Total Pageviews

Thursday, September 6, 2012

மதி மயங்கவைக்கும் அழகிய பவளப் பாறைகள் அழியும் அபாயம்!


ஒரு தாயின் கருவறையிலிருந்து எத்தனை குழந்தைகள் பிறந்த போதிலும் ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தைக்கும் அவள் தாய்தான். அவ்வாறான தாய்க்கு பிள்ளைகளின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது கருவறையில் சுமந்த தாய்க்கு மட்டுமல்ல எம்மை கருவுக்கு வெளியே சுமக்கும் பூமித் தாய்கும் இது பொருத்தமாகத் தான் இருக்கும்.

உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் பூமித் தாயின் பிள்ளைகள்தான். இதில் எந்த உயிரனத்திடையேயும் பூமிக்கு பாகுபாடோ பிரிவினையோ கிடையாது. பூமியில் உள்ள ஜீவராசிகளின் மறைவை தாங்க முடியாத பூமி அதன் இழப்பை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதனையே நாம் இயற்கையில் சீற்றம் எனக் கருதுகிறோம் எனலாம்.

பூமியிலுள்ள புழு, பூச்சி முதற்கொண்டு அனைத்தும் இயற்கையின் சமநிலையைப் பேணுவது தமது கடமையென எண்ணி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், ஆறறிவு படைத்தவர்கள் தாங்களே என மனிதர்கள் தம்பட்டம் அடித்தாலும் இயற்கையின் சீற்றத்திற்கு பிரதான காரணியாக இந்த ஆறறிவு ஜீவனே அமைவது வேதனை தான்.

எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும், எதிரான மறுதாக்கம் உண்டு என்ற நியூட்டனின் விதிக்கமைவாகவே இயற்கையும் செயற்படுகின்றது. நாம் இயற்கைக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே தருகின்றது. மனிதர்கள் நாம் விதைத்தது ஒன்றும் திணையல்ல வினை என்பது இப்போதைய இயற்கைச் சமநிலையில் பாதிப்பிலிருந்தே உணரக் கூடியதாக இருக்கின்றது.

இன்று உலகில் ஏறத்தாள 30ஆயிரம் இனங்கள் அழிவின் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக செந்தரவுப் புத்தகத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இவற்றுக்கு முக்கிய காரண கார்த்தா வேறு யாருமல்ல நாமே. இது இனி வரும் நாட்களில் அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளது.

எனவே 2002 ஆண்டளவில் உயிர்ப் பல்வகைமை அழிவடையும் வீதத்தைக் குறைத்து பூமியில் வாழும் சகல உயிரினங்களுக்கும் நன்மை பகரும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பல நாடுகள் இணைந்து Global Biodiversity Outlook (GBO) எனும் அறிக்கை யொன்றினை வெளியிட்டிருந்தது

இதில் உயிர்ப்பல்வகைமை இழப்பை குறைக்க 2010 ஆம் ஆண்டினை இலக்காக கொண்டு செயற்பட்டமையினால் 2010ஆம் ஆண்டு உயிர்ப்பல்வகைமைக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பின்னர் 2010 ஆண்டு GBO இன் மூன்றாம் பதிப்பு வெளியானது இதில் '2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் எவையுமே அடையப்படவில்லை' எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும் இதில் ஏற்கனவே அருகிவரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இனங்கள் மேலும் அருகியுள்ளதாகவும், ஈரூடகவாழிகளும் அதிகளவிலான அபாயத்தையும் சுமார் 25 சதவீதமான தாவரங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை பவள இனங்கள் மிகவிரைவாக அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டிலே பவளப்பாறைகளின் நிலைமை இதுவெனில் தற்போதைய இதன் அழிவு எவ்வாறானதாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

1998 இல் பவளப்பாறைகளின் 13 இனங்களே அருகி வரும் இனங்கள் பட்டியலிலிருந்தது. ஆனால் தற்போது இனங்காணப்பட்டுள்ள பவளப்பாறை உயிரிகளின் 704 இனங்களில் சுமார் 231 இனங்கள் அருகி வரும் இனங்கள் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பவளப்பாறைகள் என்பவை ஒருவகை கடலில் வாழுகின்ற மிகச் சிறிய உயிரனமாகும். மரபியல் ரீதியாக ஒத்த பல தனியன்கள் சேர்ந்து சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். இவை கடல் நீரிலுள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை.

பெரும்பாலும் பவளங்கள் வெப்ப நீர்க்கடல்களில் காணப்பவதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். வளர்சிதைமாற்றத்தின்போது கல்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. இவ்வாறு தோன்றும் கல்சியம் கபனேற் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாகி தீவுகளா உருவெடுக்கின்றன.

பவளப் பூச்சிகள்ஃபவளங்கள் கடலில் 24 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள 40-50 மீ. ஆழப் பகுதிகளில் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி பரவக்கூடிய தெளிவான கடல் நீர் மற்றும் அதில் உப்பின் அளவு லீட்டருக்கு 35 கிராமிற்கு குறைவாகவும் இருத்தல் அவசியம். பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பப் பகுதிகளில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன.

பவளப் பூச்சிகள் கடலடியில் தனித்தனியாக இல்லாமல் தொகுப்புயிர்களாகவே வளர்கின்றன. இவற்றின் சந்ததிகள் தனியே பிரிந்து செல்லாமல் மரக் குருத்துகளைப் போன்று ஒன்றினைந்தே தொடர்ந்து வாழ்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்குக் கிட்டுகின்ற இரையானது, தொகுப்புயிர்கள் எல்லாவற்றிற்குமே பயன்படுகிறது. பவளப்பூச்சிகளால் தண்ணிரிலாமல் வெகுநேரம் உயிர் வாழ முடியாது. எனவேதான் பவழப் பாறைகளின் உயர எல்லை கடல் மட்டத்துடன் நின்று விடுகிறது.

பவளங்களினால் உணவுற்பத்தியினை தாமாக மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் அல்காக்களுடன் ஒன்றியவாழிக் கொள்கையில் ஈடுபடுகின்றது. அதாவது பவளங்களுக்குள் வாழும் அல்காக்கள் பச்சையம், சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்யும் குளுக்கோஸினை உண்டே பவளங்கள் வளர்கின்றது. இதற்கு பதிலாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் அல்காக்களுக்கு உணவாக பெற்றுக்கொள்ளுகின்றது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து அல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தையே ஏனெனில் கடலில் அரிது. மேலும் பவளப்பாறைகளை நம்பி சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் அதில் குடியிருக்கின்றன.

பவளத்தொகுப்புயிர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள ஒருவகையான செம்பவளத் தொகுப்புயிர், கிளைகள் பல கொண்ட இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள சுண்ணச் சட்டகம் ஆதாரமாக விளங்குகிறது.

பொதுவாக இவை பாலினமற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சிலசமயங்களில் புணரிகளை உருவாக்கி, கடல்நீரில் வெளியேற்றுவதன் மூலம் பாலின இனப்பெருக்கத்தை மேற்கொண்டு இனங்களை விருத்தி செய்து கொள்கின்றது.

இவ்வாறு பவளங்கள் இனவிருத்தி செய்து பல்வேறு பட்ட வகையில் மனிதனுக்கு பயனுள்ளதாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்றால் எவ்வகையிலும் தவறில்லை. அல்காக்களை போன்று மனிதனிடமும் நட்பு பகர ஆசைப்பட்ட பவழங்களுக்கு மனிதனாலேயே அழிவு எற்படுகின்றது என்ற செய்தி வேதனையாகத் தான் இருக்கிறது.

எமக்கு மனிதர்களால் எதுவித பயனும் ஆகாது என்று தெரியாமலே பவளப் பாறைகள் மனித குலத்திற்கு உதவிக்கொண்டிருக்கிறது. கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவது, உல்லாசப் பயணத்துறையில் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை உலகெங்கும் வருமானமாக ஈட்டித்தரும் இயற்கையின் முதலீடுகளாகவும், சீமெந்து, கண்ணாடி போன்றவற்றின் உற்பத்திக்கு சில மூலப் பொருட்கள், அணிகலன்களுக்குப் பயன்படும் சிவப்புப் பவளங்கள், இருதய நோய்க்கு பவளபஸ்பம் என்ற மருந்து, பற்பசை, வெள்ளை வண்ணப் பூச்சுகள், சலவைத்தூள், ரப்பர், எழுதும் மை, காகிதம், பீங்கான் பொருள்கள், கிருமி பூச்சிக்கொல்லிகள், அழகு சாதனப் பொருள்கள் என ஏராளமான ஆக்கத்திற்கு உதவி வருகின்ற பவளத்திற்கு மனிதர்கள் செய்த கைமாறு அதன் அழிவுக்கு காரணமாக அமைந்ததைவிட வேறென்ன?

பவளப்பாறைகளின் அழிவிற்கு மிக முக்கிய காரணம் புவி வெப்பமாதல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதுதவிர கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றாலும் இவை அழிவை எதிர்நோக்குகின்றது. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் வரும் ஆண்டுகளில் பவளப்பாறைகளின் உருவாக்கம் 50 சதவீதத்தினால் குறைவடையும் என எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

250 மில்லியன்களா வாழ்ந்துவரும் பவளங்களை அழிவிலிருந்து பாதுகாத்து இதன் வளர்ச்சியை அதிகரிக்கவென பல்வேறு முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்போது ஒரு வெற்றிப்படியினை விஞ்ஞானிகள் தொட்டுள்ளனர் என்றால் அது பவளங்களுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே மகிழ்ச்சியான வெற்றிதான்.

கடந்த வருடம் ஜெர்மனியை சேர்ந்த உல்ப் ஹில் பெர்ட் என்ற கட்டிடக்கலை நிபுணர் ஒருவரினால் இந்தோனேசியா பகுதியிலுள்ள கடலுக்கடியில் உலோகத்தினாலான கட்டிட அமைப்பை ஒன்றை ஏற்படுத்தினார். மேலும் இவ் உலோக அமைப்புடன் சேர்த்து குறைந்த அளவில் மின்சாரத்தினை வழங்கும் சாதனமும் அமைத்துள்ளார்.

பின்னர் குறித்த காலப்பகுதியில் அந்த கட்டிட அமைப்பில் சுண்ணாம்பு படிவங்களும், சிற்பிகளும் உருவாகி இருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது. எனவே இத் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உலோகத்தில் மின்சாரத்தை பாய்ச்சி பவளத்தை உருவாக்க முடியும் என்பதனை கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் மேலதிக ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் விஞ்ஞானிகளின் இப்போதைய எதிர்பார்ப்பாக அமைவது அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பவளப்பாறைகளுக்கு மின்சாரத்தின் மூலம் விமோசனம் கிடைக்கும் என்பதே.

மதி மயங்கும் அழகினைக் கொண்ட பவளப்பாறைகளை இனியாவது மதியற்ற எமது செயற்பாடுகளினால் அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லாமல் இருக்க முயற்சிப்போம்...!

-ஏ.எம்.ஆர்

குறிப்பு : இந்த பதிவு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Coral
Pillar coral, Dendrogyra cylindricus
Scientific classification
Kingdom:Animalia
Phylum:Cnidaria
Class:Anthozoa
Ehrenberg, 1831
Extant Subclasses and Orders
Alcyonaria
   Alcyonacea
   Helioporacea
Zoantharia
   Antipatharia
   Corallimorpharia
   Scleractinia
   Zoanthidea

Threats

Coral reefs are under stress around the world. In particular, coral mining, agricultural and urban runoff, pollution (organic and inorganic), overfishing,blast fishing, disease, and the digging of canals and access into islands and bays are localized threats to coral ecosystems. Broader threats are sea temperature rise, sea level rise and pH changes from ocean acidification, all associated with greenhouse gas emissions.In 1998, 16% of the world's reefs died as a result of increased water temperature.
General estimates show approximately 10% of the world's coral reefs are dead. About 60% of the world's reefs are at risk due to human-related activities. The threat to reef health is particularly strong in Southeast Asia, where 80% of reefs are endangered.] Over 50% of the world'scoral reefs may be destroyed by 2030; as a result, most nations protect them through environmental laws.
In the Caribbean and tropical Pacific, direct contact between ~40 to 70% of common seaweeds and coral causes bleaching and death to the coral via transfer of lipid–soluble metabolites. Seaweed and algae proliferate given adequate nutrients and limited grazing by herbivores such as parrotfish.
Water temperature changes of more than 1-2 degrees Celsius (1.8-3.6 degrees Fahrenheit) or salinity changes can kill coral. Under such environmental stresses, corals expel their zooxanthellae; without them coral tissues reveal the white of their skeletons, an event known as coral bleaching.
Submarine springs found along the coast of Mexico's Yucatán Peninsula produce water with a naturally low pH (a measure of acidity) providing conditions similar to those expected to become widespread as the oceans absorb carbon dioxide. Surveys discovered multiple species of live coral that appeared to tolerate the acidity. The colonies were small and patchily distributed, and had not formed structurally complex reefs such as those that compose the nearby Mesoamerican Barrier Reef System.

Protection

Marine Protected Areas (MPAs)Biosphere reservesmarine parksnational monuments world heritage status, fishery management and habitat protection can protect reefs from anthropogenic damage.

Many governments now prohibit removal of coral from reefs, and inform coastal residents about reef protection and ecology. While local action such as habitat restoration and herbivore protection can reduce local damage, the longer-term threats of acidification, temperature change and sea-level rise remain a challenge.
To eliminate destruction of corals in their indigenous regions, projects have been started to grow corals in non-tropical countries