Total Pageviews

Friday, March 15, 2013

உலகிலேயே மிகச்சிறியளவான புத்தகம் இதுவா? : தையல் ஊசியின் துளையை விடச் சிறியது


பூக்கள் நிறைந்த சிகினோ குஸபானா எனப் பெயரிடப்பட்டுள்ள புத்தகமொன்று ஜப்பானிலுள்ள டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகமே உலகின் மிகச் சிறிய புத்தகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


உலகிலேயே மிகச் சிறிய புத்தகமாகக் கருதப்படும் இப்புத்தகத்தினை டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகம் 29,400 ஜப்பான் யென்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இப்புத்தகத்துடன் இலவச இணைப்பாக இதே புத்தகத்தின் பெரிய வடிவிலான பிரதியும் இப்புத்தகத்தின் உருக்களை பார்க்கக் கூடிய கண்ணாடியொன்றையும் வழங்கவுள்ளது குறித்த அருங்காட்சியகம்.

22 பக்கங்களைக் கொண்ட குறித்த புத்தகத்திலுள்ள எழுத்துக்களை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. 0.75 மி.மீ உயராமான இப்புத்தகத்திலுள்ள எழுத்துருக்களின் அகலம் 0.01 மி.மீ மட்டுமே ஆகும். மிகச் சிறியளவான இப்புத்தகம் தையல் ஊசியின் துளையை விடச் சிறியதாகும்.

பூக்கள் நிறைந்த இப்புத்தகத்தினை ஜப்பான் மொழியில் சிகினோ குஸபானா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதன் கருத்து பருவகால பூக்கள் என்பதாகும்.


இது தொடர்பில் டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகம் கருத்து வெளியிடுகையில், உலகின் மிகச் சிறிய புத்தமாக இப்புத்தகத்தினை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கச் செய்ய முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.


உலகின் மிகச் சிறிய புத்தகமாக 0.9மி.மீ அளவான 30 பக்கங்களைக் கொண்ட புத்தகமொன்றே 1996ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இப்புத்தகத்தினை அனடொலி கொனன்கோ என்ற சைபீரிய நாட்டைச் சேர்ந்த நபர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

By: AM. Rizath / Metro News