அண்மைக்காலமாகவே அஜித்துடன் இணைந்து பணியாற்ற நான், நீ என பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அஜித் அறிமுகம் செய்து வைத்த முருகதாஸ் கொஞ்சம் அதிகமாவே முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தற்போதை முன்னணி இயக்குனர்களான அஜித்தினால் அறிமுகமாகாத ஷங்கர், பாலா, கௌதம் மேனன், ஹரி என பலரும் அஜித்தினை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தவர்களே ஆனாலும் ஒவ்வொன்றும் பல்வேறு காரணங்களால் நடக்காமலேயே போய்விட்டது.
இதற்கு முழுக் காரணமும் அஜித்தின் மோசமான செயல்களே என்பது போல சித்தரித்து அன்று ஏராளமான ஊடகங்கள் அண்ணன் நடிகரை உயர்த்தி அஜித்தின் மேல் சேறு பூசி வேடிக்கை பார்த்ததெல்லாம் இன்றும் தல ரசிகளுக்கு ஆறாத வடுவாய் இருக்கிறது. இருப்பினும் இன்று அதே ஊடகங்கள் 'தல' அசைந்தாலும் ஆடினாலும் செய்திகளாக்கிக்கொண்டிருப்பது வேறு கதை.
ஆனாலும் உண்மையான அஜித்தின் முகம் இன்று சினிமா உலகை தாண்டி தெரியவந்துவிட்டது என்பதே உண்மை. இதனாலேயே அண்மைக்காலமாக பல இயக்குனர்கள் அஜித்தை சுற்றி வருகிறார்கள்.
அஜித் இயக்குனர்களின் நடிகர் என்பதை அவர் பணியாற்றிய புதுமுக இயக்குனர்களின் எண்ணிகையே உணர்த்திவிடுகிறது. சரண், சரண், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், துரை, சரவண சுப்பையா, செல்லா, ரமேஸ் கண்ணா, சிங்கம் புலி, ராஜு சுந்தரம் என இன்னும் பலர் இந்த வரிசையில் உள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அஜித்துடன் பணியாற்றிய புது முக இயக்குனர்கள் அத்தனை பேரும் தலயுடன் நெருக்கமாகவே இருக்கிறார்கள்.
இவர்களில் தற்போது உச்சத்தில் இருக்கும் இயக்குனர் முருகதாஸ் அஜித்துக்காகவே கதை தயார் செய்து காத்துக்கொண்டிருக்கிறார். இவரின் காத்திருப்புக்கு தற்போது தல விடைகொடுத்துள்ளாதாக கொலிவூட் வட்டாரம் உறுதிப்படுத்துகின்றது.
சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிபெற்று தல என்று தமிழ் சினிமாவில் கொண்டாட வைத்த தீனா படத்தி;ன் வெற்றிக்கு பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் முருகதாஸ், தீனா வெற்றிக் பின்னர் மிரட்டல் மற்றும் பெயரிடப்படாத படமொன்றில் தன்னை அறிமுகம் செய்த அஜித்துடன் மீண்டும் பணியாற்ற முயற்சித்த போதும் அது கைகூடாமலே போனது.
அஜித்திற்காக கதை தயாராக உள்ளது. அவர் அழைக்கும் பட்சத்தில் கையிலிருக்கும் படத்தை விட்டுவிட்டு அவருடன் பணியாற்றுவேன் என அண்மைக்கால பேட்டிகளில் அஜித்திற்கு தகவல்கள் அனுபியவாறே இருந்தார் முருகதாஸ் ஆனாலும் தல அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் திடிரென இக்கதையில் திருப்பத்தை ஏற்படுவது போன்று ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினையடுத்து இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் 2013இல் அஜித் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளமை தல ரசிகர்ளுக்கு நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது நிச்சயம்.
அஜித்தினால் அறிமுகமான என பல இயக்குனர்கள் இன்றும் அஜித்துடன் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்க சற்றே முந்திக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இவர் தவிர இன்னும் சிலரும் அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட வேண்டும் என சில இயக்குனர்கள் கதையுடன் காத்திருக்கிறார்கள். இதில் கௌதம் மேனன், ஹரி போன்றவர்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கதைகள் எதுவும் சோதனை முயற்சியாக இல்லாவிட்டால் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
https://www.facebook.com/Wondersblog உடக்குடன் தகவல்களை அறிந்துகொள்ள எமது பேஸ் புக் பக்கதுடன் இணைந்திருங்கள்.
இந்த போஸ்டிலுள்ள செய்தியினை முந்திக்கொண்டு பலமணி நேரங்களுக்கு முன்னரே பேஸ்புக் பக்கத்தில் நாம் வெயிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.