Total Pageviews

Friday, September 20, 2013

உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் எப்போது உடலைச் சேரும்?

போன உயிர் மீண்டும் வருவ­தில்லை என்­பதே மனி­தர்­க­ளி­டையே பர­வ­லாக காணப்­படும் நம்­பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கிறோம். இறப்­புக்கு பின்­ன­ரான வாழ்க்கை என்­பது நம்­பிக்கை சார்ந்த விட­ய­மா­கவே உள்­ளது.



அது­போ­லவே மரித்த பின்­னரும் உயிர்­பெற வைக்கும் தொழில்­நுட்பம் விரைவில் கண்­டு­பி­டிக்­கப்­படும் என்­பதும் சில­ர­து ­நம்­பிக்­கை­யா­க­வுள்­ளது. அந்த நம்­பிக்­கையில் இறந்த பின்னர் தங்­க­ளது உடலை பாது­காப்­ப­தற்கு பலரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இவ்­வாறு இறந்த உடல்­களை பாது­காக்க நிறு­வ­னங்­களும் உண்டு. அங்கு இறந்த உடல்­களை பழு­த­டை­யாது பாது­காத்து வைக்­கப்­படும்.

எவ்­வாறு பாது­காக்­கப்ப­டு­கின்­றது?
ஒருவர் இறந்­து­விட்டார் என்­பதை சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் குறித்த நிறு­வனம் உட­லி­லுள்ள இரத்தத்­தினை 'பம்' செய்­வ­தற்கு முயற்­சிப்பர். உடலில் பல்­வேறு இர­சா­யன பதார்த்­தங்­களை செலுத்தி மூளை பழு­த­டை­வ­தையும் இரத்தம் உறை­யா­மலும் பாது­காக்­கப்­படும்.

பின்னர் உடலானது நீர் குளி ர­டையும்  வெப்பநிலையை அடைந்­ததும் குளிரில் உடல் பாது­காப்­ப­தற்­கு­ரிய நிலையை அடைந்­து­விடும். இதன்­போது உட­லி­லுள்ள இரத்தம் நீக்­கப்­படும். பின்னர் -130 செல்­ஸி­யஸில் குளி­ராக்­கப்­பட்டு கொள்­க­லனின் உடல் வைக்­கப்­பட்டு –196 செல்­ஸியல் குளிர் நிலை­யி­லுள்ள நைத­ரசன் தாங்­கியில் பேணப்­படும்.



தற்­போது அமெ­ரிக்­காவில் இப்­படி சுமார் 150 உடல்கள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளதாக கூறப்படுகின்றது. இதில் 80 உடல்­களின் தலை அல்­லது மூளை மட்­டுமே பாது­காக்­கப்­பட்­டள்­ளது. எவ்­வா­றெ­னினும் தற்­போது உயி­ருடன் உள்­ள­வர்­களில் 1000ற்கும் அதி­க­மானோர் தங்­க­ளது உடலை பாது­காக்க குறித்து நிறு­வ­னங்­களை பணித்­துள்­ளனர்.


இத்­திட்டம் வெற்­றி­பெ­றலாம் என ஏன் நம்­பு­கின்­றனர்?
இத்­திட்­டத்தில் ஆர்­வ­மிக்­க­வர்கள் இது தொடர்பில் கூறு­கையில், இத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்க வாய்ப்­புள்­ள­மைக்கு 3 கார­ணங்கள் கூறு­கின்­றனர். முத­லா­வது உடல் பாது­காக்­கப்­படும் போது ஒட்­சி­சனின் மட்­டத்­தினை பேணி மூளை சிதை­வ­டை­வது குறைக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக தேவை­யான அளவில் குறைந்த வெப்­ப­நி­லையில் (குளிரில்) உடல் பேணப்­ப­டு­வதால் கலங்கள் மற்றும் இழை­யங்கள் தர­மி­ழக்­காமல் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.



மூன்­றா­வ­தாக குளி­ராக்கல் முறை­யி­லி­ருந்து முற்­றாக உடலை பாது­காக்­க­மு­டி­யா­விட்­டாலும் விரைவில் நனோ தொழில்­நுட்­பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.



விஞ்­ஞா­னிகள் இனங்கண்­டுள்ள பிரச்­சினைகள்
–5 செல்­ஸியஸ் வெப்­ப­நிலையில்  நீரில் உடல் பாது­காக்­கப்­படும் போது கலங்கள் குளிரில் உறைந்து ஐஸ் கட்­டி­க­ளாக மாறி­விடும். இவை நீரின் அடர்த்­தியை விடக் குறைந்­தது. இதனால் அதி­க­ளவில் பிரி­கை­ய­டைந்து கல மென்­சவ்­வுகள் கடு­மை­யாக பாதிப்­ப­டையும்.

ஆனால், குளி­ராக்கல் முறையில் அவ்­வா­றில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும் அவற்­றிற்­கான ஆதாரம் எது­வு­மில்லை என வொஷிங்டன் பல்­க­லைக்கழக குளிரில் கலம் மற்றும் இழையங்­களை பாது­காக்கும் தொழில்­நுட்ப நிபுணர் கலா­நிதி டயங்கோ கஓ தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், குளி­ராக்கு­தலில் சிறிய பூச்­சிகள் மற்றும் இல­கு­வான இழை­யங்­களை பாது­காக்­கலாம். ஏனெனில் அவை அளவில் சிறி­யவை என்­பதால் கையாள்­வது இல­கு­வா­னது. ஆனால் எவ்­வாறு உடல்­களை பாது­காப்­பது எனத் தெரி­ய­வில்லை என்றார்.

உட­லி­லுள்ள பாகங்­களை பாது­காக்க முடியும். ஆனால் அவற்­றினை மொத்த உட­லாக பாது­காப்­பது கடினம். ஏனெனில் ஒவ்­வொரு உறுப்பும் ஒவ்­வொரு வெப்­ப­நி­லையில் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக மூளையை பாது­காக்க வேண்­டு­மென்றால் அதி­லுள்ள 12 பிரி­வு­க­ளையும் வெவ்வேறு நிலை­களில் பாது­காக்க வேண்­டிய தேவை உள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.



உயிர் திரும்பக் கிடைக்­குமா?
வளரும் தொழில்­நுட்­பத்­தினால் எதிர்­கா­லத்தில் உடல்­களை சிறப்­பாக பாது­காக்க முடிந்­தாலும் வய­தாதல் மற்றும் நோய்­க­ளினால் கலங்கள் பாதிப்­புக்­குள்­ளாகும். நரம்­புகள் தொடர்­பான சிக்­கல்கள், கலங்­க­ளி­லுள்ள புரத இழப்பு என இன்னும் ஏரா­ள­மான சவால்கள் உண்டு. அவற்­றுக்­கான தீர்வு கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

எனவே குளி­ராக்­கல் முறையை மேம்­ப­டுத்தி உடலை பதப்­ப­டுத்­தி­னாலும் தற்­போ­தைக்கு இறந்த உட­லுக்கு உயிரை வழங்­கு­வ­தற்­கான எந்­த­வொரு சாத்­தி­யக்­கூ­று­களும் விஞ்­ஞா­னி­க­ளிடம் இது­வ­ரையில் இல்லை என்றே சொல்­லலாம்.

இதேவேளை எதிர்காலத்தில் அவை நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உடலை பாதுகாக்க தயாராகிவிட்டாலும் எந்தவொரு விஞ்ஞானிகள் அமைப்பும் குளிராக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கலாநிதி கஓ தெரிவித்துள்ளார்.

அதேபோல குளிராக்கல் பதப்படுத்தல் முறையினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இந்த உடல்களுக்கு எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எப்போதும் வளாந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது.

–அமானுல்லா எம்.றிஷாத்


இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.