன் வழக்கமாக கைக்கடிகாரத்தில் காணப்படும் OLED திரை 1 இன்ச் அளவான காணப்படுகிறது. 


அத்துடன் இதில் மடிக்கக்கூடிய உணரி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. 3 நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கைபேசியில் இப்போது கெமரா போன்ற வதிகள் இல்லை என்றாலும் மெயில் வசதியினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு தடவை சார்ஜ் செய்து கொண்டால் 2 மணித்தியாலங்கள் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதில் மேலும் பல வசதிகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

BY : AM. Rizath / Metro News