Total Pageviews

Friday, March 1, 2013

5 அடி உயரமான பெண்ணுக்கு 6.7 அடி நீளமான தலைமுடி : வருமானமும் உண்டு


சீனாவைச் குயிகன்ங் எனுமிடத்தில் வசிக்கும சென் இங்கியுஆன் என்ற 5 அடி உயரமான பெண் 11 வருடங்களாக முயற்சித்து 6.7 அடி நீளத்திற்கு அவரது தலைமுடியை வளர்த்துள்ளார்.

கடைசியாக சென் அவரது தலைமுடியை 11 வருடங்களுக்கு முன்னர் வெட்டியுள்ளார். 44 வயதான சென் 2005ஆம் ஆண்டிலிருந்து தனது தலைமுடியை வளர்க்க ஆரம்பித்துள்ளார். தற்போது அதன் நீளம் 6.7 அடியாக வளர்ந்துள்ளது. ஆனால் குறித்த பெண் 5 அடி என்பதனால் அவர் நடந்து செல்கையில் அவரது தரையை துடைத்த வண்ணம் இருக்கிறது.

இம்முடியை பராமரிப்பதற்கு நாளொன்று ஒரு மணி நேரம் செலவிடுகிறாராம். சாதாரணமாக குளிக்கும் போது அவரது முடியை கழுவது சாத்தியமற்றது. இதனால் 4 நாட்களுக்கு ஒரு முறை தலைமுடியை மாத்திரம் கழுவிச் சுத்தம் செய்துகொள்கிறார். மேலும் முடியை பளபளப்பாக வைப்பதற்காக முடிக்கு பியர் சேர்த்து பராமரிக்கிறார்.

இது தொடர்பில் சென் கூறுகையில், எனது தலைமுடியை கடந்த 11 வருடங்களா பாதுகாத்துள்ளேன். தற்போது முடியின் மீது அடிமையாகிவிட்டேன்.

மேலும் எனது முடியின் மூலம் வருமானமும் வருகிறது. தலைமுடியை சீவும் போது விழும் முடிகளை சேகரித்து வருடத்திற்கு சுமார் 50 கிராம் முடியை 20ஆயிரம் யுவானுக் விற்பனை செய்கிறேன்.

தற்போது எனது முடி முற்றாக கருமை நிறத்திலுள்ளது. இது க்ரேய் நிறத்திற்கு மாற ஆரம்பித்தால் வெள்ளை நிற டை அடித்து வித்தியாசமாக எனது முடியை மாற்றும் எண்ணம் உள்ளது என்றார்.

இருப்பினும் முடியை கழுவ ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை உலர வைக்க சுமார் அரை நாட்கள் வரை தேவைப்படுவதே சிரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By: AM. Rizath/Metronews